facebook

புதன், செப்டம்பர் 29, 2010

கூந்தலிலே நெய் தடவி...


                                                                                 


கூந்தலிலே நெய் தடவி...

நாலு தெருவை அடைத்த மாதிரி இருந்த, ஆடம்பர மனிதர்கள் வந்து 'ஷாப்பி' செல்லும் அந்த மிகப் பெரிய  ‘ஹைபர் மாலில்’ 'ஏசி' யின் உச்ச குளிரை அனுபவிப்பதற்க்கென்றே சிலரும், வாயில் நுழையாத 'கப்புச்சினோ'வை (வாயில் வைத்தாலும் அப்படிதான்) 'ஷீப்பி' குடித்து பெருமை அடிக்கவென்றே சிலரும், சுற்றிலும் உள்ள DVD கடைகளில் ‘கும்’மும் இசையருவியை ரசிக்கவென்றே  இளைஞர்களின் ஆர்ப்பரிக்கின்ற கூட்டமும் உலவி வந்த அந்த வேளையில்..

அங்குள்ள ஒரு கடையில் மட்டும் "கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி.." என்று ஒரு பாட்டு, ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த "மாலில்" இப்படி ஒரு பாட்டா, வழிந்தோடிய வழியே விழி தூக்கி பார்த்தால் அட அது நம்ம நண்பன் கடை.

என்னங்கடாது அவ்வளவு காஸ்ட்லியான பொருளை தலையிலா தடவிக்குவாங்க ('நெய்யை சொன்னேங்க') என்று மனம் போன போக்கில்  நினைத்துக் கொண்டே கடையின் உள்ளே நுழைந்தேன்.

என்னைக் கண்டவுடன் பயபுள்ள டபக்குன்னு ஸ்பீக்கரை ஆஃப்
பண்ணிட்டு (நாம கிண்டலடிப்போமாம்..!)  ஹெட் போனை எடுத்து மாட்டிக்கிச்சு, நாமெல்லாம் ஆபீஸ்ல தீவிரமா ஆணி புடுங்குற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு ஆனா புடுங்க மாட்டோமே, அது மாதிரி உட்காந்திருக்கான். ங்கொய்யாலே நம்ம கிட்டயேவா !!...

இந்த பய இருக்கானே மஹா கில்லாடிங்க. ஊரில் இருக்கும் போதும் ஆடியோ கட வச்சு 'செலக்டட் சாங்ஸா' எடுத்துக் கொடுத்து கல்லா கட்டிகிட்டிருந்தது. இங்க வந்தும் DVD படங்கள் ரிக்கார்டிங் என்று பொளப்பு நடத்திக்கிட்டிருக்கு. சரி உடுங்க பொளச்சு போகட்டும். விட்டுடுவோம். நாம வந்த வேலைய கவனிப்போம்!!

"எப்படி இருக்கே நண்பா" என்றேன் கேஷுவலாக..”

"டேய் நீ என்னையவா பார்க்க வந்தே" என்றான் புரிந்துக் கொண்டு..(கெட்டிக் காரான் நம்ம ஃபிரெண்டாச்சே ஹி..ஹி..)

"பின்ன எதுக்கு இம்புட்டு தூரம் வந்திருக்கம்" கேப்போம்ல..

"டேய் நீ என்னை பார்க்கவும் வரல விசாரிக்கவும் வரல"

"சரி கேட்க வந்தேன்னு வச்சுக்கயேன்...!! "

'என்ன' என்பது போல் பார்த்தான்.

"ஒன்னுமில்லடா நண்பா ‘எந்திரன்’ DVD எப்ப வரும்??"

“ஏண்டா படமே இன்னும் ரிலீசாகல, அதுக்குள்ளே உனக்கென்னடா அவசரம்...?”

(நாங்கள்லாம் ரிலீசே ஆகாத பல படங்கள பார்த்தவங்களாச்சே !!...
ச்சே... இவன நம்ம ஃபிரெண்டுன்னு சொல்லிக்கவே லாயக்கில்ல!! இத போயி இவங் கிட்ட சொல்லிக்கிட்டா இருக்க முடியும். விடுங்க!!)

என்னை ஏற்ற இரக்கமாய் பார்த்தான்.

ஒருவேளை நாம மனசில  நெனச்சிக்கிட்டிருந்ததை  இவன் வாசனை பிடிச்சிருப்பானோ?? ஹி..ஹி..  அப்படிப் பட்டவன் இல்லையே நம்ம நண்பன்!!  இல்ல அவன் கேட்டுக் கிட்டிருந்த 'பாட்டை' டிஸ்டர்ப் பண்ணிட்டோமோ ?? இருக்காது நாம எவ்வளவு டீசண்டு ஹி..ஹி..அது நமக்கே தெரியும்!!

திடீரென்று ஞாபாகம் வந்தவனாய்,,,

"ஆமா ஏம்பா நீ காசு கொடுத்தெல்லாம் DVD வாங்குவியா" என்றான்.

நக்கலு..!!

ச்சே... இந்த ஒலகம் என்னை இன்னும் மதிக்கவே மாட்டேங்குதே, இதுக்காவது இந்த DVD யை காசு கொடுத்து வாங்கனும்னு நெனச்சுக்கிட்டு..பேச்சை மாற்ற..

"சரி நண்பா நா உள்ள வரும்போது ஒரு பாட்டு ஓடிக்கிட்டிருந்ததே அது என்ன படம்" என்றேன்.

"இப்பவும் அந்த பாட்டு தான் ஓடிக்கிட்டிருக்கு கேளு" என்று ஸ்பீக்கரை 'ஆன்' பண்ணினான். பாட்டு பாதிக்கு மேல் ஓடி பெண் குரல் “சித்தப்பாஆஆ...” என்று வழிந்துக் கொண்டிருந்தது..!

"ஏன் நண்பா இந்த மாதிரி பழைய பாட்டெல்லாம் கேட்பியா?"
(நாம தான் சகஜமா இப்படியெல்லாம்  கேட்போமே..!)

" பின்னே, இது எங்க பாட்டிக்கி ரொம்ப பிடிக்கும் "

(நான் சற்று திரும்பி பார்த்துக் கொண்டேன்)

"அவங்க தான் செத்துட்டாங்களே"

"இல்ல அவங்க உயிரோட இருக்கச்சே இந்த பாட்ட தான் விரும்பி கேட்பாங்க. ஒரு நா எங்கிட்ட சொன்னாங்க. நான் செத்துட்டாலும் நீ இந்த பாட்டை தான் நிறைய தடவை கேட்கணும் அப்ப தான் என் 'ஆத்மா' சாந்தியடையும் ன்னாங்க. பாட்டின்னா தான் எனக்கு உஷுராச்சே" என்று செத்த பாட்டியை உயிர்பித்துக் கொண்டிருந்தான்.

அடப்பாவி...!!

"என்னங்க இவன் எந்த ஜெனரேசனில் இருக்கான்??"

(ஒரு குறுப்பு சொன்னா உங்களுக்கு பிடிபடும். இதற்கு முந்திய பதிவில்,  புள்ளைய அடிக்கிறதுக்கு பதிலா பொண்டாட்டி "என்னைய" அடிக்கிறான்னு வந்து புலம்பிக்கிட்டிருந்தானே அந்த பயபுள்ளதாங்க இவன்!! 'பாய்ண்டை' புடிச்சீங்களா!!)

சரி விடுங்க..!!

அவன்கிட்ட பேசிக்கிட்டிருந்த பேச்சு சுவாரஸ்யத்தில் மேற்படி பாட்டு எந்த படத்தில் வருதுன்னு கேட்க மறந்து போனேன்.
(யார்ட்ட  கேட்கிறது..!!)  

18 கருத்துகள்:

vanathy சொன்னது…

அவர் பாட்டியின் ஆசையை தீர்த்தா உங்களுக்கு ஏன் காதில் புகை ஹாஹா.
காசு குடுத்து டிவிடி வாங்க பழகுங்க, நாட்டாமை.
எழுத்தில் நல்ல நகைச்சுவை கூடிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

//இந்த ஒலகம் என்னை இன்னும் மதிக்கவே மாட்டேங்குதே, இதுக்காவது இந்த DVD யை காசு கொடுத்து வாங்கனும்//
என்னதான் ஆனாலும் சரி உங்க கொள்கைய மட்டும் விட்டுடாதீங்க நண்பா ;)

kavisiva சொன்னது…

டிவிடி எல்லாம் காசு கொடுத்து வாங்குவங்களா அதுக்குத்தான் இளிச்சவாய் ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் இருப்பாங்களே :))

Asiya Omar சொன்னது…

சிரிக்காமல் விடமாட்டீங்க போல.பாட்டி பாட்டு சூப்பர்.

நாடோடி சொன்னது…

இது எந்த‌ மால் த‌ல‌.. அடுத்த‌ முறை என்னையும் கூட்டி போங்க‌..

Sheikmohamed சொன்னது…

காமெடில வடிவேலுவையே மிஞ்சிவிட்டீர்கள் போங்கள் .
ஒவ்வொரு ( வார்த்தையிலும் ) பந்திலும் சிக்ஸர் அடிக்கிறீர்கள்.
மீண்டும் ஒரு வாழ்க்கை பாடம் புதிய பதிவு ஒன்றை வெளியுடுங்கள் ப்ளீஸ்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கடைசிவரைக்கும் அந்தபாட்டு எந்த படமுன்னு சொல்லலியே..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

//அவர் பாட்டியின் ஆசையை தீர்த்தா உங்களுக்கு ஏன் காதில் புகை ஹா..ஹா.காசு குடுத்து டிவிடி வாங்க
பழகுங்க, நாட்டாமை.//

நமக்கு அந்த படத்தின் பேர சொல்லாம இருந்ததால் தான் அந்த புகையும்?? காசு கொடுத்து DVD யா?? காமெடி கீமெடி இல்லையே வாணி??

நன்றி வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// என்னதான் ஆனாலும் சரி உங்க கொள்கைய மட்டும் விட்டுடாதீங்க நண்பா//

நீங்க கூட்டணி சேரும் போது கொள்கை எல்லாம் ..!! ஹி..ஹி..

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

kavisiva கூறியது...

// டிவிடி எல்லாம் காசு கொடுத்து வாங்குவங்களா அதுக்குத்தான் இளிச்சவாய் ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் இருப்பாங்களே :)) //

நீங்க யார சொல்றீங்க கவி??

நன்றி கவிசிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// சிரிக்காமல் விடமாட்டீங்க போல. பாட்டி பாட்டு சூப்பர் //

நீங்க சிரிச்சா உங்க உடம்புக்கு நல்லது தானே மேடம்!!

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

//இது எந்த‌ மால் த‌ல‌..அடுத்த‌ முறை என்னையும் கூட்டி போங்க‌..//

சரி..! அப்படியானா நா வாங்குற அத்தனைக்கும் 'மால்' வெட்டுவீங்களா பாஸ்?? ஹி..ஹி..

நன்றி நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Nickyjohn கூறியது...

//மீண்டும் ஒரு வாழ்க்கை பாடம் புதிய பதிவு ஒன்றை வெளியுடுங்கள் ப்ளீஸ்//

அதுக்கென்ன பாஸ்!! இன்னைக்கி நடக்கிறதே நமக்கு நாளைக்குள்ள பாடம் தானே!!

(என்னா இது ரேடியோல நேயர் விருப்பம் கேட்கிற மாதிரி..!!) ஹி..ஹி..

நன்றி Nickyjohn உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan(ஸ்டார்ஜன்) கூறியது...

//கடைசிவரைக்கும் அந்தபாட்டு எந்த படமுன்னு சொல்லலியே..//

யாருமே சொல்ல மாட்டேன்கிறாங்களே பாஸ்!!

நன்றி Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஸாதிகா சொன்னது…

நீங்களும் அது எந்த மால் என்து பெயரை சொல்லவே இல்லையே அப்துல்காதர்??

மனோ சாமிநாதன் சொன்னது…

இந்தப்பாட்டு கே.ஆர்.விஜயா, நாகேஷ் நடித்த ‘ கல்யாண ஊர்வலம்’ என்ற படத்தில் வருகிறது. பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி இருவரும் இணைந்து பாடிய பாட்டு. பாட்டில் சித்தப்பாவும் பெண்ணுமாய் பாடுகிற சீன் இது. இதில் வரும் மற்ற பாடல்களும் ரொம்பவும் இனிமையாக இருக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// நீங்களும் அது எந்த மால் என்து பெயரை சொல்லவே இல்லையே அப்துல்காதர்?? //

MALL-லை பத்தியா நான் கேட்டேன் ஸாதிகாக்கா?? அது "அல் ராஷித் மால்"

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மனோ சாமிநாதன் கூறியது...

// "இந்தப்பாட்டு ‘கல்யாண ஊர்வலம்’ என்ற படத்தில் வருகிறது."//

ஆஹா அருமையா சொல்லிட்டீங்களே சகோதரி!! பாடியவர் மட்டும் 'ஜேசுதாஸ்' குரல் மாதிரி ஒருவேளை எனக்கு தெரிந்ததோ..ஞாபகம் வரலை!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.