எண்ணக் கனவுகளில்!!
சென்ற மாதம் 'கேபிளாரின்' வலைப்பதிவில் 'பாபி' படத்தின்
'ஹம் தும் ஏக் கம்ரேமே பந்த் ஹோ' பாட்டு வெளியாகி இருந்தது. ஆர்வத்துடன் அதை ரசித்துப் பார்த்தேன். அது பழையப் பாட்டாய் இருந்தாலும், ரசித்துப் பார்க்கக் கூடிய சூப்பர் சாங் அவர் வர்ணித்திருந்ததற்கு மேலும்!
எனக்கு எப்பவுமே ஒரு ஆர்வமுண்டு. எந்த ஹிந்திப் பாடல்
கேட்டாலும் அதன் அர்த்தம் தெரிந்து கொள்வது. அப்படிக் கேட்டால்
அதன் சுகம் அலாதி!
இசையைப் பற்றி தெரிந்து கொள்வதும் இசைத் தெரிந்தவர்களோடு
அதைப் பகிர்ந்துக் கொள்வதும் பரமசுகம். அதுவும் நம்மைவிட அதிக விவரம் தெரிந்தவர்களாக இருந்தால் சுகமோ சுகம்.
இப்படிதான் ஒரு நாள் தல ஜெய்லானியுடன் பேசிக் கொண்டி
ருக்கும் போது கேட்டேன். 'பாபி'யில் வரும் "மே ஷாயர் தோ
நஹி" என்ற பாட்டு, தமிழ் பாட்டான TMS பாடிய "நான் கவிஞனு
மில்ல, நல்ல ரசிகனுமில்ல" என்றப் பாட்டின் அப்பட்டமான நேரடி
காப்பி தானே என்றேன்.
அதுக்கு தல சொன்னுச்சு. அது அப்படியல்ல. நீங்க சொல்வது போல நேரடியா ஒரு அப்படி அர்த்தம் தருவது போல தெரிந்தாலும் அதன் உள்ளர்த்தம் வேறு மாதிரி என்று ஏதேதோ சொல்லிக்கிட்டேப்
போச்சு. நான் பிரமித்துப் போனேன். இசையில் இதுக்கு இவ்வளவு
ஈடுபாடா என்று. அது சொன்னதை இங்கே எனக்கு திருப்பி
சொல்லத் தெரிய வில்லை. சும்மாவா சொன்னார்கள் அடக்கமாய் இருப்பவர்களிடம் ஆயிரம் விஷயங்கள் அடங்கி இருக்கும் என்று.
ஆனா அந்தப் பாட்டின் முழு அர்த்தமும் எனக்கு இதுவரை தெரிய
வில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வண்ணக் களஞ்சியமே!!
நமக்கு என்னைக்குமே இந்த சீரியஸ்னஸ் பிடிக்காதுங்க. ‘விக்கி
லீக்ஸ் விக்கிலீக்ஸ்’ ன்னு சொல்றாங்களே, அது என்னான்னு
நண்பரிடம் விசாரிச்சேங்க.
“அவங்க எல்லா நாட்டு ரகசியங்களையும் ‘ஒட்டு’ (உளவு பார்த்து) மொத்தமா திடீர்ன்னு வெளியிடுராங்கலாம்” என்றார்.
“எவ்வளவு தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் தண்ணி குடிக்
காட்டி அது 'விக்கி' வாந்தியாகி (லீகாகி) வெளியே வந்து தான்
ஆகணும்” என்றேன்.
அவர் சீரியஸாய் சிரிக்காமல் என்னை பார்த்தார்.
“பின்னே என்னாங்க, அப்பப்ப கிடைக்கிற தகவல்களைப் பரிமாறிக்கொண்டா, அப்படி பேசிக் கொள்பர்களுக்கும், நடந்துக் கொள்பவர்களுக்கும் ஒரு பயமிருந்திருக்கும். அப்படியில்லாம
இப்ப இப்படி ஒரேமுட்டா அதுவும் இத்தனை வருடம் கழித்து
வெளியிட்டா அதுல என்னாங்க சுவாரசியம் இருக்கு" என்றேன்.
********************************************************************************************
பெண்ணல்ல நீ எனக்கு....!!!
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஃபேஸ் புக்கிலும், சாட்டிங்கிலும்
பேசி பழகிய காதலர்கள் பிற்பாடு ஒரு தேதி குறித்து சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. இன்ன இன்ன கலர் டிரஸ் செய்துக் கொண்டு
ஒரு இடத்தைக் குறிப்பிட்டு மிகச் சரியாக சந்தித்துக் கொண்ட
போது இருவரும் அம்மா - மகனாம். இருவருமே அதிர்ந்துப்
போனதாக பிற்பாடு சொன்னார்களாம். நாட்டுக்கு ரொம்ப தேவை
தான்!! ஒரே வீட்டில் இருந்து தான் தனித்தனி ரூமில் உட்கார்ந்து
சாட்டி இருக்கிறார்கள். என்ன கர்மம்டா இது என்று சொல்லத்
தோணுதா??
இப்படி ஏன் நடக்குது என்று யோசிக்கணும்!!
வீட்டில் இருக்கும் நிறைய நேரங்களிலும், சாப்பிடும் போதும்
ஒருத்தருக் கொருத்தர் மனம் விட்டுப் பேசி இருந்தால் இந்தக்
கொடுமை எல்லாம் நடந்திருக்குமா? சரி இதை விடுங்க. கீழே
இன்னொரு விஷயம் சொல்றேன் அதைப் படிச்சிட்டு என்ன சொல்றீங்கன்னு பார்க்காலாம்.
கல்யாணமாகி ஒன்றரை வருடம் கழித்தும் தங்களுக்கு ஒரு
குழந்தைக் கூட இல்லையே என்று யோசித்த ஒரு ஆண்மகன்,
நிறையப் பேர்களோடு சாட்டிக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்
நாட்டில் (ஊர் பெயர் தவிர்க்கப் படுகிறது) இருந்து பேசி பழகி
சாட்டியப் பெண்ணை (தனது மூத்த மனைவிக்கு தெரியாமல்)
கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து ஊருக்குப் போய் கல்யாணமும் செய்துக் கொண்டிருக்கிறார். மாமியார் இல்லை.
மாமனார் மட்டும் தானிருந்திருக்கிறார்.
சிறிது நாள் சென்று அந்தப் பெண்ணும், அந்த மாமனாரும் அரச
புரசலாய் ஒன்றாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். அடைந்து என்ன பிரயோஜனம்?? அந்தப் பெண் அவருடைய வளர்ப்பு மகளாம். இவர் பசையுள்ளப் பார்ட்டி என்று தெரிந்து தான் வலை விரித்திருக்கிறார்கள். இவரும் வகையாக மாட்டிகொண்டார்.
இவ்வளவு கொடுத்தால் தான் ஆச்சு என்று மிரட்டி இருக்கிறார்கள். கடைசியில் அந்த மூத்த மனைவியே வக்கீல் வச்சு மிரட்டி, ஏதோ
பணம் கொடுத்து மீட்டு வந்ததாக சொன்னார்கள்.
நான் கேட்கிறேன் இந்த கணவனும் மனைவியும் முன்கூட்டியே உட்கார்ந்து பேசி தத்தமது மன ஓட்டங்களை பகிர்ந்துக் கொள்ளக் கூடாதா?? இதையெல்லாம் படிக்கும் போது ...த்தூவென்று காறி
துப்பத் தான் தோன்றுகிறது!!!
நிறைய நிகழ்வுகள் நம் கண் முன்னால் நடந்தும், காதால் கேட்டும்
அதை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதுமில்லை, அதற்கு உண்டான தீர்வு என்னவென்று யோசிப்பதுமில்லை. ஏனோ போகட்டும் என்றும் ரொம்ப அசால்ட்டாக இருந்து விடுகின்றோம். இது எதனால்??
நன்றி: Google - u tube - சசி
46 கருத்துகள்:
அந்த பெண்களின் இழிச்செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. 'விக்கி' 'லீக்ஸ்' ஹா.. ஹா..!! பாட்டின் முழு அர்த்தம் தெரியலியே பாஸ்!!
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க...
கடைசி செய்தி தொகுப்பு: என்ன கொடுமைங்க, இது!
பெண்ணின் செயல் என்னக் கொடுமை இது ?
கிந்தி எனக்கு டேரியாஹு
:(
நல்ல அலசல்..
தலைப்புலேயே கலக்கிட்டிங்க பாஸ்.
நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு :)
பை த வே எனக்கும் அந்த பாட்டோட மீனிங் தெரியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
விக்கி விக்கி லீக்ஸ் ஆகுதோ இல்லையோ என் மேட்டர் மட்டும் எங்க பாத்தாலும் லீக் ஆகுது
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொள்ளும் ,
துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊர் என்ன சொல்லும்,
காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே ,
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே,
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே....
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே....
நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே ,
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..
--
இதுக்கும் அதுக்கும் எலிவேட்டர் ,எஸ்கலேட்டர் வச்சாகூட எட்டாது
நேரடியா ஒரு அப்படி அர்த்தம் தருவது போல தெரிந்தாலும் அதன் உள்ளர்த்தம் வேறு மாதிரி என்று ஏதேதோ சொல்லிக்கிட்டேப்
போச்சு///
என்ன ஜெய்லானிக்கு மூளை இருக்கா ?????
அவர் சீரியஸாய் சிரிக்காமல் என்னை பார்த்தார்.////
ரிப்பீட்டு ..... நானும்தான்
அது இல்லாம மத விஷயங்கள் இப்ப சாதாரணமா நடக்குது ,,,,,,........... ஒன்னு ரெண்டுதான் வெளியில தெரியுது
ஜெய்லானி கூறியது...
விக்கி விக்கி லீக்ஸ் ஆகுதோ இல்லையோ என் மேட்டர் மட்டும் எங்க பாத்தாலும் லீக் ஆகுது///
என்ன பண்றது ஜெய்லானி .....பிரபலம் ஆகிட்டா அப்படித்தான்
//
பெண்ணல்ல நீ எனக்கு....!!!
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஃபேஸ் புக்கிலும், சாட்டிங்கிலும் ....//
இதிலேந்து என்ன தெரியுது..? இதையெல்லாம் படிக்க கூடிய ஆள் நிறைய பேர் இருப்பதாலதான் தினதந்தி இன்னும் டீ கடை(லெவல்ல )யில அமோகமா ஓடுது...
கவனத்தை இதுல திருப்புவதை விட வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கு :-)
//
என்ன பண்றது ஜெய்லானி .....பிரபலம் ஆகிட்டா அப்படித்தான்//
பிரபலமா ? அப்புடின்னா..?
//என்ன ஜெய்லானிக்கு மூளை இருக்கா ?????//
அதான் தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சா மதியம் சாப்பாட்டுக்கு அதான் மெயின் டிஷ்
எழுதியுள்ள கருத்துகள் என்னவோ நல்லாத்தான் இருக்கு. முக்கியமா ஃபேஸ்புக் & இன்னபிறவைகளின் தீங்குகள் குறித்தும், குடும்பத்தினர் மனம்விட்டு பேசிக்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் சொல்லியது பாராட்டுக்குரியது.
ஆனா, காதர், அரைகுறை ஆடை அணிந்த அந்தப் பெண்ணின் படம் எதுக்கு இங்கே சம்பந்தமேயில்லாமல்? உங்கப் பதிவின் கருத்துக்கள்தான் உங்களுக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தரும். இம்மாதிரிப் படங்கள் அல்ல!!
இந்த எனது கருத்து உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீக்கிவிடவும். இனி எழுதமாட்டேன். நன்றி.
காலம் கெட்டு போச்சு,கடைசி செய்தியை சொன்னேன்.பாட்டுக்கு அர்த்தம் தெரிஞ்சா சொல்றேன்.
@!@ வாங்க முஹம்மது ஆரிப், ஃபர்ஸ்ட் வந்து கருத்துரைத்ததற்கு
மிக்க நன்றி!!
philosophy prabhakaran சொன்னது
// இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க... //
என்னான்னு சொல்லி குத்துறது பாஸ்... சொல்லுங்க!!
நன்றி philosophy prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்து ரைக்கும்.
ரைட் நண்பா...
எங்கிட்ட ஒரு 36 இந்திப்பாட்டு இருக்கு அர்த்தம் தெரியாமல் ஜெய்லானிக்கு அனுப்பிவைக்கிறேன் மொழிபெயர்ப்பதற்க்கு .
@!@ Chitra கூறியது...
// கடைசி செய்தி தொகுப்பு: என்ன கொடுமைங்க, இது! //
வாங்க டீச்சர், எதை நோக்கி உலகம் போய்க்கொண்டிருக்கு என்பது மட்டும் புரியுது!!
நன்றி Chitra உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ LK கூறியது...
// பெண்ணின் செயல் என்னக் கொடுமை இது? //
சார் அதில் ஒன்று நான் படித்தது, இன்னொன்று இங்கே நான் இருக்கும் வீட்டுக்கு அடுத்த தெருவில் நடந்தது.
நன்றி LK உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Balaji saravana கூறியது...
:(
வாங்க பாஸ் இப்படி சோக 'சிம்லே' போட்டுட்டு போனா எப்படி? ஏதாவது ரெண்டு வரில கவிதை சொல்லிட்டு போயிருக்கலாம்ல!! :-)))
நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் 'சிம்லே'க்கும்.
@!@ Mohamed Faaique கூறியது...
// நல்ல அலசல்..//
வாங்க தல நல்லா இருக்கீங்களா?!
நன்றி Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// தலைப்புலேயே கலக்கிட்டிங்க பாஸ்.//
சும்மா தமாஸ் பண்ணாதீங்க பாஸ்!!
// நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு :) //
ஆனா எங்கேன்னு தான் தெரியல???
//பை த வே எனக்கும் அந்த பாட்டோட மீனிங் தெரியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.//
ஆஹா இப்படி சொல்லிபுட்டா எப்படி? தல (ஷேக்)கிட்ட கேட்டு சொல்லுங்க!
நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@!@ ஜெய்லானி கூறியது...
// விக்கி விக்கி லீக்ஸ் ஆகுதோ இல்லையோ என் மேட்டர் மட்டும் எங்க பாத்தாலும் லீக் ஆகுது //
வாங்க பாஸ்!! நீங்க இப்படி வந்து ஏசனும் பேசணும் என்று தானே இப்படி போட்டது. நீங்க என்ன சாதாரண ஆளா?? தி கிரேட் "வலைஞாநி"யாச்சே.. :-)))
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@!@ ஜெய்லானி கூறியது...
// இதுக்கும் அதுக்கும் எலிவேட்டர், எஸ்கலேட்டர் வச்சாகூட எட்டாது //
எப்படியோ, பாட்ட முழுசா சொல்லிட்டீங்க. அதுவரையில் நீங்க இசையிலும், லிரிக்ஸ் எழுதுவதிலும் 'கிங் ஃஆப் தி கிங்' ன்னு நிரூபிச்சிட்டீங்க!! :-)))
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@!@ மங்குனி அமைச்சர் கூறியது...
// என்ன ஜெய்லானிக்கு மூளை இருக்கா ????? //
ஆஹா அமைச்சரே இது தான் இன்றைய 'டாக் ஃ ஆப் த டவ்னா'
?!?! எதுக்கும் நாசாவிலும் இந்த கேள்விய போட்டு வைப்போம்!!
நன்றி மங்குனி அமைச்சர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ மங்குனி அமைச்சர் கூறியது...
//அவர் சீரியஸாய் சிரிக்காமல் என்னை பார்த்தார்.////
//ரிப்பீட்டு ..... நானும்தான்//
என்ன... நீங்களுமா??!!
நன்றி மங்குனி அமைச்சர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@!@ ஜெய்லானி கூறியது...
// கவனத்தை இதுல திருப்புவதை விட வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கு :-)//
ஆமா பாஸ் நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.
ஆமாஆஆஆ... வாழ்க்கைன்னா இன்னா பாஸ்!! ஹி..ஹி..
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
(2 ) ஜெய்லானி கூறியது...
// கவனத்தை இதுல திருப்புவதை விட வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கு :-)//
பாஸ் நீங்க ஏன் இப்பல்லாம் சாட்டிங்கிலும் வர்றதில்ல, ஃபோனிலும் கூப்பிட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க!! என்ன தான் ஆச்சு. வாழ்க்கை பாதைக்கு
'டேர்ன்' ஆயிட்டீங்களா!! சொல்லுங்கோ?!
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@!@ ஜெய்லானி கூறியது...
// பிரபலமா ? அப்புடின்னா..? //
நிறைய பிரபலங்கள் இப்படி தான் கேட்கிராயங்க. தன்னடக்கம்!!!!!
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@@@@ராஜவம்சம் --/ரைட் நண்பா...
எங்கிட்ட ஒரு 36 இந்திப்பாட்டு இருக்கு அர்த்தம் தெரியாமல் ஜெய்லானிக்கு அனுப்பிவைக்கிறேன் மொழிபெயர்ப்பதற்க்கு //
நிஜாம் பாய் இந்த பாட்டை மட்டும் அனுப்பிடாதீங்க ..ஹி..ஹி..
http://www.youtube.com/watch?v=X_PZ_8MH-6U
@!@ ஜெய்லானி கூறியது...
//என்ன ஜெய்லானிக்கு மூளை இருக்கா ?????//
//அதான் தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சா மதியம் சாப்பாட்டுக்கு அதான் மெயின் டிஷ்//
தேடலில் கிடைக்கும் மெயின் டிஷ்ன்னா!!!.... சைடு டிஷ் என்னா பாஸ்???
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
//தேடலில் கிடைக்கும் மெயின் டிஷ்ன்னா!!!.... சைடு டிஷ் என்னா பாஸ்??? //
கிட்னி ஃபிரை
@!@ ஹுசைனம்மா கூறியது...
// ஆனா, காதர், அரைகுறை ஆடை அணிந்த அந்தப் பெண்ணின் படம் எதுக்கு இங்கே சம்பந்தமே யில்லாமல்? //
நீக்கியாச்சு ஹுசைனம்மா. இனி அது மாதிரி வராது!!
நன்றி ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். கருத்துரைக்கும்.
@!@ asiya omar கூறியது...
// பாட்டுக்கு அர்த்தம் தெரிஞ்சா சொல்றேன்//
அவசியம் எதிர்பார்க்கிறேன். அதில் ஒரு கவிதை ஒளிந்திருக்கு மேடம்!!
நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். கருத்துரைக்கும். .
//அவசியம் எதிர்பார்க்கிறேன். அதில் ஒரு கவிதை ஒளிந்திருக்கு மேடம்!!//
??????????????..!!!!!!!!!!!!!!!! :-)))))))))))))))))))))
@!@ ராஜவம்சம் கூறியது...
// ரைட் நண்பா...எங்கிட்ட ஒரு 36 இந்திப்பாட்டு இருக்கு அர்த்தம் தெரியாமல் ஜெய்லானிக்கு அனுப்பிவைக்கிறேன் மொழிபெயர்ப்பதற்க்கு //
அஹா அதெல்லாம் ரொம்ப ஃபெர்பெக்டா செஞ்சு கொடுப்பாபல. சரியான ஆள தான் செலெக்ட் செய்திருக்கீங்க!!.
நன்றி ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். கருத்துரைக்கும்.
@!@ ஜெய்லானி கூறியது...
//தேடலில் கிடைக்கும் மெயின் டிஷ்ன்னா!!!.... சைடு டிஷ் என்னா பாஸ்??? //
// கிட்னி ஃபிரை//
யாருது?????
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். கருத்துரைக்கும்
@!@ ஜெய்லானி கூறியது...
// நிஜாம் பாய் இந்த பாட்டை மட்டும் அனுப்பிடாதீங்க
..ஹி..ஹி..//
http://www.youtube.com/watch?v=X_PZ_8MH-6U
அடடா அருமையா இருக்கே யாரந்த தலைவி பாஸ்!!வாழ்க்கைய அனுபவிக்கிறீங்கன்னு சொல்லுங்க!! ஹி..ஹி..
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். கருத்துரைக்கும். .
@!@ ஜெய்லானி கூறியது...
//அவசியம் எதிர்பார்க்கிறேன். அதில் ஒரு கவிதை ஒளிந்திருக்கு மேடம்!!//
??????????????..!!!!!!!!!!!!!!!! :-)))))))))))))))))))))
பின்னே நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை என்பது கவிதை இல்லையா??
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். கருத்துரைக்கும்
நம்ம தல தல தான்.
எனக்கும் அர்த்தம் தெரியாது. தமிழே அறைகுறை. இதில் ஹிந்தியா???
விக்கிலீக்ஸ்... எனக்கு மிகவும் பிடித்த நபர். காரணம் இங்கே சொல்ல முடியவில்லை.
//எவ்வளவு தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் தண்ணி குடிக்
காட்டி அது 'விக்கி' வாந்தியாகி (லீகாகி) வெளியே வந்து தான்
ஆகணும்” என்றேன்.//
தல உங்களுக்கு ரொம்ப குசும்பு ஜாஸ்தி. நாட்டு நடப்பு உங்கள் அலசல், பலரை சிந்திக்க தூண்டியுள்ளிர்கள்.
ஹிந்தி பாட்டு எனக்கும் ரொம்ப பிடிச்சது,
முன்பு ரொம்ப ஆர்வமா எல்லா பாடல் களையும் கேட்பேன், சின்னதிலிருந்து மொழி ட்தெரியலைன்னாலும் எப்படி பேசுகிறார்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என்று கவனிப்பேன். நான் ஹிந்ஹ்டி கத்துகொண்டத எழ்த நிறைய பதிவு இருக்கு
பேஸ் புக் கொஞ்சம் நாள் முன் அண்ணனும் தங்கையும் என்றார்கள் இப்ப, இப்படி கேட்கவே காது கூசுது,
இது எங்க போய் முடியும்மோ, உலகமே பேச் புக்கில் பைத்தியமா லோ இருக்கு.
கருத்துரையிடுக