உண்மையை உரக்க சொல்கிறது இக்கவிதை… பெண்ணுக்கு
எதிரான குற்றங்களில் இந்தியாவிற்கு முதல் இடமாம், புள்ளி
விவரம் சொல்கிறது.
இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னுமொரு பெண்
(கவிதை- முடவன்குட்டி)
இருட்குவியலாய்
கக்கூசில்
விழுந்து கிடப்பான் புருஷன்-
இன்னும் தெளியாத குடிபோதையில்.
அவனை அள்ளி
குளியறை போகையில்
“குழம்பா இது..தூ..”
எங்கோ பார்த்து காறித் துப்புவான்
நாலாவது முறையாய்
எஸ் எஸ் எல் சி எழுதிய கொழுந்தன்.
“உடுத்தி…. மினுக்கி ..ஆபீஸ் போறாளோ..
வேற எங்காச்சும் போறாளோ..”-
வீட்டோடு இருக்கும் நாத்தனார்
வெறுப்பு உமிழ்வாள்.
சன்னல் கம்பிகளூடே -பூட்டிய அறைக்குள்
எட்டிப்பார்ப்பாள்-குழந்தையை:
“பளா”-ரென சன்னல் கதவை
அறைந்து மூடி
“ஐயாயிரம்-ஆபீஸ் லோன் போடு”-
மாமியார் குரலில்
இரை தேடியலையும் மிருகமொன்று உறுமும்:
ஆபீஸ் லோனுக்குப் “பிணை”யாக
பூட்டிய அறைக்குள்
கைதியாய்க் கிடக்கும்
தன் கதி அறியாப் பேதைமகள்
அன்னைமுகம் பாராமலே
அன்றும் உறங்கிப் போவாள்.
அழுதழுது ஓய்ந்த
பிஞ்சுமகள் துயர முகம்
மறுபடி- மறுபடி
உயிரில் இடற-
இரு பஸ் மாறி
அடிவயிறு கனக்க-
மூச்சுத் தெவங்க -
அலுவலகம் சேர்வாள்-
அன்றும் தாமதமாய்:
“இன்னைக்காவது குழந்தையைப்
பாத்தியாடி…….”
“மாமியாரா…..அவ…ராட்சசி….”
“டைவர்ஸ் வாங்கு….”
“பாவம் பெண் குழந்தை இருக்கே….”
- கண்முன் உருகும்
சக ஊழியர் நேயம்
மெல்ல ஒதுங்கி
வம்பு பேச வாய் திறக்கும்:
“லோன் பணம் எங்க ஒளிச்சு வச்சிருக்க”
சேலை உரித்து..ப்ளவுஸ் கிழித்து…..
தாண்டவம் ஆடும்-
மாமியார் ரௌத்ரம் :
அப்பன் பாட்டனின் ஆதார குணமாய்
ஆழ்மனதில் பதுங்கிய பயமோ
சட்டென விழித்து – உயிர் கவ்வும்:
பாலுடன் விஷமுண்ட குழந்தை
வாய்நுரை தள்ளி விரைத்துக்கிடக்க-
கூரை மின்விசிறியில் முடிந்த சேலை
கழுத்தில் இறுகி
வெறும் உடலாய்த்தொங்குவாள்-
இவள்!
மகளிர் இடஒதுக்கீடு….
நகம் பேணுவது எப்படி..?
கட்டழகி நயன்தாரா அழகுக்குறிப்புகள்…
என…….
அதுபோக்கில் இயங்கும்
அன்றும் உலகம்..!
++++++ …………+++++++………+++++++………+++++++
"முடவன் குட்டி"
நன்றி: கடையநல்லூர்.org
நன்றி : கூகிள்
22 கருத்துகள்:
nalla pathivu
நெஞ்சு வலிக்கும் படி இருக்கு மக்கா....
பெண்கள் படும் அவஸ்தைகளை நெத்தியில் அடித்தாற் போல் சொல்கிறது கவிதை.
நல்ல நிலையில் இருக்கும் பெண்களும் உலகில் உண்டே என்றால், அது ஆண்கள் அளவுக்கு இல்லை என்றே சொல்லலாம். உறவுகளின் மூலம் அதிக நெருக்கடிக்கு உள்ளாவது பெண்கள்தான்.
உண்மையை உரத்துச் சொல்லும் கவிதை நண்பரே.
பகிர்வுக்கு நன்றிகள்.
நண்பா சராசரி பெண் படும் பாட்டை சிறப்பாக கவியாக்கியிருக்கிறீர்கள். ஆழமான வரிகள்
நகம் பேணுவது எப்படி..?
கட்டழகி நயன்தாரா அழகுக்குறிப்புகள்…
என…….
அதுபோக்கில் இயங்கும்
அன்றும் உலகம்..!//
அருமை..
அவரவர் வீட்டை தட்டும்வரை அடுத்தவர் பிரச்னை பற்றி நமக்கேன் கவலை என பலர்..
நன்று வாழ்த்துகள்..
உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்
என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி
http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html
:((
//உண்மையை உரக்க சொல்கிறது இக்கவிதை… பெண்ணுக்கு
எதிரான குற்றங்களில் இந்தியாவிற்கு முதல் இடமாம், புள்ளி
விவரம் சொல்கிறது.//
லஞ்சம், ஊழல், பெண்களுக்கெதிரான கொடுமைகள் எல்லாவற்றிலும் நாம் தான் முதல்... மார்த்தட்டிக்கொள்வோம்.....
பகிர்வுக்கு நன்றி
கவிதையை வாசிக்கும் பொழுதே பக்குன்னு இருக்கு,அனுபவிப்பவர்கள் ?
:((...
@ வாங்க mohamed faaque நன்றி!
@ வாங்க MANO நாஞ்சில் மனோ நன்றி!
@ வாங்க சிநேகிதன் அக்பர் நன்றி!
@ வாங்க இளங்கோ நன்றி!
@ வாங்க கந்தசாமி (முதல் வருகைக்கு) நன்றி!
@ வாங்க "எண்ணங்கள்" (முதல் வருகைக்கு) நன்றி!
@ வாங்க சிநேகிதி நன்றி!
@ வாங்க அன்புடன் ஆனந்தி நன்றி!
@ வாங்க ஸ்டீபன் நன்றி!
@ வாங்க ரஹீம் கஸாலி நன்றி!
@ வாங்க ஆசியா உமர் நன்றி!
கருத்துரையிடுக