“க..ஜா..னா”...!
முன்பு ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் அங்கே மெஸ் வசதி எல்லாம் கிடையாது. சாப்பாட்டுக்கு காசு கொடுத்துடுவாங்க. நாம தான் சமைச்சு சாப்பிட்டுக்கணும். ஆனா அங்கே சமைச்சுக்கிறதுக்கென்று காமனா பெரிய கிச்சன் ஒன்று இருக்கும். அதில் தான் எல்லோரும் சமச்சுக்கனும்.
சவுதி வந்த புதிது ஆகையால் சுத்தமாய் ஹிந்தி அரபி தெரியாது என்பது கூடுதல் தகவல். இந்தியர்களாகிய நாம் வெளிநாடு வந்த பின் தான் அதை உணருகிறோம் என்பதும் வருந்தத் தக்க விஷயம் அல்லாமல் வேறென்ன!
எல்லோரும் ஆளாளுக்கு டைம் முறையில் ஷிப்ட்டு போட்டு சமயலறையில் சமைப்போம். ஏனென்றால் அங்கிருந்தது ரெண்டே ரெண்டு காஸ் அடுப்பு தான்.
அன்றைக்கு டூட்டி முடிந்து ரூமுக்கு வந்து சமைக்க சாமான்களை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு போய் சமைக்கலாம் என்றால் அந்த நேரம் பார்த்து ஒரு ஹிந்திக்காரன் சமைத்துக் கொண்டிருந்தான். இன்னொரு அடுப்பிலும் வேறு நாட்டுக்காரன் சமைத்துக் கொண்டிருந்தான். என்ன செய்வது நேரமாகிக் கொண்டிருக்கிறது. பசி வேறு லேசாக வயிற்றில் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
(இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், நாம் சமைக்க வில்லை யென்றால் கேம்ப்பில் சாப்பிட எதுவும் கிடைக்காது. சுற்றுப் பட்டி கண்ணுக் கெட்டிய௦ தூரம் 20 KM வரை எந்த கடையும் கிடையாது)
நான் அந்த ஹிந்திக்காரன் எப்ப நகருவான் என்று பார்த்துக் கொண்டிருந்த சமயம், அவனுடைய பிரெண்ட் வந்து அந்த அடுப்பை ஆக்குபை பண்ணிக் கொண்டான். (அப்பவே அவனுகளெல்லாம் ஒன்னாக் கூடிட்டாணுக. நாம தான் இன்னமும் தமிழ் பேசி ஒன்னு மண்ணு என்று சொல்லி மண்ணா போறோமோ தெரியலை ! )
எனக்கு வந்ததே கோவம். (அது தான் நமக்கு வருமே! ) ஹிந்திக் காரனிடம் ஏதேதோ தெரிந்த ஜாடை மாடை கோரணி யெல்லாம் காட்டியும் அந்த வெளங்காதவனுக்கு வெளங்கல! (இப்படி சொல்லி தப்பிச்சிக்குவோம்ல) பேச்சு பேச்சாக இருக்க வாய் வார்த்தை முற்ற ஓங்கி அவன் செவிட்டில் விட்டேன் பாருங்க.. அடிச்ச அப்புறம் தான் தெரியுது அடிசிட்டோமோன்னு.. அவன் முகம் மிளகாய் பத்து போட்ட மாதிரி சிவந்து போச்சுங்க! இதை அவன் பிரெண்ட் பார்த்து.... சாட்சியாகி விட்டான்.
சுற்றி ரகளைப் பண்ணி கூட்டத்தை கூட்டிபுட்டாணுவ, பய புள்ளைக.. அடங்க கொக்கா மக்கா.. எனக்கு கை கால் உதறல் எடுத்துடுச்சு. பசியால் மட்டுமல்ல,, இந்த சம்பவத்தாலும்..ஆமாங்க இந்த சண்டை வம்புன்னாவே நமக்கு கொஞ்சம் பயம் தாங்க!!
பஞ்சாயத்த கூட்டி இந்த பக்கிக ஃபோர்மேன் ஃபைவ்மேன் வாட்ச்மேன் வழியா கேம்ப் பாஸாம் (அவனென்ன எங்க பாஸ் மாதிரி பெரிய அடாவடியா! கேட்கிறேன். ஓஹோன்னனாம்) அங்கிட்டு வரைக்கும் செய்தி போய்டிச்சு!! போச்சா... நமக்கு இன்னைக்கி ஆட்டம் காலி, சீட்ட கிழிக்கப் போறானுவ. ஊரப் பாக்கப் போய் சேர வேண்டியது தான் மவனே.. மனசில் ஒரு புள்ளி தோன்றி மறைந்தது. (எல்லாம் ஒரு simapthy தானுங்க!)
மறுநாக் காலை கோர்டில் ஜட்ஜ்மெண்ட். ஃபோர்மேன் ராஜஸ்தானி! கேம்ப் பாஸ் சூடானி! ரெண்டு “னி”யும் சேர்ந்து நம்மை சட்னியாக்கப் போறானுவ என்ற உணர்வே என்னை உள்ளுக்குள் சங்கடப் படுத்தியது. இரவு தூக்கத்துக்கும் விழிப்புக்கு மிடையில் தான் அந்த யோசனை தோன்றியது. (யார் சொல்லிக் கொடுத்தது என்று கேட்கபடாது)
அடித்தவனையே அரவணைத்துக் கொண்டா.? (யோசனை பரவாயில்லையே என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொள்ளாத குறை! ) அவன் ரூமுக்கு போனேன். என்னை அவன் அங்கே எதிர் பார்க்கவில்லை. மிரண்டு போய் எழுந்து நின்றான். அப்ப தான் அவனே எதிர்பாராத வண்ணம் அவன் கையைப் பிடித்து (அடடா கையை தாங்க..!)
நமக்கு தெரிந்த.. (ஹிந்தி அரபியில்) கெஞ்சினேன்,, ஏன் உளறினேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்)
ஹம் பி கிறு கிறு
(நானும் பேசினேன்)
தும் பி கிறு கிறு
(நீயும் பேசினாய்)
சோச்சு கரு கரு
(யோசிச்சுப் பாரு)
மெஹர்பானி கரு கரு
(கருணைக் காட்டு)
(இந்த கிறு கிறு என்ற வார்த்தை அரபி மொழியில் ரொம்ப பேசுறான், பேசுறேன், பேசினேன் என்பது மாதிரி பொருள் கொள்ளலாம்)
நான் பேசிய ஹிந்தியைப் பார்த்து அவன் மிரண்டே போனாலும், புரிந்துக் கொண்டான். அன்றிலிருந்து அவன் நம்ம தோஸ்த் ஆகிவிட்டாலும், எதிரில் நான் வரும் போது விஷ் பண்ணினாலும், நாலு தப்படி விலகியே நடந்து போகிறான்...ஏங்க??
@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@விரைவில்...!
"தங்க மீன் கதைகள்"...
"ஜென் கதைகள்" ....
உங்கள் "ஆஹா பக்கங்களில்!!
Sponsered by :
@ ஜெய்லானி
@ செ.சரவணக்குமார்
@ அஹமத் இர்ஷாத்
இணைந்து வழங்குபவர்கள்:
ஆக்கமும் ஊக்கமும் தரும்
சக வலைப் பதிவு நண்பர்கள்.! தோழியர்கள்.!
34 கருத்துகள்:
உங்க ஹிந்தி அரபியை படித்து ஒரே சிரிப்பு....எப்படியோ 2வரும் நண்பர்களானதில் சந்தோஷம்...
மிகவும் பயனுள்ள தகவல்… .... வாழ்த்துக்கள்....
பாஸ், செம சூப்பர். நீங்கள் ஒரு ரௌடி போல தான் இருந்திருக்கீங்க ( சும்மா தமாஷ் ).
அடிச்சும் போட்டு... நாலு தப்படி விலகியும் போறான் என்று புகாரும் வாசித்தால். நானாக இருந்தால் உங்கள் திசைக்கே ஒரு கும்பிடு போட்டிருப்பேன்.
//அப்பவே அவனுகளெல்லாம் ஒன்னாக் கூடிட்டாணுக. நாம தான் இன்னமும் தமிழ் பேசி ஒன்னு மண்ணு என்று சொல்லி மண்ணா போறோமோ தெரியலை ! )//
எங்கள் தமிழரின் ஒற்றுமை தான் உலகமே அறிந்ததாச்சே. என்னத்தை புதுசா சொல்ல.
( தமிழிஷ் மக்கர் பண்ணுது வோட்டு போடவோ, பதிவுகளை இணைக்கவோ முடியவில்லை. )
அப்ப ஒரு குட்டி தாதானு சொல்லுங்க!!!!!!!...ஹி..ஹி.. மெயில் செக் பண்ணலியா? நான் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்..
சார் இப்போ தான் ஆபீஸ் வந்தேன்... காலங்காத்தலையே ஒரு பாட்டில் எரிசாராயம் குடிச்ச எபெக்ட்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடும் போல.. (எனக்குத் தெரிஞ்ச ஹிந்தியும், அரபியும் மறந்துடும் போலயே சார்)
சார் நிஜமாவே நல்ல எழுத்துநடை :)))
அருமையான விஷயமா இருக்கே அண்ணே. பரவா இல்லையே அப்படி இப்படி பேசி சமாளிச்சு///,,,, இப்ப தான் ஆஹா பக்கங்கள் மின்ன ஆரம்பித்திருக்கு!
அது என்ன விளம்பரம் மாதிரி ஒரு விளம்பரம். போன்ல எல்லாம் கேட்டா அந்த மீன் கதய சொல்ல மாட்டீங்களா?
@ Mrs.Menagasathia கூறியது...
//உங்க ஹிந்தி அரபியை படித்து ஒரே சிரிப்பு..எப்படியோ 2வரும் நண்பர்களானதில் சந்தோஷம்...//
ரொம்ப மகிழ்ச்சி மேடம்!
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@INFO THAKAVAL கூறியது...
//மிகவும் பயனுள்ள தகவல்… .... வாழ்த்துக்கள்....//
வாங்க சார்/மேடம்!
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
//ஹம் பி கிறு கிறு
தும் பி கிறு கிறு
சோச்சு கரு கரு
மெஹர்பானி கரு கரு
//
கவிதை சூப்பர்..
என்னா வில்லத்தனம்...ஹி..ஹி..
பாஸ் அப்படியே...எனக்கும் பாஷை கத்து குடுங்களேன்.. நானும், ரொம்ப நாளா ஒரு உஸ்தாத் தேடிகிட்டு இருக்கேன் ஒரு பயபுள்ள கிட்டே வரமாட்டேங்கிறான். ஹா..ஹா...
பாஸ் தைரியமா போய் ஓட்டு போடுங்க . இனைச்சாச்சி. உங்களுக்காக இல்லை அனுஷ்காவுக்காக ஹி..ஹி...
சாட்சி காரன் கால்ல விழரத விட சண்டைகாரன் கால்ல விழரது எவ்வளவோ மேல் .....சும்மாவா சொன்னாங்க
அதே நேரம் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்க ...
இதுல எது தல சரி.......((என்னா கொயப்பிட்டேனா..ஹா..ஹ..))
@ vanathy கூறியது...
//அடிச்சும் போட்டு... நாலு தப்படி விலகியும் போறான் என்று புகாரும் வாசித்தால். நானாக இருந்தால் உங்கள் திசைக்கே ஒரு கும்பிடு போட்டிருப்பேன்.//
அம்புட்டு பயந்த வுகளா நீங்க!
வாங்க siss நீங்கல்லாம் இப்படி வந்து கலாய்ப்பதும் சந்தோசிப்பதும் மிக்க மகிழ்ச்சியே!
@ vanathy கூறியது...
//(தமிழிஷ் மக்கர் பண்ணுது வோட்டு போடவோ, பதிவுகளை இணைக்கவோ முடியவில்லை)//
ஆமாம் சகோ. காலையிலிருந்து அது பெரிய trouble-ஆ தானிருந்தது. இப்ப தான் தலைவர் ஜெய்லானி வந்து கை கொடுத்து விட்டார். இனி கவலை இல்லை!!
வாணி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
//சவுதி வந்த புதிது ஆகையால் சுத்தமாய் ஹிந்தி அரபி தெரியாது என்பது கூடுதல் தகவல். இந்தியர்களாகிய நாம் வெளிநாடு வந்த பின் தான் அதை உணருகிறோம் என்பதும் வருந்தத் தக்க விஷயம் அல்லாமல் வேறென்ன!//
பாஸ் இந்தி தெரியாததால்தான் அரபி கத்துகிட்டிங்க.
நாலு ஊருக்கு போனா தானா பாஷை வந்துரும். பழக்கம்தானே.
ஆனா நீங்க அடிச்சதை விட. பேசியது அவனால தாங்கியிருக்க முடியாது. அது தான் தோஸ்தாயிட்டான் :)
@ நாடோடி கூறியது...
//அப்ப ஒரு குட்டி தாதானு சொல்லுங்க!!!!!!!...ஹி..ஹி.. //
அப்படியெல்லாம் இல்லீங்க. நான் ஒரு அப்புரானிங்க. பச்ச மண்ணுன்னு சொல்லல அது மாதிரி. ஹா..ஹா..
@ நாடோடி கூறியது...
//மெயில் செக் பண்ணலியா? நான் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்..//
பார்த்துட்டேன் "அருள் ஸ்டீபன்" சரிதானே சார்! நாளை உங்களுக்கு பதில் மடல் வரைகிறேனுங்க! இன்று ஆணி புடுங்கல் தாஸ்தி ஹி.. ஹி.. அதான்!
அருள் ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@ ஆறுமுகம் முருகேசன் கூறியது...
//ஒரு பாட்டில் எரிசாராயம் குடிச்ச எபெக்ட்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடும் போல..//
சிரிப்புக்கும் எரி சாராயத்துக்கும் கவிதை மாதிரி ஒரு கவிதை எழுதிட்டீங்க கவிஞ்சரே!
ஆறுமுகநேசன் உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி!
@ ஹரீகா கூறியது...
//போன்ல எல்லாம் கேட்டா அந்த மீன் கதய சொல்ல மாட்டீங்களா//
அஹா பேஷா! மீன் கதையென்ன, நீ சாபிடுறேன்னு சொல்லு மீன் விருந்தே வச்சுடுவோம்ல!!
ஹரீகா உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி!
சுவராஸ்யம்..நல்லாயிருக்குங்க..
@ ஜெய்லானி கூறியது
//ஹம் பி கிறு கிறு, தும் பி கிறு கிறு, சோச்சு கரு கரு, மெஹர்பானி கரு கரு//
-- கவிதை சூப்பர்..என்னா வில்லத்தனம்...ஹி..ஹி..
எல்லோரும் என்னை கவிதை எழுதச் சொல்லி மிரட்டுனாங்க... அதான் நம்ம வழில எழுதி ஷாக் கொடுத்திட்டேன்.. பாஸ்!
@ ஜெய்லானி கூறியது
//பாஸ் அப்படியே...எனக்கும் பாஷை கத்து குடுங்களேன்.. நானும், ரொம்ப நாளா ஒரு உஸ்தாத் தேடிகிட்டு இருக்கேன்//
நம்ம கிட்ட ஒரு உஸ்தாத் இருக்கார். மொழியெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஒன்லி சுன்னத்.. ஹா..ஹா..
//ஒரு பயபுள்ள கிட்டே வரமாட்டேங்கிறான். ஹா..ஹா...//
(நாம ஒரு மார்க்கமா திரியும் போதே) மேலும் கீழும் பார்த்துட்டு போய்டுவாய்ங்களே பய புள்ளைக.. உடக்கூடாது பாஸ். நாமும் அதே மாதிரி பார்த்து வச்சுட்டா??
@ ஜெய்லானி கூறியது
//பாஸ் தைரியமா போய் ஓட்டு போடுங்க. இனைச்சாச்சி. உங்களுக்காக இல்லை அனுஷ்காவுக்காக ஹி..ஹி...//
காலையிலிருந்து தமிழிஷ்ல இணைக்க திண்டாடிக் கொண்டிருந்த போது ஓடோடி வந்து இணைத்தீர்களே உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் தல!.
@ ஜெய்லானி கூறியது
சாட்சி காரன் கால்ல விழரத விட சண்டைகாரன் கால்ல விழரது,, அதே நேரம் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்க ((என்னா கொயப்பிட்டேனா..ஹா..ஹ..))
இந்த சம்பவத்துல ரெண்டும் நடந்திருக்கு.. அப்ப அடிக்கனுமா கால்ல விழணுமா?? எதாச்சும் ஒன்னு சொல்லுங்க பாஸ்..குழப்பக் கூடாது.(பாவம் அவுக)க்கி..க்கி..
ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்து பறி மாற்றத்துக்கும் மிக்க நன்றி!
ஒரு வேலை பஞ்ஞாயத்த கூட்டியிறுந்தா சூடானிட்ட என்ன சொல்லி இறுப்பீங்க.
அருமையான பதிவு சார். ரசித்து வாசித்தேன்.
இருந்தாலும் அனுஷ்காவ விடமாட்டேங்கிறீங்களே????
புதிய தொடர் அறிவிப்பு வேறயா? ரைட்டு.
அதென்னங்க ஸ்பான்சர்ஸ்ல நம்ம பேரையும் சேர்த்துருக்கீங்க தல.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணக் கட்டுதே.
தமிழிஷ்/இன்ட்லிக்கு நன்றி!!
Hi jailani,
Congrats! Your story titled " http://ta.indli.com/search/கஜானா
ஆஹா பக்கங்கள் படைப்புகள் » mabdulkhader.blogspot.com -
made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st July 2010 01:25:02 PM GMT
here is the link to the story: http://www.tamilish.com/story/306707Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
@ அக்பர் கூறியது...
// ஆனா நீங்க அடிச்சதை விட. பேசியது அவனால தாங்கியிருக்க முடியாது. அது தான் தோஸ்தாயிட்டான்:)//
நிச்சயமா..!! நிறைய கற்ற ஞானம் உள்ளவர்களால் தான் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் எளிதில் கண்டு பிடிக்க முடியும் பாஸ். நீங்க....??
அக்பர் சார் உங்கள் வருகைக்கும் கருத்து இயம்பியதற்க்கும் மிக்க நன்றி!!
@ அஹமது இர்ஷாத் கூறியது...
//சுவராஸ்யம்..நல்லாயிருக்குங்க..//
ஊருக்கு போறதா ஒரு வாடை வந்தததே! அதாங்க "அதிரை" சொலவாடை..!! நல்ல விதமா போயிட்டு பரக்கத்தா, சலாமத்தா திரும்பி வாங்க!
அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
@ ராஜவம்சம் கூறியது...
//ஒரு வேலை பஞ்ஞாயத்த கூட்டியிறுந்தா சூடானிட்ட என்ன சொல்லி இறுப்பீங்க.//
ரொம்ப சிம்பிள் பாஸ்! அரபியில் ரைட் டு லெப்ட் (எழுதுற மாதிரி) அத அப்படியே ஒப்பிச்சுடுவேன். எங்கே சொல்லிப் பாருங்க. ஹா.. ஹா..ஹா
ராஜவம்சம் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
@ செ.சரவணக்குமார் கூறியது...
//இருந்தாலும் அனுஷ்காவ விடமாட்டேங்கிறீங்களே????//
எப்படி சார்.. அவங்கள எப்படி விட முடியும்? அவங்க ரொம்ப நல்லவங்க சார்!! உங்களுக்கு தெரியாதா என்ன?? ஹி..ஹி..
//புதிய தொடர் அறிவிப்பு வேறயா? ரைட்டு. அதென்னங்க ஸ்பான்சர்ஸ்ல நம்ம பேரையும் சேர்த்துருக்கீங்க தல. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணக் கட்டுதே.//
இதுக்கே இப்படியா. இன்னும் எம்புட்டு இருக்கு? பாதைப் போட்டுக் கொடுத்தது யாரு பாஸு...!
செ.சரவணக்குமார் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
அந்த காட்சியை மனதில் ஓட்டி பார்த்தேன் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒ.நூருல் அமீன் கூறியது...
//அந்த காட்சியை மனதில் ஓட்டி பார்த்தேன் சிரிப்பை அடக்க முடியவில்லை. //
நம்ம நெலம அப்படி ஆகிப் போச்சா பாஸ். பலே பலே. உங்க சிரிப்பு தான் எங்க சந்தோசம்.
நூருல் அமீன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி!!
வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.நல்ல சுவாரஸ்யம்.நன்றி பகிர்வுக்கு.
கருத்துரையிடுக