புதன், நவம்பர் 03, 2010
நண்பர்கள் இல்லாத ஆணும்..!!
நண்பர்கள் இல்லாத ஆணும்....!!
நண்பர்கள் இல்லாத ஆணும், தோழிகள் இல்லாத
பெண்ணும், ரிலாக்ஸ்டா இருக்க சான்ஸே இல்ல!!
(ஹி.. ஹி.. நல்ல டயலாக்ல!!) இத ஏன் சொல்றேன்னா,
பண்டிகை நாட்களில் இப்படி நண்பர்களோடு சேர்ந்தும்,
அல்லது தோழிகளோட அரட்டை அடித்துக் கொண்டும்
டிரெஸ்ஸிங் சென்ஸோட போய் பிடித்ததை பிடித்துக்
கொண்டு வந்து பண்டிகையை கொண்டாடி மகிழ்வோமே
அதுக்கு ஈடு இணையில்லை !!
கலைஞர் டிவி'ல வேற 'சிவாஜி' படம் போடுறதா அலப்பறை
தாங்க முடியல. அதுக்கு நாப்பது அம்பது விளம்பரங்கள் வேற!
விட்டா பத்து டயலாக்குக்கு ரெண்டு ரெண்டு ஸ்பான்சரா
சொல்வாங்க போல! பாக்குற மூடு நமக்கு இருந்தா கூட, இந்த
மாதிரி விளம்பரங்கள் வந்து நம்மை 'டயர்ட்' டாக்கிடுதுல்ல.
நாமெல்லாம் அதுக்கு அசந்துடுவோமா என்ன??
சன் டிவியில் “மேக்கிங் ஆப் எந்திரன்” என்ற சிறப்பு நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னும் பின்னும் மற்ற சேனல்களும்
ரஜினி பற்றிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை
ஒளிபரப்புகிறார்களாம்.
இந்த நேரத்தில் நாம எது சொன்னாலும் காதில் ஏறாது.
மனதிலும் படியாது. So Enjoy ...!!
காதலும் கவுஜையும்!!
கவிதைக்கும் எனக்கும் காத தூரம் என்றாலும், அதை படிக்க
என்றும் நான் அலுத்துக் கொண்டதே இல்லை. அதன் ஈர்ப்பால்
மாய்ந்து மாய்ந்து படிப்பேன். அது ஒரு கஜல் மாதிரி, ஹிந்துஸ்
தானியின் ஏதோ ஒரு ராகம் (பேரெல்லாம் தெரியாது) மாதிரி
நெஞ்சில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். ஆனா அதை
எழுத்தில் கொண்டு வரத் தெரியாதுங்க!! உண்மையை
சொல்வதில் என்றுமே தயக்கமே காட்டுறதில்ல!! ஆமா..
காதல்!
எல்லா கவிஞர்களும் இதில் தான் ஆரம்பிப்பார்கள். நாமும்
இதுக்கு விதிவிலக்கல்ல!! ஆரம்பிச்சு வைப்போமே!!
காதல்!
அடடா அந்த பெயரைச் சொல்லும் போதே மனம் எங்கோ
பறப்பது போல இருக்குல ஹா..!! என் பெயரின் ஒரு எழுத்து
மாற்றப் பட்டிருந்தால் நானும் அதுவாகவே வாழ்ந்திருப்பேனோ??
எங்கோ ஒரு பிரேக் அடித்து அதுவே ஒரு 'யூ டர்ன்' போட்டு
என்னிடமே திரும்பி விட்டதோ? ‘காத(ர்’ர்ர்ர்ர்)ல்ல்ல்...!! என்னா
ஒரு தத்துவம் சின்ன பிள்ளை மாதிரி ஹி.. ஹி
காதல்!
எனை யன்றி யாரும்
அதை உணர முடியாது
என்னுள் புகுந்து என்னை
ஏன் பாடாய் படுத்துகிறாய்!!
*** இது கேஸ் ட்ரபுலுக்கும் பொருந்துமோ ?? ஹி..ஹி..
@@@@@*****@@@@@*****@@@@@*****@@@@@*****@@@@@
எங்கள் சகோதர நெஞ்சங்கள் அனைவர்களுக்கும்
நல் வாழ்த்துகள்!!
லேபிள்கள்:
கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
28 கருத்துகள்:
//இது கேஸ் ட்ரபுலுக்கும் பொருந்துமோ ??//
:)
உங்க காஸ் டிரபுல் கவிதைப் படித்தேன்.
ஒரு சந்தேகம் காதர்பாய்..
//நண்பர்கள் இல்லாத ஆணும், தோழிகள் இல்லாத
பெண்ணும்,//
தோழிகள் இல்லாத ஆண்கள் எல்லாம்
என்ன ஆவாங்க? உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரா.
//எனை யன்றி யாரும்
அதை உணர முடியாது //
இது பக்கத்து சீட் ஆளை கேக்க வேண்டிய கேள்வி
//இது கேஸ் ட்ரபுலுக்கும் பொருந்துமோ ?? ஹி..ஹி.. //
நர்ஸ் , கமான் இந்த பேஷண்டை தரோவா ஒரு செக்கப் பண்னிடுங்க ..சம்திங்க் ராங்..!!
@!@ ஜெய்லானி கூறியது
//நர்ஸ், கமான் இந்த பேஷண்டை தரோவா ஒரு செக்கப் பண்னிடுங்க ..சம்திங்க் ராங்..!!//
பாஸ் யாரந்த நர்ஸ்?? தாங்க்ஸுக்கு பழக்கமா?? அல்லது உங்களுக்கா?? ஹி.. ஹி..
@!@ மோகன்ஜி கூறியது...
//நண்பர்கள் இல்லாத ஆணும், தோழிகள் இல்லாத
பெண்ணும் //"தோழிகள் இல்லாத ஆண்கள் எல்லாம் என்ன ஆவாங்க?
பாஸ் நான் பொத்தாம் பொதுவா, அந்த chapter-ருக்குள்ளேயே நுழையாமல், அப்புராணியா சொன்னேன். ஹி..ஹி
நன்றி மோகன்ஜி வருகைக்கும் வாசிப்புக்கும்.
@!@ இளங்கோ கூறியது...
//இது கேஸ் ட்ரபுலுக்கும் பொருந்துமோ ??// :)
நன்றி இளங்கோ வருகைக்கும் வாசிப்புக்கும்
தீபாவளி அன்னைக்கு டிவி பாக்குறதுக்கு பேசாம குப்புற படுத்து தூங்கிடலாம்.... விளம்பரத்துக்கு நடுவில்தான் புரோகிராம் நடக்கும் ;-)
romba nalla irukkuppa.....
நல்ல பகிர்வு. தீபாவளி வாழ்த்துக்கள்.
Good post. :-)
ம்ம்ம்... எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டீர்கள்... காதல் - காதர் மொக்கை சூப்பர்... கேஸ் ட்ரபுள் கவிதையை வெகுவாக ரசித்தேன்...
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா!
இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா
mmm Present
வாழ்த்துக்கு நன்றி ;-)
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Happy Diwali to you :-)
//‘காத(ர்’ர்ர்ர்ர்)ல்ல்ல்...!! என்னா
ஒரு தத்துவம் சின்ன பிள்ளை மாதிரி ஹி.. ஹி//
இப்படி ஒரு தத்துவம் நா கேட்டதே இல்ல....
என்ன ஒரு கண்டுபிடிப்பு....என்ன ஒரு கண்டுபிடிப்பு...!!! :-))
நாட்டாமை, என் நண்பிகள் எல்லாம் எங்கே இருக்கிறாங்கன்னு தெரியாது. இப்ப ஏற்படும் நட்புகள் அவ்வளவு ஒட்டுதலா இருப்பதில்லை. ஊரில் இருந்த போது கிடைத்த நட்புகளை நினைச்சு, அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விடுவேன்.
எனக்கும் கவிதை எழுத/ரசிக்க வராது.
ம்ம்ம்ம்
சிவாஜி எந்திரன், நட்பு, கா்ல் எல்லாம் ஒரெ ்்பதிவில்
@!@ சிவா கூறியது...
//தீபாவளி அன்னைக்கு டிவி பாக்குறதுக்கு பேசாம குப்புற படுத்து தூங்கிடலாம்..விளம்பரத்துக்கு நடுவில்தான் புரோகிராம் நடக்கும்))//
உண்மை தான். இப்படியே மனிதர்களை கட்டி போட்ட மாதிரி குண்டாகி போகிறார்கள்.
நன்றி சிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ தோசை
@!@ மதுரை சரவணன்
@!@ சித்ரா
@!@ கலாநேசன்
@!@ பாலாஜி சரவணா
@!@ வெறும்பய
@!@ சௌந்தர்
@!@ ஜலீலா கமால்
@!@ RVS முதல் வருகைக்கு
@!@ அலைகள் பாலா முதல் வருகைக்கு
நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
@ philosophy prabhakaran கூறியது
// ம்ம்ம்... எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்துவிட்டீர்கள்... காதல் - காதர் மொக்கை சூப்பர்... கேஸ் ட்ரபுள் கவிதையை வெகுவாக ரசித்தேன்...//
வாங்க சார். சில விஷயங்கள் அப்படி தான்.
நன்றி பிரபாகர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Ananthi கூறியது...
//‘காத(ர்’ர்ர்ர்ர்)ல்ல்ல்...!! என்னா
ஒரு தத்துவம் சின்ன பிள்ளை மாதிரி ஹி.. ஹி//
// இப்படி ஒரு தத்துவம் நா கேட்டதே இல்ல....என்ன ஒரு கண்டுபிடிப்பு....என்ன ஒரு கண்டுபிடிப்பு...!!! :-)) //
இந்த தத்துவத்தை கண்டு பிடிக்க நான் பட்ட சிரமமிருக்கே ஹி..ஹி (அப்பாடா ஒரு வழியா சொல்லியாச்சு!!)
நன்றி ஆனந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.
@!@ vanathy கூறியது...
// நாட்டாமை, என் நண்பிகள் எல்லாம் எங்கே இருக்கிறாங்கன்னு தெரியாது. இப்ப ஏற்படும் நட்புகள் அவ்வளவு ஒட்டுதலா இருப்ப தில்லை. ஊரில் இருந்த போது கிடைத்த நட்புகளை நினைச்சு, அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விடுவேன்.
எனக்கும் கவிதை எழுத/ரசிக்க வராது.//
நண்பர்கள் / நண்பிகள் அமைவ தென்பது ஒரு வரபிரசாதம் வான்ஸ். அப்படி அமைந்து விட்டால், அவர்களுடைய ஒத்தாசை நமக்கு பெருமளவு உதவியாய் இருக்கும் என்பது என் கருத்து. கவிதை தெரியாக்கட்டி அதை உரை நடை யாவே படிச்சுடலாம் தப்பே இல்லை. ஹா..ஹா..
நன்றி vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Jaleela Kamal கூறியது...
// சிவாஜி, எந்திரன், நட்பு, காதல் எல்லாம் ஒரே பதிவில்... ம்ம்ம்ம் //
எல்லாமே ஒரு மிக்ஸிங்கா இருந்தா நல்லா இருக்கும் என்று ஒரு அபிப்பிராயம் சொல்வீங்களே அது மாதிரி இது ஜலீலாக்கா!!
நன்றி Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
கருத்துரையிடுக