மனதோடு மட்டும்..!!
இன்று இங்கே (சவுதி-தம்மாம்) வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. 108 டிகிரி . (Feels like 118 F என்கிறார்கள்) ஹியூமிடிட்டி என்கிற தகிப்பு தாங்க முடியலங்க. குளித்து விட்டு டீக்காக டிரஸ் பண்ணிக் கொண்டு வெளியில் நடந்து வரும் போதே இன்னொரு முறை குளித்துக் கொண்டே வருவது போல் ஒரு ஃ பீலிங்கா இருக்கு.
ஆபீஸ் வந்து பார்த்தால் டிரஸ் எல்லாம் தொப்பலாக நனைந்து உடம்போடு ஒட்டி, ஏசியின் குளிரில் திரும்பவும் உடம்பு குளிராகி விடுகிறது. இப்படியானால் உடம்புக்கு என்னாகும். நமது உடம்பை
விட்டுத் தள்ளுங்கள். வயதானவர்கள்??
பில்டிங் வேலைகள் பெரும்பாலானவைகள் பெரிய பெரிய விளக்குகளை எரிய விட்டுக் கொண்டு இரவில் நடைபெறுகின்றன. என்றாலும் என்னா ஒரு கிளைமேட். இந்த நோன்பு நாளின் அவஸ்தை சொல்லி மாளலை.
இது இவ்வாறிருக்க இதே வெப்பத்தினால் நேற்றும் அதற்கு முந்திய தினமும் இங்கே எங்கள் வங்கியில் நடந்த சம்பவத்தை பகிர்கிறேன்.
முந்திய தினம் நல்லக் கூட்டம். அவ்வளவு கூட்டம் உள்ளே
புகுந்தால் ஏசி உருப்படியாய் வேலை செய்யாது. மக்கள் வியர்வையால் வழிகிறார்கள். என்ன வென்று சொல்வது. அந்த சமயம் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். பதட்டத்தில் எல்லோரும் கூட்டமாய் அவரை சுற்றி நின்றுக் கொண்டு காற்று கூட அவர் மேல் பட விடாமல். (என்னா ஒரு அக்கறை??) எல்லாரையும் சத்தம் போட்டு நகற்றி விட்டு அவர் முகத்தில் நீர் தெளித்து, சேரில் தூக்கி உட்கார வைத்து (தாகத்துக்கு நீர் கொடுக்கலாம் என்றால் (பகலில்) நோன்பா இருப்பாரோ என்ற ஒரு அச்சம் வேறு)
அங்கு நின்ற ஒரு அரபுக்காரர் சக்கரையை நீரில் கரைத்து வாயில் ஊற்று என்றார். நாங்கள் நோன்பு காரணத்தை சொன்னவுடன் அவர் அமைதியானாலும், மயக்கமுற்றவரை கேட்டு பார்ப்போமே என்று கேட்டோம். அவர் வேண்டாமென்று மறுத்து விட்டார். அப்படியே அவர் நோன்பில்லாவிட்டாலும், அவர் டயாபெடிஸ் பேஷண்டாக இருந்தால் என்ற கேள்வியும் எழுந்தது.
ஹாஸ்பிடலுக்கு அழைத்து அல்லது ஆம்புலன்ஸ் சொல்லலாம் என்றவுடன் அதையும் அவர் மறுத்து விட்டார். நெடுநேரம் உழற்றியபடியே உட்கார்ந்திருந்தார். பாவமாக இருந்தது. அவர் நம் இந்திய தேசத்துக் காரார்.
நேற்று இரவு இது மாதிரி ஒரு சம்பவம் வேறு மாதிரியாக. வங்கியில் கூட்டம் அலைமோதிய நேரம். கூட்டத்தை கடந்து கவுண்டரில் பணம் கட்டிவிட்டு வெளியே போக முனைந்த பிலிப்பைனி நாட்டை சேர்ந்த ஒருவர், சரேலென்று குப்புற விழுந்தார். நச்சென்று முகம் தரையில் அடித்து, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் சிதறியது. பதறி விட்டோம். (என்ன இது பழம் பழுத்து விழுவது போல் மனிதர்கள் விழ ஆரம்பித்து விட்டார்கள் என்று மனதில் நினைவு ஓடுகிறது)
அதற்குள் துள்ளி வெளியே ஓடிவந்த எங்கள் வங்கி கேஷியர் (ஏமன் தேசத்து அரபுக்காரர்) அந்த நபரை ஆதரவா தூக்கி, அவர் வாயிலும் முகத்திலும் வழியும் ரத்தத்தை துடைத்து அவரை புத்துணர்ச்சி யாக்கி, தரையில் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்து, சிறிது நேரத்தில் அவ்வளவும் கண் முன்னே நடக்கிறது. மனிதர்களில் பலர் ரமளானின் நன்மைகளை எப்படியெல்லாம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
நமக்கு தெரிந்தே இவைகள் நடக்கும் போது, நமக்கு தெரியாமல் என்னென்ன நடந்திருக்கும். நினைக்கவே பயமா இருக்கு. இந்த
global warming ஐ நினைத்தால்....!!
இவ்வளவு கூட்டத்துக்கும் அலைமோதலுக்கும் நடுவேயும் பழகிய தெரிந்த முகங்கள் யாரவது வந்து விட்டால் பேசக் கூட வாய்ப்பில்லாது போகும் தருணம் உண்டு. அதுவும் நேற்றே நடந்தது. தல செ.சரவணக்குமார் வந்து தலை காட்டினார். (உண்மையான தலையை தான்!! தொப்பி போட்டு மறைக்காமல்!) நெடுநேரம் அவரோடு கனிவாய் பல விஷயங்கள் பேச நினைத்தாலும், இது மாதிரி சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதை புரிந்து கொண்ட அந்த நல்ல உள்ளம் பிறிதொரு நாள் வருவதாக சொன்னது. இந்த ஆற்றாமையை அன்பு நண்பர்கள் ஸ்டார்ஜன், "சிநேகிதன்" அக்பரிடமும் தான் சொல்லி ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
எத்தனையோ hyper market கள் இருந்தும் நோன்பு நாளில் பொருட்களின் விலை இங்கே சற்றே கூடுதலாகி விடுகிறது. அதில் பழங்கள் முதலிடத்தை வகிக்கிறது. எல்லாமே இரண்டு மடங்கு மூன்று மடங்கு. ஸீசன் பிசினெஸ் என்பது இது தானோ??
23 கருத்துகள்:
வெயில் கொடுமை சொல்லி மாளாது. ஆனால் நான் இருக்கும் இடம் ஒரளவு பரவாயில்லை.
வெய்யில் படுத்தும் பாடு சொல்லி மாளாது. வெய்யில் குறைவாக இருந்தாலும் ஹியூமிடிட்டி அதிகமாக இருந்தால் கொடுமையாக இருக்கும்.
நல்ல பதிவு.
நோன்பின் போது தண்ணீர் குடிக்க மாட்டீங்களா?
இங்கும் (யூ ஏ ஈ) 108 டிகிரி வெய்யில் இருக்கு ஆனா ஹியூமிடிட்டி இல்லை . இந்த நோன்பில் தப்பிச்சோம் .
இந்த ஏ ஸி பிரச்சனை ஒன்னும் செய்ய முடியாது. கொடுமைதான் .
@@@ vanathy
நோன்பின் போது தண்ணீர் குடிக்க மாட்டீங்களா? //
நோன்பு என்பது குறிப்பிட்ட நேரம் வரை எதையும் உண்ணாமல் பருகாமல் இருப்பதுக்கே நோன்பு என்று பெயர்(( இப்போது யூ ஏ ஈ நேரம் காலை 4.19 லிருந்து மாலை 6.56 வரை ))
நேற்றைய புழுக்கத்தில் எங்கே மயங்கி விழுந்துவிடுவேனோ என்று பயந்துகொண்டிருந்தேன். ஹுயுமிடிட்டி வெளியில் மட்டுமல்ல மனதிற்குள்ளேயும்தான். நிறைய பேச வேண்டும் என வந்தேன், அந்தப் பெருங்கூட்டத்தில் அது சாத்தியமாகாது எனத் தெரிந்தது. இருப்பினும் அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும் ஒரு நிமிடம் எழுந்து வந்து கைகளைப் பற்றிக்கொண்டீர்களே.. இதைவிட வேறென்ன சார் வேண்டும்.
மிகுந்த அன்பும் நன்றியும்.
அப்துல்காதர் சார்.. மதியான வெயிலில் வெளியில் செல்லமுடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் மற்றும் புழுக்கம்.. 3 மணி தாண்டியபின் புழுக்கத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் இந்த ரமலான் மாதத்தில் புழுக்கத்தின் அளவு ஜாஸ்தியா இருக்குமாம். ஏனென்றால் இங்கே தோட்டங்களில் உள்ள் பேரீச்சை மரங்கள் இந்த நேரத்தில் பழுக்க ஆரம்பிக்கும்.. அதனால்தான் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.
இங்கே கடந்த 2 நாளாக புழுக்கம் ஜாஸ்தி. எங்கள் கடையின்முன் ப்ளாட்பாரம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்த பணி செய்துவரும் பாகிஸ்தானி நண்பர்கள் புழுக்கத்தின் நடுவில் வேலை செய்ததை பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. நாங்களும் எங்களால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தோம்.
நல்ல பகிர்வு.. உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றிகள்.
என்னத்த சொல்ல. வெயிலின் கொடுமை அதிகம். நேற்று சரவணன் போன் செய்தார். எல்லோரும் சந்திப்பீர்கள் என நினைத்தேன்.
இளம் தூயவனும் போன் செய்தார். நான் நீங்கள் என நினைத்து கேட்க அவர் பெயர் சொல்ல ஒரே கலாட்டாவாக போய்விட்டது.
கஷ்டங்களை பிறருடன் இறக்கிவைத்தால் சிறிது புழுக்கம் குறையும்.
உள்ளேயே இருப்பதால் ஒன்றும் தெரியலை.வெயில் கஷ்டம் தான்.நோன்பு நேரம் பழம் வியாபாரம் சீசன்,அப்படி தான் இருக்கும்.
//அந்த நபரை ஆதரவா தூக்கி, அவர் வாயிலும் முகத்திலும் வழியும் ரத்தத்தை துடைத்து அவரை புத்துணர்ச்சி யாக்கி, தரையில் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்து, சிறிது நேரத்தில் அவ்வளவும் கண் முன்னே நடக்கிறது.//
இதப்படிக்க ரொம்ப நெகிழ்ச்சியா இருந்ததுங்க..
இப்பல்லாம் மனசங்களுக்கு மனசங்க சாதாரணமா உதவுவதற்கே ரொம்ப யோசிக்கறாங்க.. நமக்கென்னன்னு போயிடறாங்க..
உங்களது பதிவு மற்றவர்களுக்கு உதவுவதற்கு ஒரு தூண்டுதலா இருக்கு..
அன்பு சோதரா, புனித ரமலான்
வாழ்த்துக்கள். பதிவைப் படித்து மனம் வேதனையுற்றது.என பல சவுதி நண்பர்கள் வெய்யிலின் உக்கிரம் மற்றும் பல அசௌகரியங்களைப் பற்றி எனக்கு சொல்லும் போது,அத்துனையும் நம் குடும்பங்களின் நலனுக்கே என ஆறுதல் மட்டுமே சொல்வேன்.சற்று பொருங்கள்
நண்பர்களே! தீராத தென்றலும்,வாடாத வசந்தமும் உங்களுக்கென காத்திருக்கிறது. அது வரை தமிழால் விசிறிக் கொள்ளுங்கள்
மோகன்ஜி,ஹைதராபாத்
@@ நாடோடி கூறியது...
//நான் இருக்கும் இடம் ஒரளவு பரவாயில்லை//
நீங்க கொடுத்து வைத்த மகாராசா தான் பாஸ். ஹா..ஹா..
ஸ்டீபன் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ vanathy கூறியது...
//வெய்யில் குறைவாக இருந்தாலும் ஹியூமிடிட்டி அதிகமாக இருந்தால் கொடுமையாக இருக்கும்.//
அதுவும் இங்க சவுதியில் கேட்கேவே வேண்டாம்.
//நோன்பின் போது தண்ணீர் குடிக்க மாட்டீங்களா?//
ஆமாங்க வாணி. இங்கே சவுதியில் சூரிய உதயத்திற்கு முன் காலை 3.47 இல் இருந்து மாலை சூரிய அஸ்தமனம் 6.15 வரை எந்த உணவையும் உண்ணாமல், நீர் பருகாமலும் இருப்பதற்கு தான் நோன்பு என்கிறோம்.
(இஸ்லாமியக் கடமை என்ற நிலையில் இதற்கு அளிக்கப்டும் விளக்கம், கிழக்கு வெளுக்கும் நேரத்திலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை நோன்பு நோற்பதாக நாட்டம் (நிய்யத்து) வைத்து, எதையும் உண்ணாமலும், குடிக்காமலும், இச்சையுடன் உறவு கொள்ளாமலும், தன் உடலைத் தடுத்துக் கொள்வதுடன், உள்ளத்தின் விருப்பங்களைத் தடுத்து வைத்து, தன்னிடம் கட்டுப்பாட்டை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.)
வருடத்தில் 1 மாதம் நோன்பு இருப்பதால் மனிதனின் உடலும் உள்ளமும் புடம் போட்ட தங்கமென ஜொலிப் பாகுமென அதன் உட்கருத்து.
இப்படி ஒரு கேள்வியை முன் வைத்து விளக்கம் கேட்ட உங்களுக்கு மிக்க நன்றிகள் வாணி!
@@ ஜெய்லானி கூறியது...
//இந்த ஏ ஸி பிரச்சனை ஒன்னும் செய்ய முடியாது. கொடுமைதான்//
இதற்கு ஒரு தீர்வே கிடையாத தல. இதைப் பற்றி சந்தேக விளக்கம் கேட்டு ஒரு தனி இடுகை நீங்க.... போட்டா கூட நல்லா தானிருக்கும் போல. நான் சொல்றது சரியா பாஸ் ??? ஹி..ஹி..
ஜெய்லானி உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ செ.சரவணக்குமார் கூறியது...
//ஹுயுமிடிட்டி வெளியில் மட்டுமல்ல மனதிற்குள்ளேயும்தான். நிறைய பேச வேண்டும் என வந்தேன்//
ரைட்டு. வாங்க பாஸ் அடுத்த முறை நிறைய நேரம் பேசி தீர்த்துடுவோம்.
செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் மனம் திறந்த கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...
//ஒவ்வொரு ஆண்டும் இந்த ரமலான் மாதத்தில் புழுக்கத்தின் அளவு ஜாஸ்தியா இருக்குமாம். ஏனென்றால் இங்கே தோட்டங்களில் உள்ள் பேரீச்சை மரங்கள் இந்த நேரத்தில் பழுக்க ஆரம்பிக்கும்//
உண்மை தான் ஷேக்! ஆனாலும் இந்த வருஷம் நம்மை எல்லாம் ரொம்பவா தான் போட்டு வாட்டுது. பெரியவர்கள் பச்சிளம் சிரார்கள் நிலை என்னாகும்.
Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ சிநேகிதன் அக்பர் கூறியது...
//கஷ்டங்களை பிறருடன் இறக்கிவைத்தால் சிறிது புழுக்கம் குறையும்//
ஆமா அக்பர் அன்னைக்கி அதான் சரவணக்குமார் தப்பிச்சிக்கிட்டார். ஹா..ஹா.. :))-
சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
asiya omar கூறியது...
//உள்ளேயே இருப்பதால் ஒன்றும் தெரியலை.வெயில் கஷ்டம் தான்.நோன்பு நேரம் பழம் வியாபாரம் சீசன்,அப்படி தான் இருக்கும்//
ஆஹா அருமையா சொல்லிடீங்க மேடம்!!
asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ பதிவுலகில் பாபு கூறியது...
//இதப்படிக்க ரொம்ப நெகிழ்ச்சியா இருந்ததுங்க..இப்பல்லாம் மனசங்களுக்கு மனசங்க சாதாரணமா உதவுவதற்கே ரொம்ப யோசிக்கறாங்க.. நமக்கென்னன்னு போயிடறாங்க..உங்களது பதிவு மற்றவர்களுக்கு உதவுவதற்கு ஒரு தூண்டுதலா இருக்கு..//
உண்மை தான் அப்துல் காதர்,, பார்க்கையில் உணர்கையில் உலகில் சில மனிதர்களின் நிலை இப்படி தான் போய்க் கொண்டிருக்கிறது.மனித மனங்கள் மரத்து போய் விடுவதை இது மாதிரி நிகழ்வுகளைக் கொண்டு தான் நிவர்த்தி செய்ய முடியுமோ??
பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
ஹப்பா...பதிவைபடிக்கும் பொழுதே வெப்பம் தாக்குகின்றதே?
@@ மோகன்ஜி கூறியது..
//நண்பர்களே! தீராத தென்றலும், வாடாத வசந்தமும் உங்களுக்கென காத்திருக்கிறது. அது வரை தமிழால் விசிறிக் கொள்ளுங்கள்//
ஆஹா அருமை மோகன்ஜி. உங்களைப் போன்ற நண்பர்கள் எங்களுக்கு இருக்கும் வரை, இயற்கையின் எந்த தாக்கமும் எங்களை தீண்டாது.
மோகன்ஜி உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ ஸாதிகா கூறியது...
//ஹப்பா...பதிவைபடிக்கும் பொழுதே வெப்பம் தாக்குகின்றதே?//
வாங்க ஸாதிகாக்கா பதிவை படிக்கும் போதே அப்படீன்னா, அனுபவிக்கும் மக்களுக்கு..??
ஸாதிகா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
அந்த தருணத்தின் வெப்பத்தை ஓரளவு உணர முடிந்தது. துபாய் வெயிலை விட சவுதியில் அதிகம் என்பார்கள். இங்கேயே இந்த முறை வெயில் அதிகம் தான். எல்லா அனுபவங்களயும் அற்புதமான பதிவாக்கி விடுகின்றீர்கள்.
Hot Too Hot There.. Iam Great Escape..
கருத்துரையிடுக