facebook

ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

காலம்பர வாங்க..!

                                                                   

                                                                            


காலம்பர வாங்க..!

பேசும் பேச்சில், சில சொல் வழக்குகள் நம்மை யோசிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும் (ரெண்டும் ஒன்னு தானோ!!!!) சிலவைகள் நம்மை குழப்பும் அப்படிப் பட்டவைகளை இப்ப நாம் இங்கே பார்த்து யோசிப்போம்!!


எங்க வீட்டில் பேசும் தமிழ் மொழியின் பேச்சு வழக்கு ஒரு மாதிரியாகவும், அவுக வீட்டில் பேசும் பேச்சின் வழக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும் (உம்: எங்க வீட்டில், இக்கிரஹா, போரஹா, வர்ரஹா..இவ்வாறாக ) (அவுக வீட்டில் : இரிலே போலே, வாலே.. என்று)

இது இவ்வாறிருக்க --

கல்யாணம் முடிந்த புதிதில்...

மாலையில் அவங்க வீட்டுக்கு போனா, காலையிலேயே எங்க வீட்டுக்கு திரும்பி வந்து விடும் பழக்கமுள்ள நான், ஒரு தடவை அவங்க வீட்டிலிருந்து புறப்பட்டு வாசல் வரை வந்து விட்ட சமயம், அவங்க பாட்டி குடு குடு வென்று கிட்ட ஓடியாந்து "தம்பி போயிட்டு காலம்பர வந்துடுங்கன்னு சொன்னாங்க", அடப் பாவத்த ராத்திரிக்கி வரக் கூடாதான்னு, யோசித்துக்கொண்டே, "சரி" என்று சொல்லிவிட்டு எங்க வீட்டுக்கு வந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவோடு, பகலில் இருந்து சாப்பிட்டு விட்டு, மாலையில் நண்பர்கள் எல்லோரையும் பார்த்து விட்டு, அங்கங்கே சுற்றியும் விட்டு, இரவில் அவுக வீட்டுக்கு போகாமல், எங்க வீட்டுக்கே வந்து விட்டேன்.

எங்க அம்மா வந்து என்னிடம் "தம்பி கடைசி பஸ் போய்டுமே, இன்னும் அங்க புறப்பட்டு போகாம இக்கிரீங்களே" என்றாங்க. அதுக்கு நான், " இப்ப நான் அங்க போவலம்மா. அவங்க என்னை காலையில் வரச் சொல்லிட்டாங்க" என்று சொன்னேன்.

"அப்படியா?? அப்படி யெல்லாம் சொல்ல மாட்டங்களே" என்று அவங்க குழம்பியபடி உள்ளே சென்று, எங்க அக்காவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாங்க. அவங்க ஏதோ சொல்ல பதட்டத்துடன் என்னிடம் ஓடியாந்து, “என்னான்னு சொன்னாங்க” என்று திரும்பவும் கேட்டாங்க. ‘காலம்பர வாங்கன்னு’ சொன்னாங்கன்னு சொன்னேன். அதுக்கு அவங்க சிரிச்சுட்டு சொன்னங்க,

"தம்பி காலம்பர வாங்கன்னா, சீக்கிரமா புறப்பட்டு வந்துடுங்கன்னு அர்த்தமாம். அவங்க ஊர்ல அப்படி தான் பேசிக்கி வாங்கலாம்”
நீங்க சீக்கிரமா புறப்பட்டு போங்கன்னு“ சொன்னாங்க!

ஏங்க, இங்கிட்டும் அங்கிட்டும் கூட்டி கழித்துப் பார்த்தா ஏழு கிலோ மீட்டர் தூரம் கூட இல்லை. அங்கேயே தமிழில் சொல் வழக்குகள் இப்படி மாறி நிற்கும் போது, பிறகு இலங்கை மலேசியா சிங்கபூர் போன்ற மற்ற தமிழ் பேசும் உலக நாடுகளில் எப்படி எப்படி எல்லாம் சொல் வழக்குகள் மாறி நிற்கும்??

இப்ப எங்க தாயாரும், அவுக பாட்டியாரும் எங்களோடு இல்லா விட்டாலும் அவர்கள் பேசிய நினைவுகள் சமயங்களில் வரத்தான் செய்கின்றன!

நினைவுகளை பகிர்ந்து கொண்ட மாதிரி, மெயிலில் வந்த ஒரு செய்தியையும் இங்கே பகிர்ந்து கொள்வோம்
                         
                                   @@@@@@@@@@

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவிக்கி அழைக்க, இந்திய அரசு 12X7 Help Line ஐ அறிமுகப்படுத்தியுள்ளது: குறித்து வைத்துக் கொள்ளுங்கள் உதவும். அல்லது யாருக்கேனும் நாம் கொடுத்ததும் உதவலாம்.

தொலை பேசி எண்:


1800113090
911140503090


                                                                     

விருதுகள் :

அமீரகத்திலிருந்து இது எனக்கு இரண்டாவது விருது! (1) தல ஜெய்லானி, இப்ப (2) சகோ.ஆசியா உமர்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இவர்கள் எல்லோருடைய பதிவையும் படித்து விட்டு கமண்ட்ஸ் போட்டுக் கொண்டிருத்த காலம். அப்ப இவர்களெல்லாம் விருதுகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த நேரம். பார்க்க ஆர்வமா இருக்கும். நாமெல்லாம் பதிவுலகை படித்து வலம் வரும் சின்னஞ் சிறுசு தானே.

அப்ப நான் கூட வேடிக்கையா, "கமண்ட்ஸ் போடுறவங்களுக்கு விருது ஏதும் கிடையாதான்னு” கேட்டேன். இந்த தல ஜெய்லானி இருக்கே ரொம்ப உஷார். மொதல்ல வலைப்பூ ஆரம்பிகன்னு சொன்னுச்சு. அதாவது நாம எழுத ஆரம்பிக்கனுமாம், மாட்டிகிட்டு முழிக்கனுமாம். சின்ன gape கெடச்சாலும் எதையாவது சொல்லி நம்ம தல மேலேயே அடிக்கும். (அதாவது மற்றவர்களை எழுத தூண்டி ஆர்வப் படுத்துவதென்பது அதன் பொருள்.) நல்ல பொறுப்புள்ள பாசகார புள்ள..!

அடுத்து மேடம் ஆசியா உமர். இவர்களை தினமும் சந்தித்துக் கொள்ளலாம். ஏதாவது மெனுவோடு கண்ணைக் கவரும் வண்ண வண்ண படங்களோடு. இவர்களின் வலைப்பூவை பார்த்து தான் கமெண்ட்ஸ் போடக் கற்றுக் கொண்டோம். இவர்கள் போடும் இடுகைகளை பார்த்து மிரண்டு போனது கூட உண்டு. என்ன ஒரு ஸ்பீட். அதில் ஒரு தனித்துவம் மிளிரும்.

இவர்கள் கமெண்ட்சில் வந்து நாசூக்காய் சொல்லிவிட்டு போகும் விஷயம் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்கிற டீச்சரின் அடையாளம். சமீபத்தில் இவர்கள் எழுதிய முஸ்லிம் சத்திரமும் முட்டை பஜ்ஜியும்” தனி ரசனையோடு எழுதப் பட்ட ஒரு இடுகை! எழுத்து நடை மிகப் பிரமாதமாக இருந்தது.

நான் கூட யோசித்த துண்டு. இவர்கள் இதுமாதிரி வாரம் ஒன்னு ஏன் எழுதக் கூடாது? சமையலையே தான் போடணுமா?? வலைப்பூவை சமைத்து அசத்தலாம் என்று வைத்து விட்டு மற்றவைகளை எழுதக் கூடாதா என்ன?? சிரித்து அசத்தலாம், பயணக் கட்டுரை எழுதி அசத்தலாம். தினம் ஒன்றை செய்து அசத்தலாமே மேடம். நூறு பதிவுக்கு மேல் போட்டவர்களுக்கு இதெல்லாம் புரியாதா என்ன??

கடைசியாக ஒன்னு! இப்படி வாரி வாரி விருது வழங்கும் மக்களெல்லாம், தலை முறை தலை முறையாய் மன்னர் பரம்பரையில் வந்தவர்களோ?? மனம் ரொம்ப சந்தோசமா இருக்கு என் அருமை நேசங்களே! இனிமேலும் எல்லோரும் ஒன்று கூடி எங்களை எழுத ஆர்வப் படுத்திக் கொண்டே இருங்கள்.

                                                             
                         

32 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

ராத்திரி எத்தனை மணிக்கு போஸ்ட் போட்டாலும் இன்னைக்கு விடுரதா இல்ல முதல் வடை எனக்கே

ஜெய்லானி சொன்னது…

//இப்ப நாம் இங்கே பார்த்து யோசிப்போம்!! //

நா வரல இந்த ஆட்டைக்கு...

இப்ப யோசிங்க இது எந்த ஊர் பாஷைன்னு

ஜெய்லானி சொன்னது…

//அவுக வீட்டில் பேசும் பேச்சின் வழக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும்//

யார் அவுக இம்பூட்டு பயம் பேர சொல்ல

ஜெய்லானி சொன்னது…

//அடப் பாவத்த ராத்திரிக்கி வரக் கூடாதான்னு, யோசித்துக்கொண்டே, "சரி" என்று சொல்லிவிட்டு எங்க வீட்டுக்கு வந்து விட்டேன். //

ஹி..ஹி...அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி சொன்னது…

// இலங்கை மலேசியா சிங்கபூர் போன்ற மற்ற தமிழ் பேசும் உலக நாடுகளில் எப்படி எப்படி எல்லாம் சொல் வழக்குகள் மாறி நிற்கும்??//

ஆமாங் .என்னங் சொல்றீங் , ஒன்னிய்ம் புரியலீங்

ஜெய்லானி சொன்னது…

//யாருக்கேனும் நாம் கொடுத்ததும் உதவலாம்.

தொலை பேசி எண்: //

ங்கொய்யால ஐ எஸ் டி காசு யாரு தரு வாங்க ..!! அனுஷ்காக்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன ( யார் அந்த ஃபிகருன்னு கேக்கபிடாது )

ஜெய்லானி சொன்னது…

//சின்ன gape கெடச்சாலும் எதையாவது சொல்லி நம்ம தல மேலேயே அடிக்கும்//

ஹி..ஹி..ஆசி வாதம் சார் .. (( இப்பிடி சொல்லியே நல்லா “நங்”ன்னு கொட்டு உச்சந்தலையில ))

ஜெய்லானி சொன்னது…

//நல்ல பொறுப்புள்ள பாசகார புள்ள..!//

பரவாயில்ல குடுத்த காசுக்கு பயபுள்ள சரியாதான் கூவுது

Unknown சொன்னது…

விருது 'கெளிச்சதுக்கு' ரன் வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு சொல் வழக்கம். எனக்கு சென்னை பாஷை சுத்தமா விளங்காது.
நல்ல பதிவு.

விருதுக்கு வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் உற்சாகமூட்டி எழுத வைக்கும் ஜெய்க்கும் வாழ்த்துக்கள்.
சொன்ன விதம் நல்லா இருக்கு.

Asiya Omar சொன்னது…

பதிவு அருமை.சமையல் தவிர மற்றதும் எழுதிட்டாப்போச்சு.அட நீங்க எந்த ஊருன்னு குழப்பமாக இருக்கு.

நாடோடி சொன்னது…

என்ன‌ கொடுமை சார் இது!!!!!!! "கால‌ம்ப‌ர‌" எங்க‌ ஊர் சொல்வ‌ழ‌க்கு.. ந‌ல்ல‌ நினைவாட‌ல் அப்துல்.. தொட‌ர்ந்து எழுதி க‌ல‌க்குங்க‌.. விருதுக்கு வாழ்த்துக்க‌ள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

முதல் மேட்டர் ரொம்ப சூப்பர்.

விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்.

அப்புறம் விருது வாங்கின உடனே அதை ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்படியே நாலஞ்சு பேருக்கு கொடுக்கணுமாக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

சாப்பிடுங்க பாஸ்..எல்லாமே உங்களுக்கு தான். ராத்திரில
ஒரு மணிக்கு வடை சாப்பிடுற மொதோ ஆள் ஹி..ஹி..!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

//நா வரல இந்த ஆட்டைக்கு...//

வந்துபுட்டு அதென்ன வரல?

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

//யார் அவுக இம்பூட்டு பயம் பேர சொல்ல//

ஷார்ஜாவுல ஒரு கூட்டமே திரியுது போல, நம்மள பார்த்து KKBK-ன்னு சிரிக்க!! இது ஒரு 'பேங்க்'ட பேர் பாஸ்!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

//ஹி..ஹி...அவ்வ்வ்வ்வ்//

பாஸ் உங்க அளப்பர தாங்க முடியலே ..க்கி..க்கி

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

//ஆமாங். என்னங் சொல்றீங், ஒன்னிய்ம் புரியலீங்//

எனக்கும் அதாங்.. புரியலிங்.. பாஸூ..ஸூ..ஸூ!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

//அனுஷ்காக்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன//

இருங்க! இன்னிக்கி பகல் வீட்ல குஷ்காவாம். சாப்டுட்டு யோசிக்..க்கி ..க்கி

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

செ.சரவணக்குமார் சொன்னது…

ஆஹா, தல இதான் மேட்டரா..

ரைட்டு..

விருது பெற்றதற்கு வாழ்த்துகள். காலம்பர தமாம் வாரேன்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

ஹி..ஹி..ஆசி வாதம் சார்.. ((இப்பிடி சொல்லியே நல்லா “நங்”ன்னு கொட்டு உச்சந்தலையில))

பாஸ் ஆசில இர்ர்ர் விட்டுடீங்க,, இல்ல ஆசிக்கி வாதம் கீதம்.. ஹீ..ஹி

((ஏற்கனவே ஹெல்மெட் சேப்டி உண்டுங்கோ))

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது

//பரவாயில்ல குடுத்த காசுக்கு பயபுள்ள சரியாதான் கூவுது//

யோவ் செக்கு பவுன்சாயிடுச்சாம், கூவுன பார்டிக்கி கேஷ வெட்டுய்யா..ஹீ ஹீ..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ கலாநேசன் கூறியது...

//விருது 'கெளிச்சதுக்கு' ரன் வாழ்த்துக்கள்//


வாங்க தல, ரொம்ப நன்றி கலாநேசன் சார்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

//ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு சொல் வழக்கம். எனக்கு சென்னை பாஷை சுத்தமா விளங்காது.//

ஆமாங்க வாணி மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால் எல்லாமே கைவரப் பெறும்.

vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

//சமையல் தவிர மற்றதும் எழுதிட்டாப்போச்சு. அட நீங்க எந்த ஊருன்னு குழப்பமாக இருக்கு.//


நல்லதுங்க மேடம் ரொம்ப சந்தோஷம்.

என்னங்க மேடம் பொசுக்குன்னு இப்படி கேட்டுபுட்டிய, 'நாகூரு'ன்னு தான் முன்னமே உங்களுக்கு தெரியும்ல!! இன்னுமென்ன குழப்பம்..

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

நாடோடி கூறியது...

//என்ன‌ கொடுமை சார் இது!!!!!!! "கால‌ம்ப‌ர‌" எங்க‌ ஊர் சொல்வ‌ழ‌க்கு.. ந‌ல்ல‌ நினைவாட‌ல்//

வாங்க சார் உங்கள தான் தேடிக்கிட்டிருந்தேன். உங்க ஊர் சொல்வழக்கு எங்க ஊர் பக்கம் எப்படி ஹா.. ஹா..

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அக்பர் கூறியது...

வாங்க அக்பர்! ரொம்ப நன்றிங்க!!

//அப்புறம் விருது வாங்கின உடனே அதை ஜெராக்ஸ் எடுத்துட்டு அப்படியே நாலஞ்சு பேருக்கு கொடுக்கணுமாக்கும்//

கொடுத்தவங்க,, யார விட்டு வச்சாங்க? பத்தும் பத்தாததுக்கு தல ஸ்டார்ஜான் வேற. நீங்களே சொல்லுங்க!! வாங்கதவங்க யார் பாக்கி இருக்கா??

அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ செ.சரவணக்குமார் கூறியது...

//ஆஹா, தல இதான் மேட்டரா.. காலம்பர 'தமாம்' வாரேன்..//

காலம்பர வர்றேன்னுட்டு ராத்திரிக்கி வரப்டாது சொல்லிட்டேன், ஆமா!!

செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அடடா.. சூப்பர்.. விருதுக்கு வாழ்த்துக்கள்..

ஏனுங்க, அப்துல்.. உங்க ஊர் வழக்கெல்லாம்... ரொம்ப நல்லா இருக்குதுங்கோ..!

ஆமா.. கடைசியில, கடைசி பஸ் பிடிச்சு.. ஊர் போயி சேந்தீகளா..??

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

காலம்பரைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? விருதுக்கு வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ananthi கூறியது...

//ஆமா.. கடைசியில, கடைசி பஸ் பிடிச்சு.. ஊர் போயி சேந்தீகளா..??//

ஆமாங்க மேடம் (அத நான் பாவமா மொகத்த வச்சுக்கிட்டு சொல்ற மாதிரி படிக்கனும்ங்க) ஹா..ஹா..

வாங்க Siss.ஆனந்தி, உங்கள் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ புவனேஸ்வரி ராமநாதன் கூறியது...

// காலம்பரைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?//

ஆமாங்க சகோதரி!

வாங்க சகோதரி புவனேஸ்வரி ராமநாதன், உங்கள் முதல் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!