facebook

சனி, அக்டோபர் 30, 2010

எல்லாமே கணக்கு தான்!!


எல்லாமே கணக்கு தான்!!

எங்க மேனேஜர் இன்றைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

'எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரித்துக் கொள்ள சொன்ன மாதிரி',
“ஒரு நாளைக்கு (உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தை) எட்டு
எட்டா பிரிச்சுக்க” என்றார்.

எப்படி??

“எட்டு மணி நேரம் டூட்டி என்றால், முடிந்த உடனே ஒரு நிமிஷம்
கூட சீட்டில் உட்கார்ந்திருக்காதே. (ஓவர் டைம் இருந்தா மட்டும்
அட்ஜஸ்ட் பண்ணிக்க!!) அடுத்த எட்டு மணி நேரத்தை, உனது
மனைவி, பிள்ளைகளுடன் ‘கொஞ்சி’ கும்மாளமடிக்க, சொந்தங்கள், நண்பர்களுடன், தொழுகை, பிரார்த்தனை, உடற்பயிற்சி இன்ன பிற
என்று நேரம் வகுத்துக் கொள்.

ப்ளாக் எழுதினால் மனைவி குழந்தைகளுக்கு உள்ள நேரத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதே! (அவ்வ்வ்வ்… ஆமாங்க ஆமாம்!!) மீதி
உள்ள எட்டு மணி நேரம் கண்டிப்பாய் உறக்கம்”. (வராவிட்டால் கனவு காண். உபயம் : அப்துல் கலாம்) என்றார் நல்லது தானே சொல்கிறார்.

-----------------------

இங்கு (சவுதி – அமீரகம் - வளைகுடா முழுதும்) தட்ப வெப்ப நிலை
மாறிக் கொண்டு, ‘வெப்பத்துக்கும் குளிருக்கும் இடைப்பட்ட
மிதமான நிலையில்’ மனிதர்களை உடல்வலி, குளிர்ஜுரம்,
சல்லகடுப்பு (ஹி ஹி இப்படி தான் எங்க பாட்டி சொல்லும்)
ஜலுப்பு என்று ஆரம்பித்து, போட்டு வாட்டி எடுத்துக் கொண்டி
ருக்கிறது. குழந்தைகளையும் (உங்களையும் தான்) கொஞ்சம்
கவனமா கவனிச்சிக்கணும்.

யாரை நலம் விசாரித்தாலும் மூக்கு உரிதலோடு, ‘பொக்கு
பொக்கு’ என்று இருமிக் கொண்டு தான் பதில் வருகிறது.
பெரும்பாலான ஹாஸ்பிடல்களில் கூட்டமாவே இருக்கு.
இன்ஜெக்சன் போட வேண்டியவர்களுக்கு போட்டு, ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் எடுத்துக் கொள்ள சொல்லியும் சொல்கிறார்கள்.
இந்த சீசனில் மட்டுமல்லாமல் எந்த சீசனிலும் வெந்நீர்
போட்டு வைத்துக் கொண்டு பருகுங்கள். குழந்தைகளையும்
வெந்நீரையே எப்பொழுதும் குடிக்கச் சொல்லி வற்புறுத்துங்கள்.
சாப்பிடும் முன் கை கழுவி துடைத்து விட்டு சாப்பிடும்
பழக்கத்தை கை கொள்ளுங்கள்.

-------------------------------------------------------------------------------------------

நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வலர்களுக்காக!

ஓர் அறிமுகம்

நாங்கள் படித்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில்
தற்போது தமிழ்த் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்
பேராசிரியர் ரமீஸ் பிலாலி.

ஆழமாக, எந்த இட்த்திலும் நிதானம் தவறாமல், உணர்ச்சி
வசப்பட்டு விடாமல், தர்க்கம், கிண்டல், அழகான தமிழ் இப்படி எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கி எழுதுகிறார் இவர். யார்
மனமும் புண்படாமல், அதே சமயம் உண்மையை உண்மையாக
கூடுதல் குறைவு இல்லாமல் உரைக்கும் இவர் பாணி என்னை பரவசப்படுத்துகிறது.

“பிரபஞ்சக் குடில்” என்ற பெயரில் ஒரு வலைத்தளம் / பக்கம் வைத்துள்ளார். அவ்வப்போது இவர் உதிர்க்கும் ஆங்கிலச்
சொற்களின் மூலமாக இவரது ஆழமான ஆங்கில அறிவையும்,
ஆழ்ந்த படிப்பறிவையும் நாம் அனுமானிக்க முடிகிறது. எல்லா மதங்களையும் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களும் விரும்பிப்
படிக்கும் ஒரு ஆளாக இவர் இருக்கிறார். உண்மை அழகாகச் சொல்லப்படுவதை விரும்பும் யாரும் இவர் கட்டுரைகளை
ரசிக்காமலும் விரும்பாமலும் இருக்க முடியாது. நீங்களே படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். http://www.pirapanjakkudil.blogspot.com/  
       
 நன்றி: பறவையின் தடங்கள்.                                                         

34 கருத்துகள்:

LK சொன்னது…

இங்கும் தட்ப வெட்பம் மாறுகிறது.. அனைவரும் உடலை கவனித்துக் கொள்வது நலம்

ஷஹி சொன்னது…

visited Mr.Rameez's blog...really interesting...thank u for introducing a blog worth reading..

முஹம்மது ஆரிப் சொன்னது…

எழுத்தாளர் அறிமுகமா ரைட்டு!! எட்டையும், சீசனையும் கணக்காய் சொன்னது அருமை!

அரபுத்தமிழன் சொன்னது…

அருமையான பிளாக், அறிமுகத்திற்கு நன்றி அப்துல் காதர்.

Dhosai சொன்னது…

nalla padhivu.. vazhthukkal.
vovvoru nerathilum situation matikitedhan irukum. so pls be care ur self.
i'm the bishop heber college,trichy

asiya omar சொன்னது…

மூன்று எட்டாகத்தான நானும் பிரித்துக்கொள்கிறேன்,ஒரு எட்டு என் கணவர் குழந்தைகளுக்காக,இன்னொரு எட்டு என் விருப்பங்கள் என் தேவைகளுக்காக,இன்னொரு எட்டு தூங்கத்தான்.பதிவு அருமை.ஜமால் முகம்மது கல்லூரி வளாகத்தில் உள்ள காஜா மியான் பள்ளியில் நான் 9,10 படித்தேன்.

பிரசன்னா சொன்னது…

கணக்கு சரியா வருது :)

ஷஹி சொன்னது…

என் அப்பாவும் அண்ணனும் கூட ஜமாலில் தான் படித்தார்கள்..மகிழ்ச்சியாக இருக்கிறது..மூன்றாம்கோணம் வாசிக்கிறீர்களா திரு.காதர்?

Chitra சொன்னது…

பதிவு - ரொம்ப நல்லா இருக்குதுங்க... வாழ்த்துக்கள்!

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இப்ப கிளைமேட் மாறிருச்சி.. கொஞ்சம் கவனமா இருக்கணும்.

நல்ல பகிர்வு.

அன்னு சொன்னது…

//வராவிட்டால் கனவு காண். உபயம் : அப்துல் கலாம்) //
இதை எங்கயாவது படிச்சிட்டு அவர் டென்சனாகிடப் போறார் !! :))

பக்கம் மட்டுமில்ல, பதிவும் ஆஹா...:)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

ஆமாங்க க்ரெக்ட்டு....

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

பிரபஞ்சக்குடிலை வாசித்தேன் ......... பகிர்விற்க்கு நன்றி...

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ LK கூறியது...

// இங்கும் தட்ப வெட்பம் மாறுகிறது.. அனைவரும் உடலை கவனித்துக் கொள்வது நலம் //

ஆமாங்க, L K நலமா இருக்கீங்களா பாஸ்!!

வாங்க L K உங்க முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஷஹி கூறியது...

//visited Mr.Rameez's blog... really interesting...thank u for introducing a blog worth reading..//

SAHI thanks 4 visiting & the encouraging..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ முஹம்மது ஆரிப் கூறியது...

// எழுத்தாளர் அறிமுகமா ரைட்டு!! எட்டையும், சீசனையும் கணக்காய் சொன்னது அருமை! //

வாங்க சார்..!!

நன்றி முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அரபுத்தமிழன் கூறியது...

// அருமையான பிளாக், அறிமுகத்திற்கு நன்றி //

வாங்க அரபு தமிழன்..!!

நன்றி சார் உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Dhosai கூறியது...

// nalla padhivu.. vazhthukkal. vovvoru nerathilum situation matikitedhan irukum. so pls be care ur self. i'm the bishop
heber college,trichy //

என் மேல் அக்கறை எடுத்து எழுதிய உங்களுக்கு ஒரு நன்றி. எந்த வருஷம் தம்பி?? இப்பவும் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், படிப்பில் கவனம்!! அதென்ன தோசை??

நன்றி தோசை உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// ஜமால் முகம்மது கல்லூரி வளாகத்தில் உள்ள காஜா மியான் பள்ளியில் நான் 9,10 படித்தேன். //

அப்படியா ரொம்ப சந்தோஷம் மேடம்!! அங்குள்ள பள்ளி வாசலிலும், காஜா மலை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டும் தான் படிப்போம். அது ஒரு சுவாரஸ்ய மான நாட்கள்!! (திரும்ப வருமா?? மகன்களுக்கு கிடைக்கட்டும் அந்த ஜாலி ஜமால் வாழ்க்கை)

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

vanathy சொன்னது…

நாட்டாமை, நல்லா இருக்கு. சல்லக்கடுப்பு எங்க வீட்டிலும் சொல்வோம். ஜமால் முகம்மது கல்லூரியிலா படித்தீங்களா? நான் இந்திரா காந்தி காலேஜ்.
நல்லா இருக்கு பதிவு.

மோகன்ஜி சொன்னது…

நீங்க ஜமால் பார்ட்டியா? எனக்கு பல நண்பர்கள் அங்கு இருந்தனர். உங்கள் அறிமுக எழுத்தாளரை அவசியம் படிக்கிறேன்.. உடம்பையும் மனசையும் பாத்துக்குங்க காதர்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பிரசன்னா சொன்னது…

கணக்கு சரியா வருது :)

நா தப்பு தப்பா சொன்னாலும் கரெக்ட் தானா பாஸ். ஹா..ஹா..(சும்மா!)

நன்றி பிரசன்னா உங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஷஹி கூறியது...

// என் அப்பாவும் அண்ணனும் கூட ஜமாலில் தான் படித்தார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.மூன்றாம் கோணம் வாசிக்கிறீர்களா திரு.காதர்?//

அப்படியா?? ரொம்ப சந்தோஷம்! எந்த வருஷம்?? மூன்றாம் கோணம் அப்பப்ப வாசிப்பேன். நல்லா இருக்கு!!

நன்றி ஷஹி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// பதிவு - ரொம்ப நல்லா இருக்குதுங்க... வாழ்த்துக்கள்! //

வாங்க சித்ரா மேடம்!!

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan(ஸ்டார்ஜன்)கூறியது

// இப்ப கிளைமேட் மாறிருச்சி.. கொஞ்சம் கவனமா இருக்கணும். நல்ல பகிர்வு.//

ஆமாங்க பாஸ். நீங்களும் உங்க உடம்பை கவனிச்சுங்க தல!!

நன்றி Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

//வராவிட்டால் கனவு காண். உபயம் : அப்துல் கலாம்) //
//இதை எங்கயாவது படிச்சிட்டு அவர் டென்சனாகிடப் போறார்!! :))//

அப்படியெல்லாம் டென்ஷன் பார்ட்டி இல்லையே அவரு அன்னு!!:)))

// பக்கம் மட்டுமில்ல, பதிவும் ஆஹா...:) //

இனி என்னை கவனமா எழுதுன்னு சொல்றீங்க அப்படி தானே!! :))

நன்றி அன்னு உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து கூறியது...

// ஆமாங்க க்ரெக்ட்டு....//

வாங்க முத்து. நல்லா இருக்கீங்களா??

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வழிப்போக்கன் - யோகேஷ் கூறியது...

// பிரபஞ்சக்குடிலை வாசித்தேன் .. பகிர்விற்க்கு நன்றி...//

வாங்க யோகேஷ், நல்லா இருக்கீங்களா?

நன்றி வழிப்போக்கன் - யோகேஷ் உங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ers கூறியது...

// உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம் // தமிழ் ஆங்கிலம்

நன்றி ers

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நான் இந்திரா காந்தி காலேஜ். //

அப்படியா வான்ஸ் ரொம்ப மகிழ்ச்சி, நாம எல்லோருமே சுத்தி சுத்தி ஒரே மண்ணுல தான் படிச்சிருக்கிறோம்னு சொல்லுங்க!!

நன்றி வானதி உங்கள் வருகைக்கும்
கருத்து பகிர்தலுக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// நீங்க ஜமால் பார்ட்டியா? எனக்கு பல நண்பர்கள் அங்கு இருந்தனர். உங்கள் அறிமுக எழுத்தாளரை அவசியம் படிக்கிறேன்.. உடம்பையும் மனசையும் பாத்துக்குங்க காதர்! //

வாங்க மோகன்ஜி!! நீங்க எங்க சென்னையிலா படிச்சிங்க பாஸ்!!

நன்றி வானதி உங்கள் வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும்!!

மோகன்ஜி சொன்னது…

சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தேன் காதர்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தேன் காதர்! //

அப்படியா ரொம்ப சந்தோஷம் மோகன்ஜி.