facebook

புதன், செப்டம்பர் 08, 2010

மெல்ல ஒளிரும் இரவுகள்!!

                                                                             
                                                                                


மெல்ல ஒளிரும் இரவுகள்

அவர் ஒரு மிக  உயர் குடும்பத்தை சேர்ந்த  நபர்.  இங்கு ஒரு நல்ல கம்பெனியில் அக்கவுண்டன்ட் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எல்லா "பிரான்ச்" களிலும் அவர் தான் பணம் கலெக்ட் செய்து கொண்டு வந்து ஒன்றாக சேர்த்து பேங்கில் கொண்டு போடுவார். முதலாளி இவர் மேலும், இவர் முதலாளி மீதும் ரொம்ப மதிப்பு மிக்க விசுவாசம். நான் பார்க்க பழக நட்பாகிப் போனது மறக்க முடியாத அனுபவங்கள்.

அன்று இரவு டூட்டி முடிந்து சாப்பாட்டுக்காக வெய்டிங். அவர் வர வில்லை. ஒரு வேளை கம்பெனியில் வேலை அதிகமிருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு நானும் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு போய் விட்டேன். ஒரு போனாவது செய்திருக்கலாம். எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்.

இரவு கிட்டத் தட்ட பனிரெண்டு மணி இருக்கும். அவர் கம்பெனியிலிருந்து வந்த ஆள் அவரை போலீஸ் பிடிச்சுக்கிட்டு போய்டுச்சு என்று சொன்னார். என் உயிரை என் உடம்பிலிருந்து உருவி எடுப்பது போல் ஒரு பிரமை. தளர்ந்து சோர்ந்து போனேன். அப்படியே பெட்டில் சாய்ந்து சரிந்து படுத்து விட்டேன். இரவில் இப்படி ஒரு செய்தி வெளி நாட்டில் இருக்கும் நமக்கு படபடப்பு வருமா வரதா?

மறு நாள் அவர் கம்பெனியில் போய் விசாரிக்கலாம் என்றால் அங்கே வேலை பார்ப்பவர்கள் யாரும் எதுவும் சொல்ல பயப் படுகிறார்கள். அனைவரும் இந்தியர்கள் + எகிப்து நாட்டவர்கள் மட்டுமே.

என் வேலைக்கு லீவு சொல்லிவிட்டு அவருடைய ஸ்பான்சரை சென்று சந்தித்து விவரம் கேட்கலாம் என்று போனேன். இவருடைய பெயரை சொன்னவுடன் அவர் முகம் இறுகிப் போனது. சர்தான் அப்ப ஏதோ தீவிரமான பிரச்சினை தான் என்று என் உள் மனம் ஏதோ குறு குறுத்தது.

என்னை பற்றி விசாரித்து விட்டு சொல்ல ஆரம்பித்தார். நான் அவரை என் பிள்ளையிலும் உயர்வாய் நேசித்து, மனைவியினும் அதிகமாய் மதித்து வேலைக்கு வைத்திருந்தேன். கிட்டத்தட்ட ஏழு வருடமாய் இந்த கம்பெனியில் எது நடந்தாலும் நான் தலையிடுவதில்லை. அவரே எல்லாத்தையும் டீல் செய்து சரி செய்து விடுவார்.

ஆனால் கடந்த வாரம் நான் வெளிநாட்டுக்கு என் குடும்பத்துடன் சென்றிருக்கும் போது, என் கையொப்பத்தை அவரே போட்டு செக்கை வங்கியில் கொடுத்து பணம் எடுக்க முயன்றிருக்கிறார். எனக்கு தெரிந்த அந்த வங்கியின் மேலாளர் எனது நண்பர். நான் வெளிநாடு சென்ற விபரம் தெரியும். கம்பியூட்டர் ப்ராப்ளம் என்று சொல்லி அவரை வங்கியிலேயே உட்காரச் சொல்லி விட்டு, எனக்கு தகவல் தெரிவித்து விட்டார்.

நான் விடுமுறையை கேன்சல் செய்து விட்டு வந்து விட்டேன். எனக்கு மனசு பொறுக்கலை. “உனக்கு என்ன குறை வைத்தேன்” என்று அவரைப் பார்த்து கேட்டேன் என்றார். நல்ல மனிதர்களுக்கு எப்பவுமே இப்படி ஒரு குற்றவியல் சோதனை உலகெங்கும் நடந்துக் கொண்டு தானிருக்கிறது.

பிறகு ஒரு பெரிய ஆடிட்டிங் கம்பெனியை விட்டு கணக்கை சோதனை செய்த போது, சிறுக சிறுக பணம் 25 லட்சம் கையாடப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, போலிசுக்கு தகவல் சொல்லி இவரை கைது செய்திருக்கிறார். இவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எனக்கு பேச்சு வராமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பணத்துக்கு ஈக்வலாக உள்ள சவுதி ரியால் வந்தால் அவரை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன் இல்லை என்றால்.. என்று வாசகத்தை முடிக்காமலேயே எழுந்துக் கொண்டார்.

வெளியே சொன்னாலும் வெட்கம்.

செய்திகள் மெல்ல மெல்ல கசிந்து வெளியே பரவி, அதுவே திரும்பி என் காதுக்கு வேறு மாதிரி வந்து சேர்ந்தது. உலகில் பணம் சம்பாதிக்க வேண்டு மென்று ஆசைப் படாத மனிதர்களில்லை. ஆனால் பணத்துக்கு மதம் பிடித்த மாதிரி மள மளவென்று சேர்க்க ஆசைப் படுபவர்களு க்கும் இது தான் கதி என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

இந்த நண்பருக்கு கூட பிறந்தவர்கள் லண்டன் போன்ற வெளி நாடுகளில் இருக்கிறார்கள். இவர் ஜெயிலில் இருந்துக் கொண்டு அவர்களுக்கு தகவல் சொல்லி இருப்பார் போலிருக்கிறது. மறு நாள் அங்கிருத்து எனக்கு போன் வந்தது. என்ன ஏது என்று சும்மா ஃபார்மாலிட்டிக்காக விசாரித்து விட்டு, ஸ்பான்சர் எவ்வளவு கேட்கிறாரோ அதை நாங்கள் இங்கிருத்து அனுப்பி வைக்கிறோம். எப்படியாவது தம்பியை வெளியே எடுத்து விடுங்கள் என்றார்கள். அப்ப எல்லாமே இவர்களுக்கு தெரிந்து தான் நடந்திருக்கிறதா?

என்னாங்கையா இது ?? என்ன நடக்குது இந்த உலகத்தில் என்று குருட்டாம் போக்கில் நானே புலம்பி கொண்டும், காலம் கெட்டுக் கிடக்கு என்று என்னை நானே உஷார்ப் படுத்திக் கொண்டும் தங்குமிடம் வந்து சேர்ந்தேன்.

இதற்கிடையே பணத்தை நாம் தோது செய்துக் கொடுத்தாலும், போலீஸ் கேஸ், கோர்ட் கேஸாகி மூன்று மாதம் சிறை வாசமில்லாமல் அவரை வெளியே கொண்டு வர முடியாது என்ற ஒரு நிலை உருவாகிப் போனது.

 --------------------------------------------------------------------------------------------------------
                                                                                                   - தொடரும்

43 கருத்துகள்:

Balaji saravana சொன்னது…

சில நேரங்களில் அதீத நம்பிக்கையும் ஆபத்தாகிவிடுகிறது :(
ஒரு நல்ல பகிர்வு!

Chitra சொன்னது…

பணத்தாசை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?
:-(

நாடோடி சொன்னது…

ஒருவ‌ர் மீது வைக்கும் ந‌ம்பிக்கை உடையும் போது ம‌ன‌சு ரெம்ப‌ வ‌லிக்கும்.. :)

பதிவுலகில் பாபு சொன்னது…

பணத்தாசை இருக்கறவங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்..

ஹுஸைனம்மா சொன்னது…

இவர் ஒருத்தரால, இனி அந்த முதலாளிக்கு எல்லார்மேலயும் சந்தேகம் வரும்!!

சிவராம்குமார் சொன்னது…

வேலியே பயிரை மேயுது! என்ன சொல்ல... காலம் கேட்டு கெடக்குதுப்பா!

kavisiva சொன்னது…

எப்படி இவர்களால் நம்பிக்கையானவன் போல் நடிக்க முடிகிறது. கொஞ்சம் கூட உறுத்தல் இருக்காதா?

ஹுசைனம்மா சொன்னது போல் இனி யார் மேலாவது அந்த முதலாளிக்கு நம்பிக்கை வருமா?

ஹேமா சொன்னது…

பணம் என்னவெல்லாம் பண்ணும்.ச்சீ...!

ஜெய்லானி சொன்னது…

அப்போ கூடிய சீக்கிரம் அவரை மொட்டையோட பாக்க போறீங்க :-))

ஜெய்லானி சொன்னது…

பாஸ் இதுக்கு பேர் நம்பிக்கை துரோகம் .....அந்த பணத்தை வச்சி எத்தனை நாளோ, இல்லை மாசமோ வச்சி சாப்பிடமுடியும்..? கெட்ட வழியில வர பணம் சீக்கிரமே கெட்ட வழியிலேயே போகும் ..

அதை உலகம் பார்த்துகிட்டுதான் இருக்கு

Chitra சொன்னது…

I saw your comment in my blog post. Whenever you have time, read:

http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_10.html

She is a "character" who comes now and then in my posts to help me see the other side of argument. :-)

asiya omar சொன்னது…

...அப்துல் காதர் உங்கள் உணர்வுகளை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.பணத்தாசை பிடித்தவர்க்ளுக்கு நாணயமாவது நம்பிக்கையாவது.

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்புள்ள சகோதரர் அப்துல் காதர் அவர்களுக்கு!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!

Mrs.Menagasathia சொன்னது…

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

kavisiva சொன்னது…

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உண்மையைச்சொல்லப்போனால் யாரிடம் பழகினாலும் அளவு மீறிப் பழகிவிடவேண்டாம் என்பதே நான் கண்ட பாடம் அப்துல்காதர்.

பொதுவாகவே ஒரு ஆளைப்பற்றி முழுவதாக தெரிந்துகொள்ள முடியாது. அதுவும் வெளிநாடுகளில் நம்மை பற்றி நாமும் , அவரைப்பற்றி அவரும் சொல்வதுதான் கணக்கு. இதில் உண்மை பொய் எங்கிருக்கிறது என்பது யாருக்குத் தெரியும். லிமிட் மிக முக்கியம். குறிப்பாக அந்தரங்க, ஊர் விசயங்களை பகிர்ந்து கொள்வது.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

அன்னு சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

ஒ.நூருல் அமீன் சொன்னது…

நம்மை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். இது போன்றவர்களிடமிருந்தும். நம்மிடமிருந்தும்.

ராஜவம்சம் சொன்னது…

பணத்தாசை அதிகமானால் இது போன்ற அவமானங்கள் வந்தே தீரும்.

நேர்மையான வழியில் வரும் செல்வமே
நம் வாழ்க்கைக்கு துனையாகவும் நிம்மதியான வாழ்வையும் தரும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Balaji saravana கூறியது...

// சில நேரங்களில் அதீத நம்பிக்கையும் ஆபத்தாகிவிடுகிறது //

ஆமா சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

பாலாஜி சரவணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

// பணத்தாசை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? //

பணமில்லாதவர்களுக்கல்லவா அந்த ஆசை வரணும்!

சித்ரா மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

// ஒருவ‌ர் மீது வைக்கும் ந‌ம்பிக்கை உடையும் போது ம‌ன‌சு ரெம்ப‌ வ‌லிக்கும் //

ஆமாங்ணா நீங்க சொல்வது தான் சரி!!

ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பதிவுலகில் பாபு கூறியது...

// பணத்தாசை இருக்கறவங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்..//

சில நேரங்களில் அதை காட்டிக் கொள்ள மாட்டேங்கிறாங்களே!

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஹுஸைனம்மா கூறியது...

// இவர் ஒருத்தரால, இனி அந்த முதலாளிக்கு எல்லார்மேலயும் சந்தேகம் வரும்!! //

சாதாரணமாவே லேசில் யாரையும் நம்ப மாட்டார்கள் இந்த முதலாளிமார்கள்!

ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிவராம்குமார் கூறியது...

// வேலியே பயிரை மேயுது! என்ன சொல்ல... காலம் கேட்டு கெடக்குதுப்பா!//

உலகமே அப்புடி தான் போய்க்கிட்டிருக்கு பாஸ்!

சிவராம்குமார் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ kavisiva கூறியது...

// எப்படி இவர்களால் நம்பிக்கையானவன் போல் நடிக்க முடிகிறது. கொஞ்சம் கூட உறுத்தல் இருக்காதா?//

நடிப்பது ஒன்னும் கஷ்டமில்லையே, அப்படி பழக்கப் பட்டவங்களுக்கு!

kavisiva உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஹேமா கூறியது...

// பணம் என்னவெல்லாம் பண்ணும்.ச்சீ...! //

பணம் என்ன செய்யாது மேடம்??

ஹேமா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

// அப்போ கூடிய சீக்கிரம் அவரை மொட்டையோட பாக்க போறீங்க //

இல்லீங்ணா அவரு ஏற்கனவே மொட்டையோட தாடி வச்சுக்கிட்டு தானிருப்பரு!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//பாஸ் இதுக்கு பேர் நம்பிக்கை துரோகம்.....அந்த பணத்தை வச்சி எத்தனை நாளோ, இல்லை மாசமோ வச்சி சாப்பிடமுடியும்..? கெட்ட வழியில வர பணம் சீக்கிரமே கெட்ட வழியிலேயே போகும்..அதை உலகம் பார்த்துகிட்டுதான் இருக்கு//

பணம் இருப்பவர்கள் தான் மேலே மேலே சேர்க்க ஆசைப் படுகிறார்கள் பாஸ்,, அவர்களுக்கு தானே தலைமுறை தலைமுறையாய் பணம் கொட்டிக் கிடக்கு?? அதெல்லாம் நல்ல வழியில் சம்பாதித்ததா??

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@Chitra கூறியது...

// I saw your comment in my blog post. Whenever you have time, read: http: //konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_10.html
She is a "character" who comes now and then in my posts to help me see the other side of argument. :-) //

ok medam ///////

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

// உங்கள் உணர்வுகளை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். பணத்தாசை பிடித்தவர்க்ளுக்கு நாணயமாவது நம்பிக்கையாவது.//

யாரையும் நம்ப முடியலைங்க மேடம்!!

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ மனோ சாமிநாதன் கூறியது...

// அன்புள்ள சகோதரர் அப்துல் காதர் அவர்களுக்கு! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும் என் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்! //

ரொம்ப நன்றிங்க சகோதரி!!

மனோ சாமிநாதன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Mrs.Menagasathia கூறியது...

//இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!//

ரொம்ப நன்றிங்க சகோதரி!!

Mrs.Menagasathia உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ kavisiva கூறியது...

// இனிய ரமலான் வாழ்த்துக்கள்! //

ரொம்ப நன்றிங்க சகோதரி!!

kavisiva உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// பொதுவாகவே ஒரு ஆளைப்பற்றி முழுவதாக தெரிந்துகொள்ள முடியாது. இதில் உண்மை பொய் எங்கிருக்கிறது என்பது யாருக்குத் தெரியும். லிமிட் மிக முக்கியம். //

நீங்கள் சொல்வது ரொம்ப சரி. நிறைய விஷயங்கள் பட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கு!

அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள். //


ரொம்ப நன்றி சகோதரா!!

அக்பர் உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அன்னு கூறியது...

//அஸ்ஸலாமு அலைக்கும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!//

வ அலைக்கும் சலாம். ரொம்ப நன்றி சகோதரி!!

அன்னு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அன்னு கூறியது...

//அஸ்ஸலாமு அலைக்கும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!//

வ அலைக்கும் சலாம். ரொம்ப நன்றி சகோதரி!!

அன்னு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஒ.நூருல் அமீன் கூறியது...

// நம்மை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். இது போன்றவர்களிடமிருந்தும். நம்மிடமிருந்தும்.//

இப்லீஸ்களிடமிருந்தும் .........!!

ஒ.நூருல் அமீன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ராஜவம்சம் கூறியது...

// பணத்தாசை அதிகமானால் இது போன்ற அவமானங்கள் வந்தே தீரும் //

இவர்களிடமெல்லாம் அவமானம் அவமானப்பட்டு ஓடி விடும்.

ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

Ananthi சொன்னது…

///ஆனால் பணத்துக்கு மதம் பிடித்த மாதிரி மள மளவென்று சேர்க்க ஆசைப் படுபவர்களு க்கும் இது தான் கதி என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்///

ஹ்ம்ம்.. சரியா சொன்னிங்க.. பணம் மனுசனா என்னெல்லாம் பண்ண வைக்குது... போகும் போது தலையிலா தூக்கிட்டு போக போறாங்க... என்னத்த சொல்ல??

Ananthi சொன்னது…

Sorry for the late entry.. :-))