facebook

புதன், ஆகஸ்ட் 04, 2010

மாநகரக் காவல்..!

                                                                              



மாநகரக் காவல்



எங்களூர் மெட்ரோ பாலிட்டன் சிட்டி. நான் வாக்கப்பட்டு போன ஊர் காஸ்மோ பாலிட்டன் சிட்டி. ஊர் பேர சொன்னா எங்கே கண்டுபிடிச்சுடு வீங்களோன்னு இந்த ஏற்பாடு. அதனால அது ஒரு அழகிய சிற்றூர்ன்னு வச்சுக்குவோமே!

இந்த ஊரை காவல் காப்பதற்காக நேபாளில் இருந்து ஒரு கூர்க்கா பிரெஷ் ஆகா இறக்குமதி செய்யப் பட்டிருந்தார். பேரென்ன?? பகதூர்.

அவருக்கு சம்பளம் + அலவன்ஸ் + இதெல்லாம் எப்படி?

சம்பளம் = வீட்டுக்கு இவ்வளவு என்று தொகை நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

அலவன்ஸ் = வீட்டுக்கு வீடு அலைந்து அவரே அதை வசூல் செய்துக் கொள்வது.

நிர்வாகம் கொடுத்த தென்னவோ ரெண்டு செட் டிரஸ்ஸும், மூன்றடி நீளமுள்ள ஒரு குச்சியும் (அதன் நுனியில் ஒரு துளை யிட்டு கயிறு கட்டி, அவர் தோளில் மாட்டி தொங்க விட்டுக் கொள்வதற்கு வசதியாக) + டார்ச்சும் தான் போலும்.

அப்ப நான் இங்கிருந்து ஒரு VACATION போய் இருந்த சமயம்.. ஊரில் தான் ரோடு லைடெல்லாம் பளீரென்று எரியுமே! நானும் என் மைத்துனரும், இன்னுமிரு நண்பர்களும் வெளியூர் போய் விட்டு கொஞ்ச நேரம் மிச்ச மிருந்ததால், செகண்ட் ஷோ சினிமாவையும் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் லேட் நைட் பஸ்ஸை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்து போகையில் பின்னாடியே "பீங் பீங்” என்று விசில் சத்தம்.

யாராய் இருக்கும்... ஒருவேளை போலீஸோ?? அதுவும் இந்த ஊருக்கா..? ச்சே..கற்பனையை முடிக்கு முன்னே,

சைக்கிளில் வந்த பகதூர், எங்கள் கிட்ட வந்தவுடன் தொபீரென்று குதித்தான்...

அந்த நேரம் ரோட்டில் யார் நடந்தாலும் விசாரிக்கணும் என்று கூர்க்காவுக்கு உத்தரவு போலும். எங்கள் எதிரில் வந்தவன் எங்கள் மூஞ்சி மேல் டார்ச்சடித்தான்.

என் மச்சினரைப் கண்டவுடன் ஒரு சல்யூட் அடிச்சான் (நாட்டமையோட மச்சினராச்சே) மற்ற மூவரும் ஏற்கனவே அவனுக்கு அறிமுகமானவர்கள், நான் அவனுக்கு புதிது போல. என் மேலும் டார்ச்சடித்தான். உடனே மச்சினர் "அவர் என் மச்சான்டா" என்று சொல்லவும், பகதூர் விளங்கிக் கொண்டான்.

ரோடெல்லாம் திட்டுத் திட்டாய் இருட்டு. அவன் சைக்கிளில் ஏறி கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருக்கும் போது, என் நண்பனில் ஒருவன், "டேய் இவன் வீர பகதூரா, இல்ல டுபாகூரா இப்ப செக் பண்றேன் பாரு" என்று சொல்லி, ரோட்டில் கிடந்த உடைந்த ஓட்டை எடுத்து, நாம் குளத்துத் தண்ணீரில் தத்தி தத்தி போவது போல் கல்லெறிவோமே, அது மாதிரி ரெண்டு மூணு உடைந்த கல்லோட்டை தட்ட...ட்ட்ட்....டென்று, தரையோடு தரையாக உரசிக் கொண்டு போகும்படி வீசினான்.

அது அந்த அமானுஷ்யமான இரவில், இருட்டில் ஏதோ வரக்கூடாத ஜந்து ஒன்று சத்தத்தோடு அவனை பின் தொடர்வதைப் போன்ற பிரமையை அவனுக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும். “அய்யய்யோ... வென” அலறிய பகதூர், சைக்கிளிலிருந்து துள்ளிக் குதித்து கீழே சரிந்து விழுந்தான். சைக்கிளும் அவன் மேல் புரண்டு விழுந்தது.

"டேய் என்னடா இப்படி பண்ணிப் புட்டே" என்று நாங்கள் சற்றும் தாமதிக்காமல் அவனை தூக்கலாம் என்று ஓடினோம். அதைவிட நாங்கள்  “திமு திமு” வென ஓடிய சத்தமும், அவனை இன்னும் உலுக்கி இருக்க வேண்டும். அவன் மேலும் அரண்டு விட்டானோ என்னமோ தெரியலை. விழுந்துக் கிடந்த அவன் திரும்பவும் எழுந்து சைக்கிளைத் தள்ளிக் கொண்டே ஓட ஆரம்பித்து விட்டான்.

அப்படியே பேசிக் கொண்டு தத்தமது வீட்டுக்குப் போனவுடன், அந்த விஷயத்தை நாங்கள் சுத்தமாக மறந்தும் விட்டோம். ரெண்டு மூணு நாள் சென்று ஊரிலுள்ள குளத்தில் மீன்ப் பிடி ஏல குத்தகை விடும் செய்தி கேள்விப் பட்டு அங்கே போனோம்.

போகிற வழியில் தான் அந்த பகதூரின் வீடு இருக்கிறது. அந்த வீட்டைக் கடந்து போகும் போது, அவருடைய மனைவி வாசலில் நிற்பது கண்டு சும்மா விசாரித்து விட்டுப் போகலாமென்று, அவரையும் பகதூரையும் நலம் விசாரித்தோம். அந்த அம்மணிக்கு கொஞ்சம் தமிழ் தெரியும்.

"அவருக்கு ஜுரமா இருக்குங்க. எதுவுமே பேச மாட்டேங்கிறார். என்னன்னே தெரியல". என்றார். "எப்பத்திலிருந்து" என்று கல் வீசிய நண்பன் கேட்டான். "முந்தா நாள் நைட்லேந்து" என்றார்.

                                                            

33 கருத்துகள்:

Unknown சொன்னது…

திவுக்கு ஏற்ற தலைப்பு அருமை.

vanathy சொன்னது…

அப்பவே நீங்கள் நாட்டாமை தானா!! என்ன சொன்னாலும் அந்த கூர்கா பாவம். வயிற்றுப் பிழைப்பிற்காக எத்தனை கஷ்டப்படுகிறார்கள். சம்பளம் - எல்லோரும் ஒழுங்காக குடுப்பதில்லை. இழுத்தடிப்பார்கள். இதில் அலவன்ஸ் எல்லாம் கனவில் தான். குளிர், மழை என்று பாராமல் தெருவில் திரியும் இவர்களைப் பார்த்தால் இரக்கமே ஏற்படும்.

நாடோடி சொன்னது…

ஆஹா.... பாவ‌ங்க‌ அந்த‌ கூர்க்கா?... உங்க‌ காமெடிக்கு அள‌வே இல்லாம‌ போச்சி... :))))))))))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கலக்கல் போங்க.

நல்ல சுவாரஸ்யமா எழுதியிருக்கிங்க.

ஜெய்லானி சொன்னது…

அப்பவேஏஏஏஏஏஏஏஏஏஏஎ ரவுடிதானா நீங்க..

ஜெய்லானி சொன்னது…

ச்சே..ச்சே..ஒரு புள்ள பூச்சிகிட்டே போய் உங்க வீரத்தை காட்டிட்டீங்களே..அவ்வ்

ஜெய்லானி சொன்னது…

//எங்களூர் மெட்ரோ பாலிட்டன் சிட்டி. நான் வாக்கப்பட்டு போன ஊர் காஸ்மோ பாலிட்டன் சிட்டி.//

இந்த ரெண்டு சிட்டியும் எந்த கிராமத்துக்கு பக்கத்தில இருக்கு

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ கலாநேசன் கூறியது...

//பதிவுக்கு ஏற்ற தலைப்பு அருமை.//

வாங்க கலாநேசன் சார் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

// குளிர், மழை என்று பாராமல் தெருவில் திரியும் இவர்களைப் பார்த்தால் இரக்கமே ஏற்படும்.//

நீங்கள் எழுதிய அத்தனையும் 100/100உண்மை வாணி Siss.

//அப்பவே நீங்கள் நாட்டாமை தானா!! //

கொடுத்த(வாங்கிய) ப(த)ட்டத்தை அதற்குள் மறக்கலாகுமோ!!ஹி.. ஹி..

வாங்க vanathy சிஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

//ஆஹா பாவ‌ங்க‌ அந்த‌ கூர்க்கா?..//

ஆமா சார் பின்னர் தான் அந்த நண்பன் உண்மையை உணர்ந்து கொண்டான்.

வாங்க ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அக்பர் கூறியது...

//கலக்கல் போங்க.நல்ல சுவாரஸ்யமா எழுதியிருக்கிங்க.//

நன்றி அக்பர்!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//அப்பவேஏஏஏஏஏஏஏஏஏஏஎ ரவுடிதானா நீங்க..//

சவுண்ட் பத்தல! உங்கள அந்த லிஸ்ட்ல சேக்க முடியாது சாரி!! ரிஜெக்டட்!!

வாங்க ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ச்சே..ச்சே..ஒரு புள்ள பூச்சிகிட்டே போய் உங்க வீரத்தை காட்டிட்டீங்களே..அவ்வ்//

தாய்ப் பாலைப் பத்தி அம்புட்டு வெவரனையா எழுதிப்புட்டு, புள்ளைய போய் பூச்சின்னா, யாரும் அடிக்க வரப் போறாங்க தல!! ஹி ஹி

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//இந்த ரெண்டு சிட்டியும் எந்த கிராமத்துக்கு பக்கத்தில இருக்கு//

அஞ்சு கிராமத்துக்கு பக்கத்திலே பாஸ்!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

ஸாதிகா சொன்னது…

அடப்பாவமே..பகதூரைப்பார்த்துத்தான்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஸாதிகா கூறியது...

வாங்க ஸாதிகாகாக்கா....

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

தூயவனின் அடிமை சொன்னது…

பாவம் பஹதூர் ,ஆமா உங்க ஆபீஸ்க்கு இப்பல்லாம் நிறைய பகதூர் பணம் அனுப்ப வராங்களே ,அவர்களை பார்த்தால், அந்த பகதூர்
நினைவு வருதா?

ஜெய்லானி சொன்னது…

//அஞ்சு கிராமத்துக்கு பக்கத்திலே பாஸ்!!//

இந்த அஞ்சு யாரு..? நல்லா படிங்க 5 இல்ல நான் கேட்டது..க்கி..க்கி...

குறுக்கு கேள்வியில லா பட்டம் வாங்கிய ஆளு நான் தெரியுமா ..ஹா..ஹா..

ஜெய்லானி சொன்னது…

//தாய்ப் பாலைப் பத்தி அம்புட்டு வெவரனையா எழுதிப்புட்டு, புள்ளைய போய் பூச்சின்னா, யாரும் அடிக்க வரப் போறாங்க தல!! ஹி ஹி //

என் கேரக்டரயேஏஏஏஏஏஏஏ புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களேஏஏஏ பாஸ்

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ இளம் தூயவன் சொன்னது…

//ஆமா உங்க ஆபீஸ்க்கு இப்பல்லாம் நிறைய பகதூர் பணம் அனுப்ப வராங்களே, அவர்களை பார்த்தால், அந்த பகதூர் நினைவு வருதா? //

வராம பின்ன,, நீங்க அந்த மொழி பேசி அவர்களை கவர்ந்து பிஸ்நெசை டெவலப் பண்ணும் போது பார்க்க அந்த பகதூர் தான் வந்து நிழலாடுறார் ஹி.. ஹி

வாங்க இளம் தூயவன் உங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//குறுக்கு கேள்வியில லா பட்டம் வாங்கிய ஆளு நான் தெரியுமா..ஹா..ஹா....//

தெரியுமே! அந்த சமயம் நான் "நெடுக்கு" கேள்வியில் லா பட்டம் வாங்க வந்ததை சொல்லி நாம ரெண்டு பேரும் சந்தோசப் பட்டுக் கொண்டோமே மறந்துட்டீங்களா பாஸ் க்கி..க்கி..

இருந்தாலும் 'நுவ்வலு' ன்னா என்னன்னு இது வரைக்கும் பதில் சொல்லாம இருப்பது ரொம்ப பெரிய அராஜகம் தல!! ஹா ஹாஹ் ஹா..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//இந்த ரெண்டு சிட்டியும் எந்த கிராமத்துக்கு பக்கத்தில இருக்கு//

//அஞ்சு கிராமத்துக்கு பக்கத்திலே பாஸ்!!//

//இந்த அஞ்சு யாரு..? நல்லா படிங்க 5 இல்ல நான் கேட்டது..க்கி..க்கி...//

இந்த ரெண்டு சிட்டியும்
"ஸின்சினாட்டி"க்கி பக்கத்துல, "மின்னசோட்டா"வுக்கு மிடில்ல, ஹி..ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//என் கேரக்டரயேஏஏஏஏஏஏஏ புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களேஏஏஏ பாஸ்//

அப்படீன்னா இன்னா பாஸ்.. இந்தியா ரூபாயின் நியூ சிம்பலா?? க்கி..க்கி

ஜெய்லானி உங்கள் வருகைக்கும், நேரம் காலம் பார்க்காமல் வாரி வழங்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

Ahamed irshad சொன்னது…

Good writing Skills. intresting..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஆஹா.. கூர்க்காவையும் விட்டு வைக்கறது இல்லையா??

என்ன ஒரு வீர, தீரச் செயல்... சும்மா போன ஆளுக்கு, ஜுரம் வர வச்சிட்டீங்களே..!!

எழுதியிருந்த விதம் அருமை..

ஜெய்லானி சொன்னது…

//என்ன ஒரு வீர, தீரச் செயல்... சும்மா போன ஆளுக்கு, ஜுரம் வர வச்சிட்டீங்களே..!!//

சில பேர பார்தாலே ஜுரம் வருது மேடம்..இதுல சத்தம் போட்டா வராதா என்ன ஹா..ஹா...

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அஹமது இர்ஷாத் கூறியது...

//Good writing Skills. intresting..//

ரொம்ப நன்றி இர்ஷாத், உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ananthi கூறியது...

//ஆஹா.. கூர்க்காவையும் விட்டு வைக்கறது இல்லையா??//

எவ்வளவு வீரமான ஆளை காவலுக்கு போட்டிருக்காங்க என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்த இடுகை சிஸ் ஹி..ஹி..

Siss. Ananthi உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ananthi கூறியது...

//சும்மா போன ஆளுக்கு, ஜுரம் வர வச்சிட்டீங்களே..!!

வேப்பிலை தாயத்து பரிகாரமெல்லாம் பாத்துட்டாக சிஸ், இப்ப ஸேபா இருக்கார் ஹி ஹி

Siss. Ananthi உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...



//சில பேர பார்தாலே ஜுரம் வருது மேடம்..இதுல சத்தம் போட்டா வராதா என்ன ஹா..ஹா...//

சில பேர (name)பார்தாலே ஜுரம் வருது, சில பேர சொன்னாலே ஜுரம் தீருது அது யாரு பாஸு ??? சவுண்ட் நாம என்ன ரவுடியா?? ஹி..ஹி..

Asiya Omar சொன்னது…

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைகிறேன்.

Asiya Omar சொன்னது…

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைகிறேன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

ரெண்டு விருதா மேடம்?? ஹா.. ஹா...தேங்க்ஸ் மேடம்!! பதிவில் தனியா எழுதிவிட்டேன். ஆணி அடிச்சு மாட்டியும் விட்டேன்.