facebook

சனி, ஜனவரி 22, 2011

"பல்லும் சொல்லும்"



பேராசிரியர்களுக்கு நகைச்சுவை நன்றாக வரும். நாங்கள் படித்த
ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர்களில் ஒருவரான
முனைவர் M.M. ஷாஹுல் ஹமீது Ph.D., (Controller of Examination,
Jamal Mohamed College, Trichy) அவர்களின் 'பல்’சுவைப் பதிவை,
இங்கே பதிகிறேன்.


பல்லும் சொல்லும்..!!(Yours 'tooth'fully) 

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம். "பல்லு போனால் சொல்லு
போச்சு" என்பார்கள். பல் போனால் எப்படி சொல் போகும்? நாவுக்கும் சொல்லுக்கும் தானே உறவு! பல்லுக்கும் சொல்லுக்கும் ...??

மூன்று மாதங்களாக ஆட்டங்கண்டிருந்த என் மூன்று பற்களை
எடுப்பதற்காக பல் மருத்துவமனைக்கு சென்றேன். பயங்கர கூட்டம்.
கடைசி வரிசையில் ஒரே ஒரு நாற்காலி - காலி, அதில் சென்ற-
மர்ந்தேன். சுவரை ஆக்ரமித்த படங்களும் விளம்பரங்களும்
கண்ணில் பட்டன. பல் பராமரிப்பு பற்றிய விவரங்கள், நீளமான
வெள்ளை நிறக் கோட்டு, நீல நிற டையுடன் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை சிகிச்சைக்கு முன்- சிகிச்சைக்குப் பின் எடுக்கப்-
பட்ட வாய் திறந்த படங்களை வாய் மூடாமல் பார்த்துக்
கொண்டிருந்தேன். அண்ணாந்து டிவியை பார்த்து கழுத்து
வலிக்க ஆரம்பித்தது. அசந்துப் போய் அலுத்துப் போய் கண்மூடி காத்திருந்தேன்.

"பல்லை உடைப்பேன்" "பல்லை பேத்திடுவேன்" "பல்லை தட்டி
கையில் (யார் கையில்?) கொடுத்திடுவேன்"... என்றெல்லாம்
கோபத்தில் கத்துவார்கள். பற்களை நோக்கி ஏன் இத்தனை கற்கள்? கொஞ்சமாக சிரித்தால் "பல்லிளிக்காதே" - அதிகம் சிரித்தால்
"பல்லைக் காட்டாதே" என்ற ஏவுகனைகள் வேறு. உடலில் எங்கு
வலித்தாலும், எரிச்சல் வந்தாலும், கோபம் வந்தாலும் பல்லைக்
கடித்து சகித்துக் கொள்வோம். நகத்தை பல்லால் கடித்துக் கடித்து துப்புவோரும் உண்டு. சிந்திக்கிறார்களாம்!

நாவைக் காக்க 32 பல் வீரர்கள். மிக்ஸியும், கிரைண்டரும் சேர்ந்த
ஒரு பற்படையே வாய்க்குள். இத்தனை வீரர்களையும் மீறி, நாவு
ஏதாவது சொல்லப் போய், வாங்கிக் கட்டிக் கொள்வதேன்னவோ
பற்கள்தான்! பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்!!

பற்களில் தான் எத்தனை வகை! மழலையரின் பல்-அரிசிப்பல் ;
அழகிய பல்-முத்துப் பல் ; அழுகிய பல்-சொத்தைப் பல்; பெண்களில்
பல்லழகி உண்டு (ஹி..ஹி.!!) ஆண்களில் பல்லழகன் என்று
கேள்விப் பட்டதுண்டா? (ஹும்..!!) தெற்றுப்பல் என்ற அதிஷ்டப்பல்,
அறிவுப் பல் (விஸ்டம் டூத்) என்ற அறிவுக்கு அறவே தொடர்-
பில்லாத பல். சமீபகாலமாக ஊதாப் பல் (ப்ளு டூத்) என்ற தகவல்
பரிமாற்ற தொழில் நுட்பம் வேறு. அதற்கு ஏன் அந்த பெயர்?
அங்கே பல்லுக்கு என்ன வேலை தெரியவில்லை?

ஓ... இரண்டு மணி நேரம் தள்ளியாகிவிட்டது. இன்னும் எவ்வளவு
நேரம் ஆகுமோ என்று பெரு மூச்சு விடுகையில், அப்பாடா...
உள்ளே அழைக்கப்பட்டேன். அறையிலிருந்த ஒரு தினுசான
மெத்தைப் படுக்கையில் கவனமாக கால் நீட்டி படுத்தேன். வாயும்
மூக்கும் மூடிய அடையாளம் தெரியாத டாக்டர் தன வேலையை
ஆரம்பித்ததும், மெத்தை படுக்கை முள் படுக்கையானது!

'அ' வுக்கு அடுத்த எழுத்தை டாக்டர் சொல்ல, நான் திரும்ப சொல்ல,
 டாக்டர் மீண்டும் சொல்ல, நான் மீண்டும் சொல்ல, டாக்டர்
மீண்டும், நானும் மீண்டும், மீண்டும்.. ஆ..ஆ..ஆ.. சொல்லிச் சொல்லி,
என் வாய் கோட்டை வாய் போல் திறக்க... இம்சை தாளாமல் தவிக்கையில்... "ஏன் டாக்டர், நீங்கள் வெளியே நின்று கொண்டு
தானே பல்லை பிடுங்குவீர்கள்?" என்று அப்பாவித்தனமாக ஒருவர்
கேட்டது நினைவுக்கு வந்து, தாடை வலியை சிறிது மறக்கடித்தது.

பண்டிகைக்கு முதல் நாள் வீட்டை ஒட்டடை அடித்து, மூளை
முடுக்கு களையெல்லாம் துடைத்து, கறையெல்லாம் தேய்த்து,
தண்ணீரை பீய்ச்சி யடித்து சுத்தம் செயவார்களல்லவா? அடுத்த
அரைமணி நேரத்தில் என் வாய்க்குள் நடந்ததும் கிட்டத்தட்ட
அதுதான். அப்போதுதான் என் கால்களும் கைகளும் வளைந்து
ஆடிய, எந்த தாளத்துக்கும் பொருந்தாத, நர்த்தனம் அரங்கேறியது.

ஐந்து நிமிட ஓய்வுக்குப் பின் கையில் சிரிஞ்சோடும், வாயில்
பு(ண்)ன் சிரிப்போடும், டாக்டர் என்னை மீண்டும் நெருங்கினார்.
'வலிக்காது' என்று சொல்லி சுருக், சுருக், சுருக் என்று சுருக்கமாக
எகிரில் மூன்று இடத்தில் ஊசி போட்டார். "அவருக்கு வலிக்காது
என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது!!".எனக்கு...? பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி? சிறிது நேரத்தில் மறத்துப்போன
எகிரிலிருந்து புல்லைப் பிடுங்குவதைப் போல், என் மூன்று
பற்களையும் பிடுங்கினார். பெருக்கெடுத்த இரத்த வெள்ளத்தை
பஞ்சணை போட்டு படாத பாடு பட்டு தடுத்து நிறுத்தினார். வாய்
நிறைந்த பஞ்சோடு வெளியே வந்த என்னைப் பார்த்து, வாய்
நிறைந்த சிரிப்போடு வரவேற்ற என் மனைவியைப் பார்க்க
வேண்டுமே....!!

சவுதியிலிருந்து அலைபேசியில் நலம் விசாரித்த என் மகன்,
"Fill up the blanks எப்போ?" என்றதும் எனக்கு ஒரு கணம் புரிய-
வில்லை. புதுப்பல் கட்டுவதைத்தான் தனக்கே உரிய பாணியில்
கேட்டது பிறகு தெரிந்துக் கொண்டேன்.

அடுத்த மூன்று நாட்கள் வாய் முழுக்க வெந்துப் போய், உண்ணவும் முடியாமல் குடிக்கவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை தனிக்-
கதை. ஒரு வாரம் கழித்து (பொய்ப்) பல் கட்டும் படலம். ஒரு
வழியாக இருபது நாட்கள் பல்செட்டை பகலில் மாட்டி, இரவில்
கழற்றி மாட்டி கழிந்தது.

பல் வழியால் அவதியுற்றோரைக் கேளுங்கள் - தம் எதிரிக்கும்
இந்த வலி வரக் கூடாது என்பார்கள். பற்களிலிருந்து தலையின்
எல்லா திசைகளிலும் மின்னலாய் பாய்ந்த வலி அம்புகளை
சு(ச)கித்த அனுபவம்!!

மூன்று பற்கள் இல்லாமல் சரியாக பேச முடியவில்லை. குழறிக்
குழறி பேசவேண்டியதாயிற்று. இதுவே முப்பது பல் போனால்
என்னாகும்? "பல்லுபோனால் சொல்லு போச்சு" என்பது உண்மை.
இதை உணர்த்துவதற்கு நான் மூன்று பற்களை இழக்க வேண்டிய-
தாயிற்று!! முப்பது நாட்கள் கழித்து புதுப்பல் செட் கட்டி ஒரு
வழியாக செட்டில் ஆகி விட்டேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

"ஆ..ஆ..ஆ" வில் ஆரம்பித்து ஈ..ஈ..ஈ..யில் முடிந்துள்ளது. பல்
கட்டியதும் சீராக இருக்கிறதா என்று அடிக்கடி கண்ணாடியில்
பார்த்துக் கொண்டதைச் சொல்கிறேன்.

அடுத்தநாள் என் மகனும் மருமகளும் அலைபேசியில் அழைத்து பல்கட்டியத்தை விசாரித்தபின், என் ஒரு வயது பேத்திக்கு மூன்று
பற்கள் முளைக்க ஆரம்பித்த செய்தியையும் சொல்லிவிட்டு,
"பாப்பாவுக்கும் மூன்று புதுப்பல் - அப்பாவுக்கும் மூன்று புதுப்பல்"
என்று பல் முளைத்ததையும், பல் எடுத்ததையும் முடிச்சிப் போட்டு கலாய்த்தார்கள். இருக்கட்டும் இருக்கட்டும் அவர்களுக்கும் இப்படி
ஒரு காலம் வராமலா போய்விடும்.

"பல் போனால் சொல் போகும்" - சரி. பல் விழுந்தால் புதிதாக கட்டிக் கொள்ளலாம். சொல் விழுந்தால் அள்ள முடியுமா? கவனம் தேவை!
கவனம் தேவை!! கவனம் தேவை!!

Yours toothfully,
Dr.M.M. Shahul Hameed Ph.d.,
mmsjmc@yahoo.co.in

நன்றி : ஆபிதீன் பக்கங்கள். + Gooooogle



25 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

செமையா இருக்கு எழுத்து நடை! ஆமா இந்த முனைவர் M.M. ஷாஹுல் ஹமீது Ph.D. விலங்கியல் துறை பேராசிரியரா? நானும் அங்கேதான் படிச்சேன் - இளங்கலை.

பகிர்விற்கு நன்றி!

சவுக்கடி சொன்னது…

சுவையாகச் சொல்கிறீர்கள்! சுவற்றை - சுவரை என்று திருத்துங்கள். சரி, நீலமும் ஊதாவும் வெவ்வேறு வண்ணங்களல்லவா?

Asiya Omar சொன்னது…

ஜாலி ஜமால் அனுபவம் எனக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது,நான் பல் டாக்டரிடம் போகனும்னு நாளை கடைத்திட்டு இருக்கேன்..

Chitra சொன்னது…

ha,ha,ha,ha... "toothfully", it is a nice post. :-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்[பல்]லா இருக்குய்யா......

vadivel சொன்னது…

Abdul

Neenga entha varudam Paditherkal.
Nanga Padikiurm pothu "Jail Jamal" Endru Sonnanrgal.
Avalvu Kandipu.

Nandri
Vadivel

Jaleela Kamal சொன்னது…

வெயில் காலம், குளிர்காலம் என்பது போல் இது என்னா பல் புடுங்கள் காலமா>? யாருக்கு போன் போட்டாலும் ஊஊ ஆஆஅ பேச முடியல நீ சொல்வத கேட்டு சிரிக்கும் நிலையிலும் நான் இல்லை என்கிறார்கள்,

ஆம் பல் போனால் சொல் போகும் தான்
பல்லுக்குன்னு பெரிய பதிவு இருக்கு

மெதுவாபோடனும்.
குளிர்காலம் வந்தாலே எல்லோருக்கும் பல்வலி வருவது சகஜம் தான்.


( வாயில் பஞ்ச அடைத்து வரும் போது உங்கள் மனைவி சிரித்த முகத்துடன்) சரியா வலி பதிவ ஜோக்கா போட்டுட்டீஙக்

ஆமினா சொன்னது…

இப்படியா பயமுடுத்துரது????

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சுவாரஸ்யமான எழுத்து நடையில் அசத்தும் டாக்டர் சாகுல் ஹமீது அவர்களுக்கு ஸலாம்.

நல்ல பகிர்வு அப்துல்காதர் அண்ணா.

ஹுஸைனம்மா சொன்னது…

நல்ல நகைச்சுவைப் பதிவு. பேராசிரியர் அல்லவா, அதுதான் பெரிதாகச் சிரிக்க வைத்திருக்கிறார்!! மிக்க நன்றி.

எனினும், இதில் ஒரு ஆபத்து இருக்கிறது. நான் அடுத்த வாரம் பல் டாக்டரிடம் செல்லவிருக்கிறேன். டாக்டர் என் வாயினுள் ஊசிபோட முனையும்போதோ, அல்லது வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும்போதோ, இப்பதிவு நினைவுக்கு வந்து நான் சிரிக்க முற்பட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என எச்சரிக்கிறேன். நஷ்ட ஈட்டுக்கு பணம் ரெடி செய்துகொள்ளுங்கள் இருவரும்!!

:-)))))

Philosophy Prabhakaran சொன்னது…

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

vanathy சொன்னது…

நாட்டாமை, நல்லா இருக்கு. கடவுளே! நான் உங்கள் பேராசிரியரை மறந்து உங்களை அந்த இடத்தில் வைச்சு இறுதி வரை படிச்சு தொலைச்சுட்டேன். என்னடா நாட்டாமை தாத்தாவா என்று குழம்பிட்டேன் ஹிஹி...

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Thekkikattan|தெகா சொன்னது…

// செமையா இருக்கு எழுத்து நடை! ஆமா இந்த முனைவர் M.M.ஷாஹுல் ஹமீது Ph.D. விலங்கியல் துறை பேராசிரியரா? நானும் அங்கேதான் படிச்சேன் - இளங்கலை.//

வாங்க சார். நீங்களும் அங்கே தான் படிச்சீங்களா?? ரொம்ப சந்தோசம். எனக்கு என் நண்பர் வழியாகத்தான் இந்த பதிவு கிடைத்தது. அவருடைய துறை மேலே குறிப்பிட்டிருப்பது மட்டுமே எனக்கு தெரியும்!!

நன்றி Thekkikattan|தெகா உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சவுக்கடி கூறியது...

// சுவையாகச் சொல்கிறீர்கள்! சுவற்றை- சுவரை என்று திருத்துங்கள். சரி, நீலமும் ஊதாவும் வெவ்வேறு வண்ணங்களல்லவா?//

வாங்க சார். வந்தவுடன் எங்களுக்கு சவுக்கடியா? ரொம்ப நல்லா இருக்கு!! (சும்மா...!!) நீங்க சுவரை திருத்தினாலும் நீலமும், ஊதாவும் ஒன்று தானென்று என் நண்பர் வாதிடுகிறார். என்ன சொல்ல??

நன்றி சவுக்கடி உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// ஜாலி ஜமால் அனுபவம் எனக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது, நான் பல் டாக்டரிடம் போகனும்னு நாளை கடைத்திட்டு இருக்கேன்..//

வாங்க டீச்சர். எதுக்கு நாளை கடத்தணும். அப்பப்ப உள்ள வேலைகளை டைம்டேபிள் போட்டு முடிக்கிற ஆளாச்சே நீங்க!! நீங்களே இப்படி சொல்லலாமா? அவ்வவ்..!!

நன்றி asiya omar உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// ha,ha,ha,ha... "toothfully", it is a nice post. :-) //

வாங்க டீச்சர்!! I like great american sound ha..ha..ha..ha.. ha...

நன்றி Chitra உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

// நல்[பல்]லா இருக்குய்யா......//

வாங்க பாஸ்!! உங்க பல் நல்லா இருக்கா..ரொம்ப சந்தோசம் ஹா ஹா

நன்றி MANO நாஞ்சில் மனோ உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vadivel கூறியது...

// Neenga entha varudam Paditherkal. Nanga Padikiurm pothu "Jail Jamal" Endru Sonnanrgal. Avalvu Kandipu. //

வாங்க சார். எல்லா வருடமும் கண்டிப்பு தான். சும்மா ஒரு ரைமிங்க்காக ஜாலி ஜமால் என்று சொல்வார்கள். அப்படி சொல்லி யாவது மனசை சந்தோசப் படுத்திக் கொள்ளலாமே! ஜாலியா விட்டா படிப்பு எங்கே ஏறும்!!

நன்றி vadivel உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// வெயில் காலம், குளிர்காலம் என்பது போல் இது என்னா பல் புடுங்கள் காலமா ?? பல்லுக்குன்னு பெரிய பதிவு இருக்கு. குளிர்காலம் வந்தாலே எல்லோருக்கும் பல்வலி வருவது சகஜம் தான்.//

வாங்க ஜலீலாக்கா. உங்களிடமும் ஒரு பல்லு பதிவு இருக்கா. அவசியம் போடுங்க!!

//(வாயில் பஞ்ச அடைத்து வரும் போது உங்கள் மனைவி சிரித்த முகத்துடன்) சரியா வலி பதிவ ஜோக்கா போட்டுட்டீஙக!!) //

ஆமா அந்த நேரத்தில் வாய திறந்தா, பஞ்சையும் பார்த்துல இன்னும் சிரிப்பாங்க!!

நன்றி Jaleelaக்கா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// இப்படியா பயமுடுத்துரது????//

வாங்க ஆம்ஸ், ஆமா தெரியாமத்தான் கேட்க்கிறேன், இது பயமுறுத்தப் போட்டப் பதிவா? :-)))

நன்றி ஆமினா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுசைனம்மா கூறியது

//இப்பதிவு நினைவுக்கு வந்து நான் சிரிக்க முற்பட்டால் ஏற்படும்
விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என எச்சரிக்கிறேன். நஷ்ட
ஈட்டுக்கு பணம் ரெடி செய்து கொள்ளுங்கள் இருவரும்!!//

வாங்க ஹுசைனம்மா, அது சரி ... நீங்க சிரிக்கிறதப் பார்த்து பல்லு புடுங்க வந்த டாக்டர், என்னமோ ஏதோன்னு வெளில ஓடிப் போயிட்டார்னா நீங்க என்ன பண்ணுவீங்களாம்!! ஹா..ஹா..

நன்றி ஹுசைனம்மா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Philosophy Prabhakaran கூறியது

//பிரபா ஒயின் ஷாப் திறப்பு விழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்://

பாஸ் திறப்பு விழாவிற்கு வந்த போதை இன்னும் தீரலை!! (நான் சொல்வது படித்த போதை!!)

நன்றி Philosophy பிரபாகரன் உங்களின் வருகைக்கும் வரவேற்புக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நாட்டாமை, நல்லா இருக்கு. கடவுளே! நான் உங்கள் பேராசிரியரை மறந்து உங்களை அந்த இடத்தில் வைச்சு இறுதி வரை படிச்சு தொலைச்சுட்டேன். என்னடா நாட்டாமை தாத்தாவா என்று குழம்பிட்டேன் ஹி..ஹி...//

நான் தான் பிரபா ஒயின் ஷாப் திறப்பு விழாவிற்கு சென்று (படித்த) வந்த போதையில் சொன்னேன் என்றால் நீங்களுமா வான்ஸ்?? தாத்தா பாட்டி என்பது எல்லாருக்குமா வாய்க்கிது. உங்க வாய் முகூர்த்தம் அப்படி வாய்க்கும் நேரம் அமையும் போது, நீங்கள் எங்கிருந்தாலும் (ஈவன் அமெரிக்கா) எவ்வளவு செலவா னாலும் என் பேரன் பேத்திகளை உங்களிடம் காட்ட நிச்சயம் அழைத்து வருவேன் வான்ஸ். அந்த நாள் தான் எந்நாளோ??

நன்றி vanathy உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// சுவாரஸ்யமான எழுத்து நடையில் அசத்தும் டாக்டர் சாகுல் ஹமீது அவர்களுக்கு ஸலாம். நல்ல பகிர்வு அப்துல்காதர் அண்ணா//

அப்துல்காதர் அண்ணாவாகி விட்டதால், தம்பி அக்பரை நெடுஞ்செழியனாக ஆக அழைக்கிறேன் ஹா.. ஹா..

நன்றி சிநேகிதன் அக்பர் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா சொன்னது…

காதர்...மூணு பல்லுப் போனதுக்கே இப்பிடின்னா...மிச்சப் பல் எல்லாம் இன்னும் இருக்கே !