facebook

செவ்வாய், ஜூலை 06, 2010

உயிர் போகும் வழி!!

சிரிப்பூ..
இந்த சிரிப்பு இருக்கிறதே உங்களுள் பூவாகி புன்னகையாகி சந்தோஷமாகி, உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆகவே புன்னகையை எப்போதும் உங்கள் முகத்தில் பொக்கிஷமாய் சேமித்து வையுங்கள். அதை கொண்டு எதை வேண்டுமானாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே சாதித்துக் கொள்ளலாம். ஆம்.. நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாமே.

நான் இப்ப சொல்ல வர்றது அதைப் பற்றியல்ல.

எங்களின் நிறுவனதிற்காக இன்னொரு I T நிறுவனத்திலிருந்து பணி செய்ய வருபவர் தான் டேனியல் வர்கிஸ் அவரை எப்போதும் "வர்கிஸ் - வர்கிஸ்" என்று தான் அழைப்பார்கள். என்ன பெயர் சுருக்கமோ என்னமோ எனக்கு இந்த மாதிரி எல்லாம் கூப்பிட பிடிக்காது. முழுப் பெயர் சொல்லி அழைத்தால் தான் திருப்தி.

இந்த வர்கிஸ் இருக்கிறாரே மகா புத்திசாலி. எப்போதும் பேசுவதை பேசிக்கொண்டு சிரிப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு காரியமே கண்ணா இருப்பார். அவர் ஆபீசில் வந்து உட்கார்ந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தாலே பூப்பூத்துக் குலுங்குவது போலிருக்கும். அப்படியாப்பட்ட கனிவு, எல்லாம் தெரிந்தும் ஒரு பணிவு. கம்பியூட்டரின் விவரம் தெரியாதவர்களை கிட்ட அழைத்து பொறுமையாய் விளக்கி விளங்க வைப்பது இவரது ஸ்பெசாலிட்டி. கம்பியூட்டரில் என்ன ட்ரபுள் வைரஸ் இன்ன பிற வஸ்துகள் புகுந்தாலும் இவர் கை வைத்தால் குப்பைத் தொட்டி தான் அதற்கு வசிப்பிடம்.

இப்படி கல கலப்பாய் சுறு சுறுப்பாய் வந்து போய்க்கொண்டிருந்த வர்கிஸ் ஸீ யூ சொல்லி விட்டுப் போனவர் தான், மறு நாள் I C U வில் இருப்பதாக செய்தி வந்த பின்னர் தான் என்னாச்சு... ஆமாம் நீங்கள் நினைக்கிற மாதிரி தான் நாங்களும் பரிதவித்து கேட்டோம்.
                                                                                           

 

எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறார், என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள் எதுவுமே தெரியவில்லை. தெரிந்தால் மட்டும் என்ன செய்து விட முடியும். பிரே பண்ணுவதை தவிர... ஒரு நாள் ரெண்டு நாளல்ல மூன்று மாதங்கள் ஓட்டமாய் ஓடிப்போனது தெரியவில்லை.

எல்லோரும் அவரவர் வேலையை கவனித்துக் கொண்டிருக்கும் போது அன்று மலர்ச்சியாய் பளிச்சென்று ஆபீசுக்குள் நுழைந்தார் வர்கிஸ், ஆபீஸ் அல்லோல கல்லோலலப் பட்டது, ஆளாள் அவரை இழுத்தணைத்து முத்த மிட்டு கரிசனையாய் விசாரிப்பும், பாசமான அரவணைப் புமாய்.. எல்லோருக்கும் சந்தோசம்.

ஆனாலும் ஏன்.. என்ன.. எப்படியானது கேட்க ஆவல் தான் எனக்கு. ஏதும் நினைப்பாரோ? இருந்தாலும் நிலைக் கொள்ளாமல் கேட்டே விட்டேன்.

அதைப் பற்றி டேனியல் வர்கிஸ் நம்மோடு ..

மூன்று இடத்தில் நான் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன் என்று மெல்ல சொல்ல ஆரம்பித்தார்

அன்று இங்கே வந்து உங்களை எல்லாம் பார்த்து விட்டு
வீட்டுக்கு போகும் வழியில் ஒரு நண்பரையும் பார்த்து விட்டு போகும் போது தான், தலை பாரமாய் மயக்கம் வருவது போல் உணர்ந்தேன். காரின் வேகத்தை சட்டென்று குறைத்து ஓரமாய் நிறுத்திவிட்டு, உடனே ஹாஸ்பிடலுக்கு போன் செய்து என் கார் நிற்குமிடத்தையும், எனது நிலையையும் விவரித்தேன். அதே போல் என் மனைவிக்கும், அவள் பதறாமல் எப்படி எல்லாம் வார்த்தையால் மெழுக முடியுமோ அப்படியோர் பதவிசாகப் பேசினேன். அவள் பதிலுக்கு காத்திராமல் கட் பண்ணினேன். ஆம்புலன்ஸ் என் இருக்குமிடம் தேடி பறந்து வந்து என்னை அள்ளிப் போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தது.

என்னை ஸ்கேன் மற்றும் எல்லா டெஸ்டும் எடுத்து “ப்ரைனில் நீர்க் கட்டிக்கொண்டு” இருப்பது தெரிய வந்து உடனே ஆபரேஷன் பண்ணனும் இல்லாவிட்டால் என்று உயிருக்கு விலைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந் நிலையில் கேரண்டீ கையெழுத்து போடனுமாமே,, யார்ப் போடுவார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்ப தான் முன் வந்தார் Dr.அஹமது இப்ராஹீம். அவரை எனக்கு முன்பே தெரியும் என்று கையெழுத்தும் போட்டு ஆபரேஷன் ரூமுக்கும் அழைத்துப் போனது தான் எனக்கு தெரியும். கண்விழித்து பார்க்கும் போதும் யாரையும் எனக்கு தெரியலை! தலையில் சின்னதா ஒரு ஆபரேஷன் சார். எல்லாம் மறந்து போச்சு.

கொஞ்சம் கொஞ்சமாய்..அந்த தெரபி, கொஞ்சம் கொஞ்சமாய்...இந்த தெரபி என்று என் நினைவுகளை கொடுக்கக் கொடுக்க பத்து நாள் சென்ற பின்னரே என் மனைவியின் முகம் நினைவில் வர ஆரம்பித்தது. எல்லார் முகமும், அவர்களோடு பேசியது பழகியது நினைவுக்கு கொண்டு வர ஒரு மாதத்திற்கு மேலாகிப் போனது என்று விவரித்துக் கொண்டே போனார்.

நாங்கள் பிரமிப்பாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன மனிதர் இவர்..!!

எனக்கு முதலில் மயக்கம் வந்த போதே நான் சுதாரிப்பு இல்லாமல் நான் ஓட்டிப் போன கார் எங்காவது மோதி ஆக்சிடென்ட்டாகி இருந்தாலும் அப்போதே போயிருப்பேன். இரண்டாவது கேரண்டீ கையெழுத்துப் போட ஆளில்லா விட்டாலும் போய் சேர்ந்திருப்பேன். எனக்கு எந்த ஞாபகமும் வராமல் போயிருந்தாலும் முழுமையாய் நான் போன மாதிரி தானே, என்றார். உண்மைதானே!

யாருக்கு வரும் அந்த துணிச்சல். தைரியம் என்றால் என்ன என்பதை டேனியல் வர்கிஸ் நமக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார்!
                                            

28 கருத்துகள்:

vanathy சொன்னது…

இப்படி சில பேர். என்ன நடந்தாலும் பதறாமல் இருப்பார்கள். சிலர் சிறு காயம் என்றாலே கத்தி, ஊரைக் கூட்டி பக்கத்தில் இருப்பவர்களையும் ஒரு வழி பண்ணி விடுவார்கள்.
நல்ல எழுத்து நடை.

நாடோடி சொன்னது…

விய‌க்க‌ வைக்கும் ந‌ண்ப‌ர் தான்... சில‌ருடைய‌ அனுபவ‌ங்க‌ள் ந‌ம‌க்கும் ஒரு பாட‌மாக‌ இருக்கும்..

அஹமது இர்ஷாத் சொன்னது…

வர்கீஸ் மாதிரியான ஆட்களைப் பார்ப்பது அபூர்வம்ங்க.. எழுத்தில் சிரிப்பை வரவழைக்கும் தந்திரம்? உங்களுக்கு இருக்கிறது..சூப்பர்...நல்ல இடுகை

ஸாதிகா சொன்னது…

டேனியல் வர்கீஸ்..எங்கள் மனதிலும் ஒரு இடத்தைப்பிடித்து விட்டார் உங்கள் அழகிய எழுத்து வரிகள் மூலம்.

rk guru சொன்னது…

நல்ல பதிவு...

ஹரீகா சொன்னது…

இந்த நிகழ்ச்சியை நீங்க என்னிடம் சொல்லவே இல்லைண்ணா,, அருமையா இருக்கே.. தஹிரியமானவர் தான் இந்த வர்கிஸ் போல. எங்களிடம் சொன்னவற்றையும் எழுதுறீங்க, சொல்லாதவை களையும் எழுதுறீங்க!! அற்புதம்.

வாழ்க வளர்க உங்க தமிழ் தொண்டு!!

ஹரீகா சொன்னது…

இந்த நிகழ்ச்சியை நீங்க என்னிடம் சொல்லவே இல்லைண்ணா,, அருமையா இருக்கே.. தஹிரியமானவர் தான் இந்த வர்கிஸ் போல. எங்களிடம் சொன்னவற்றையும் எழுதுறீங்க, சொல்லாதவை களையும் எழுதுறீங்க!! அற்புதம்.

வாழ்க வளர்க உங்க தமிழ் தொண்டு!!

ஹரீகா சொன்னது…

இந்த நிகழ்ச்சியை நீங்க என்னிடம் சொல்லவே இல்லைண்ணா,, அருமையா இருக்கே.. தஹிரியமானவர் தான் இந்த வர்கிஸ் போல. எங்களிடம் சொன்னவற்றையும் எழுதுறீங்க, சொல்லாதவை களையும் எழுதுறீங்க!! அற்புதம்.

வாழ்க வளர்க உங்க தமிழ் தொண்டு!!

ஹரீகா சொன்னது…

இந்த நிகழ்ச்சியை நீங்க என்னிடம் சொல்லவே இல்லைண்ணா,, அருமையா இருக்கே.. தஹிரியமானவர் தான் இந்த வர்கிஸ் போல. எங்களிடம் சொன்னவற்றையும் எழுதுறீங்க, சொல்லாதவை களையும் எழுதுறீங்க!! அற்புதம்.

வாழ்க வளர்க உங்க தமிழ் தொண்டு!!

ஆறுமுகம் முருகேசன் சொன்னது…

அய்யயோ..
ம்ம்.. நிஜமாவே ரொம்ப தைரியசாலி தான் அவர்..நல்ல நேரமும் கூட..!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

//இப்படி சில பேர். என்ன நடந்தாலும் பதறாமல், சிலர் சிறு காயம் என்றாலே ஊரைக் கூட்டி ஒரு வழி பண்ணி விடுவார்கள். //

நீங்க சொல்வது உண்மை தான் மேடம். நாம் ஏன் அதை கண்டிப்பதுமில்லை, கண்டுக் கொள்வதுமில்லை. சொல்லுங்க??

உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி சொன்னது…

//விய‌க்க‌ வைக்கும் ந‌ண்ப‌ர் தான்... சில‌ருடைய‌ அனுபவ‌ங்க‌ள் ந‌ம‌க்கும் ஒரு பாட‌மாக‌ இருக்கும்.. //

ஆமாம் ஸ்டீபன்.அவர்களோ டோவே வாழ்ந்து விட மாட்டோமா ன்னு ஒரு ஏக்கம் ஏற்படுமே!

உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அஹமது இர்ஷாத் கூறியது...

//வர்கீஸ் மாதிரியான ஆட்களைப் பார்ப்பது அபூர்வம்ங்க//

ஆமாங்க.

அஹமத் இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஸாதிகா கூறியது...

//டேனியல் வர்கீஸ்..எங்கள் மனதிலும் ஒரு இடத்தைப்பிடித்து விட்டார் உங்கள் அழகிய எழுத்து வரிகள் மூலம்//

அப்படியா மேடம். அப்படி என்றால் சரிங்க.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ rk guru கூறியது...

//நல்ல பதிவு...//

ரொம்ப நன்றி சார்..

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹரீகா கூறியது...

//இந்த நிகழ்ச்சியை நீங்க என்னிடம் சொல்லவே இல்லைண்ணா,, //

ஆமா உன்கிட்ட சொன்ன எழுத வராதே, அதான்.

//வாழ்க வளர்க உங்க தமிழ் தொண்டு!!//

எல்லாம் சரி!! அது ஏன் நீ மூணு தடவ வந்து ஓட்டுப் போட்டிருக்கியே! நல்ல ஒட்டா கள்ள ஒட்டா??

ஹரீகா உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஆறுமுகம் முருகேசன்...

வாங்க சார்,, மொத மொத நம்ம ஊட்டுப் பக்கம் வந்திருக்கீங்க, என்னா சாப்டுறீங்க! நல்லா இருக்கீங்களா?

//அய்யயோ.. ம்ம்.. நிஜமாவே ரொம்ப தைரியசாலி தான் அவர்..நல்ல நேரமும் கூட..!//

நிச்சயமா. கவிஞர் நீங்க சொன்னா அது சரியாத்தானிருக்கும் சார்..

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!!

ஜெய்லானி சொன்னது…

பாஸ் அப்புறம் டேனியலை பாத்தா நான் விசாரித்ததா சொல்லுங்க . சில சந்தேகம் கேக்கனும்...

செ.சரவணக்குமார் சொன்னது…

இங்கே வர்கீஸ் என்று எனக்கும் ஒரு நண்பர் இருக்கிறார். அற்புதமான நண்பர்.

அதுசரி இந்த வர்கீஸ்களே இப்படித்தானா?

எழுத்து நடை சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

தொடருங்கள் நண்பரே.

ஜெய்லானி சொன்னது…

இதில என்ன கருத்து போடுவதுன்னே புரியல , அலைபாயும் மனதை அடக்கியவருக்கே இக்கட்டான சூழ்நிலையிலும் சிந்தனை மூளை வேலை செய்யும் .

டேனியலுக்கு ஒரு சல்யூட்
இதை போட்டவருக்கு ஒரு சபாஷ்...!!

ஜெய்லானி சொன்னது…

@@@//இந்த நிகழ்ச்சியை நீங்க என்னிடம் சொல்லவே இல்லைண்ணா,, //

ஆமா உன்கிட்ட சொன்ன எழுத வராதே, அதான்.//

அப்ப சொன்ன மேட்டரையும் எழுதுங்களே...வாத்தியாரே..!!!

ஜெய்லானி சொன்னது…

//எல்லாம் சரி!! அது ஏன் நீ மூணு தடவ வந்து ஓட்டுப் போட்டிருக்கியே! நல்ல ஒட்டா கள்ள ஒட்டா??//


போட்ட ஓட்டை செக் பன்னினா அது நல்ல ஓட்டா கள்ள ஓட்டா..ஹி..ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//பாஸ் அப்புறம் டேனியலை பாத்தா நான் விசாரித்ததா சொல்லுங்க. சில சந்தேகம் கேக்கனும்...//

சொல்லிடுறேன் சார். உங்க சந்தேகத்தை இங்கயுமா?? அதுக்கு சந்தேகம் நம்பர் எத்தனை என்று போடணும் அதையும் நீங்களே சொல்லிடுங்க பாஸ் ஹி! ஹி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார் கூறியது...

//இங்கே வர்கீஸ் என்று எனக்கும் ஒரு நண்பர் இருக்கிறார். அற்புதமான நண்பர். அதுசரி இந்த வர்கீஸ்களே இப்படித்தானா? எழுத்து நடை சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. தொடருங்கள் நண்பரே.//

ஆமா, வாங்க சார்.. அற்புதமான மனிதர்களுக்கு மட்டுமே சிறப்பான நண்பர்கள் அமைவார்கள். நீங்க அற்புதமான மனிதர் என்று நான் சொல்லியா எல்லோருக்கும் தெரியனும். ஹி..ஹி..சரியா.

சரவணன் உங்கள் வருகைக்கும், நீங்கள் தரும் மிகுந்த ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// இதில என்ன கருத்து போடுவதுன்னே புரியல, அலைபாயும் மனதை அடக்கியவருக்கே இக்கட்டான சூழ்நிலையிலும் சிந்தனை மூளை வேலை செய்யும்.//

எப்படி பாஸ் இதெல்லாம். உண்மையிலேயே எனக்கு தான் பெருமையா இருக்கு உங்களோடவெல்லாம் பழகுறது. இந்த மாதிரி சிந்தனை எல்லாம் ஞானிகளுக்குத் தான் வரும் என்று சொல்வார்கள். நீங்களும் அப்படியாப்பட்ட ரகம் என்றே நானும் கருதுகிறேன்.ஹி..ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// டேனியலுக்கு ஒரு சல்யூட்
இதை போட்டவருக்கு ஒரு சபாஷ்...!!//

மேற்படி பெயர் சற்றே மாற்றப் பட்டிருப்பதால், நீங்கள் குறிப்பிட்ட சல்யூட்டை அவரிடம் சேர்ப்பித்து விட்டேன் தல. இதை போட்டவருக்கு நீங்க தான் பார்த்து போட்டு கொடுக்கணும் மொதலாளி. க்கி..க்கி

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//அப்ப சொன்ன மேட்டரையும் எழுதுங்களே...வாத்தியாரே..!!!//

அதையும் ஒரு இடுகையாப் போடச் சொல்றீங்க. நக்கலு. வம்ப இப்படி எல்லாம் விலை கொடுத்து வாங்கனுமா பாஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//போட்ட ஓட்டை செக் பன்னினா அது நல்ல ஓட்டா கள்ள ஓட்டா..ஹி..ஹி..//

செக் வக்கிறீங்க. வந்து உங்கள மாதிரி கருத்து சொன்னா தான் நல்ல ஒட்டு பாஸ். கருத்து சொல்லாம "சிம்லே" "அது" "இது" என்று போட்டுட்டு போறதெல்லாம் கள்ள ஒட்டு தானென்று இதனால் சகல மாணவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ஹி..ஹி..