facebook

செவ்வாய், மே 17, 2011

நானறியாமல் என்னோடு வளர்ந்த நட்பு




நானறியாமல் என்னோடு வளர்ந்த நட்பு!!

நம்ம ஃபிரிக்வென்சியோடு ஒத்துப்போகிற உண்மையான நண்பர்கள்
ஒரு சிலரே நமக்கு அமைவார்கள். அவர்களை நம் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடனும்.

ஜெகத்...

நான் அல்கோபரில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், MIDDLE
EAST AIRLINES -இல் (MEA-வில்) அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இது சவுதியில் இருந்து லெபனானுக்கு செல்லும் air lines நிறுவனம்.
ரொம்ப சகஜமான பேர்வழி. நட்புக்களை கொண்டாடுவார்.
'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் (‘ஜெகத்’தினை)
ஏன் என்னை அழிக்கணும்' என்று பாரதியாரை நகைச்சுவையாய் வம்புக்கிழுப்பார்.

பெங்களுரு HMT-வாட்ச் கம்பெனியில் வேலை பார்த்த இவரது
மனைவி கூட ஐந்து வருட விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு இவரோடு வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது. இரண்டும்
பையன்கள். இங்கே இந்தியன் எம்பஸி ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள்

அதிகாலையில் பூஜை அறையில் கிணுகிணு வென மணியடித்து
சாமி கும்பிடும் மனைவியிடம், "ஏம்பா இப்படி காலையிலேயே
தூங்குற சாமிய மணியடித்து எழுப்புறியே, ஒரு நா அந்த சாமி படத்துலேந்து இறங்கி வந்து அந்த மணியாலேயே ஒந் தலையில
அடிக்கப் போகுது" என்பாராம். அவரோடு சமயங்களில் வரும் அவர் மனைவி என்னிடம் சொல்லி சிரிக்கும். ஏனென்றால் அந்நேரத்தில்
இவர் தூங்கிக் கொண்டிருப்பாராம்.

இப்படியாக நமது காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிற வேகத்தில்,
அவர் என்னை வந்து பார்த்துப் போவது அரிதாகிப் போனது.
ஏனென்று விசாரித்த போது, "கிட்னி ஸ்டார்டிங் டிரபுலாம்" என்று
அவரே வந்து கமெண்ட்டும் அடித்து விட்டுப் போனார்.

நாளாக நாளாக நூலாகிக் கொண்டிருந்தார். வாரத்திற்க்கொரு
முறையோ, இரண்டு வாரம் கூடியோ டயாலிசிஸ் என்று
சொல்லக் கூடிய ரத்த புத்துயிரூட்டளுக்கு சென்று வந்துக்
கொண்டிருந்தபோது "உள்ளங் காலில் குத்தி குத்தி உயிர்
போகுதப்பா, கிட்னிய மாத்தனுமாம், செலவு ரொம்ப ஆகும் போல"
என்று மருட்சி இல்லாமல் தெளிவாய் பேசினார்.

கிட்னி மாற்று சிகிச்சைக்கு சென்னையில் ஒரு பிரபல
ஹாஸ்பிடலில் (பெயர் வேண்டாமே!) அப்பாயின்மெண்ட் வாங்கி,
ஒரு மாத ட்ரீட் மெண்டுக்குக்காகப் போனவர், பதினைந்து இருபது நாளிலேயே திரும்பி வந்து விட்டார். அன்று நான் ஆபீசில் வேளை விஷயமாய் யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த போது,
சேரில் வந்து உட்கார்ந்த மனிதரை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து போனேன். முகம் கை கால்களெல்லாம் சிகரெட் நெருப்பால் சுட்ட
மாதிரி அட நம்ம ஜெகத் தான்.“என்ன சார் என்னாச்சு" பதைப்
பதைத்துக் கேட்டேன்.

"மூன்றரையிலிருந்து நாலு லட்சம் வரை செலவாச்சுப்பா. அது
ஒரு பெரிய மேட்டர் கிடையாது. ரத்தத்தை ஒழுங்கா டெஸ்ட்
செய்யாமல் யாருடையோ hiv aids உள்ள ரத்தத்தை எனக்கு
ஏத்திட்டம்ப்பா. இன்னும் பத்தோ பதினைந்தோ நாள் தான்
இங்கே இருப்பேன். கம்பெனியில் நான் வந்த உடனே exit அடித்து விட்டார்கள்" என்று மூச்சு விடாமல் பேசினார் (இங்கே சவுதியில்
அப்படி தான். இது மாதிரியாகிவிட்டால் govt இருக்கவும் விடாது.

அதன் பின்னர் தான் அவரோடு வந்த அவர் மனைவியை
பார்த்தேன். அழுத கண்கள் அழுதபடியே இருந்தது. “எனக்காக pray
பண்ணு” என்று சொல்லி விட்டு போய் விட்டார். அவர் பத்து
பதினைந்து நாள் என்று சொன்னது, தான் உயிரோடு இருப்பேன்
என்பதை தானோ என்பது அவர் இறந்த செய்தி கிடைத்த பின்
புரிந்தது.

நிறைய நேரம் லெபனானுக்கு டிக்கட் கிடைக்காமல் எங்கள்
மேனேஜரின் நண்பர்கள், என்னிடம் சொல்லி டிக்கெட் புக்
பண்ணச் சொல்வார்கள். நான் இவரை அணுகும் போதெல்லாம்
"உன்னை வந்து ஏம்பா இவங்க தொல்லை பண்றாங்க எங்கிட்ட
அனுப்பு" என்பார். "இல்ல சார் டிக்கெட் ஃபுல் என்று நீங்க
சொல்லிட்டீங்கலாமே" என்றால், "சரி பெயரைச் சொல்லு" என்று
கடகடவென்று நோட் செய்துக் கொண்டு PNR ஐக் கொடுத்து
விடுவார். புக் பண்ணச் சொன்னவங்களுக்கு ஏக குஷியாகிவிடும். மேனேஜருக்கு ரொம்ப பெருமையாய் இருக்கும்.

அந்த நாட்கள் இனி இல்லை!! அவர் நினைவுகள் மட்டும்!!

பின்னர் இவரது மனைவி HMT வேலையை ரிசைன் பண்ணிவிட்டு
டிராவல் ஏஜென்சி ஒன்று தனியாய் துவங்கி தன்னுடைய இரண்டு மகன்களையும் நல்லவிதமாக படிக்க வைத்து துணிச்சலாய்
வாழ்க்கையை எதிர் கொள்கிறார் என்று அறிகிறேன்

ஜெகத் இன்று எங்கள் மனதில் நிறைந்து போன நாள்!!

முன்பு இதை படிக்காதவர்களுக்காக மீள்  பதிவு!!


36 கருத்துகள்:

GEETHA ACHAL சொன்னது…

ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது...

என்ன ஒரு கொடுமை...Bloodயினை மாற்றி ஏற்றியது மிகவும் கொடுமை...இப்படி எல்லாம் கூட நடக்குது....

Layman9788212602 சொன்னது…

What a tragedy ? Life is full of changes,sudden surprises and tragedy's.

Layman9788212602 சொன்னது…

Life is full of changes surprises and sudden tragedy's. Feel sorry for him and his family.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அதானே முன்பே இதை படிச்சிருக்கேனேன்னு தோணுச்சி, மீள் பதிவு...எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா...

மோகன்ஜி சொன்னது…

நெஞ்சைத் தொட்டது!

பனித்துளி சங்கர் சொன்னது…

சிறியக் கவனக் குறைவுகள் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறது . தங்களின் அனுபவத்தை மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி

Mohamed Faaique சொன்னது…

Hospital பெயர் கட்டாய்ம சொல்லி இருக்க வேண்டும்.... இன்னும் பலர் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டி...

Chitra சொன்னது…

பின்னர் இவரது மனைவி HMT வேலையை ரிசைன் பண்ணிவிட்டு
டிராவல் ஏஜென்சி ஒன்று தனியாய் துவங்கி தன்னுடைய இரண்டு மகன்களையும் நல்லவிதமாக படிக்க வைத்து துணிச்சலாய்
வாழ்க்கையை எதிர் கொள்கிறார் என்று அறிகிறேன்


......நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொண்டு, வெற்றி பெற்று இருக்கும் அவருக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துக்களும். உங்கள் நண்பரை பற்றிய இந்த பதிவு, மனதை தொட்டது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

படிக்கும் போது மனம் கனக்கின்றது..

ஹுஸைனம்மா சொன்னது…

ரத்தம் மாற்றி ஏத்தியதால் இவ்வளவு சீக்கிரம் மரணம் நேருமா? ஹெச்.ஐ.வி. இருந்தாலும், தக்க மருத்துவ சிகிச்சைமூலம், சிலகாலம் நீடிக்க முடிகிறதே? இது அதிர்ச்சியாக இருகிறது. இறைவன்தான் பாதுகாக்கணும் எல்லாரையும்.

பிரபல மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் என்று தெரிந்தாலும் செல்வதற்குக் காரணம், தரமான, சுத்தமான சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். ஆனா, இப்பவெல்லாம் இந்தமாதிரி பிரபல மருத்துவமனைகள்தான் குற்றச்சாட்டுகளில் அடிக்கடி தென்படுகின்றன. அவரின் மனைவி அந்த மருத்துவமனையின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையா?

அவரின் மன உறுதிக்கும், தைரியத்திற்கும் எனது வாழ்த்துகள். இறைவன் பொறுமையையும், தைரியத்தையும் தரட்டும் அவருக்கு.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு தல.

பாவம் அவர். அவர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் வாழ்க்கை இனி நன்றாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

கூடல் பாலா சொன்னது…

தரமான சிகிச்சை அனைவருக்கும் எட்டும் வகையில் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் ....

பெயரில்லா சொன்னது…

அனுபவம்...உரைக்கும் உண்மைகள்

கே. பி. ஜனா... சொன்னது…

மனதைப் பிசைகிறது!
அவர் மனைவியின் மனோதிடம் சற்றே ஆறுதல் அளிக்கிறது!

vanathy சொன்னது…

நாட்டாமை, அழ வைக்கும் பதிவு. அவர் மனைவியின் துணிவு மெச்சத் தக்கது.

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

கடவுளே!!! ஆரம்பிக்கும்போதே, முடிவு விபரீதமாகிடக்கூடாது என நினைத்துக்கொண்டே படித்தேன் அப்படியே ஆகிவிட்டது.

என்ன செய்வது விதிதான் எல்லாம் என மனதைத் தேற்றிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை:(((((((

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ GEETHA ACHAL கூறியது...

// ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது ...என்ன ஒரு கொடுமை ... Bloodயினை மாற்றி ஏற்றியது மிகவும் கொடுமை...இப்படி எல்லாம் கூட நடக்குது....//

தீயில் வெந்தப் பின்னும் தீராத சோகத்தை பகிராமல் இருக்க முடியவில்லை சகோதரி!

ஆச்சலக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Layman கூறியது...

// What a tragedy ? Life is full of changes,sudden surprises and tragedy's. Life is full of changes surprises and sudden tragedy's. Feel sorry for him and his family.//

ஆறிலும் அடங்கும் ஆடியும் அடங்கும் வாழ்க்கையில் எதுவும் எப்பவும் நிகழும் தானே!!

Layman உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

// அதானே முன்பே இதை படிச்சிருக் கேனேன்னு தோணுச்சி, மீள் பதிவு... எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பா...//

எங்கள் சோகத்திலும் ஆற்றுப் படுத்த பங்கு கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// நெஞ்சைத் தொட்டது! //

வாங்க மோகன்ஜி நன்றி! நலமாயிருக்கீங்களா??

ஷர்புதீன் சொன்னது…

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!

நாடோடி சொன்னது…

முன்பே ப‌டித்திருக்கிறேன் அப்துல்..

எம் அப்துல் காதர் சொன்னது…

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...

// சிறியக் கவனக் குறைவுகள் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறது. தங்களின் அனுபவத்தை மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி //

வாங்க தல! வாழ்க்கையில் பார்த்துப் பார்த்து செய்தாலும் இதுமாதிரி சின்ன சின்ன குறைபாடுகள் நாமறியாமல் நடந்து விடத்தான் செய்கின்றன!

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

Mohamed Faaique கூறியது...

// Hospital பெயர் கட்டாய்ம சொல்லி இருக்க வேண்டும்.... இன்னும் பலர் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டி...//

சொல்லலாம் தான். அதற்கு ஒரு எதிர்குரல் கிளம்பி விட்டால்?

Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

சித்ரா கூறியது...

//......நம்பிக்கையுடன் வாழ்க்கை யை எதிர் கொண்டு, வெற்றி பெற்று இருக்கும் அவருக்கு எங்கள் வணக்கங் களும் வாழ்த்துக் களும். உங்கள் நண்பரை பற்றிய இந்த பதிவு, மனதை தொட்டது.//

வாங்க சித்ரா, எல்லோரும் வாழ்கிறோம், ஆனால் இவர் துவண்டு விடாமல் துடிப்புடன் வாழ்வது எல்லோருக்கும் ஒரு பாடம்.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

தோழி பிரஷா(Tholi Pirasha) கூறியது...

// படிக்கும் போது மனம் கனக்கின்றது..//

வாங்க தோழி பிரஷா......

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஹுசைனம்மா கூறியது...

// ரத்தம் மாற்றி ஏத்தியதால் இவ்வளவு சீக்கிரம் மரணம் நேருமா? ஹெச்.ஐ.வி. இருந்தாலும், தக்க மருத்துவ சிகிச்சைமூலம், சிலகாலம் நீடிக்க முடிகிறதே?//

மரணத்தை தள்ளிப்போட மருத்துவ சிகிச்சைகள் எவ்வளவோ நவீனத்துவம் அடைந்திருந்தாலும், சிலநேரங்களில் மரணம் தான் முந்தி நிற்கிறது. என்றாலும் அவரின் உடல்நிலை அப்போது தாக்கு பிடிக்க முடியாத பலஹீன நிலையில் இருந்த தென்னவோ உண்மை!

// அவரின் மனைவி அந்த மருத்துவமனையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையா? //
எடுக்கலாம் தான். ஆனால் அவர்

முன்னெடுத்துச் சென்ற அவரது எதிர்கால பணிகள் நிறையவே இதனால் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு முயற்சிக்க வில்லை என்றார்.

ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

// ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு தல.//

நான் அவர் இறப்பைக் கேட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவே ரொம்ப நாளாச்சு!

சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

koodal bala கூறியது...

// தரமான சிகிச்சை அனைவருக்கும் எட்டும் வகையில் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும்....//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இனியாவது துறை சார்ந்தவர்கள் கவனத்தில் கொள்வார்களா?

koodal bala உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

// அனுபவம்...உரைக்கும் உண்மைகள்//

ஆடும்வரை ஆட்டமென்று ஆடி விடாமல் கொஞ்சம் எல்லோரும் உடல் நலனிலும் அக்கறை காட்டவேண்டும் தல! நீங்களும் அரசியல் பதிவே போட்டுக் கொண்டிராமல் சில உடல்நலப் பதிவும் போடுங்க என்று வேண்டுகோள் வைக்கிறேன் சதீஷ்

ஆர்.கே.சதீஷ்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

கே.பி.ஜனா... கூறியது...

// மனதைப் பிசைகிறது! அவர் மனைவியின் மனோதிடம் சற்றே ஆறுதல் அளிக்கிறது! //

வாங்க ஜனா நலமா?

கே.பி.ஜனா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

vanathy கூறியது...

// நாட்டாமை, அழ வைக்கும் பதிவு. அவர் மனைவியின் துணிவு மெச்சத் தக்கது.//

அழக்கூடாது... தைரியம் கூட்டனும்.... என்பதற்காகவே எடுத்துப் போட்டப் பதிவு வான்ஸ்!!

வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

athira கூறியது...

// கடவுளே!!! ஆரம்பிக்கும்போதே, முடிவு விபரீதமாகிடக்கூடாது என நினைத்துக் கொண்டே படித்தேன் அப்படியே ஆகிவிட்டது.//

நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டு படித்ததால் தான் அப்படி ஆகிப் போச்சு, இல்லையென்றால் மேட்டரே மாறியிருக்குமாமோ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.:-)))

// என்ன செய்வது விதிதான் எல்லாம் என மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை:((((((( //

விதியென்று எழுதப்பட்டாலும், எத்தனையோ மாற்றவும் பட்டிருக்கின்றன அல்லவா? மீ..எஸ்..

ஆஹாவும் ஓஹோ..!!

அதாவது நீங்கள் சொல்வது போல
athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றியாம்!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஷர்புதீன் கூறியது...

// உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம், எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு (TEMPLATE) தருவது 40/100 மார்க். நன்றி! //

வாத்யாரே மார்க்கை இன்னும் கொஞ்சம் கூட்டிப் போட்டா தான் என்னவாம்?? ஆமா நான் பாஸாயிட்டேனா?

ஷர்புதீன் உங்கள் வருகைக்கும் மதிப்பீடு தந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

நாடோடி கூறியது...

// முன்பே ப‌டித்திருக்கிறேன் அப்துல்..//

நீங்க எப்பவுமே படிச்சப் புள்ள தானே பாஸ்!! (ஹி..ஹி..விடுவமா??)

ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் பாசமான விசாரிப்புக்கும் மிக்க நன்றி!

Jaleela Kamal சொன்னது…

சே படிச்சிட்டு மனசே சரியில்லை
ரொம்ப கழ்டமா இருக்கு
// இந்த சர்ஃபுதீன் வலை வலையா சென்று பதிவ படிப்பது கிடையாது
எல்லாருடைய பதிவிலும்,இதே பதில் தான் போட்டு வருகிறார்.//,.