facebook

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

"ஆவு கெச்சேனு"



ஆவு கெச்சேனு


மணி என்றால் பணமென்றும், நேரமென்றும், பெல் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்ம நண்பர் மணியை, மணி என்றே எல்லோரும் அழைப்போம். இந்த மணிக்கு ஓர வஞ்சனை, நுனி வஞ்சனை ஏதும் தெரியாது. யார் எந்த வேலை சொன்னாலும் செய்து கொண்டே இருப்பார். அவர் இங்கே அமீர் ஆபீசில் ஏஸி ரெஃப்ரிஜிரேஷன் பணியில் இருக்கிறார்

ஒருமுறை முறை டாய்லெட்டில் பிளஷ்அவுட் வேலை செய்யலை. மணியிடம் பேசிக் கொண்டிருந்த போது "யாரவது தெரிந்த ப்ளம்பர் இருந்தா அனுப்புங்க" என்று சொன்னேன். 'சரி' என்று சொன்னார். மறுநாள் டூட்டி முடிந்து வெளியே வரும்போது அவர் தான் நின்றுக் கொண்டிருந்தார். “என்ன மணி?” என்றேன். “வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றார். “அப்ப ப்ளம்பர்?? என்றேன். “வாங்க பார்த்துட்டு போய் கூட்டி வரலாம்” என்றார். “சரி” என்று கூட்டி போனேன்.

மணியை கூட்டிப் போய் டாய்லெட்டில் உள்ள பிரச்சினையை காட்டிவிட்டு, மணிக்கு டீ போடுங்க என்று சொல்லிவிட்டு, யாரோ போனில் கூப்பிட்டார்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, "இப்ப வர்றேன்" என்று சொல்லி வெளியே போனார். சரி ப்ளம்பரை கூப்பிடத் தான் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். போய் விட்டு பையில் எதையோ வாங்கி வந்தார். "என்ன மணி ப்ளம்பர் எங்கே?" என்று கேட்டேன்.

"இதோ இப்ப வந்துடுவார்" என்றார். "சரி நீங்க இங்க வாங்க இந்த டீ யையும் பிஸ்கட்டையும் சாப்பிடுங்க" என்றேன். "இதோ ஒரு நிமிஷத்தில் வருகிறேன்" என்று டாய்லெட்டினுள் திரும்ப போய் விட்டார்.

அஞ்சு நிமிஷத்தில் "சார் இங்க வந்து பாருங்க!" என்றார். பிளஷ்அவுட்டை அழுத்திப் பார்க்கச் சொன்னார். அழுத்தினேன். தண்ணீர் சர்ர்ர் என்று பிய்த்துக் கொண்டு அடித்தது. பிரமிப்புடன் மணியைப் பார்த்து "இந்த வேலைய எப்ப கத்துக் கிட்டீங்க" என்று கேட்டேன். "நேரம் போகாத நேரத்தில் இந்த வேலையையும் கத்துக்கிட்டேன்" என்றார்.

பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது.

பிறகு தான் டைலர்ஸயே போய் பார்த்தேன். எல்லோரும் ரொம்ப பிஸியாய் இருந்தார்கள். பெருநாள் முடிந்து பார்க்கலாமே என்றார்கள். பேண்ட் தைக்க கொடுக்காமல் போனால் வீட்டில் லெப்ட் அண்ட் ரைட் தான். மணிக்கு தெரிந்த ஆட்கள் இருப்பார்களா?? எதுக்கும் தான் விசாரித்துப் பார்ப்போமே என்று, சொன்னேன். அப்படியா?? பார்க்கலாம் சார்,,, என்று வீட்டுக்கு வந்தார். பேண்ட் துணியையும் அளவையும் கொடுங்க என்று வாங்கிக் கொண்டு போனார். "பெருநாளைக்கு போட்ட மாதிரி தான்" என்று குரல் கேட்டது!!

மறு நாள் தைத்த பேண்ட்டை கொண்டு வந்து கொடுத்து "போட்டுப் பாருங்க சார் சரியா இருக்கான்னு பார்ப்போம்னு" ஆச்சர்யப் படுத்தினார். உடுத்தி வந்து "எப்படி... மணி" என்றேன். "எல்லாம் நாம தச்சது சரி இல்லாமலா போய்டும்" என்றார். "அட" பிரமிப்பாய் இருந்தது.

"இத எப்படி கத்துக்கிட்டீங்க" என்றேன்.

"டூட்டி முடிஞ்சு ரூமில் நேரம் போகல. ஒரு மெஷின் வாங்கி போட்டு கத்துக் கிட்டேன்"

பின்னொரு தடவை வீட்டில் வாஷிங் மெஷின் ஓடவில்லை. மணியிடம் சொல்லலாம் என்று ஆளனுப்பி சொன்னேன். அந்த நேரம் அவருடைய செல் நம்பரை எங்கோ மறந்து வைத்து விட்டேன். வந்தார். அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு விட்டார். ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின். இதன் பாகமொன்று வேலை செய்யவில்லை. இந்த பார்ட்ஸ் மார்கெட்டில் கிடைக்குமா என்று அவரே கேட்டுக் கொண்டு, எதுக்கும் போய் பார்க்கலாம் என்று அவரே புறப்பட்டுப் போய் மெனக்கெட்டு வாங்கியும் வந்து விட்டார். பிரித்துப் போட்ட பார்ட்ஸின் கிட்ட கூட சென்று நான் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால்

என்னை அருகே கூப்பிட்டு காட்டினார். அதனுள்ளே வயர்கள் சுற்றி இருந்த பகுதியில் மிகப் பெரிய ஒரு வெயிட்டான கல் ஒன்று இருந்தது. "என்ன மணி இவ்வளவு பெரிய தபூக் கல் இருக்கு" என்று கேட்டேன். "அது தான் மெஷினை அங்கிட்டும் இங்கிட்டும் நகர்ந்து ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்று ஓட வைக்கும்" என்றார்.

"அப்படியா?"

நான் மணியை கொஞ்சம் ஹாலில் இருக்கச் சொல்லிவிட்டு பெருமையாய் இவங்களை கூப்பிட்டு அந்த கல்லை காட்டினேன். "ஆவு கெச்சேனு எம்புட்டு பெரிய கல்லு உம்மாடி..." ன்னாங்க. போய்ட்டாங்க.

எல்லாவற்றையும் இணைத்து ஓடவும் வைத்து விட்டார். மணியிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. நாம் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு காசு கொடுத்தால் வாங்க மாட்டார். அதனாலேயே அவரை கூப்பிட்டு எந்த வேலை சொல்லவும் ஒரு சங்கோஜமாவே இருக்கும்.

மணி போன பின் இவங்களிடம்

"ஆவு கெச்சேனு, அப்படின்னா என்ன? ன்னு கேட்டேன்.

"ம்ம்ம்ம்... அதுவா பொம்பளைங்க பாஷை" ன்னாங்க!

ஒருவேளை 'வாவ்' என்பதை தான் இப்படி சொன்னாங்களோ, தெரியலை! ஆனா முன்பொருமுறை விமல் பெட்சீட் விளம்பரம் ஒன்றில், "பெண்கள் தங்கள் மனோபாவங்களை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள் அவற்றில் இதுவும் ஒன்று" என்று ஒரு வரி எழுதி இருக்கும். அது போல் தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டேன்.

எதையோ சொல்ல வந்து விட்டு நானும் வேறெதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆமா இந்த மணி இன்னும் எனென்ன வேலைகள் எல்லாம் கற்று வைத்திருக்கிறார் என்று நேரம் வரும்போது ஒன்னொன்னா கேட்கணும். இதுமாதிரி நண்பர்கள் அமைவது ரொம்ப அபூர்வம்.

இங்கே பிலிப்பைன்ஸ் நாட்டுகாரர்களைக் கூட பார்த்திருக்கிறேன். ஆபீசில் பெரிய போஸ்டிங்கில் இருப்பார்கள். ஆனால் தச்சு வேலை, பெய்ண்டிங் வேலை, ஏஸி மெக்கானிசம் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்படி என்று கேட்டால், எங்களுக்கு தொழில் கல்வி கற்ற பிறகு தான், மற்ற படிப்புக்கு அலவ்ட் என்கிறார்கள்.

அந்த வகையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் இப்போது புரிகிறது. 'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.

53 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்ன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே...

Unknown சொன்னது…

நண்பா பகிர்வுக்கு நன்றி!

Jaleela Kamal சொன்னது…

மீண்டும் நல்ல பதிவுடன் இங்கு உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்சி ,


மணியை போல் நாட்டில் நிறைய மணிகள் உருவாகனும்

வெளிநாடுகளில் இது போல் ரிப்பேர் அயிட்டத்த்து ரிப்பேர் செய்யும் செலவை விட வாங்கி விடுவது நல்ல து என்பார்கள்

இப்படி மணி போல் ஆலினால் போல் எல்லத்தையும் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் நல்லது

Jaleela Kamal சொன்னது…

நேரதத்தை வீண்டித்து கொண்டு இல்லாமால் காலத்தை சரிஅயக கணக்கு போட்டு பயன் படுத்தி இருக்கிறார் மணி

Jaleela Kamal சொன்னது…

மணிக்காகவும். எல்லோரும், யோசிக்கும் படி நேரத்தை வீணாக்காமல் அடுத்து என்ன கத்துக்கலாமுன்னு ட்தோன்றும் படி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க

ஓட்டும் போட்டாச்சு

நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வந்து எட்டி பாருஙக்

எட்டி பாருங்க
ந்னா ஓரமா நின்னு இல்ல
படிச்சி உஙக்ள் பொன்னான கருத்த பதிஞ்சிட்டு போங்க

Mohamed Faaique சொன்னது…

”ஆவு கெச்சே” (இத பெண்கள் மாத்திரம்தான் சொல்லனும்னு ஏதும் ரூல்ஸ் இருக்கா??) இப்படி ஒரு ஆளா???

nazar சொன்னது…

உங்கள் மணி,



மிக அரிதான நபர்களில் ஒருவர்.



சரி இந்த இடுகை மணிக்கா? இல்லை அந்த வார்த்தைக்கா?

ஜெய்லானி சொன்னது…

நமக்கு இந்த மாதிரி வார்த்தையத்தான் முதல்ல கத்துக்கோனும் ஹி..ஹி...

ஜெய்லானி சொன்னது…

ஓசியில வேலை வாங்க ஒரு ஆளை வச்சிருக்கேன்னு மறைமுகமா சொல்வதை நான் வண்ண்ண்ண்ண்ண் மையாக கண்டிக்கிறேன் :-))))))))))

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் சார்.

இமா க்றிஸ் சொன்னது…

எங்கள் வீட்டில் கூடுமானவரை வேலைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இது சந்தோஷம் + செலவுகளை மிச்சப்படுத்த சிறந்த வழி.

பல வேலைகள் முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லாதவை. கொஞ்சம் தயாராக வேண்டும். இப்போ இணையத்தில் தேவையான விபரங்கள் கிடைக்கின்றன. பல வேலைகளைப் பாதி விலையில் முடித்துவிடலாம். கிடைக்கிற திருப்திக்கு விலை இராது. ;)

இமா க்றிஸ் சொன்னது…

விரும்பினால் இந்த இழைகள் பாருங்க.

உங்கள் கருத்துப் பெட்டியை இமாவின் உலகிற்கு விளம்பரப் பலகையாக்கிக் கொள்ள விரும்பவில்லை. பார்த்த பின் நீக்கிவிடலாம். ;)

http://imaasworld.blogspot.com/2011/05/blog-post.html

http://imaasworld.blogspot.com/2011/03/2.html

http://imaasworld.blogspot.com/2011/02/blog-post_24.html

http://imaasworld.blogspot.com/2010/01/blog-post_106.html

ஜெய்லானி சொன்னது…

//மணி என்றால் பணமென்றும், நேரமென்றும், பெல் என்றும் எல்லோருக்கும் தெரியும் //

இதுல பெல்-அப்படின்னு சொல்றீங்களே இது தமிழா பாஸ்..?அவ்வ்வ்


இங்கே டீச்சரும் வந்துட்டு கண்டுகாம போயிருக்காங்க ஹி...ஹி...

ஹுஸைனம்மா சொன்னது…

அப்படின்னா, எங்கூட்டு மெக்கானிக்கல் இஞ்சிநீரப் பாத்து நானும் நெதம் “ஆவு கெச்சேனு” சொல்லணுமோ??!! ;-))))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அட அட்டகாசம் தல. நல்ல ஃப்ளோல அருமையா ஒரு பதிவு.

மணி மணியாத்தான் இருக்காரு.

எனக்கும் பல வேலைகள் பார்க்க தெரியும் ஆனா செய்ய தெரியாது :)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ் நீஈஈஈஈஈண்ட காலத்துக்குப் பின்பு ஒரு நீண்ட பதிவு?:). முதலில் வாழ்த்துக்கள். இனி ஒழுங்காக எழுதுங்க.

//ஜெய்லானி சொன்னது…

ஓசியில வேலை வாங்க ஒரு ஆளை வச்சிருக்கேன்னு மறைமுகமா சொல்வதை நான் வண்ண்ண்ண்ண்ண் மையாக கண்டிக்கிறேன் :-))))))))))
/////

ரிப்பீட்டு * 1009:)).

அவர் காசு வாங்க மாட்டார் எனச் சொல்லிச் சொல்லியே அவரை, வாங்காமப் பண்ணிடுவினம்.

சிலர் உப்பூடித்தான், எங்கேயும் போனால், அவர் சாப்பிடமாட்டார், கொஞ்சம்தான் சாப்பிடுவார்:)), எண்டெல்லாம் சொல்லிச் சொல்லியே சாப்பிடாமல் பண்ணிடுவினம் அதுபோல:)).

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

//இங்கே டீச்சரும் வந்துட்டு கண்டுகாம போயிருக்காங்க ஹி...ஹி...//

இப்ப கொஞ்ச நாளா, கண்ணாடி போட்டும் கண் தெரியேல்லையாம் அவ்வ்வ்வ்... படிச்சதும் இதையும் நீக்கிடுங்க:)))))

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

////""ஆவு கெச்சேனு""
////

அப்பூடியெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ.....

ஆரது குறுக்க நில்லாமல் அரக்கி நில்லுங்கோ.....வெயார் இஸ் மை முருங்கை?:)))) பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))).

எம் அப்துல் காதர் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

// அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்ன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே...//

தெரிந்தால்தானே....!! ஹா..ஹா..

நன்றி பிரபா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

விக்கியுலகம் கூறியது ...

// நண்பா பகிர்வுக்கு நன்றி!//

வாங்க நண்பா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Jaleela Kamal கூறியது

// வெளிநாடுகளில் இது போல் ரிப்பேர் அயிட்டத்து ரிப்பேர் செய்யும் செலவை விட வாங்கி விடுவது நல்லது என்பார்கள் //

நீங்கள் சொல்வது உண்மை தான் ஜலீலாக்கா...!!

// இப்படி மணி போல் ஆலினால் போல் எல்லத்தையும் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் நல்லது //

அதையே தான் "இமா" டீச்சரும் வந்து சொல்லியிருக்காங்க நீங்களும் படிச்சு பாருங்க.

மிக்க நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

Jaleela Kamal கூறியது

// நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வந்து எட்டி பாருஙக! எட்டி பாருங்கன்னா ஓரமா நின்னு இல்ல, படிச்சி உஙக்ள் பொன்னான கருத்த பதிஞ்சிட்டு போங்க!! //

ஜிங்கா பிரியாணி மனமனக்குதேன்னு உங்க பக்கம் வந்து பொறுமையா படிச்சிட்டும் ஓட்டும் போட்டுட்டு வந்தேன். பார்த்தீங்களா!!

மிக்க நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Jaleela Kamal கூறியது

// நேரதத்தை வீண்டித்து கொண்டு இல்லாமால் காலத்தை சரிஅயக கணக்கு போட்டு பயன் படுத்தி இருக்கிறார் மணி //

அந்தமாதிரி பொன்னான தருணம் எல்லோருக்கும் வாய்க்கனுமே என்பது தான் நம் எல்லோருடைய ஆதங்கமும் கூட!! அதற்கு உதாரணம் நம்ம "ஜெய்லானி". (எல்லாம் தெரிந்துக் கொண்டு அடக்கம்னா அடக்கம் அப்படி ஒரு அடக்கம்) எப்பூடி இப்படி எல்லாம் கொளுத்திப் போடலாமோ பூஸார்....மீ எஸ்ஸ்ஸ்ஸ்...

மிக்க நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

Mohamed Faaique கூறியது...

”ஆவு கெச்சேனு” (இத பெண்கள் மாத்திரம்தான் சொல்லனும்னு ஏதும் ரூல்ஸ் இருக்கா??)

ஆமா, தப்பி தவறி அதை நாம சொன்னால், நாம பொம்பளையோ என்று அவர்கள் நினைக்கும் அபாயம் உள்ளது.

Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ nazar கூறியது...

// சரி இந்த இடுகை மணிக்கா? இல்லை அந்த வார்த்தைக்கா? //

போகிற போக்கில் அந்த வார்த்தை வந்து விட்டதேயன்றி, இந்தப் பதிவு முழுக்க முழுக்க மணிக்கே சொந்தம்.

nazar உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// நமக்கு இந்த மாதிரி வார்த்தையத்தான் முதல்ல கத்துக்கோனும் ஹி..ஹி...//

உங்களுக்கு தெரியாததா... கத்துங்க.... ஆனா கத்துக்கிட்டு எங்ககிட்ட சந்தேகம் நம்பர் போட்டு கேள்வி கேட்டுடாதீங்க...!! அப்புறம் நாங்க அம்பேல் தான். ஹா.. ஹா..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஜெய்லானி சொன்னது…

//எங்ககிட்ட சந்தேகம் நம்பர் போட்டு கேள்வி கேட்டுடாதீங்க...!! அப்புறம் நாங்க அம்பேல் தான். ஹா.. ஹா..//

ஆஹா....நினைவு படுத்திட்டீங்களே ராஸா....சந்தேகபதிவு போட்டு நிறைய நாளாகிடுச்சே....திரும்பவும் தொடங்கிட வேண்டியதுதான் ..

ச்சேச்சே.இதுக்கே அழப்பிடாது ...இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே.ஹி..ஹி...

ஜெய்லானி சொன்னது…

//ஆமா, தப்பி தவறி அதை நாம சொன்னால், நாம பொம்பளையோ என்று அவர்கள் நினைக்கும் அபாயம் உள்ளது. //

புள்ள எங்கையோ வாங்கி கட்டி இருக்கு அதான் அனுபவம் பேசுது க்கி..க்கி... :-))

ஜெய்லானி சொன்னது…

//சிலர் உப்பூடித்தான், எங்கேயும் போனால், அவர் சாப்பிடமாட்டார், கொஞ்சம்தான் சாப்பிடுவார்:)), எண்டெல்லாம் சொல்லிச் சொல்லியே சாப்பிடாமல் பண்ணிடுவினம் அதுபோல:)).//


அதிஸ் இதாவது பரவாயில்லையே இன்னும் சிலர் இவர்தான் பில்லுக்கு பணம் குடுப்பர் எங்களை குடுக்கவே விடமாட்டார்ன்னு சொல்லியே ஆட்டைய போடும் ஆட்களும் இருக்காங்களே ..!!விட்டுட்டீங்களே...அவ்வ்வ்வ்

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// ஓசியில வேலை வாங்க ஒரு ஆளை வச்சிருக்கேன்னு மறைமுகமா சொல்வதை நான் வண்ண்ண்ண்ண்ண் மையாக கண்டிக்கிறேன்
:-)))))))))) //

ச்சே.. ச்சே.. நட்பை பற்றி இப்படி எல்லாம் வர்ணிப்பதை நானும் வண்ண்ண்ண்ண்ண்மையாக கண்டிக்கிறேன் :-)))))))))) அவ்வ்வ்வ்..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஜெய்லானி சொன்னது…

//
அப்பூடியெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ....//


அதில்லை ””நீங்களும் இருக்கீங்களே வெண்ணெய் “” அப்படின்னு அர்த்தம் ஐயோ உலறிட்டேனே அவ்வ்வ்வ்

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார் கூறியது...

// நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் சார்.//

அதெல்லாம் முடியாது தல! நீங்க எப்ப வந்து என்னை பார்த்திட்டு போறீங்களோ அப்ப தான் எழுதவே ஒரு உந்துதல் வருகிறதென்னவோ வெளியே சொல்ல முடியாத உண்மை.

நன்றி செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ இமா சொன்னது…

// எங்கள் வீட்டில் கூடுமானவரை வேலைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இது சந்தோஷம் + செலவுகளை மிச்சப்படுத்த சிறந்த வழி. //

டீச்சர் எண்டால் இப்படி தானிருக் கோணும்.... ஸ்டூடண்ட்ஸுக்கு வழிகாட்டியாய்!!

பல வேலைகள் முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசிய மில்லாதவை. கொஞ்சம் தயாராக வேண்டும். இப்போ இணையத்தில் தேவையான விபரங்கள் கிடைக் கின்றன. பல வேலைகளைப் பாதி விலையில் முடித்துவிடலாம். கிடைக்கிற திருப்திக்கு விலை இராது. ;)

உண்மை தான். ஆனால் "கொஞ்சம் தயாராகணும்" என்பது தான் நம்மிடையே தோன்ற வைக்கும் மலைப்பென்னும் மாயை...!!

நன்றி இமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ இமா சொன்னது…

// உங்கள் கருத்துப் பெட்டியை இமாவின் உலகிற்கு விளம்பரப் பலகையாக்கிக் கொள்ள விரும்ப வில்லை. பார்த்த பின் நீக்கி விடலாம். ;) //

ச்சே.. ச்சே.. உங்க விளம்பரத்திற்க் கெல்லாம் "ஆஹா பக்கங்கள்" கட்டணம் வசூலிக்காது. நீங்க ஒன்னும் பயந்து போயிடப் படாது. அவ்வ்வ்வ். எல்லோரும் தான் உங்க விளம்பர இழையை பற்றிப் பிடித்து படித்து விட்டு போகட்டுமே! :-))

நன்றி இமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//இதுல பெல்-அப்படின்னு சொல்றீங்களே இது தமிழா பாஸ்..?அவ்வ்வ் இங்கே டீச்சரும் வந்துட்டு
கண்டுகாம போயிருக்காங்க ஹி...ஹி...//

டீச்சர் வந்து கண்டுக்காம போனா அதுக்காக அவங்களுக்கு பிரம்படியா கொடுக்க முடியும். அவ்வ்வ்வவ்... சரீ...ரீஇஈஈஈஈஈஈஈஈ பெல் என்பதை தமிழ் என்று உங்களிடம் சொன்னது யார்?? டவுட்டு

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹுஸைனம்மா கூறியது...

// அப்படின்னா, எங்கூட்டு மெக்கானிக்கல் இஞ்சிநீரப் பாத்து நானும் நெதம் “ஆவு கெச்சேனு” சொல்லணுமோ??!! ;-)))) //

ஊஹும். “ஆவு கெச்சேனு நல்ல ஹொஜரத்தா தாம்மா இருக்கு ” அப்படீன்னு (மொகவாய் கிட்ட கைய வச்சுகிட்டு) சொல்லணும். எங்கே சொல்லுங்க பார்ப்போம்!!! அவ்வ்வ்வவ் :-)))

நன்றி ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

நிஷாந்தன் சொன்னது…

மணியான நண்பர் பற்றிய மணியான பதிவு அற்புதம். அவருடைய பன்முகத் தன்மை வியக்க வைக்கிறதென்றால் அப்துல் காதருடைய விவரிப்புத் தன்மை ரசிக்க வைக்கிறது. தங்களுக்குப் பொழுது கிட்டும் போது நம்முடைய வலைப்பூவுக்கு (நிலா வெளிச்சம்) வருகை தர அழைக்கின்றேன். முகவரி: nisshanthan.blogspot.com

எம் அப்துல் காதர் சொன்னது…

@ சிநேகிதன் அக்பர் சொன்னது…

// எனக்கும் பல வேலைகள் பார்க்க தெரியும் ஆனா செய்ய தெரியாது:) //

"அடடடடா"..... மங்காத்தா பட விளம்பரத்தில் இப்படி சொல்லித்தான் முடிக்கிறார்கள். அவ்வ்வ்வவ்..

நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ athira கூறியது...

// இனி ஒழுங்காக எழுதுங்க.//

ஏன் இந்தப் பதிவு சரியில்லையா???? அவ்வ்வ்வ்...கர்ர்ர்ர்ர்..

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ athira கூறியது...

// அவர் காசு வாங்க மாட்டார் எனச் சொல்லிச் சொல்லியே அவரை, வாங்காமப் பண்ணிடுவினம்.//

ஆஹா... இத வேற ஒரு கூட்டமே சேர்ந்து கொளுத்திப் போட்டாச்சா!!! நல்லவேளை இதை 'மணி' படிக்காமல் இருக்க படாத பாடு படனும் போல. மியாவ்...

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@ athira கூறியது...

// இப்ப கொஞ்ச நாளா, கண்ணாடி போட்டும் கண் தெரியேல்லையாம் அவ்வ்வ்வ்...//

கண் கண்ணாடி போடணும், முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டினா அப்புடித்தான் அவ்வவ்வ்வ்வ்..

// படிச்சதும் இதையும் நீக்கிடுங்க:))))) //

அப்படீன்னா இதை படிச்சவங்க எல்லோருமே அழிச்சிடுங்க... சரியா (சொல்லிட்டேன்.. மியாவ்!!)

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ athira கூறியது...

//""ஆவு கெச்சேனு" அப்பூடி யெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ//

ஹய்யோ ஹய்யோ தப்பு தப்பு. பெஞ்சு மேல ஏறுங்க!!!! இல்ல பிரம்படி கிடைக்கும். அவ்வ்வ்வ்.

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//""ஆவு கெச்சேனு" அப்பூடி யெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ.//

// அதில்லை ”நீங்களும் இருக்கீங்களே வெண்ணெய்” அப்படின்னு அர்த்தம் ஐயோ உலறிட்டேனே அவ்வ்வ்வ்.//

நீங்களும் தப்பாத்தான் சொல்றீங்க பாஸ்!! முட்டி போடுங்க!! இல்ல முட்டிக்கு முட்டி அடி கிடைக்கும். ஹா.. ஹா..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// ஆஹா....நினைவு படுத்திட்டீங்களே ராஸா.... சந்தேகபதிவு போட்டு நிறைய நாளாகிடுச்சே....திரும்பவும் தொடங்கிட வேண்டியது தான் .. ச்சேச்சே.இதுக்கே அழப்பிடாது இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே.ஹி..ஹி...//

ஜெய்லானி என்றால் 'சந்தேகம்' என்று அர்த்தமா?? அழுவுனாமட்டும் விட்டுடுவீங்களாக்கும்... நீங்க கன் (gun) பார்ட்டி boss..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Asiya Omar சொன்னது…

//ஆவு கெச்சேனு// இப்ப் என்னன்னு தெரியலைன்னால் எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு.நாகூருக்கு போன் செய்து கேட்டுட வேண்டியது தான்,அவுகளுக்கு தனியா ஏதும் பாஷையிருக்கான்னு?வீட்டுக்கு வீடு மணி இருக்காங்க போல.

Jaleela Kamal சொன்னது…

என் பக்கம் வந்த மைக்கும் ஓட்டு போட்டத்த்ற்க்ம் மிக்க நன்றி
இமா டீச்சர் பற்றி நல்ல வே தெரியும்
படிச்சிருக்கேன்

ஜெய்லானி சொன்னது…

புது போஸ்ட் போடாட்டி காணவில்லைன்னு விளம்பரம் குடுத்திடுவேன் ஜாக்கிரதை :-)))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி சொன்னது…

புது போஸ்ட் போடாட்டி காணவில்லைன்னு விளம்பரம் குடுத்திடுவேன் ஜாக்கிரதை :-)))

போற போக்கைப் பார்த்த கூறு போட்டு வித்துடுவாங்க போலிருக்கே! அவ்வ்வ்வ்.....நான் புது போஸ்ட் போட்டா தான் நீங்க காணாம போயடுறீங்களே :-))))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நிஷாந்தன் கூறியது...

//மணியான நண்பர் பற்றிய மணியான பதிவு அற்புதம். அவருடைய பன்முகத் தன்மை வியக்க வைக்கிறதென்றால் அப்துல் காதருடைய விவரிப்புத் தன்மை ரசிக்க வைக்கிறது. தங்களுக்குப் பொழுது கிட்டும் போது நம்முடைய வலைப்பூவுக்கு (நிலா வெளிச்சம்) வருகை தர அழைக்கின்றேன். //

வாங்க நிஷாந்தன். உங்கள் வலைப்பூவுக்கு வந்து என்னை இணைத்துக் கொண்டேன். பார்த்தேன் படித்தேன் பிரமித்தேன். புதிய போஸ்ட் ஏதும் போடலியா??

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிஷாந்தன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//அப்பூடியெண்டால் “உங்களை எனக்கு சுத்தமாப் பிடிக்கேல்லை”:))) எண்டு அர்த்தம்ம்ம்ம் ஹையோ ஹையோ....// //அதில்லை ””நீங்களும் இருக்கீங்களே வெண்ணெய் “” அப்படின்னு அர்த்தம் ஐயோ உலறிட்டேனே அவ்வ்வ்வ் //

உஷ்... பப்ளிக்.. பப்ளிக்..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

{ஆவு கெச்சேனு}... //இப்ப் என்னன்னு தெரியலைன்னால் எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு. நாகூருக்கு போன் செய்து கேட்டுட வேண்டியது தான், அவுகளுக்கு தனியா ஏதும் பாஷையிருக்கான்னு? வீட்டுக்கு வீடு மணி இருக்காங்க போல.//

போன் போட்டு கேட்டீங்களா? டவுட் கிளியராயிடுச்சா? ஹா.. ஹா.. இவரெல்லாம் சப்தமிடாத மணிகள்.

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// என் பக்கம் வந்த மைக்கும் ஓட்டு போட்டத்த்ற்க்ம் மிக்க நன்றி!! //

ஒட்டு போடுவது நம்ம கடமையல்லவோ!! அவ்வ்வ்வ்...

Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//இங்கே டீச்சரும் வந்துட்டு கண்டுகாம போயிருக்காங்க ஹி...ஹி...// இப்ப கொஞ்ச நாளா, கண்ணாடி போட்டும் கண் தெரியேல்லையாம் அவ்வ்வ்வ்... படிச்சதும் இதையும் நீக்கிடுங்க:)))))

இதை நான் வண்ண்ண்ண்ண்ண் மையாக (வண்ண வண்ணமாக) கண்டிக்கிறேன் (படித்ததும் நீக்கி விடுவதையா?? கண்ணாடி போட்டும் கண் தெரியேல்லையாம் என்பதையா?? டீச்சரும் வந்துட்டு கண்டுகாம போயிருக்காங்க என்பதையா??) எதை கண்டிக் கிறேன்ன்னு எனக்கே தெரியலிங்க! அவ்வ்வ்வ் :-)))))

athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மியாவ்.