facebook

திங்கள், நவம்பர் 29, 2010

சவுதி என் பார்வையில் (தொடர் பதிவு)



'சவுதி - என் பார்வையில்'




என்னை எழுதத் தூண்டும் நேசங்கள்  


ஸாதிகா சொன்னது…(எல்லாப் புகழும் இறைவனுக்கே)

// வளைகுடாவில் தொலைத்துவிட்டோம்! என்னத்த சொல்ல...?
ஆனாலும் வளைகுடா வாழ் நம்மவர்கள் இப்படியே புலம்பி
கவிதை வடிப்பதை விட்டு, அங்கிருந்து பெறக்கூடிய
நன்மைகளை கவிதையாக வடித்து இனி வரும் ஜெனரேஷன்
களுக்கு பூஸ்ட் கொடுக்கலாமே? //

------
கவிதையா எழுதினால்..(சொன்னால்) புரியாது (யாருக்கு??
எனக்குத் தான் ஹா..ஹா.. !!)

ஆகவே சின்னச் சின்ன செய்திகளாய்.....

உலகமே உருண்டு புரண்டு வந்தாலும் சவுதி சத்தமில்லாம
எல்லாத்திலுமே  மெதுவாத்தான் வரும். எல்லா நாட்டிலும்
காலிங் கார்டு கம்பெனிகள் ஆஃபர் மேல் ஆஃபர் தந்து காசை
கொழித்துக் கொண்டிருந்தாலும் அவரவர் மொழிகளில்
மெஸேஜ் கொடுத்து மக்களை மயக்கத்திலேயே
வைத்திருப்பார்கள். ஆனால்...

இவர்கள் என்னவென்றால் எந்த ஒரு ஆஃபருக்கும் அரபி
மொழியைத் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் செய்தி
அனுப்பமாட்டாங்க. நமக்கு அதை வாசிக்கத் தெரிந்தாலும்
அதன் அர்த்தம் புரியணுமே. இங்கிருத்து இந்தியாவுக்கு
பேச 0.40 (halala) பைசாவாம். இப்ப தான் உலக அதிசயமா
‘ஹிந்தி’யில் மெஸேஜ் அனுப்புறாங்க.

ஹிந்தி என்றால் நமக்கு வேப்பங்காய் (அப்படி நம்மை
பழக்கி விட்டார்கள்) ஹி..ஹி..(எல்லாம் ஒரு மொழிப்
பற்று தான்) இப்படியே போனால் எப்ப தமிழில் மெஸேஜ்
அனுப்பி ஹும்...விடிஞ்சுடும். காமனா ஒரு மொழி இங்கிலீஷ்
இருக்குல அதுல மெஸேஜ் அனுப்ப வேண்டியது தானே.
இதை யார் முன்னெடுத்துச் (செல்வது) சொல்வது!!

இங்க எல்லோரும் என்ன நெனக்கிராங்கன்னா (இங்க
மட்டுமில்ல உலகம் முழுக்க) இந்தியன் என்றால் ‘ஹிந்தி’
தான் எல்லோரும் பேசக் கூடிய தேசிய மொழியாக இருக்கும்,
அதில் மெஸேஜ் போட்டு எல்லோரையும் அசத்தி விடலாமென்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் இந்த அரபுக்காரங்க அதை விட ஒரு படி மேலே
போய் இந்தியாக்காரர்கள் அனைவரையுமே ‘ஹிந்தி’ என்றே
தான் விழிக்கிறார்கள். சீனாக்காரர்களை (சீனி...!!) இது சும்மா
ஒரு சாம்பிளுக்கு!! மற்ற நாடுகளை எல்லாம் எப்படி
அழைப்பார்கள் என்று  வேறு  ஒரு பதிவில் பார்ப்போம்!

--------

அமீரகத்தில் அமல்படுத்தப்பட்ட அத்தனை விஷயங்களையும்
கொஞ்சம் கொஞ்சமாய் இங்கே இறக்குமதி செய்துக்
கொண்டிருக்கிறார்கள். அதில் இக்காமா (iqama) என்று
சொல்லப்படும் அடையாள புத்தகத்தையே, அட்டையாக
மாற்றி கொடுத்துக் கொண்டிருப்பதும், எல்லோருக்கும்
கைரேகையும், கண் ரேகையும் சமீபத்தில் தான் எடுத்து முடித்திருக்கிறார்கள். பிளாட்பார நடைபாதையில் கார்பார்க்கிங்,
Pay-பார்க்கிங்காக அமீரகத்தில் எப்பொழுதோ மாற்றி விட்டாலும்
இப்ப தான் இங்கே சிற்சில ஏரியாக்களில் பரவலாக அமல்
படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

------------------

இங்கே சொந்தமாய் வியாபாரம் செய்ய – செய்து - வருபவர்
களுக்கு ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால்
வருடத்தில் அதிகமாய் கவர்ன்மெண்ட் ஹாலிடே என்று
எதுவுமே கிடையாது. மிஞ்சி மிஞ்சிப்  போனால் ரம்ஜான் -
ஹஜ் விடுமுறைகளை தவிர்த்து, எல்லா வெள்ளிக்கிழமை
களிலும் ஜும்மா மற்றும், தினமும் நடைபெறும் ஐந்து வேளை
தொழுகை நேரம் போக மீதி எல்லாமே வேலை நேரம்தான்.

இதில் எட்டு மணி வேலை நேரம் என்று இருப்பது சொற்ப
கம்பெனிகளே!! மீதி எல்லாமே பத்து பனிரெண்டு பதினாறு
மணி நேரப் பணிகள். வீட்டு டிரைவர்கள் என்றால் கேட்கவே
வேண்டாம். வீட்டில் எப்பவெல்லாம் அழைப்பார்களோ
அப்பவெல்லாம் வேலை நேரம் தான்.

--------------

எல்லோர் மனதுக்கும்  இதமான ஒரு விஷயம்,  கூட்டம் போட்டு
ரோட்டில் மேடை அமைத்து   அலறும் ஸ்பீக்கர்கள், போராட்டம்
என்று  ரோட்டையும்  வாகனத்தையும்  வழி மறித்துக் கொண்டு
போகும் மனிதம், வீதிக்கு   வீதி  ஒரு தியேட்டர் என்று எதுவுமே இங்கில்லை. பவர்கட், ஆற்காட்டார் கட் என்று எதுவுமே பார்த்து அறிந்ததில்லை.

-----------------------

பஸ்ஸிலோ, டாக்ஸியிலோ போனால் பாய்ண்ட் டு பாய்ண்ட்
ரேட். குறிப்பாக இந்த ஊரிலிருந்து அந்த ஊர் என்று வைத்துக் கொண்டாலும் (கிட்டத் தட்ட 20 to 25 km தொலைவுக்கு) நீங்கள்
எங்கே ஏறினாலும் இறங்கினாலும் ஒரே ரேட். பஸ்ஸில்
2 ரியால்கள், டாக்சியில் (லிமோ)  3 ரியால்கள். இது நல்லதா?
கெட்டதா?

-----------------------

இங்கே குளிர் லேசாக ஆரம்பித்து, வானம் இருண்டும்
இருளாத ஒரு வெளிச்ச ஒளியாய் காட்சியளிக்கறது.
இந்த கிளைமேட் எப்போதுமிருந்தால் நல்லா இருக்குமோ
என்று மனம் ஆசைக் கொள்கிறது. நினைப்பதெப்போதும்
கிடைத்து விடுமா என்ன?? நாம் விரும்புவதை கொடுப்பதாக
இறைவன் சொல்லி இருக்கிறான். பார்ப்போம்!!
-----------------

இன்னும் ஊறி வரும் பெட்ரோல் கிணறு போல், இங்குள்ள
செய்திகள் ஏராளம்!! இப்பதிவை தொடர நான் அழைப்பது..

அன்பு நண்பர்கள்...

'ராஜவம்சம்'  தெரியாததை தெரிந்து 'கொல்'வது


இன்னும் தொடர நினைப்பவர்கள் தொடரலாம் நண்பர்களே..!!


38 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

// இங்க எல்லோரும் என்ன நெனக்கிராங்கன்னா (இங்க
மட்டுமில்ல உலகம் முழுக்க) இந்தியன் என்றால் ‘ஹிந்தி’
தான் எல்லோரும் பேசக் கூடிய தேசிய மொழியாக இருக்கும், //
உண்மைதான்... பிரேசில் உட்பட மேலும் சில நாடுகளில் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்....

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்கள் பதிவை வெளியிட்ட இந்த நேரம் இந்தியாவில் நள்ளிரவு... எனவே தான் வாசகர்கள் வருகை குறைவாக இருக்கிறது...

பெயரில்லா சொன்னது…

நிறைய தகவல்கள்..
நண்பா உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://balajisaravana.blogspot.com/2010/11/blog-post_26.html
மறுக்காமல் எழுதவும் :)

ஆமினா சொன்னது…

பல தகவல்கள் தெரிந்துக்கொண்டேன்!!!

சொன்ன விதம் அருமை...

வாழ்த்துக்கள் சகோ

சிவராம்குமார் சொன்னது…

நல்ல தகவல்கள்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்ன தலைவா! இன்னும் நிறைய இருக்கே தொடர்பதிவா போடலாமே.

"இன் த இந்தி" ன்னு அவங்க கேட்கும் போது வரும் பாருங்க கோபம். அதை வார்த்தையால சொல்ல முடியாது. அப்படி கேட்டவுடனே ஆமான்னா, அவங்களுக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு ஹிந்தி வார்த்தையை சொல்லி வெறுப்பேத்துறது உலக மகா கொடுமை.

ஆனா இன்னும் சில நல்ல விசயங்களும் இருக்கு. பணியாளருக்கு கட்டாய இன்சூரன்ஸ் போன்று.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்லா புட்டுபுட்டு வைச்சீங்க.. மேல சொல்லுங்க..

Asiya Omar சொன்னது…

இந்தியான்னு சொல்றீங்க ஹிந்தி பேசத்தெரியாதான்னு நிறைய பேர் கேட்பதுண்டு,சவூதி நடவடிக்கைகள் பல தெரிந்து கொண்டேன்,இன்னும் எழுதுங்க,இந்தியர்களை இந்தி,சீனர்களை சீனி(இது ரொம்ப காமெடி)
நல்ல பகிர்வு.

ஸாதிகா சொன்னது…

சகோ அப்துல்காதர் நான் கொடுத்த ஒரு பின்னூட்டத்தின் விளைவே இவ்விடுகை.இப்பவு சொல்லுறேன்.நாமெல்லாம் (இந்தியர்கள்)யாரு..?சிங்கம்.இந்த சமாச்சாரத்துக்கெல்லாம் அதிர்ந்து விடுவோமா என்ன?இன்னும் இது பற்றி தொடருங்கள்.அறிய ஆவலாக உள்ளேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//எல்லோர் மனதுக்கும் இதமான ஒரு விஷயம், கூட்டம் போட்டு
ரோட்டில் மேடை அமைத்து அலறும் ஸ்பீக்கர், போராட்டம் என்று ரோட்டையும் வாகனத்தையும் வழி மறித்துக் கொண்டு போகும்
மனிதம், வீதிக்கு வீதி ஒரு தியேட்டர் என்று எதுவுமே இங்கில்லை. பவர்கட், ஆற்காட்டார் கட் என்று எதுவுமே பார்த்து அறிந்ததில்லை.//


அதே... நல்ல பதிவு.

roshaniee சொன்னது…

நல்ல பகிர்வு

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு சார்.

ராஜவம்சம் சொன்னது…

என்ன பிரதர் எல்லாத்தையும் அழகா புட்டு புட்டு வச்சிட்டீங்க இதுக்கு மேலே நா என்னத்த செப்புறது.

இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன் நன்றி.

ஸாதிகா சொன்னது…

//பஸ்ஸிலோ, டாக்ஸியிலோ போனால் பாய்ண்ட் டு பாய்ண்ட்
ரேட். குறிப்பாக இந்த ஊரிலிருந்து அந்த ஊர் என்று வைத்துக் கொண்டாலும் (கிட்டத் தட்ட 20 to 25 km தொலைவுக்கு) நீங்கள்
எங்கே ஏறினாலும் இறங்கினாலும் ஒரே ரேட். பஸ்ஸில்
2 ரியால்கள், டாக்சியில் 3 ரியால்கள். இது நல்லதா கெட்டதா?
// எவ்வளவு நல்ல நல்ல விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றது வளைகுடாவில்.இங்கு கண்ணுக்கு எட்டிய தூரத்துக்குப்போகும் இடத்திற்கே பைசாவை அதிகமாக பிடுங்கும் டாக்ஸி,ஆட்டோக்காரகள் சற்று தொலைவு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம்.

ஸாதிகா சொன்னது…

சீக்க்ரம் மற்ற சகோக்களும் தொடரை எழுதுங்கள்.படிக்க ஆவல்.

kavisiva சொன்னது…

இந்தியன் என்றால் ஹிந்தி பேசுபவர்கள்னுதான் இங்கயும் நினைக்கறாங்க சகோ :(.

நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் நன்றி :)

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. எழுதிய விதம் அருமை.

உங்களுக்கு நான் கொடுத்த விருதினை வந்து பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி.


http://vanathys.blogspot.com/2010/11/blog-post_27.html

Unknown சொன்னது…

அப்புறம் வந்து படிக்கறேங்க.. கொஞ்சம் பிஷி.. :-)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ philosophy prabhakaran கூறியது.

//இந்தியன் என்றால் ‘ஹிந்தி’ தான் எல்லோரும் பேசக் கூடிய தேசிய மொழியாக இருக்கும்//
//உண்மைதான் பிரேசில் உட்பட மேலும் சில நாடுகளில் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்....//

இதில் ரொம்ப உஷாரானவங்க மலையாளிங்க தான். எந்த ஊர் என்று கேட்டால் 'கேரளா' என்று தான் சொல்வாங்க. என்னமோ அது ஒரு தானி நாடு என்பது போலவும், இந்தியா என்றால் மலையாளிகள் தான் என்பது மாதிரியும்..

நன்றி philosophy prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்து ரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ philosophy prabhakaran கூறியது

// நீங்கள் பதிவை வெளியிட்ட இந்த நேரம் இந்தியாவில் நள்ளிரவு... எனவே தான் வாசகர்கள் வருகை குறைவாக இருக்கிறது...//

அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல பாஸ். படிக்க வேணும் என்று நினைப்பவர்கள் எப்ப வேணும்னாலும் வந்து படித்து விட்டு தான் போவார்கள். படிக்கிற விஷயம் இருக்கே (உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சோ ஆகலையோ எனக்குத் தெரியல) கல்யாணம் ஆனவர் களுக்கே கூட அது மொத பொண்டாட்டி மாதிரி தான். இது நமக்குள்ளே ரகசியமா இருக்கட்டும்.

நன்றி philosophy prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// நிறைய தகவல்கள்..நண்பா உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://balajisaravana.blogspot.com/2010/11/blog-post_26.html மறுக்காமல் எழுதவும் :) //

வாங்க நண்பா!! வர்றேன்.. கூடியவரை முயற்சிக்கிறேன்!!

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// பல தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்!!! சொன்ன விதம் அருமை...//

வாங்க சகோதரி!!

நன்றி ஆமினா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிவா என்கிற சிவராம்குமார் கூறியது...

// நல்ல தகவல்கள்! //

வாங்க தல!

நன்றி சிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

//ஆனா இன்னும் சில நல்ல விசயங் களும் இருக்கு. பணியாளருக்கு கட்டாய இன்சூரன்ஸ் போன்று.//

அதை நீங்க தொடர் பதிவில் எழுதி அசத்துங்க பாஸ்!!

நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// நல்லா புட்டுபுட்டு வைச்சீங்க.. மேல சொல்லுங்க..//

மீதிய நீங்க வந்து தொடர் பதிவில் நல்லா புட்டு புட்டு வைங்க பாஸ்!!

நன்றி ஷேக் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// இந்தியான்னு சொல்றீங்க ஹிந்தி பேசத்தெரியாதான்னு நிறைய பேர் கேட்பதுண்டு//

ஆமா, "முஜே ஹிந்தி நை மாலும்.." என்று சொன்னாக்கூட
"இதோ நீ பேசியது ஹிந்தி தானே, அது மாதிரியே பேசும்பாங்க,
"ரெண்டு வார்த்தை தமிழில் சொல்லிக் கொடுத்தா கூட திருப்பி தமிழில் பேச அவங்களுக்கு சரியா நாக்கு புரளாது. நாமெல்லாம் ஏக், தோ..தஸ் புஸ் என்று உளறியாவது பேச ஆரம்பிச்சிட்டோம். பின்னே வண்டி ஓடணுமே!! :)))

//இன்னும் எழுதுங்க, இந்தியர்களை இந்தி, சீனர்களை சீனி(இது ரொம்ப காமெடி)//

நீங்க சொல்லிடீங்கல்ல அசத்திடுவோம்!!

நன்றி ஆசியா மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// இப்பவு சொல்லுறேன். நாமெல்லாம் (இந்தியர்கள்) யாரு..? சிங்கம். இந்த சமாச்சாரத்துக் கெல்லாம் அதிர்ந்து விடுவோமா என்ன? இன்னும் இது பற்றி தொடருங்கள். அறிய ஆவலாக உள்ளேன்.//


எழுதுகிறேன். நண்பர்களையும் எழுதச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் எழுதியது போக, மீதி இருப்பின் இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்!

நன்றி சகோ.ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சே.குமார் கூறியது...

// அதே... நல்ல பதிவு.//

வாங்க நண்பா!!

நன்றி சகோ. சே.குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ roshaniee கூறியது...

// நல்ல பகிர்வு //

வாங்க சகோதரி!!

நன்றி சகோ.roshaniee உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ செ.சரவணக்குமார் கூறியது...

// நல்ல பகிர்வு சார்.//

தல நீங்கல்லாம் சவுதிக்கு மூத்த பதிவர்கள். அவசியம் எழுதுங்க!!

நன்றி சகோ.செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ராஜவம்சம் கூறியது...

// என்ன பிரதர் எல்லாத்தையும் அழகா புட்டு புட்டு வச்சிட்டீங்க இதுக்கு மேலே நா என்னத்த செப்புறது. இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன் நன்றி.//

இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. அவசியம் எழுதுறீங்க!!

நன்றி சகோ.ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது

// எவ்வளவு நல்ல நல்ல விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றது வளைகுடாவில். இங்கு கண்ணுக்கு எட்டிய தூரத்துக்குப்போகும் இடத்திற்கே பைசாவை அதிகமாக பிடுங்கும் டாக்ஸி, ஆட்டோக்காரகள் சற்று தொலைவு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். //

இங்கே 'லிமோஸின்' என்கிற டாக்ஸிகள் (A/C செய்யப் பட்டவைகள்) ரோட்டில் வரிசையா போய்க்கொண்டே தானிருக்கும். போக்குவரத்துக்கு எந்த சிரமமும் எப்போதும் ஏற்பட்டதில்லை!!

நன்றி சகோ.ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// சீக்க்ரம் மற்ற சகோக்களும் தொடரை எழுதுங்கள். படிக்க ஆவல்.//

ஆமா...!!

நன்றி சகோ. ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ kavisiva கூறியது...

// இந்தியன் என்றால் ஹிந்தி பேசுபவர்கள்னுதான் இங்கயும் நினைக்கறாங்க சகோ :(. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் நன்றி :) //

எல்லா இடத்திலும் இந்த லொள்ளு தான் பண்றாங்க. என்னத்தை சொல்ல.

நன்றி சகோ.kavisiva உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நல்லா இருக்கு. எழுதிய விதம் அருமை. உங்களுக்கு நான் கொடுத்த விருதினை வந்து பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி.//

பார்த்தேன். நன்றி வாணி!! வர்றேன், வந்து 'குருவி'ய பறக்காம தூக்கிட்டு வரணும்.

நன்றி சகோ.வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

// அப்புறம் வந்து படிக்கறேங்க.. கொஞ்சம் பிஷி.. :-) //

வாங்க. வேலை தான் ஃபஸ்ட் அப்படீன்னு சொல்ல மாட்டேன், படிப்பும் முக்கியம்!! (கேட்டலில், பார்த்தாலே நன்றுன்னு சொல்றாங்களே)

நன்றி சகோ.அப்துல் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!

ஜெயந்தி சொன்னது…

சவுதி பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டோம்.
//பஸ்ஸிலோ, டாக்ஸியிலோ போனால் பாய்ண்ட் டு பாய்ண்ட்
ரேட். குறிப்பாக இந்த ஊரிலிருந்து அந்த ஊர் என்று வைத்துக் கொண்டாலும் (கிட்டத் தட்ட 20 to 25 km தொலைவுக்கு) நீங்கள்
எங்கே ஏறினாலும் இறங்கினாலும் ஒரே ரேட். பஸ்ஸில்
2 ரியால்கள், டாக்சியில் (லிமோ) 3 ரியால்கள். இது நல்லதா?
கெட்டதா?//
அதிக தூரம் செல்பவர்களுக்கு நன்மை. ஒரே ஸ்டாப்பிங் செல்பவர்களுக்கு நஷ்டம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது ...

// அதிக தூரம் செல்பவர்களுக்கு நன்மை. ஒரே ஸ்டாப்பிங் செல்பவர்களுக்கு நஷ்டம். //

பெரும்பாலும் ஒரே ஸ்டாப்பிங்கில் யாரும் போவதில்லை! அப்படி இருப்பின் நடந்தே போவதைப் பார்க்கிறேன். அதிக தூரம் செல்பவர்களுக்கு காரிலும் பஸ்சிலும் a/c வசதியே பெரிய பிளஸ்.

நன்றி சகோ.ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். தொடர்ந்து வாங்க!!