facebook

ஞாயிறு, ஜூன் 27, 2010

எங்களின் நேசமிக்கப் பாட்டி

                   
 
 





கோவையில் பரபரப்பாக, செழுசெழுப்பாக இனிதே  நடந்து முடிந்தது செம்மொழி  மாநாடு. எல்லோரும் தமிழ் பேசி, தமிழ் பாடி, தமிழிலேயே கையெழுத்தும் போட்டு அப்பப்பா. தாங்க முடியலைய்யா. ஐரோப்பிய, மற்றும் ஆசியா தேசங்களிலிருந்து வந்து, வித விதமா?? தமிழ் பேசியவர்களின் தமிழ்?? கேட்க கேட்க நெஞ்சு மட்டுமல்ல எல்லாமே குளிர்ந்து போச்சுங்க. செலவு எவ்வளவோ கோடிகளில் சொல்கிறார்கள் ஏதோ தெருக் கோடி மாதிரி. இருக்கிறவர்கள் செலவு செய்கிறார்கள். நம்முடைய கடன், மன உளைச்சல், நோய் நொடி, சண்டை பிணக்கு எல்லாமே தீர்ந்து போச்சுங்க. எப்படி எப்படி எல்லாமோ தமிழ் பேச வைக்க பாடு படுகிறோம் பாருங்கள். இப்ப மேலே படித்ததையெல்லாம் உங்கள் கைக்கொண்டு அழித்து விட்டு, சட்டென்று அடுத்தப் பாராவுக்குள் போய் விடுவோம் வாங்க!

என்னுடைய பாட்டி இருக்கே அது பேசாத தமிழா. நான் இந்த தடவை ஊர் போயிருக்கும் போது வீட்டுக்கு யாரோ விருந்தினர்கள் வந்திருக்குபோது, எல்லாரையும் விழுந்து விழுந்து உபசரித்து தேநீர் முதல் ஜூஸ் வரை தானே கைப்பட செய்து கொடுத்தது.

வந்திருந்தவர்களில் யாரோ வடை பஜ்ஜி எல்லாம் சாப்பிடவில்லை என்றதும் ஃபிப்டி ஃபிப்டி பிஸ்கட் வாங்க விட்டு, அதை அவங்க கிட்ட போய் உட்கார்ந்து பரிவாய் பிரித்து வைத்து, சாப்பிடும்மா "அம்பதுக்கு அம்பது" பிஸ்கட்மா (ஃபிப்டி ஃபிப்டிக்கு தமிழ்ங்க) நல்லா இருக்கும் சாப்பிடும்மா என்று தேனொழுக பேசி எல்லாத்தையும் சாப்பிட வைத்து தான் அனுப்பி வைத்தது.

எல்லோரும் புறப்பட்டு போனபின் பாட்டியை கிட்ட கூப்பிட்டு உச்சி மோந்து, எப்படி பாட்டி இப்படியெல்லாம் பேசுற என்றால், "அடப் போடா இவனே", என்று வெக்கப் பட்டு என் தலைமுடியை கோதி விடும்.(அன்புங்க அன்பு) எங்களை அவ்வளவு அருமைப் பெருமையாய் வைத்திருந்த பாட்டி எப்படியெல்லாமோ எங்களோடு இழையோடிய பாட்டி, நான் இங்கு வந்த பின்பு, சென்ற மாதம் இறந்து போய்டுச்சுங்க...
                                           


நான் பேச்சிலர்ஸ் பில்டிங்கில் தங்கி இருந்த காலம் சொர்க்கமான சொர்க்கம். அப்ப எங்களோடு ஒரு கேரளா நண்பரும் தங்கி இருந்தார். அவர் பெயர் வேண்டாம். கேரள நண்பர்கள் நம்மை எப்போதுமே “வா-போ” (இங்கேயும் அன்பு அன்பு) என்று தான் ஒருமையில் அழைப்பார்கள். அது அவர்களின் இயல்பு தான் என்றாலும் பிறர் நம்மை பார்க்க ரூமிற்கு வரும்போது அது உறுத்தலாவே இருக்கும். நான் பல முறை சொல்லிப் பார்த்துட்டேங்க. கேட்கிறானில்ல. இதற்கு என்ன செய்யலாம் என்று நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்.(நாமெல்லாம் அப்படி யோசிக்கிற ஆட்கள் தானே!ஒரு வழியும் புலப்பட்டதில்லை) ஹி..ஹி..

ரெண்டு ரூமில் உள்ள, நான்கு பேரும், ஆளுக்கு ஒரு நாள் என்று முறை வைத்து சமைப்பதாக எழுதாத உடன் படிக்கை. நல்லா சமைப்போம்ங்க. அந்த நாள் என்னுடைய முறை. சோறாக்கி, ரசம் வைத்து, மீன் பொரிக்கணும், எம்புட்டு வேலை பாருங்க...

ஒத்தையா நின்னு எவ்வளவு சமாளிப்பு. வேத்து விறுவிறுத்து செஞ்சு முடிசிடுவேங்க. எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து தான், கார்பெட்டில் பேப்பர் விரித்து கலமுலான்னு பேசிக்கிட்டு தான் சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டா தான் சோறே இறங்கும். அப்படி ஒரு பக்குவமாய் இங்கே இருக்கப் பழகி விட்டோம்.

முதலில் பேப்பரை விரித்து, குடிக்க தண்ணி வைத்து, சோற்று சட்டியை கொண்டு வந்து வைத்து, பொறித்த மீனையும், ஊறுகாவையும் கொண்டு வந்து வைத்து விட்டு எல்லாரும் வந்து உட்கார்ந்தாச்சுங்க. உட்கார்ந்த பின் தான் தெரித்தது ரசத்தை எடுத்து வர மறந்துட்டேங்க.

அதன்பின் அவசர அவசரமாய் எழுந்து போய் எடுத்து வந்து வைக்கிற நேரத்தில் கை தவறி கேரளா நண்பர் உட்கார்ந்திருந்த முதுகுப் பக்கம் சட்டியோடு சரேலென்று விழ, "என்ன காதர் இப்படி பண்ணிட்டீங்க" என்றாரே பார்க்கலாம். இது எதார்த்தமா தான் நடந்ததுங்க. நம்புங்க.

எங்கிருந்து வந்தது மவனே இந்த மரியாதைத் தமிழ். எல்லாம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் நடக்க வேண்டியது தன்னால நடக்கும் போல. இப்பல்லாம் அவர் எல்லாரையும் “வாங்க போங்க” என்றுதான் அழைக்கிறார். அதைவிடவும் ஒரு படி மேலே போய் பிளாட்களில் சும்மா சுற்றித் திரியும் கிடைத்ததை தின்னும் பூனைகளைக் கூட, “பூனை வர்றார், பூனை போறார்” என்று தான் சொல்வார் என்றால் சிரிப்பீங்களே! சிரிக்காதீங்க..

நாங்க தான் அவர் மேல் இரக்கப்பட்டு,  பூனைக்கெல்லாம்
அவ்வளவு மரியாதை வேண்டாம் என்போம். இருந்தாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இப்பல்லாம் அவர் "பூனை வர்ரான், பூனை போறான், பூனை சாப்பிடுறான்" என்று தான் சொல்கிறார். இப்படியாக ஜாலியாப் போனது அந்த காலக் கட்டங்கள்.

செலவே இல்லாம இப்படி எத்தனை பேருக்கு நாங்க தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். கவர்மெண்ட் இப்படி எல்லாம் யோசிக்கதாங்க..!

                                                        

29 கருத்துகள்:

செ.சரவணக்குமார் சொன்னது…

ஆஹா..

அருமையா எழுதியிருக்கீங்க சார்.

லேபிள் சூப்பர்.

அன்பான பாட்டிக்கு எனது அஞ்சலிகள்.

Asiya Omar சொன்னது…

கேரள நண்பர் பற்றியும் பாட்டி பற்றிய செய்தியும் இணைத்து தமிழையும் சேர்த்து செய்தி அருமை.பாட்டி இறுதியில் தவறிய செய்தி மட்டும் வருத்தம்.

நாடோடி சொன்னது…

த‌மிழ் நீங்க‌ளும் வ‌ள‌ர்த்திருக்கீங்க‌.... சூப்ப‌ர்... பாட்டியின் நினைவு அருமை..

ஜெய்லானி சொன்னது…

அப்படிப்பட்ட பாட்டிகளால்தான் தமிழ் வளர்ந்தது.
பாட்டி :-(

ஜெய்லானி சொன்னது…

சட்டி முதுகுல விழுந்த்துச்சா இல்ல தலையில விழுந்துச்சா...க்கி..க்கி..

ஜெய்லானி சொன்னது…

பழிக்கு பழி வாங்கிட்டியே மாப்பி ..!!உச்சி குளிந்திருக்குமே இப்ப..!!

Menaga Sathia சொன்னது…

ha ha super post!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார் கூறியது...

வாங்க சரவணக்குமார் சார், எப்படி இருக்கீங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ asiya omar கூறியது...

கேரளா நண்பர்கள் பற்றி எல்லோருமே அறிவார்கள், ஆனாலும் நான் தெரிந்துக் கொண்டதையும் தெரியப்படுத்தனுமே என்பதற்காக எழுதியது மேடம். பாட்டிகளின் பெருமைகள் புதிதல்ல, என்றாலும் ஒவ்வருவருக்கும் தனித் தனி ரசனைகள் உண்டு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

Swengnr சொன்னது…

"பூனை வர்ரான், பூனை போறான், பூனை சாப்பிடுறான்"
அருமை!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி கூறியது...

ஆமா சார் தஞ்சை மாவட்டத்திலிருந்து, நாகை மாவட்டம் பிரியுமுன்பே ஒருங்கிணைந்து இருந்த போது தமிழை வளர்த்து விட்டார்களே அவர்கள் எல்லாம் யார் சார்? அதோடு சேர்ந்து தானே நாமும் வளர்ந்து கொண்டிருகிறோம். ஒன்னும் புரியலையா? ஸ்டீபன் சார் ஹி..ஹி..எனக்கும் புரியலைங்க.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//அப்படிப்பட்ட பாட்டிகளால்தான் தமிழ் வளர்ந்தது//

offcourse பாஸ்,,சொன்னாலும் சொல்லாகாட்டியும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...
//சட்டி முதுகுல விழுந்த்துச்சா இல்ல தலையில விழுந்துச்சா...க்கி..க்கி..//

இந்த வம்பு தானே வேணாங்கிறது. ஒன்னுமன்னா பழகி இருக்கோம்..,, இந்த உலகம் இன்னும் நம்மளை நம்ப மாட்டேங்குதே!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//பழிக்கு பழி வாங்கிட்டியே மாப்பி ..!!உச்சி குளிந்திருக்குமே இப்ப..!!//

க்கி.. க்கி..கின்னு நானும் சிரிச்சா உண்மைன்னு ஆயிடும் தல! அதனால ஹி.. ஹி! ஆனாலும் நாமெல்லாம் பழி வாங்குற குரூப்பா பாஸ்,, அமைதின்னு ஒன்னு இருந்தா அது நாமிருக்கிற இடமாத் தானிருக்கும்ங்க!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

ஆமா மூணு தடவ வந்து ஒட்டு போட்டீங்களே,, ஏன் கருத்துரை ஏதும் சொல்லல தல??

உங்கள் வருகைக்கும் கும்மிக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Mrs.Menagasathia கூறியது...

// ha ha super post!! //

வாங்க மேடம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Software Engineer கூறியது...

//"பூனை வர்ரான், பூனை போறான், பூனை சாப்பிடுறான்" அருமை!//

வாங்க சார், எப்படி இருக்கீங்க.. பூனை மாதிரி வந்துட்டு பூனை மாதிரி போய்டாதீங்க! இந்த மாதிரி உங்கள் ரசிப்பையும் எழுதுங்க. அப்ப தான் படிக்க இண்டரஸ்டிங்கா இருக்கும்.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

ஹரீகா சொன்னது…

பாட்டி இறந்து போன துக்கம் ஒரு பக்கமென் றாலும், நீங்க சுதாரிசுக்கிட்டு எல்லோருக்கும் ஆறுதல் சொன்னீங்களே! அண்ணி தான் பாவம்.. எப்ப வந்தாலும் புலம்பிகிட்டே இருக்கும்..

Ahamed irshad சொன்னது…

இன்பம் துன்பம் கலந்த பதிவு.... அசத்தல்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹரீகா கூறியது...

ஏய்,, வாலு எங்க உன்னை பார்க்கவே முடிறதில்ல! நீ இங்க அடிக்கடி வந்துக்கிட்டிருந்தா எல்லோருக்கும் ஆறுதலாவாவது இருக்கும்ல. அப்பா அம்மால்லாம் எப்படி இருக்காங்க. கேட்டதாக சொல்லு! நாளைக்கு வாயேன்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அஹமது இர்ஷாத் கூறியது...

//இன்பம் துன்பம் கலந்த பதிவு.... அசத்தல்.//

ஆமா சார் வாழ்க்கை சில நேரங்களில் நமக்கு சொல்லாமல் சொல்லும் பாடங்கள் அவை. அதை நாம் அணுக வேண்டிய முறையில் அணுகி புரிந்துக் கொள்ளனும்.

எங்கே உங்களை இடையில் ஆளையே காணோம். ரொம்ப பிஸி என்று கேள்விப் பட்டேன். அந்த பிஸியிலும் நம்மை வந்து கண்டுக்கிறீங்க பாருங்க அது தான் அஹமது இர்ஷாத். உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி!!

Mc karthy சொன்னது…

add your blog to Tamilish, Tamilmanam...

ஸாதிகா சொன்னது…

பாட்டியைப்பற்றிய பகிர்வும்,பாட்டியின் பிரிவும் மனதினை நெகிழச்செய்து விட்டது.//சோறாக்கி, ரசம் வைத்து, மீன் பொரிக்கணும்,// ரசம் எல்லாம் கேரளநண்பரின் முதுகில் சரேலென கொட்டி விட்டதே?அப்புற‌ம் என்ன செய்தீர்கள்?

எம் அப்துல் காதர் சொன்னது…

@ RAJ கூறியது...

ஆமா அது மாதிரி தான் செய்யணும். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஸாதிகா கூறியது...

//ரசம் எல்லாம் கேரளநண்பரின் முதுகில் சரேலென கொட்டி விட்டதே?அப்புற‌ம் என்ன செய்தீர்கள்?//

அப்புறமா அவரை மெடிக்கல் அழைச்சிக்கிட்டு போயி மருந்தெல்லாம் வாங்கிப் போட்டோம் மேடம். ஹி ஹி
என்னா கேட்டீங்க,, அப்புறமா பட்டர் மில்க் தான் ..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஸாதிகா மேடம்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்//

மிக்க நன்றி சார்! நானென்ன அவ்வளவு பிரபல பதிவராவா ஆயிட்டேன் பாஸ்! கூச்சம இருக்கு. இருந்தாலும் ரெண்டு கைகளாலும் பெற்றுக் கொண்டேன் தல! வரவேற்பு அறையிலும் வச்சிட்டேன். நீங்களும் அப்பப்ப வந்து கண்கானிச்சுங்க. யாரும் லவட்டிக்கிட்டு போய்டப் போறாங்க. ஹி..ஹி..

vanathy சொன்னது…

படிக்க நல்லா இருக்கு. பாட்டியின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆமாம்! அரசாங்கத்திற்கு ஏதாவது சாக்கு சொல்லி பணத்தை கோடியில் செலவு செய்யாவிட்டால் கை அரிக்கும் போல. அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவலாமே!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

வாங்க மேடம் நல்லா இருக்கீங்களா? அறுசுவை கிட்சன் பக்கமெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு? வாழ்துக்கள் மேடம்!!

//அரசாங்கத்திற்கு ஏதாவது சாக்கு சொல்லி பணத்தை கோடியில் செலவு செய்யாவிட்டால் கை அரிக்கும் போல. அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவலாமே!//

உண்மை தான் மேடம்,, நமக்கு புரியிற அளவுக்குக் கூட அவங்களுக்கு புரிய மாட்டேங்குதே என்பது தான் ஆதங்கம்.

உங்க முதல் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி மேடம். அடிக்கடி வந்துட்டுப் போங்க!!