facebook

வியாழன், செப்டம்பர் 23, 2010

மெக்காவுக்கு போவோம் வாரியளா??


                                                                                         

மெக்காவுக்கு போவோம் வாரியளா??

மெக்காவில் நிறைய மாற்றங்கள். முன்பு வந்து விட்டு போனவர்கள் வந்தால் இந்த மாற்றங்களை உணர்வார்கள்.  (அவற்றை படத்தில் காண்க) இந்நிலையில்  சமீபத்தில் ஒரு முறை  மெக்காவுக்கு  விசிட்  அடித்தோம்.  அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே தெரிந்துக் கொள்வோம்.

முன்பெல்லாம்  ஒரு தடவை உம்ரா  போய் வர முன்னூறில் இருந்து முன்னூற்றைம்பது ரியால்கள் வரை செலவு செய்ய வேண்டி வரும். அதன் பிறகு மற்ற சிலவுகள். சாதரணமாக சொற்ப சம்பளம் வாங்குபவர்களுக்கு இது ஒரு எட்டாக் கனி!! அதெல்லாம் ஒரு காலம். 

இப்ப இங்கு சவுதி (தம்மாமில்) எங்கள் ஆபீசுக்கும் தங்கி இருக்கும் வீட்டுக்கும்   பக்கத்து தெருவில் தான் இருக்கிறது "மன்னர் பஹத்"  பள்ளிவாசல். தம்மாமில் மிகப் பெரிய பள்ளிவாசலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் ஒரே நேரத்தில் நின்று தொழக் கூடியதுமாய் அமைந்திருக்கிறது.

இதை சுற்றி ஏராளமான உம்ரா ஹஜ் சர்வீஸ் ஏஜென்சிகள் இருக்கின்றன. வாரத்தில் புதன் & ஞாயிற்றுக்   கிழமையானால் மாலை அசர் தொழுகை க்குப் பிறகு உம்ராவுக்கு புறப்படும் பஸ்கள் ஜே ஜே வென்று  ஏதோ நமது ஊரில் நிற்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும்.  பார்க்க பார்க்க ஆவலாய் இருக்கும். நாமும் உம்ரா  செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும். அப்படி யாரும்  ஏங்கி  விடக்  கூடாதென்பதற்க் காகவே  சில சலுகைகளும்   மாற்றங்களும்  சவுதி அரசால்  அறிவிக்கப்பட்டு நடை முறைப் படுத்தப் பட்டிருக்கிறது..   

வியாழன் வெள்ளி என்பது இங்கே வார விடுமுறை யாதலால் அதை அனுசரித்தே இந்த டூர் ப்ரோகிராம்கள் அமைகின்றனபுதன் மாலை புறப்பட்டால் சனிக்கிழமை காலையில் டூட்டிக்கு போகிற மாதிரி  திரும்பி வந்து விடலாம்.  இது தம்மாமில் இருந்து  புதன்  மாலை  புறப்பட்டு வியாழன் அதிகாலை மெக்காவை  அடைந்து (உம்ரா முடித்து விட்டு, அன்று இரவே புறப்பட்டு மதினா போய் தங்கி ஜியாரத் முடித்து விட்டு,  வெள்ளி ஜும்மா தொழுகைக்குப்  பிறகு புறப்பட்டு திரும்ப  தம்மாம்  வந்தடையும்.)

இது மாதிரியே ஞாயிற்றுக் கிழமை ப்ரோகிராமும், இது வல்லாமல் தனியாக மதீனா ஜியாரத் மட்டும் போகக் கூடிய மூன்று நான்கு நாட்கள் பேக்கேஜ்களும் இருக்கின்றன.

இதை ஏன் இவ்வளவு விவரனையாய் சொல்கிறேனென்றால், எப்ப மனசில் உம்ரா போகணும் என்று நினைத்து  விட்டீர்களோ, அதைத்  தள்ளிப் போட்டு விடக் கூடாத  வகையில் தான் எல்லா டூர்களும் அமைந்திருக்கின்றன.

சரி போய் வர செலவு என்ன கட்டுப் படியாகுமா?

கொஞ்சம் பொறுங்க. அதைச் சொல்லத்தானே இந்தப் பதிவு. சீசன் இல்லாத நேரங்களில் (ஹஜ் மாதம், ரமலான் தவிர்த்து)  எல்லா   சர்வீஸ்  சென்டர்களிலும்  ஒரே ஆஃபர் மயம்  தான். 90 முதல் 55 ரியால்கள் வரை  தான். சீசன் உள்ள நேரங்களில் சீட்  கிடைப்பதும்  சிரமம். விலை 125 முதல் 200 ரியால்கள் வரை இருக்கும். ஒரு  மாதத்திற்கு முன்பே புக்கிங்
போட்டு வைக்கணும்.

(என்னுடைய சொந்தங்கள் நிறைய பேர் அமீரகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துடன் உம்ரா  வந்து  போவதற்கு   2500 லிருந்து 3500 ரியால்கள் வரை  செலவு ஆகிறது  என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த விபரத்தைப் பார்த்தால் இன்னும் திகைத்துத் தான் போவார்கள்)

நெருக்கடி மிகுந்த நேரங்களில் ஃபேமிலியோடு போய் வருவதும்செலவும்சிரமத்தை அதிகம் தரும் என்பது என் கணிப்பு. ஆனாலும் நிறைய பேர் குடும்பத்துடன் போய் வந்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

இந்த மாதிரி ஆஃபர் எல்லாம் எப்படி கொடுக்கிறார்கள்? அவர்களுக்கு எப்படி கட்டுப் படியாகிறது? இது கேள்வி?

நிறைய ஏஜென்சிகளுக்கும் பஸ் கம்பெனிகளுக்கும் கவர்மெண்டால் சில நேரங்களில் மானியம் வழங்கப்படுகிறது. அப்படியும் இல்லாத நேரங்களில் பெரிய பெரிய செல்வம் மிகுந்த மனிதாபிமானிகள் இந்த மானியங்களைக் கொடுத்து அல்லாஹ்வின் கிருபையையும் ரஹ்மாத்தையும் பெறுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

இதற்கிடையே தாவா சென்டர்களிலிருந்தும், தவ்ஹீத் ஜமாத் திலிருந்தும் பஸ்கள் ஏற்பாடு  செய்யப்பட்டு, உணவுதங்குமிடம் மற்றும் விளக்கம் சொல்லி கூட்டிச் செல்ல  தமிழ்  பேசும் இமாம் களை நியமித்தும்  அழைத்துப் போய் வருகிறார்கள்.

பஸ்ஸில் டிக்கெட் புக்கிங் போடும் போதே நம்முடைய இக்காமா (ஐடென்டி கார்டு) புதுபிக்கப் பட்டிருக்கிறதா, குடும்பத்துடன் செல்பவர்கள் போதுமான பாதுகாப்பான நபருடன் வருகிறார்களா போன்றவற்றை தெளிவு படுத்திக் கொள்கிறார்கள்.

பஸ் புறப்படும் முன், எல்லோரும் சீட்டில் ஏறி அமர்ந்த பின்,  ஒரு தடவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லோருடைய  இக்கமாவையும்  சரி பார்க்கிறார். அதன் பிறகு  எந்த  செக்  போஸ்டிலும்  எந்த வித  செக்கிங் கும் அதிகாயில்லை. ஏனெனில்  இந்த நிறுவனங்களை  நம்புகிறார்கள். 

இன்னொரு விஷயம் நாம் இங்கிருந்து  போகும் போதே எஹ்ராம் டிரஸ்   எனும்  நாம் உடுத்திக் கொள்ளும் உடை, இடுப்புக்கு அணியும் பெல்ட், காலுக்கு வேண்டிய செருப்பு ஆகியவற்றை வாங்கி தூக்கி சுமக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் அந்த டிரஸ் உடுத்த வேண்டிய எல்லையில் உள்ள பள்ளிவாசல் வளாகங்களியே நல்ல தரமான அனைத்து சாதனங்களும் இங்கு நாம் வாங்கக் கூடிய விலையிலேயே விற்கப் படுகின்றன.

இன்னொரு விஷயமும் சொல்லி விடுகிறேன். நாம் போகும் அதே பஸ் திரும்பி வரும்போது அந்த ஏஜென்ட் ஆபீஸ் வாசலில் தான் நிறுத்தப் பட்டிருக்கும். அந்த ஆபீசிலேயே கேலன் கேலனாய் "ஜம் ஜம்" தண்ணீரை விற்பனை செய்கிறார்கள். இதன் விலை SR 10 தான். நீங்கள் பத்து ரியாலுக்கு வெறும் காலி கேலன்களை வாங்கி, சின்ன சின்ன பாட்டில்  தேடிஜம் ஜம் குளிர்  தண்ணீர்  நிரம்பி  இருக்கும்  கூலரிலிருந்து பிடித்து சிரமப்பட்டு சுமந்து வரக் கூடாதே என்பதற்க்காகவே இந்த விஷயத்தையும்  இங்கே குறிப்பிடுகிறேன்.   

அதே டிராவல் ஏஜென்ட்கள்  அங்கிருந்து பிடித்து வந்த ஜம் ஜம் தண்ணீரை இங்கு தம்மாமிலும் கேலன்  SR 20 ரியால்  என்று விற்கிறார்கள். நாம் ஊருக்கு எடுத்துப்  போவதென்றாலும்   இங்கேயே  விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். நம் சிரமத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு உதவுகிறார்கள். வேறென்ன நீங்களும் ரெடியாகுங்களேன். ஒரு முறை உம்ராவுக்குப் போய் மனம் மகிழ்ந்து திரும்பி வாங்களேன்.

ஹஜ்ஜை  இரண்டு  தடவையும்  உம்ராவை  எண்ணிக்கை இல்லாமலும் போய் வந்துக் கொண்டிருக்கிறோம்.  இனி மேலும் போய் வருவோம். (அல்ஹம்துலில்லாஹ்!!)  துஆ  செய்ங்க.

(அல்லாஹ்  தான்  விரும்பியவர்களை  தமது விருந்தாளியாக அவனது இல்லத்திற்கு அழைத்துக் கொள்கிறான்  என்கிறது ஹதீஸ். ஒருவர் உங்களுக்கு பிடித்தவராக இருந்தால் தானே உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பீர்கள். அந்த வகையில் நீங்கள் அவனுக்கு உகப்பாகி ஏன் அவன் விருந்தாளியாகக் கூடாது. முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்! அவன் நிச்சயம் உங்களையும் அழைப்பான். ஆமீன்! )  


                                       







19 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

நாங்களும் வருவோம்.இன்ஷா அல்லஹ் !நல்ல பகிர்வு.

Asiya Omar சொன்னது…

2006 -ரில் வந்தது.இப்ப நிறைய மாற்றங்கள்.

Unknown சொன்னது…

Good post..

Jaleela Kamal சொன்னது…

அருமை அருமை கண் குளிர பார்த்தும் படித்தும் மகிழ்ந்தேன்,
இறைவன் நாடினால் நாங்களும் வருவோம் இன்ஷா அல்லா.

துஆ செய்யுங்கள், இத படிச்சதும் ஜலீலாக்காவும் ஹஜ் பண்ணனுமுன்னு உடனே துஆ செய்யனும்,

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

//நாங்களும் வருவோம்.இன்ஷா அல்லஹ் !நல்ல பகிர்வு.//

வாங்க வாங்க அவசியம் வாங்க மேடம். இன்ஷா அல்லாஹ்!!

ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

// 2006 -ரில் வந்தது. இப்ப நிறைய மாற்றங்கள். //

நாலு வருஷமாச்சு. காசை எல்லாம் மூட்டை கட்டி வச்சுக்கிட்டு இன்னும் என்ன யோசனை மேடம்!! உடனே இந்த வருஷமே ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாங்க மேடம்!! ஹா..ஹா... இங்க (மெக்காவில்) மட்டும் மாற்றமில்லை; நம் மனசுக்கும் ஒரு மாற்றமும் மலர்ச்சியும் வேண்டும்.நாட்கள் நம்மை கடந்துக் கொண்டே போகிறது.

ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பதிவுலகில் பாபு கூறியது...

// Good post..//

ரொம்ப பிஸியா பாஸ்!!

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Jaleela Kamal கூறியது...

//துஆ செய்யுங்கள், இத படிச்சதும் ஜலீலாக்காவும் ஹஜ் பண்ணனு முன்னு உடனே துஆ செய்யனும்//

துஆ செய்து விட்டேன். நான் இப்ப லுஹர் தொழுகைக்கு தான் போய்க்கிட்டிருக்கேன். நீங்க கேட்ட துஆவை அங்கேயும் கேட்பேன்.
ஜலீலாக்கா!! இன்ஷா அல்லாஹ் நீங்களும், கமால் சாரும் பிள்ளைகள் இருவரையும் அழைச்சிக்கிட்டு அவசியம் வாங்க! வரணும். நீங்க எழுதியதை படித்தவுடன் கண்ணும் மனசும் நிறைஞ்சு போச்சுக்கா!!

நீங்க இங்க வரும் போது எங்களுக்கும் அவசியம் தகவல் சொல்லுங்க!! என் மெயில் அட்ரஸ் உங்களிடம் இருக்கும்.

Jaleela Kamal உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி!நன்றி!

ஹுஸைனம்மா சொன்னது…

நிறைய தகவல்கள். இங்கும் நல்ல இதயங்கள் உம்ரா/ஹஜ் செய்வதற்கு உதவி செய்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் இனி ஹஜ்ஜுக்கு வரணும்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

மக்காவுக்கு புனிதப்பயணம் செல்வது என்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஹுஸைனம்மா கூறியது...

// நிறைய தகவல்கள். இங்கும் நல்ல இதயங்கள் உம்ரா/ஹஜ் செய்வதற்கு உதவி செய்கிறார்கள்.//

நல்ல இதயங்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நீண்ட நாள் வாழனும் எப்பவும் நம் துஆ அதுவே!!

// இன்ஷா அல்லாஹ் இனி ஹஜ்ஜுக்கு வரணும்.//

வாங்க ஹுசைனம்மா அவசியம் குடும்பத்தோடு வாங்க!! எங்கள் துஆ உங்கள் எல்லோருக்கும்.

ரொம்ப சந்தோஷம் ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் நல்லார்- வத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// மக்காவுக்கு புனிதப்பயணம் செல்வது என்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்//

ஆமீன்!! ஆமா ஷேக் நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே!!

ரொம்ப சந்தோஷம் Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் நல்லெண்ணத்துக்கும்.

vanathy சொன்னது…

நிறைய தகவல்கள். 11வது போட்டோ என்னது? ஏதோ வட்டமாக தெரிகிறது. மக்கள் கூட்டமா? நல்லா இருக்கு எல்லா படங்களூம்.

நாடோடி சொன்னது…

நீங்க‌ளும் வ‌ந்திட்டு போயாச்சா?.. ப‌ட‌ங்க‌ள் அருமையாய் இருக்கிற‌து..

Abdulcader சொன்னது…

nice article.photos super.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ வானதி சொன்னது…

// நிறைய தகவல்கள். 11வது போட்டோ என்னது? ஏதோ வட்டமாக தெரிகிறது. மக்கள் கூட்டமா? நல்லா இருக்கு எல்லா படங்களூம்.//

ஆமாம் வான்ஸ் அது மக்கள் கூட்டம் தான்.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

// நீங்க‌ளும் வ‌ந்திட்டு போயாச்சா?.. ப‌ட‌ங்க‌ள் அருமையாய் இருக்கிற‌து..//

ஆமா பாஸ் நிறைய தடவை வந்துட்டு போய்க்கிட்டு தானிருக்கிறேன்!!

ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@காயலாங்கடை காதர் கூறியது...

//nice article.photos super.//

வாங்க பாஸ் ரொம்ப தேங்க்ஸ்!!

உங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும்.

Jaleela Kamal சொன்னது…

உங்கள் துஆக்க்களுக்கு மிக்க நன்றி