facebook

சனி, ஜூலை 24, 2010

ஜாடை மாடை

                                                                             


                   
  ஜாடை மாடை

உலகிலுள்ள மதங்களில், சம்மதம் இருக்கிறதே, அதை வாங்குவது தான் ரொம்ப கடினம்ங்க. அதுவும் பெண்களிடமிருந்து! ஏன்னா இந்த பெண்கள் இருக்காங்களே ரொம்ப அழுத்தம்ங்க... இதை தஹிரியமா சொல்றதுக்கிடையில் நமக்கு ஒரு படபடப்புங்க. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா.. இருங்க சொல்றேன். உங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட போய் சொல்லப் போறேன். சப்போட்டுக்கு இந்த ரங்க்ஸ் களெல்லாம் கூட ரெடியா இருக்கீங்களாய்யா. அப்புறம் டீல்ல உட்டுபுடாதீங்க சொல்லிப்புட்டேன் ஆமா!.

நமக்கு டூட்டி இருக்கே அது காலையில் 8.30க்கு ஆரம்பித்து 11.30 க்கு முடியும்ங்க. திரும்ப மாலையில் 4.00 மணிக்கு ஆரம்பித்து 8.00 மணிக்கு முடியும்ங்க. அவ்வளவு தானே அதுக்கு ஏன் இவ்வளவு பில்டப்பு ன்னு நீங்க கேட்கிறது கேக்குதுங்க.

காலையில் 8.30 மணி டூட்டிக்கி போறதுக்கு எத்தனை மணிக்கி முழிக்கணும்ங்க. 6 மணி, 7 மணி... ஊஹும், 7.30 மணிக்கி தாங்க முழிப்பேன். அது தப்பாங்க. தனி மனித சுதந்திரம்னு ஒன்னு இருக்கூங்கல்லோ. அதுல யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டேங்க.. இருங்க காதுல உழுந்துடப் போவுது. மெதுவாவே பேசிக்கிவோம். ஹி.. ஹி..

சரி நாங்க 7.30 மணிக்கி எந்திரிக்கிறோம்ல அப்ப அவுக எத்தனை மணிக்கி எந்திரிக்கனும் எங்களுக்கு முன்னாடி தானே. ஹஹ்ஹா. அது தான் இங்க கிடையாது. அவுக எங்களுக்கப்புரம் பத்து பதினைந்து நிமிஷம் கழித்து தான் எந்திரிப்பாங்கலாம். இது மட்டும் என்ன நியாயம்ங்க! அப்ப ஆரம்பிக்கிற பூபாளம் தான் நேபாளம் வரைக்கும் போவும்!

அதுக்கப்புறம் தான் நமக்கு வேண்டிய டீயிலிருந்து காபி வரைக்கும் ப்ரெடிலிருந்து சாண்ட்விட்ச் வரைக்கும் தயார் செஞ்சு கொடுப்பாங்க. இதுக்கு உள்ள அலட்டல் இருக்கே யப்பா.. (நாமெல்லாம் இதை செய்தால் எவ்வளவு நேரமாகுமென்று உங்களுக்கே தெரியும் பத்து அல்லது பதினைந்து நிமிஷமாகுமா?)

நமக்கு இந்த பாத்ரூம் போனா இருந்தமா, குளிச்சமான்னு வரத்தெரியாதுங்க.. அங்க போய் உட்காந்தா தான் தனி ராஜ்யமான சிந்தனை ஒன்று உருவாகும் பாருங்க. அங்கே யாரும் நம்மை அசச்சுக்க முடியாதுல. ஆனாலும் உள்ளே போனது வெளியே வர நம்மை அசைக்கிற அசைப்பில்...,, அத சொல்லிப்புடனும்ங்க..

அதுக்கப்புறம் தான் நம்ம ராஜாங்கமே ஆரம்பமாவுதுங்க. குளிச்சிப்புட்டு வந்து பார்த்தா புறப்படுறதுக்கு இன்னும் மிச்சம் பதினஞ்சே பதினஞ்சு நிமிஷம் பாக்கி இருக்கும். இதுல மனுஷன் என்னென்ன செய்ய முடியும். ஷேவிங் பண்ணனும், மேக்கப் கீக்கப் டிரஸ் எல்லாம் போட்டு ரெடியாகனுமா இல்ல பசியாரனுமா. எல்லாமே மனசுக்குள் TOM & JERRY மாதிரி ஓடும். அப்ப தாங்க உதவிக்கி வந்து நிப்பாங்க GIANT மாதிரி.. (இருக்கத்தா பின்னே)

நான் பாட்டுக்கு ஷேவிங் செய்துக்கிட்டிருக்கும் போது ஒண்ணுமே பேசாம இட்லியோ தோசையோ பிசைந்து தீத்தி விட ஆரம்பிப்பாங்க. (என்னா இருந்தாலும் கரிசனம்!) அப்ப தான் அவுகளுக்கு யாராவது நம்ம சொந்த பந்தம் பேசிய, நடந்த சில சம்பவங்கள், நாம வாங்கிக் கொடுக்காத பூ புஷ்பம், தங்க நகைகள், புடவை இத்யாதிகள் + எல்லாம் ஞாபகம் வந்து -வரா விட்டாலும் வந்து- (நாம ஷேவிங் பண்றப்ப முகம் அப்படி இப்படி திருப்புவமா- அப்ப) “ஒழுங்கா சாப்பாட்டை வாங்கிக்கிறது கிடையாது” என்று ஒரு இடி. நான் வாயில வாங்கிய சாப்பட்டை வாயில வச்சுக்கிட்டு அதை எப்படிங்க உங்களிடம் சொல்லிக் காட்ட முடியும். சொல்லுங்க..!!

இதுல அவுக வைக்கும் சாம்பார் (கமா) ரசத்துக்கும், முட்டைக் குழம்புக்கும், கோழி, ஆடு, மீன் நண்டு, இரால் குருமா வகையறாக்களுக்கும் (நல்லாதனிக்கும்) நல்லா இல்லைன்னாலும்,, நல்லா இருக்கு, சுவையா இருக்குன்னு தான் சொல்லோனும். சொல்லலைன்னா...? அட சொல்லித்தான் பாருங்களேன். அன்னைக்கி உங்களுக்கு என்னா நடக்கும்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன். என்னா வில்லத்தனம்..??

ஆமா நாங்கல்லாம் கேட்கிறோம் (இதுலயாவது ஒத்துமையா குரல் கொடுங்கய்யா) மாசா மாசம் சம்பளம் வாங்கி கொண்டு வந்து உங்க கையில் தானே கொடுக்கிறோம், அதுக்கு நீங்க பாராட்டுப் பத்திரம் ஏதும் கொடுக்கணும்னு எதிர் பார்க்கிறோமா? இல்லை என்னைக்காவது நீங்க வாங்க சொல்லிய பொருட்களை எவ்வளவு சிரமப் பட்டு வாங்கி வந்தாலும், நல்லபடியா நாலு வார்த்தை, வேணாங்க..... ஒரு சிரிப்பு.. இல்லையே.. அது ஏங்க ஒரு மாதிரியா முகத்தை வச்சுக்கிட்டு, ஹூக்கும் என்ற சத்ததோட தோளில்வேறு ஒரு இடி இடிச்சுக்கிட்டு போறீங்க.. அதாவது பரவாயில்லை ஏங்க அந்த சவுண்ட் வேறு கொடுக்கனுமா.. ஒரு வேளை அது எதுக்குன்னு எனக்கு தான் புரியலையோ?



                                                                                         

32 கருத்துகள்:

vanathy சொன்னது…

அப்துல் அண்ணாச்சி, ஹையோ! எல்லா வீடுகளிலும் இதே கூத்து தானா? நான் தான் என் ஆ.காரர் பாத்ரூம் போனா மட்டும் இப்படி மணிக்கணக்கில் ஆவுது என்றல்லவா நினைத்தேன். இருந்தாலும் சாப்பாடு ஊட்டுவது ரொம்ப ஓவருங்கோ!!!???
ஜாடைமாடைன்னு லேபிள் போட்டுட்டு இப்படி எல்லாத்தையுமா போட்டு உடைப்பது.

நல்லா இருக்கு.

நாடோடி சொன்னது…

அனுப‌வ‌ம் பேசுது..... நான் அப்புற‌ம் வாரேன்..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நகைச்சுவையா சொல்லியிருக்கிங்க. நல்லாயிருக்கு.

தூயவனின் அடிமை சொன்னது…

பாஸ் இது ரொம்ப ஓவரா தெரியுது. கொஞ்சம் இருங்க உங்க வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்து விடுகிறேன்.எப்படி இன்னக்கி கச்சேரி தான்.

ஹரீகா சொன்னது…

தீத்தி உடுவீங்களா.. இது ரொம்ப ஓவருங்கோ.. டீ ஜெசி இதெயெல்லாம் நம்ம கிட்ட சொல்லவே இல்லையே.. நடக்கட்டும் நடக்கட்டும்.. அண்ணியாரை இந்த வாரம் பின்னி புடுறேன் பின்னி!!,,,

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

//நான் தான் என் ஆ.காரர் பாத்ரூம் போனா மட்டும் இப்படி மணிக்கணக்கில் ஆவுது என்றல்லவா நினைத்தேன்.//

உலகம் முழுக்க ஆண்கள் நிம்மதி தேடுவது இங்க தானுங்கோ!! ஹி..ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

//இருந்தாலும் சாப்பாடு ஊட்டுவது ரொம்ப ஓவருங்கோ!!!???//

ஹய்யோ..ஹய்யோ..இது தான் இப்ப பேஷனுங்கோ!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

//ஜாடைமாடைன்னு லேபிள் போட்டுட்டு இப்படி எல்லாத்தையுமா போட்டு உடைப்பது.//

சில பேருடைய வாழ்க்கை திறந்த புத்தகம்னு சொல்வாங்க!! க்கி க்கி

வாணி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி கூறியது...

//அனுப‌வ‌ம் பேசுது..... //

இல்ல.. அனுபவம் எழுதுது

//நான் அப்புற‌ம் வாரேன்..//

.... எப்ப??

அருள் ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அக்பர் கூறியது...

//நகைச்சுவையா சொல்லியிருக்கிங்க. நல்லாயிருக்கு.//

ரைட்டு..

அக்பர் சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ இளம் தூயவன் கூறியது...

//பாஸ் இது ரொம்ப ஓவரா தெரியுது. கொஞ்சம் இருங்க உங்க வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்து விடுகிறேன்.எப்படி இன்னக்கி கச்சேரி தான்.//

யார் கச்சேரி சார்? ரஹ்மானா?.. ராஜா சாரா?? யார் கச்சேரியா இருந்தாலும் வீட்டுக்கு போன் பண்ணி அழைச்சிக்கிட்டு தான் போகணும். அது தான் குடும்ப தலைவருக்கு அழகு. ஹி..ஹி..

இளம் தூயவன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹரீகா கூறியது...

//தீத்தி உடுவீங்களா.. இது ரொம்ப ஓவருங்கோ.. டீ ஜெசி இதெயெல்லாம் நம்ம கிட்ட சொல்லவே இல்லையே.. நடக்கட்டும் நடக்கட்டும்.. அண்ணியாரை இந்த வாரம் பின்னி புடுறேன் பின்னி!!,,,//

வாங்கம்மா..வந்து பின்னிபுடுங்க...! தல பின்னுரதுக்கு ஆளில்லைன்னு கேள்வி? அங்க வசதி எப்புடி?? ஹி..ஹி..

ஹரீகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

முஹம்மது ஆரிப் சொன்னது…

அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.. எல்லை இல்லா உலகத்தில் சங்கதிக்கா பஞ்சம்!

ஜெய்லானி சொன்னது…

@@@@@ vanathy--//நான் தான் என் ஆ.காரர் பாத்ரூம் போனா மட்டும் இப்படி மணிக்கணக்கில் ஆவுது என்றல்லவா நினைத்தேன்.//

ஓடி தப்பிக்க வீட்டில அந்த ஒரு இடம்தானே இருக்கு ... ஹி... ஹி....

ஜெய்லானி சொன்னது…

//சொல்லலைன்னா...? அட சொல்லித்தான் பாருங்களேன். அன்னைக்கி உங்களுக்கு என்னா நடக்கும்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன்.//

சேம் அனுபவம் வேர வழியில்லை முதுல யார்கிட்டயும் காட்டிடாதீங்க பாஸ்...பயபுள்ளைக கண்டு பிடிச்சிடுவாங்க..

ஜெய்லானி சொன்னது…

@@@நாடோடி--//அனுப‌வ‌ம் பேசுது..... நான் அப்புற‌ம் வாரேன்..//

ஆமா ஸ்டிபன் சார் நாங்க திறந்த புத்தகம் .நீங்களா கண்டு பிடிச்சி கேட்டாதான் வெக்கம் அது நாங்களா சொன்னா ....அவ்வ்வ்வ்வ்

Asiya Omar சொன்னது…

உலகம் முழுக்க ஆண்கள் நிம்மதி தேடுவது இங்க தானுங்கோ!! ஹி..ஹி..

- சே ..சே..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ முஹம்மது ஆரிப் கூறியது...

//அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.. எல்லை இல்லா உலகத்தில் சங்கதிக்கா பஞ்சம்!//

ஆமா சார், முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ஓடி தப்பிக்க வீட்டில அந்த ஒரு இடம்தானே இருக்கு ... ஹி... ஹி....//

ஆனாலும் உங்க அனுபவ அறிவு எக்ஸ்சலன்ட் பாஸ்.. க்கி க்கி

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//சேம் அனுபவம் வேர வழியில்லை பாஸ்...பயபுள்ளைக கண்டு பிடிச்சிடுவாங்க..//

நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டாவே ஏதோ ராணுவ ரகசியம் மாதிரி கவனிப்பாங்களோ?

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ஆமா ஸ்டிபன் சார் நாங்க திறந்த புத்தகம். நீங்களா கண்டு பிடிச்சி கேட்டாதான் வெக்கம் அது நாங்களா சொன்னா ....அவ்வ்வ்வ்வ்//

அதானே!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க சார்..

அனுஷ்கா ஃபீவர் விட்டுருச்சா??

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

//உலகம் முழுக்க ஆண்கள் நிம்மதி தேடுவது இங்க தானுங்கோ!! ஹி..ஹி..//

- சே ..சே..

உண்மை தானுங்களே மேடம் !!

ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ செ.சரவணக்குமார் கூறியது...

//நல்லா எழுதியிருக்கீங்க சார்..//

-- நன்றி தல!

அனுஷ்கா ஃபீவர் விட்டுருச்சா??

-- படத்த பார்க்கலியா??

செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

ஸாதிகா சொன்னது…

இதிலிருந்து ஒண்ணு நல்லாவே தெரிகிறது.அப்துல்காதர் சாரோட மிஸஸ் வலைப்பூ..குறிப்பாக ஸாரோட வலைப்பூவே பார்க்கமாட்டார்.கணிப்பு சரிதானே?

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஸாதிகா கூறியது...

//இதிலிருந்து ஒண்ணு நல்லாவே தெரிகிறது.அப்துல்காதர் சாரோட மிஸஸ் வலைப்பூ..குறிப்பாக ஸாரோட வலைப்பூவே பார்க்கமாட்டார்.கணிப்பு சரிதானே?//

பாப்பாங்க மேடம்.. ஆனா கண்டுக்க மாட்டாங்க ஹி..ஹி.. (அப்பா தப்பிச்சுட்டேன். மாட்டி உடுரதுக்குன்னு....! நீங்க எவ்வளவு நல்லவுக மேடம்)
-----------------------------------
*** அப்புறம் தோளில் இடித்துக் கொண்டு,, சவுண்டும் ஏன் கொடுக்கிறீர்கள் என்று யாருமே சொல்லலியே! எல்லாருமே அப்படிதானா?? எப்பூடி?? க்கி..க்கி..
-----------------------------------
சகோ.ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

பா.ராஜாராம் சொன்னது…

:-))

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பா.ராஜாராம் கூறியது...

வாங்க பா ரா சார். இத்தனை நாள் பாரா முகமா இருந்து, இன்று மொத மொத எங்க ஊட்டுக்கு வந்து இப்படி சிரிச்சிப்புட்டு போனா என்னங்கையா அர்த்தம். ஏதாவது சொல்லிபுட்டு போலாம்ல..உள்ளர்த்தம் ஏதுமில்லையே!! ஹீ..ஹீ..
பதைபதைக்க வக்கிறீங்களே மக்கா!

பா ரா அண்ணா உங்கள் முதல் வருகைக்கும், அந்த மெல்லென "கிளுக்"களுக்கும் மிக்க நன்றி சார்!! மீண்டும் மீண்டும் வாங்க என்னை மீட்டெடுக்க.... !

pinkyrose சொன்னது…

ஹாய் காதர்!

இது தான் ஆணாதிக்கமாஆஆஆ?

எப்புடி கிளப்பி உட்டுட்டோம்ல!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ pinkyrose கூறியது...

//இது தான் ஆணாதிக்கமாஆஆஆ? எப்புடி கிளப்பி உட்டுட்டோம்ல!//

வாங்க பின்கிரோஸ்..அழகான பூவின் பெயரை வைத்துக் கொண்டு இப்படியாம்மா! உங்க காரைக்குடி கார்டனில் உள்ள பூக்களெல்லாம் இது தான் சொல்லிக் கொடுத்ததா.. பூக்களெல்லாம் மலர்ச்சியா இருந்து, மகிழ்ச்சிய தான் கொடுக்கணும். அவைகள் அத விட்டுட்டு வந்து போட்டுக் கொடுத்திட்டா போவுது. நீங்க எவ்வளவு நல்ல பிள்ளை. அது உங்களுக்கே தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும் சரியா?

ஆமா காரைக்குடியில் எங்கே செக்காலை தெருவா? அங்கேயே சுத்தி சுத்தி வராதீங்க? அதை விட்டும் கொஞ்சம் வெளியல் வந்து உலகத்தை பாருங்க மேடம்! ஸ்ஸ்ஸ் அப்ப்பா.. தப்பிச்சாச்சு...!

pinkyrose உங்கள் முதல் வருகைக்கும், திரியை கொளுத்தி போட்டு விட்டுப் போனதுக்கும் ரொம்ப தேங்க்ஸ்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//அதுக்கப்புறம் தான் நமக்கு வேண்டிய டீயிலிருந்து காபி வரைக்கும் ப்ரெடிலிருந்து சாண்ட்விட்ச் வரைக்கும் தயார் செஞ்சு கொடுப்பாங்க//
நாமெல்லாம் இதை செய்தால் எவ்வளவு நேரமாகுமென்று உங்களுக்கே தெரியும் பத்து அல்லது பதினைந்து நிமிஷமாகுமா//

உங்களுக்கு செஞ்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... அப்ப நீங்களே இனிமே செஞ்சுகுங்களேன்...ஹா ஹா ஹா

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அப்பாவி தங்கமணி கூறியது

//உங்களுக்கு செஞ்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... அப்ப நீங்களே இனிமே செஞ்சுகுங்களேன்...ஹா ஹா ஹா//

ஐயோ நான் செஞ்சு கொடுக்கிறத தான் அப்படி உல்டாவா கேட்டேன் மேடம். உங்கள விட நான் ரொம்ப பெரிய அப்பாவிங்க. நீங்களாச்சும் எனக்கு சாதகமா சப்போட் பண்ணுவீங்களா??? ஹி..ஹி..

அப்பாவி தங்கமணி உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி