facebook

வெள்ளி, ஜூன் 11, 2010

விருந்தினர் பக்கங்கள்


விருந்தினர் பக்கங்கள் :


     நான் இங்கு வந்த பின்பு, நாங்களாகி போனது கடந்த ஆறு ஏழு வருடத்திற்கு முன்பு தான். தனியாக இருந்த காலத்தில் எப்படியும் பத்து பதினைந்து பிளாட் மாறியிருப்பேன். இவர்கள் எல்லாம் வந்த பின்பு மாறியிருப்பது இது ரெண்டாவது பிளாட்.

      சமீப காலமாய் இங்கு பாமிலி பிளாட் கிடைப்பது ரொம்ப சிரமமாயிருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் ரெண்ட் ரொம்ப தாஸ்தி. அந்த பிளாட் தேடி அலைந்த கதையை வேறு தனி இடுகையாய் எழுதுகிறேன்.

     பிளாட் தேட ஆரம்பித்ததுமே பால்கனி இல்லாத பிளாட் எதுவும் நமக்கு வேண்டாம் என்று வீட்டம்மா ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாங்க. ஆஹா அவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியுமா.(அதானே! எனக்கு நானே பயந்து கொண்டு, என்னை நானே இப்படி கேள்வியும் கேட்டுக்கொள்வேன்)

     இந்த பிளாட்டில் பால்கனி சுமாரான பெரிசு. கதவை திறந்தாலே வெளிக்காற்று சில்லென்று வரும். (வெயில் நேரத்தில் அல்ல) "ஹா" என்று திறந்த மாதிரி இருப்பதால் புறாக்கள் வந்து வந்து உட்கார்ந்து போவது தனி அழகாக சுவாரஸ்யமாக இருந்தது.

     அதுவே கொஞ்ச நாளில் பல்கி பெருகி வர ஆரம்பித்து, பால்கனி நாஸ்தியாகி போனது. பால்கனி வேண்டும் என்று சொன்ன வீட்டுக்காரம்மா புறாக்களின் எச்சங்களை அள்ளிப்போட்டு கழுவி சுத்தம் பண்ணியே கை அசந்து போனாங்க. ஒரு கட்டத்தில் வெறுத்தே போய்ட்டாங்க.

     ஹை ஜாலி!! அது தானே நமக்கு வேண்டும். அப்படியே கிட்ட போய் இந்த புறாக்கள் வராம இருக்க வலை மாதிரி உள்ள ஸ்க்ரீன் வாங்கி கட்டி விடுவோம். என்ன கொஞ்சம் செலவாகும் என்றேன். அவர்களுக்கு செலவை பற்றி ஒரு கவலை (பின்னே இருக்காதா?) ஒரு பக்கம் மகிழ்ச்சி!! புருஷன் ஆதரவா சொல்றேன்னு. (எப்படி நம்ம கோ ஆபரேஷன் ?) இதுதானய்யா மனுஷனுக்கு வேணும். அதுக்கு தானே ஓடியாடி சம்பாதிக்கிறோம்.

     ஸ்க்ரீனும் போட்டாச்சு, காற்றோட்டமாய் இருக்க அதை இழுத்து கட்டாமல் அசைந்தாடுவது போலும் விட்டாச்சு. ஆனாலும் அந்த ஸ்க்ரீன் அசைந்து விலகும் நேரத்தில், உள்ளே புறாக்கள் புகுந்து திரும்பிப் போக வழி தெரியாமல் வந்து வசமாய் மாட்டிக் கொள்ளும். மாட்டிக்கிச்சா... மாட்டிகிச்சு. இப்ப அவை தானே நமது விருந்தினர்கள்.
                                                                             

                                                        
       இப்ப பிரச்சினையே என்னன்னா அதை பிரியாணி போடுவதா?  குருமா போடுவதா? பொரிப்பதா? ஆக்குவதா? இதுக்கெல்லாம்...Siss. ஆசியா உமர், ஜலீலாக்கா, மல்லிகாக்கா, நாஸியா (பிரியாணி அவங்கதானே) ஸாதிகா, சஸிகா, கீதா ஆச்சல், இன்னும் அறுசுவை தளங்கள் என்னென்ன இருக்கோ அதையெல்லாம் அலசியாகிறது. பெயர் விட்டுப்போனவர்கள் (நான் புதுசு தானே) ஹி..ஹி..சாரி..

      இப்படி தான் ஹுசைனம்மா, அனன்யா மகாதேவன் ஆகியோர்கள் சொல்கிற, எங்களை மாதிரியுள்ள “ரங்கஸ்” களின் பிழைப்பும் ஓடுகிறது!!

**                                                                                                                                                    

**

**

விளம்பர சுவாரஸ்யங்கள்





நம்ம திரிஷா.

பாத்ரூமில் பல்விளக்கிக் கொண்டிருக்கும் ஒருவர் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. என்று கத்துகிறார். சொல்லிவைத்தார் போல் இவரும் மைக்கை பிடித்துக்கொண்டு "உங்களுக்கு பல்லில் கூச்சமிருக்கா?" என்கிறார். எப்படி இதெல்லாம் இவரால் முடிகிறது !

      இதெல்லாத்தையும் விட கொடுமை. ப்ளைட்டில் போகும் ஒருவருக்கு ஜில் தண்ணி குடித்த வுடன் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. கிறது. டிக்கெட் போட்டுக்கொண்டு போய் கேட்கிறார். எப்படி சார்?. இந்த விளம்பரம் எடுக்கும் கம்பெனியை ரெண்டு போட்டால் சரியா வரும். நாமெல்லாம் விளம்பரம் பார்ப்பதற்கென்றே, படத்தை பார்க்கிற ஆட்கள் அதிலும் இந்த அழிச்சாட்டியம் தாங்கமுடியலை!


இன்னொரு விளம்பரம் கால்வின் கெவின் என்று நினைக்கிறேன்.

     இதில் ஒரு சிறுவன் அப்பாவிடம் வந்து சாவி கொடு கார் ஓட்டனும் என்கிறான். நீ வளர்ந்த பிறகு என்கிறார். பையன் உடனே போய் பிரிட்ஜிலிருந்து பாலை எடுத்து குடித்து விட்டு வருகிறான். குடித்த பால் கொஞ்சம் மேலுதட்டில் மீசை வரைந்த மாதிரி இருக்க, அப்பாவிடம் அவன் வந்து கார் சாவியை கேட்கும் அழகே அழகு!


இன்னும் என்ன சொல்ல...

இருங்க -

இந்த வார டிஸ்கி போடலன்னா பதிவர்கள் கோச்சுக்குவங்கன்னு சொன்னாங்க.

ஆகவே -

டிஸ்கி : அது டிஷ் சம்பந்தப்பட்டது

முஸ்கி : அது குஷ்பு சம்பந்தப்பட்டது

கிஸ்கி : அது ஹிந்திங்க!!நமக்கு தெரியாது. ஐயோ ஆள விடுங்க!



````````````````````````````````````````````````````````

22 கருத்துகள்:

எம் அப்துல் காதர் சொன்னது…

ஹை நான் தான் பஸ்ட்டு..

Unknown சொன்னது…

ஹலோ சார் ,,,,,,,,,,வீட்டைத் தேடும் கொடுமை எனக்கும் தெரியும்,ஆனா புறா பிரியாணி
ரொம்ப அநியாயம் தாங்க,உங்க வீட்டுக்காரம்மாவின் தொல்லை தாங்க முடியவில்லை ,விளம்பர தொல்லை அநியாம்க இதுக்கு தீர்வே இல்லையா யா யா யா யா எய்ய......{ஐ ,,நான் தான் செகண்ட் }

ஹரீகா சொன்னது…

கமெண்ட்ஸ் நாங்க தான் போடணும்! நீங்களே போட்டுகொள்வது கொஞ்சங்கூட நல்லாயில்லை.

அதுசரி புறா பிரியாணி சாப்டாச்சா. அடீ ஜெசி.. போன் பண்ணி சொன்னா என்னடி! வந்து விழுந்திட மாட்டேன். இரு வந்து வச்சுக்கிறேன் கச்சேரிய...

அண்ணிய விசாரித்ததாக சொல்லும்மா செல்லம்..

தூயவனின் அடிமை சொன்னது…

ஆஹா புறா பிரியாணியா ,இதுவரை யாரும் புறா பிரியாணி இடுக்கை போடவில்லை, நம்ம முந்திக வேண்டியதுதான். வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

விருந்தினர் பக்கங்கள் அருமையாக இருந்தது. டெம்ப்ளேட் எல்லாம் மாற்றி அசத்தலான தலைப்போடு கலக்க ஆரம்பித்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

விளம்பர சுவாரஸ்யங்களைத் தொடருங்கள்.

ஃபாலோயர் விட்ஜெட் சேத்துருங்க சார்.

செ.சரவணக்குமார் சொன்னது…

sir,

i will call u at evening.

Ahamed irshad சொன்னது…

விருந்தினர் பக்கங்கள் ஒஹோ.. அசத்துங்க...

Asiya Omar சொன்னது…

சகோ.அப்துல் காதர் டெம்ப்லேட் ஆஹா அசத்தலாக இருக்குங்க.இடுகை அருமை.

Unknown சொன்னது…

புறா பிரியாணி........
சூப்பர் .....ஆஹா ...ஓஹோ...
வாயில் ஜொள்ளு கொட்டுதா...
சாப்பிட...சாப்பிட...டேஸ்ட்...

அங்கே ரெண்டு பயபுள்ளைக்கு
வயிறு எரியுமே நீங்களே மாறி மாறி
அனசிக்கங்கோ கோ.. கோ..

ஏய்
ஹரி ,நிலா எங்கே போய்டிககக
எத்தனை முறை போன் செய்வது
செல்லை தொலைத்து விட்டீங்களா
[ஐய் ஜாலி]

பிரியாணி சாப்பிட்ட பாத்திரங்கள்
நிறையா இருக்கு துலக்க ரெடியா,,,
சீக்கிரம் வாங்க..நாங்கெல்லாம் பாசக்கார பயபுள்ள...

எம் அப்துல் காதர் சொன்னது…

இளம் தூயவன் புறா பிரியாணி, இன்னும் சாப்பிடலை சார். அது தான் எல்லா சிஸ் இடமும் கேட்டிருக்றோமே. பதில் சொல்வாங்க. வந்தவுடன் உங்களையும் கூப்பிடுகிறேன் அவசியம் வாங்க...உங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//ஃபாலோயர் விட்ஜெட் சேத்துருங்க சார்//

சேர்த்தாச்சு சார். எல்லோரையும் அழைச்சுக்கிட்டு வாங்க சார்.
போன் ஏன் பண்ணலை? அயம் வெய்டிங் na !! மெயில் பண்றதாக சொன்னீங்களே ஏன் பண்ணலை?

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அஹமது இர்ஷாத்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நீங்கல்லாம் மூத்த பதிவர்கள், தோஹாவில் பதிவர்கள் கூட்டம் கூட்டப்பப் போவதாக சொன்னீங்களே! ஏற்பாடுகள் எந்த அளவு இருக்கு சார்? அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ siss ஆசியா உமர், வாங்க மேடம்!

நீங்கல்லாம் மூத்த பதிவர்கள். உங்களது வழிகாட்டுதல்களை அவசியம் எதிர்பார்க்கிறோம்.
பாலலோயர் விட்ஜெட் சேர்த்தாச்சு.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanilla, ஹரீகா ஜெஸிரா

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஏய் பசங்களா! வந்தமா படிச்சமான்னு போய்க்கிட்டே இருக்கணும். உங்களுடைய கலாட்டாக்கு இது இடமல்ல. அப்படியே குதிச்சு
ஓடிப்போய்டுங்க. ஆமா சொல்லிட்டேன், என் செல்லங்களா..

Jaleela Kamal சொன்னது…

வந்துட்டேன்,
பாலோவர் விட்ஜெட் சேர்த்துட்டிங்களா,. இப்ப நீங்களும் அதில் லாகின் ஆகிடுங்க.

அப்ப தான் கிளிக் செய்தால் உங்கள் உங்கள் பிளாக் பார்க்க் முடியும்,
நானும் எத்தனையோ முறை கிளிக் செய்தேன், அது பேஜ் எரரில் போய் நின்றது.

Jaleela Kamal சொன்னது…

வீடு மாறுதல் நிறைய பேர் சொல்வாஙக
ஆனால் உண்மையில் ரொம்ப கழ்டம்/


புறா தொந்தரவு எல்ல்லா வீட்டிலும் உண்டு. 10 நாள் பால்கனிய பார்க்கம விட்டுட்டோம், அவ்வளவு தான் புறா வீடு கட்டி குடித்தனம் நடத்த் ஆரம்பித்து விடும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ siss ஜலீலா கமால், வாங்க மேடம்!

நீங்கல்லாம் மூத்த பதிவர்கள். உங்களது வழிகாட்டுதல்களை அவசியம் எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீக்கா!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ siss ஜலீலா கமால்,வாங்க மேடம்!

சகோ. நீங்கள் எனது இரண்டாவது "follower" என்பது நெஞ்சு கொள்ளாத சந்தோசம்.

வீட்டில் அனைவரும் உங்களை பற்றியும், உங்கள் வலை தளம் பற்றியும் இடையிடையே பேசிக் கொள்வோம்.

எல்லோரும் உங்களுக்கு சலாம் சொல்ல சொன்னார்கள். சலாமலைக்கும்...

நாடோடி சொன்னது…

புறா பிரியாணி ப‌ண்ணினா ந‌ம்ம‌ளையும் ஒரு எட்டு கூப்பிடுங்க‌... நானும் ப‌க்க‌த்தில் தான் இருக்கிறேன்... தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி சார் வாங்க எப்படி இருக்கீங்க?

நீங்க பக்கத்தில் இருந்தால் புறா என்ன, ஒட்டக பிரியாணியே போட்டுடுவோம்ல! ஜித்தா என்ன கூப்பிடு தூரத்திலா இருக்கு? ஆனாலும் கூரியரிலாவது உங்களுக்கு புறா பிரியாணி அனுப்புறது அனுப்புறதுதான்.

ஸ்டீபன் நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

Menaga Sathia சொன்னது…

புறா பிரியாணியாஆஆஆ?? எப்படின்னு சொல்லுங்க நானும் தெரிந்துக்கிறேன்.அப்புறம் புறாவை ஒருத்தர் மட்டும் தான் சாப்பிடனுமாம் அப்பதான் அதன் சத்துக்கள் கிடைக்கும்னு சொல்லுவாங்க.முழுமையான காரணம் தெரியல...சோ பிரியாணி செய்தால் யாருக்கும் பங்கு கொடுக்காதீங்க...

தமிலீஷ்ல சப்மிட் பண்ணுங்க...நிறைய பேர் வருவாங்க...என் ப்ளாக்கிற்க்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிங்க...

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Siss.Menagasathia, வாங்க மேடம்!

//அப்புறம் புறாவை ஒருத்தர் மட்டும் தான் சாப்பிடனுமாம் அப்பதான் அதன் சத்துக்கள் கிடைக்கும்னு சொல்லுவாங்க.முழுமையான காரணம் தெரியல...சோ பிரியாணி செய்தால் யாருக்கும் பங்கு கொடுக்காதீங்க...//

என்ன மேடம் போகிற போக்கில் இப்படி ஒரு குண்டை தூக்கிபோட்டு விட்டு போயிட்டீங்க.

ஹா..அப்ப அவ்வளவு பிரியாணியும் எனக்கே எனக்கவா. ஹை.. ஜாலி..
ச்சே ச்சே அப்படியெல்லாம் சாப்பிட்டால், சத்துக்கள் கிடைக்கிற இடத்தில் வயித்து வலி வந்துடப்போவுது மேடம். நீங்க எல்லோரும் வாங்க, வட்டமா உட்கார்ந்து வாய் நிறய பேசிக்கிட்டு மனசு நிறைய சாப்பிடலாம்.

காரணம் எனக்கு தெரியலை மேடம். விசாரிச்சுடுவோம்.

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிக்கா!