facebook

புதன், செப்டம்பர் 01, 2010

மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??

                                                                            

"தங்ஸ்"களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??


முதலில் நெடுஞ்சான் கிடையாக அவங்க காலில் விழுந்து விடுவது. (என்ன சார் இது எழுந்திரிங்க! சொன்னவுடனே இப்படியா? பொறுங்க நாம தப்பு செஞ்சுட்டோம்னா/அது அவங்களுக்கு தெரிஞ்சிட்டா மட்டும் தான் அப்படி செய்யணும், சரியா!)

அப்படி விழுந்து விட்டு தலை குனிந்தவாறே அவங்க கிட்டே இருந்து நல்ல பதில் வரும் வரை அப்படியே கிடைக்கணும். தலை தூக்கி பார்க்கக் கூடாது. மிதி விழும் அபாயம் இருக்கிறது! உஷார்!!

இதெல்லாம் ஆரம்ப தற்காப்பு தான்!!

இனி தான் பயிற்சி ஆரம்பம்.

விழி விரித்து ஜூம் லென்ஸ் போட்ட மாதிரி கண்களை வைத்துக் கொண்டு அவங்க நம்மை முறைத்தால் தலை தாழ்ந்து நடக்க பழகிக்கணும். சரியா? ம்ம்ம் நல்லா தலை யாட்டுறீங்களே! good அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. அப்படி பார்க்காமல் வீம்புக்கு நாமும் முறைத்தால், நாம் பெற்ற சின்னஞ் சிறுசுகளுக்கு "மொத்து" விழும் அபாயம் இருக்கிறது.

கல்யாணத்துக்கு முன்பே கிரிக்கெட் பயிற்சி இருத்தல் கூடுதல் தகுதி உடையவராவர். ஏன்னா? ஏன்னு கேளுங்க சார்? ம்ம்ம் அப்படி தான்.

கிச்சனில் இருந்து பறந்து வரும் மதிப்பு மிக்க ஆயுதங்கள் இன்ன பிற வஸ்துக்களை கேட்ச் பிடிக்க, அடி விழாமல் தப்பிக்க...

அவங்க நம் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது ஏதாவது நாம் எசகு பிசகாக பேச, பொளேரென்று அடி விழுந்தால், விம்மாமல் விக்காமல் வாய்க்குள் அடக்கி அதை வெளி வர விடாமல், உறு தெரியாமல் அழிக்க பழகிக் கொள்ள வேண்டும். சரியா? சரின்னா சரி சொல்லணும்.

ஷாப்பிங் மால் சினிமா தியேட்டர் புடவை, நகைக் கடை போன்ற இடங்களுக்கு போகும் போது பர்சை அவங்க கையிலேயே ஒப்படைத்து விடுவது ஷேஃப்டிக்கு ஷே ஃப்டி!! உத்தமம்.

நம்ம அம்மா வீட்டுக்கு மறந்தும் கூட அடிக்கடி அவங்களை அழைத்துக் கொண்டு போய் விடக் கூடாது. அம்மாவை இங்கே வரச் சொல்லிடனும். அப்படியே வந்தாலும், காலையில் வந்தவங்களை இரவு தங்க அனுமதிக்கக் கூடாது. மாலைக்குள் ஒப்பேத்தி அடுப்பிடனும். புரியுதா இது ரொம்ப முக்கியமான பாடம்.

ரொம்பவும் அவங்களுக்கு ஐஸ் வைத்து நைஸ் பண்ணனும்னா, e- மெயில் f-மெயில் g-மெயில் எல்லாத்துக்கும் ஒங்கட பேரத் தான் பாஸ் வேர்டா போட்டு வச்சிருக்கேன்னு சொல்லிடனும். ஆபத்துக்கு பாவமில்ல!

அம்புட்டு தாங்க! இதத் தவிர வேற எந்த வித ஆபத்தான கட்டம் வந்தாலும், மேலே முதல் வரி இருக்கு பாருங்க அத செஞ்சிடனும். அதை by heart டா வச்சுங்க. ஏன்னா இது heart beat விஷயம் ?? இப்படியெல்லாம் நான் சொல்வேன்னு நீங்க எதிர் பார்த்தா?? Sorry !!

மேலே சொன்ன விஷயங்களை படிச்சு சிரிச்சதோட சரி ; அதை சுத்தமா உங்க மூலையிலிருந்து delete செய்து விட்டு கீழே உள்ளதை படிக்க வாங்க!

பெண்கள் நம் வாழ்க்கையில் அருமை பெருமை மிக்கவர்கள். பொறுமையானவர்கள். நம்மமோடு வாழப் பிறந்தவர்கள். அதனை மனதில் கொண்டு இதை இங்கே வரி பிறழாமல் மனதில் இருத்திக் கொள்தல் அவசியம்.
                                                                           
                                                                                  

கல்யாணமாகாத இளைஞர் பெருமக்களே நான் சொல்வதை சற்று கவனமாய் படியுங்கள்.

உங்களுக்கு வருங்கால மனைவியை நீங்கள் தேடிக் கொண்டாலும் சரி ; அல்லது உங்கள் பெற்றோர்கள் தேடி அமைத்துத் தரும் மனைவியாக இருந்தாலும் சரி ; நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் மிக சரியாய் அவர்கள் மனதில் பதியும் படி, வரதட்சணை எனும் கைக்கூலி வாங்கினால் இந்த இல்லறத்தில் ஈடுபட மாட்டேன் என்று நீங்கள் கட் அண்ட் ரைட்ட்டாக சொல்லி விடுங்கள்.

காலமெல்லாம் உங்களோடு கைக் கோர்த்து வாழப் போவது உங்கள் மனைவியே யன்றி உங்கள் பெற்றோர்களோ அல்லது சொந்த பந்தங்களோ அல்ல. இப்படி செய்தாலே பெறும் பாலான மனைவிகள் அன்பினால் கட்டுண்டவர்களாவார்கள். இது நிச்சயம்.

அப்படியல்ல நாங்கள் வாங்கியே தீருவோம் என்று அடம் பிடிக்கும் பட்சத்தில், அப்படியானால் நான் என் மனைவியை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் போய் விடுவேன் என்று கோரிக்கையை முன் வையுங்கள், ஒரு வேளை அப்ப அவர்களின் மன நிலை மாறக் கூடும்.

எப்படி தான் நாம் போராடினாலும் சீர் செனத்தி என்று ஏதாவது கை மாறத் தான் செய்யும். கண்டுக்கொள்ளாதீர்கள். விட்டு விடுங்கள். நான் சொல்கிற ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வையுங்கள்.

உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் கிடைக்கும் பணத்தை கொஞ்சம் கல்யாணத்துக்கு முன்பே யாருக்கும் தெரியாமல் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள். அதைக் கொண்டு ஐந்து பவுனிலோ (சவரனிலோ) பத்து பவுனிலோ ஏதாவது ஒரு நகை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகமாக இருந்தாலும் ஒட்டியாணம் செய்து வைத்துக் கொண்டாலும் சரியே சந்தோஷம். அய்யா அவ்வளவெல்லாம் இல்லை என்று சொல்லும் பட்சத்தில் ஒரு பவுன் 8 கிராம் காயின்சை யாவது வாங்கி,

கல்யாணம் முடிந்து முதன் முதலில் (இரவிலோ/பகலிலோ) உங்கள் மனைவியை சந்திக்கும் போது அதை அவர்கள் கையில் கொடுத்து, இது எனது சொந்த சம்பாத்தியம், உனக்காக வாங்கி ரகசியமாய் வைத்திருந்தேன். இது என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரியவும் வேணாம். உனது குடும்பத்திலிருந்தும் இந்த செய்தி வெளியே போகவும் வேணாம் என்று சொல்லி கொடுத்துப் பாருங்கள். அவர்கள் கைக்குள் நீங்கள் கொடுத்தது, அவர்கள் உங்கள் கைக்குள் வந்த மாதிரி தான். அன்பை வெளிப் படுத்த எவ்வளவோ வழிகளில் இதுவும் ஒன்று!!

இதற்கு மேல் நான் என்ன சொல்லணும் என்று எதிர் பார்க்கிறீர்கள். என் இளைஞர் பெருமக்களே போங்க போய் நிறைய நல்ல வழிகளில் சம்பாதியுங்கள்!!

உங்கள் நல்ல மனதிற்கு அருமையான குணவதியான மனைவி வாய்க்கும். இதை படித்து விட்டு, இதை படித்து தான் இப்படி செய்தேன் என்று வரும் மனைவியிடம் உளறி வைக்காதீர்கள். அங்கே உங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகிவிடும். வரட்டா!!                                                                         

46 கருத்துகள்:

Ananthi சொன்னது…

ஆரம்பமே கலக்கல்.. சிரிச்சு முடியல.. கலக்கல்ஸ் :-)))

பிறகு சொல்லிய சீரியஸ் விசயமும்.. உண்மையில் நெகிழ வைத்தது..
நல்ல பகிர்வு.. :)

tamilofun சொன்னது…

ya its good ,nice post....
thank you very much and keep it.....

மதுரை சரவணன் சொன்னது…

// என் இளைஞர் பெருமக்களே போங்க போய் நிறைய நல்ல வழிகளில் சம்பாதியுங்கள்!!//

நல்ல ஆலோசனை... பின்னது அறிவுரை , முன்னது முன் அனுபவம் ..சூப்பர். வாழ்த்துக்கள்

பொடுசு சொன்னது…

அப்படியே நல்ல மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டீங்கன்னா... எதோ எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.

பதிவுலகில் பாபு சொன்னது…

நீங்க முதல்வரியில சொன்னதைத்தான் கடைபிடிக்கறீங்க இல்லையா!!

:-)))))))

நல்ல அறிவுரைகள்.. நன்றி..

நாடோடி சொன்னது…

மொத‌ சொன்ன‌து உங்க‌ வீட்ல‌ ந‌ட‌க்குமுனு என‌க்கு தெரியும்... :)

இர‌ண்டாவ‌து உள்ள‌து ந‌ம‌க்கு உப‌யோக‌மா இருக்கும்.. :)

ஸாதிகா சொன்னது…

முதல் பகுதியை படிக்கறப்போ அடடா..அப்துல்காதருக்கு என்ன தைரியம்.அனுபவத்தை என்னமா புட்டு,புட்டு வைக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.இரண்டாவது பகுதியை எழுதி மேட்டரை"சப்"என்றாக்கிவிட்டீர்கள்.இருந்தாலும் ஒரு டவுட்.முதல்லே சொன்னதுதான் உங்க அனுபவம்.அதான் டாப்பு.மற்றதெல்லாம் டூப்.சரீங்களா என் அனுமானம்?

Chitra சொன்னது…

கல்யாணம் முடிந்து முதன் முதலில் (இரவிலோ/பகலிலோ) உங்கள் மனைவியை சந்திக்கும் போது அதை அவர்கள் கையில் கொடுத்து, இது எனது சொந்த சம்பாத்தியம், உனக்காக வாங்கி ரகசியமாய் வைத்திருந்தேன். இது என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரியவும் வேணாம். உனது குடும்பத்திலிருந்தும் இந்த செய்தி வெளியே போகவும் வேணாம் என்று சொல்லி கொடுத்துப் பாருங்கள். அவர்கள் கைக்குள் நீங்கள் கொடுத்தது, அவர்கள் உங்கள் கைக்குள் வந்த மாதிரி தான். அன்பை வெளிப் படுத்த எவ்வளவோ வழிகளில் இதுவும் ஒன்று!!


...... எப்படிங்க இப்படி? கல்யாண கனவு காணும் போதே, இந்த மாதிரி ஐடியாக்களையும் back up பிளான் ஆக வச்சுக்கணும் போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

ஜெய்லானி சொன்னது…

//ஒட்டியாணம் செய்து வைத்துக் கொண்டாலும் சரியே சந்தோஷம்//

ஏன் பாஸ் , இடுப்புக்கு கட்டுர அரைஞான் கயிறா வாங்கி (மனைவிக்கு)கட்டினா யாருக்குமே தெரியாதே..!!

ரெண்டு வீட்டிலும் இந்த ஒட்டியானம் எங்கிருந்து வந்துச்சின்னு கேட்டா காக்கா கொண்டு வந்து போட்டுச்சின்னா சொல்வீங்க..

ஜெய்லானி சொன்னது…

விட்டில தினம் நீங்க இப்பிடிதான் வாழ்றீங்களா ..பரவாயில்ல பொழைக்க தெரிஞ்ச ஆள் நீங்க..

Mohamed Faaique சொன்னது…

irandavathu paathila nalla matter sonneenga boss...

ஹுஸைனம்மா சொன்னது…

நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை; அதென்ன யாருக்கும் தெரியாமல் பரிசளிப்பது? வீட்டினருக்குத் தெரிந்தே கொடுத்தால் என்ன? அப்படி செய்தால், மனைவிக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற செய்தியை உங்கள் பெற்றோருக்கும்; பெற்றோரைத் தவிர்த்துவிட்டு எதுவும் செய்யமாட்டேன் என்ற செய்தியை மனைவிக்கும் தர முடியும். இரு தரப்புக்கும் பொதுவாக, உறுதியாக இருக்க வேண்டியது உங்கள் கடமை.

இது தவறான வழிகாட்டுதலகவே தோன்றுகிறது எனக்கு.

asiya omar சொன்னது…

ரொம்ப உஷாரான ஆளு தான் போல.சூப்பர் பதிவு,நீங்கள் சொல்வதினால் வீண் பிரச்சனைகள வராது.பாக்கியராஜ் ஸ்டைலில் காலில் விழுந்து அவர் ஸ்டைலிலேயே அடி விழுந்தாலும் வாங்கி சிரிப்பை அடக்கமுடியலை.இதெல்லாம் கற்பனையில் தான் நடக்கும்.

ஜெயந்தி சொன்னது…

நீங்கள் சொல்வதுபோல் வரதட்சணை வாங்காவிட்டாலே பிரச்சனை வராது.

Ganesh சொன்னது…

அதென்ன "மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??"..... , என்னமோ எல்லோரும் ரெண்டு மூணு மனைவி வச்சுகிட்டிருக்கிற மாதிரி பேசறீங்க. இங்க அவவனுக்கு ஒரு மனைவிக்கே திண்டாடுறான் ....

vanathy சொன்னது…

வூட்டுல நடப்பதை இப்பூடி பப்ளிக்ல சொல்லப்படாது, நாட்டாமை.
பாருங்க ஜெய்க்கு சந்தேகம் வந்து எசகு பிசகா கேள்வி கேட்கும் போது வீட்டிலை இருக்கிறவங்க கேட்க மாட்டாங்களா?
நல்ல நகைச்சுவையான பதிவு. அடிக்கடி ஏதாவது எழுதி ஆண்களைக் காப்பாற்றுங்கோ!!!!

மோகன்ஜி சொன்னது…

நன்கு ரசித்து சிரித்தேன்..
எந்தப் பரிசையும் பகிரங்கமாகவே கொடுப்பது தான் சரி. அதைத் தான்,அந்த அங்கீகாரத்தை தான் எந்தப் பெண்ணும் விரும்புவாள்.பரிசின் மதிப்பை விட, பரிசை தரும் முறையும் பாங்குமே ஒரு மனைவியை ஆனந்தப் படுத்தும்.ஆனா காதர் பாய்! உங்களையே விட சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும் உங்கள் மனைவிக்கு?!

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

ஆஹா.. அப்துல்காதர் சார்... ரொம்ப நல்ல விசயங்கள்.. முதலில் நல்லா சிரிக்க வைத்தீங்க.. பின்னாடி சிந்திக்கவச்சிருக்கீங்க..

நல்ல அருமையான கட்டுரை.. தொடருங்கள்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ananthi கூறியது...

//ஆரம்பமே கலக்கல்.. சிரிச்சு முடியல.. கலக்கல்ஸ் :-)))
பிறகு சொல்லிய சீரியஸ் விசயமும்.. உண்மையில் நெகிழ வைத்தது..நல்ல பகிர்வு.. :)//

வாங்க ஆனந்தி. மிக்க நன்றி! உங்கள் வாழ்த்துகளுக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ tamilofun கூறியது...

//ya its good, nice post....thank you very much and keep it.....//

thanks tamilofun,,

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ மதுரை சரவணன் கூறியது...

//நல்ல ஆலோசனை... பின்னது அறிவுரை, முன்னது முன் அனுபவம் ..சூப்பர். வாழ்த்துக்கள்//

பின்னது தான் சார் முன் அனுபவம்!! ஹி..ஹி..

மதுரை சரவணன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பொடுசு கூறியது...

//அப்படியே நல்ல மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டீங்கன்னா... //

நா இந்த ஆட்டத்துக்கு வரல "எஸ்" ஆயிடுறேன்...!

//எதோ எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.//

ஃ பீலிங்க்ஸ் /// அப்படி தான் நல்லா அடிச்சு விளையாடுங்க தல!!

பொடுசு உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

பதிவுலகில் பாபு கூறியது...

// நீங்க முதல்வரியில சொன்னதைத்தான் கடைபிடிக்கறீங்க இல்லையா!!//


பப்ளிக்.. பப்ளிக்.. பாஸ் ஹி..ஹி.. (நமக்குள்ளேயே இருக்கட்டும்)

//:-)))))))//இவ்வளவு நீளமா சிரிப்பா??
பதிவே உங்கள போலுள்ள வாலிப இளைஞ்சர்களுக்கு தான் பாஸ். கல்யாணம் முடிஞ்ச உடனே அப்படி சிரிக்கணும் என்பதற்காக!!

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

// மொத‌ சொன்ன‌து உங்க‌ வீட்ல‌ ந‌ட‌க்குமுனு என‌க்கு தெரியும்... :)
இர‌ண்டாவ‌து உள்ள‌து ந‌ம‌க்கு உப‌யோக‌மா இருக்கும்.. :) //

தல ஒன்னு கூடியாச்சா?? ஹி.. ஹி..

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!!

அஹமது இர்ஷாத் சொன்னது…

நம்ம அம்மா வீட்டுக்கு மறந்தும் கூட அடிக்கடி அவங்களை அழைத்துக் கொண்டு போய் விடக் கூடாது.//

அம்மா'ன்னா சும்மா இல்லடா அப்படிங்கிற பாட்டுதான் எனக்கு ஞாபகம் வருது.. தாரத்துக்கு பின் தாயா NO Way...

ப்ரின்ஸ் சொன்னது…

//காலமெல்லாம் உங்களோடு கைக் கோர்த்து வாழப் போவது உங்கள் மனைவியே யன்றி உங்கள் பெற்றோர்களோ அல்லது சொந்த பந்தங்களோ அல்ல. இப்படி செய்தாலே பெறும் பாலான மனைவிகள் அன்பினால் கட்டுண்டவர்களாவார்கள். இது நிச்சயம்.//

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஸாதிகா கூறியது...

//முதல்லே சொன்னதுதான் உங்க அனுபவம்.அதான் டாப்பு. மற்ற தெல்லாம் டூப்.சரீங்களா என் அனுமானம்?//

வாங்க ஸாதிகாக்கா!! நான் அடி வாங்கி தோப்பு கரணம் போடுவதில் அப்படி ஒரு சந்தோஷமோ உங்களுக்கு... அம்மாடியோ வ்வ்வ்வவ்வ்வ்

ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

//எப்படிங்க இப்படி? கல்யாண கனவு காணும் போதே, இந்த மாதிரி ஐடியாக்களையும் back up பிளான் ஆக வச்சுக்கணும் போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..//

நிச்சயமா,,,கல்யாணமும் ஒரு பிக்ஸட் டெபாசிட் மாதிரி தானே. அதுக்கு நாமும் முன்னமே பிளான் பண்ணாம இருந்தா எப்படிங்க மேடம்.

Chitra உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ஏன் பாஸ், இடுப்புக்கு கட்டுர அரைஞான் கயிறா வாங்கி (மனைவிக்கு)கட்டினா யாருக்குமே தெரியாதே..!!//

அத எதுக்கு நாம அவங்களுக்கு வாங்கி கொடுக்கணும். அவங்களே அத வாங்கி கட்டிக்க மாட்டாங்களா?? ஏன் பாஸ் இந்த அரைஞான் கயிறு, அரைஞான் கயிறுன்னு சொல்றீங்களே அப்படீன்னா இன்னா பாஸ்?? என்ன மாதிரி உள்ள இளந்தல முறைக்கி அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?? க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ரெண்டு வீட்டிலும் இந்த ஒட்டியானம் எங்கிருந்து வந்துச்சின்னு கேட்டா காக்கா கொண்டு வந்து போட்டுச்சின்னா சொல்வீங்க..//

எங்க ஊர் சைடில் "காக்கா"ன்னு சொன்னா அண்ணணன்ன்னு அர்த்தம். ஹை இது கூட நல்ல ஐடியாவே இருக்கே. அண்ணன்ன கொண்ணந்து போட்டுச்சு ன்னு சொல்லிடலாமோ?? எப்புடி பாஸ். நான் உங்க சிஷ்யன். உங்க ட்ரைனிங்!! ஹி..ஹி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//விட்டில தினம் நீங்க இப்பிடிதான் வாழ்றீங்களா ..பரவாயில்ல பொழைக்க தெரிஞ்ச ஆள் நீங்க..//

நாம ரெண்டு பேருக்கும் இது என்ன புதுசா பாஸ். இப்படி பப்ளிக்ல வச்சு கேட்டுக்கிட்டு?? உஸ்ஸ்ஸ்... அப்புறம் போனில் ரெண்டு பேரும் ஒருத்தருக் கொருத்தர் ஆறுதல் சொல்லிக்கிவோம்!! சரியா?? க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ரெண்டு வீட்டிலும் இந்த ஒட்டியானம் எங்கிருந்து வந்துச்சின்னு கேட்டா காக்கா கொண்டு வந்து போட்டுச்சின்னா சொல்வீங்க..//

பாஸ் நீங்க கேட்கிறது புரியுது. அன்பையும் கிப்ஃடையும் எப்படி வேணும்னாலும் அடக்கமா வச்சுக்கலாம் தானே!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Mohamed Faaique கூறியது...

//irandavathu paathila nalla matter sonneenga boss...//

வாங்க Mohamed Faaique

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஹுஸைனம்மா கூறியது...

//நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இது தவறான வழிகாட்டுதலகவே தோன்றுகிறது எனக்கு.//

வாங்க ஹுசைனம்மா. தனிமையில் கொடுக்கும் கிஃப்ட் என்பது மனதிற்கு தனி மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒரு ரிங்கோ, வளையலோ, சைனோ கொடுப்பதில் எந்த வித தப்புமில்லை என்பது தான் என் கருத்து. அதைத் தான் மக்களின் முன் வைத்தேன்.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

//ரொம்ப உஷாரான ஆளு தான் போல. சூப்பர் பதிவு, நீங்கள் சொல்வதினால் வீண் பிரச்சனைகள வராது.//

அப்படி ஒன்னும் நான் உஷாரான ஆளு இல்லீங்க மேடம். இன்னீ வரைக்கும் பச்ச மண்ணு போலத் தானிருக்கிறேன் என்று அவங்களே அடிக்கடி சொல்வாங்க. ஏன்னு தான் எனக்கு தெரியல? ஹா..ஹா..

ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெயந்தி கூறியது...

//நீங்கள் சொல்வதுபோல் வரதட்சணை வாங்காவிட்டாலே பிரச்சனை வராது//

நீங்க சொல்றது உண்மையான வார்த்தை Siss.

ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ganesh கூறியது...

// அதென்ன "மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??"..... , என்னமோ எல்லோரும் ரெண்டு மூணு மனைவி வச்சுகிட்டிருக்கிற மாதிரி பேசறீங்க. இங்க அவவனுக்கு ஒரு மனைவிக்கே திண்டாடுறான்....//

நெனச்சேங்க!! இந்த மாதிரி கேள்விக் கேட்க நமக்கு ஒரு ஆளில்லை யேன்னு .. ஹி.. ஹி..

கணேஷ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

//நல்ல நகைச்சுவையான பதிவு. அடிக்கடி ஏதாவது எழுதி ஆண்களைக் காப்பாற்றுங்கோ!!!! //

மொதல்ல என்னை நானே காப்பாத்திக்கிற வழியப் பார்ப்போம். அப்புறம் வேணும்னா மத்தவங்கள. இத ஜெய் கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க ஹா..ஹா..

வானதி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ மோகன்ஜி கூறியது...

// எந்தப் பரிசையும் பகிரங்கமாகவே கொடுப்பது தான் சரி.//

அப்படியும் கொடுக்கலாம் தான் மோகன்ஜி!

// ஆனா காதர் பாய்! உங்களையே விட சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும் உங்கள் மனைவிக்கு?!//

ஆஹா இது குளிர விட கூலிங்கால இருக்கு, மீ.."எஸ்" (escape) ஹா ..ஹா

மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan(ஸ்டார்ஜன்) கூறியது...

// ஆஹா ரொம்ப நல்ல விசயங்கள்.. முதலில் நல்லா சிரிக்க வைத்தீங்க.. பின்னாடி சிந்திக்க வச்சிருக்கீங்க..//

எல்லாமே உங்களை மாதிரி உள்ள முன்னணி பதிவர்களின் தூண்டுதல் தான்!!

Starjan(ஸ்டார்ஜன்)சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அஹமது இர்ஷாத் கூறியது...

// அம்மா'ன்னா சும்மா இல்லடா அப்படிங்கிற பாட்டுதான் எனக்கு ஞாபகம் வருது.. தாரத்துக்கு பின் தாயா NO Way...//

feelings............!!! ம்ம்ம்ம் , அது நல்ல பாட்டு தான் பாஸ்.

அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ப்ரின்ஸ் கூறியது...

//ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..//

வாங்க ப்ரின்ஸ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

நல்ல ஆலோசனை...

அப்துல் குத்தூஸ் சொன்னது…

நான் இப்படித்தான் என்னுடைய திருமண நாள் இரவு எனது மனைவியிடம் ஒரு செயினும், மோதிரமும் கொடுத்து இதை எனது வீட்டாரிடமும் காட்டச் சொன்னேன்.

அடுத்த நாள் எனது வீட்டாரிடம் ஒரே கொதிப்பு ஏன் முன்பே எங்களிடம் சொல்லவில்லை என ஆள் ஆளுங்கு கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்கள். சர்பரைஸாக இருக்கட்டுமே என்றுதான் யாருக்கும் சொல்லவில்லை என்று கூறினேன் (சமாளித்தேன்).

Jaleela Kamal சொன்னது…

முதல் பாதிய படிச்சிட்டு ஆஹா ரொம்ப அடி பட்டு எழுதிட்டாரு போல உச் கொட்டி கொண்ட்டே படித்தேன்.

ஆனால் கீழே மீதி பாதி, ரைட்டு இள தலமுறைக்கு அறிவுரை.

ம்ம் நல்ல விடயம் தான்

kavisiva சொன்னது…

முதல் பகுதியில் சிரிக்க வைத்து பிற்பகுதியில் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க. ஆனா தங்கம்தான் கொடுக்கணும்னு அவசியம் இல்லை. சின்னன்சிறிய கிஃப்ட் அன்பா ஆசையா கொடுத்தாலே மனைவிகள் தொபுக்கடீர்னு விழுந்துடுவாங்க. ஒரே ஒரு விஷயம் இப்படி அப்பப்போ குட்டி குட்டி கிஃப்ட் வாங்கிக் கொடுத்து மறக்காம பார்த்துக்கணும் :)