facebook

திங்கள், ஜனவரி 31, 2011

பரங்கிப்பேட்டை சாப்பாட்டுக் கடை...!!!


"பரங்கிப்பேட்டை சாப்பாட்டுக்கடை"

இந்த மாதம் நான் வலையிட்ட "புத்தூர் சாப்பாட்டுக்கடை" பதிவை
பார்த்து விட்டு, தல ஜெய்லானி தங்கள் ஊர் (பரங்கிபேட்டை)
சாப்பாட்டு வகைகளைப் பற்றி தானே இயற்றி, தானே பாடி, எனக்கு
U-tube பில் அனுப்பியிருந்தார். அந்த பாடலின் பதிவையும், அவரது
குரல் வளத்தையும் நீங்களே கேட்டுச்  சொல்லுங்க!! வாழ்க தல...
ஹி..ஹி..!! (ஊர்காரர்கள் கோபிக்காமல் இருப்பார்களாக!! :-)

ஊ..ஊ..ஊ.. ஊசிக் குறிப்பு :

(இது வான்ஸ், பூஸார் ஆகியோர்களுக்கு ரொம்ப காது குளிரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது!! மற்றவர்கள் தாராளமாய் (கருத்து தெரிவிக்கலாம்) ஏன் கும்மளாம்...!! க்கி..க்கி..)


***********************************************************

நன்றி சொல்லும் நேரம்..!!

நேற்று முழுக்க லீவில் வீட்டில்தானிருந்தேன். நெட் லைன்
வேலை செய்யவில்லை. ஒரே கொண்டாட்டம் ச்சே...
திண்டாட்டம் தான். டிவி புரோகிராம் பார்க்கலாமென்றால் பேசாம
போத்திக்கிட்டு தூங்கலாம். வெளியில் போகணும் என்று நினைத்-
தாலும் நிரம்ப குளிராய் இருந்தது நிஜம். வேணும்னா இங்குள்ளவர்-
களை கேட்டுத்தான் பாருங்களேன். வரி வரியாய் புலம்புவார்கள்.

ஆனால் இங்குள்ள (சவுதி) தம்மாம் முனிசிபாலிட்டியை (பலதியா)
கொஞ்சம் புகழ்ந்து தானாகனும். ஏனென்றால் இந்த குளிர் நேரத்-
துக்கு இதமாய் குளிப்பதற்கு சுடு தண்ணியை பைப் லைனில்
அனுப்புகிறார்கள். நெஜம்மா... நம்புங்க!! தம்மாம் மெயின் சிட்டியில்
உள்ள எங்கள் ஏரியாவில் நாள் முழுக்க சுடு தண்ணிதான்
வருகிறது.

இந்த குளிர் நாளில் இரண்டு மூன்று அல்லது நான்கு மாதம்
வரை ஹீட்டர் உதவி அவசியம் தேவைப்படும். இந்த வருடம் என்னவென்றால் குளிர் ஆரம்பித்த, சென்ற மாதத்திற்கு முந்திய மாதத்திலிருந்து இதே மாதிரி தான் வெந்நீர் வந்துக் கொண்டி
ருக்கிறது. நாங்கள் ஹீட்டரே யூஸ் பண்ணுவதில்லை.  சூடென்றால் அப்படியொரு சூடு. பக்கெட்டில் பிடித்து வைத்திருக்கும் குளிர்ந்த
நீரை இதனோடு கலந்து தான் குளிக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மற்ற ஏரியாவிலெல்லாம் அப்படியில்லையென தெரிவிக்கிறார்கள்.
இந்த வருடம் எங்களுக்கு இது புதுசாய் தெரிகிறது. நன்றி தம்மாம் முனிசிபாலிட்டிக்கு!!

மற்ற ஊரில் - மற்ற நாட்டில் - உள்ளவர்கள் இதைப் படிக்கும்போது
இது மாதிரி உங்கள் பகுதிகளிலும் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
தமிழ் நாட்டில் பைப்பில் நீரே வராமல் உள்ள பகுதியில் உள்ளவர்கள் தயவு செய்து கண்பட்டு விடாதீர்கள்.ஹி..ஹி..நீங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் சும்மா!! லுலுவாயிக்கு!!

**********************************************************************************
 
மீனவர் பிரச்சினை:  ஒன்று படுவோம்!! வென்று காட்டுவோம் !!

மீனவர்களுக்காக தமிழக இணைய நண்பர்கள் ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் கொடுத்த ஆதரவுக்குரல் ஒட்டு மொத்த
ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. இது நம்
முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி!!
 
இணையம் என்பது அரட்டைக்காக மட்டுமல்ல அதன் மூலம் சமூகத்துக்காகவும் குரல் கொடுக்கமுடியும் என நிருபித்துக்
காட்டிய அனைவருக்கும் நன்றிகள்!!.

இத்துடன் சேர்த்து தமிழக மீனவர்களை காக்க இணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புகார் கடிதத்தில் உங்களது கையெழுத்-
தையும் சேர்த்து விடுங்கள். 1 லட்சம் கையெழுத்து இருந்தால்
அரசின் கவனத்தை ஈர்க்கமுடியும் என்பதால் விரைந்து
செயல்பட்டு உங்களது கையெழுத்தை இணைத்து மீனவர்களின்
நலனில் பங்கு கொள்ளுங்கள்.

கையெழுத்திட கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.

http://www.petitiononline.com/TNfisher/

55 கருத்துகள்:

Unknown சொன்னது…

வடை எனக்கே

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

நானும் பல பதிவுகளில் ட்ரை பண்ணி இருக்கேன்
ஆனால் இப்ப தான் வடை கிடைச்சிருக்கு

எம் அப்துல் காதர் சொன்னது…

வடை உங்களுக்கு தான். பொறுமையா உட்கார்ந்து
'பிஸ்மில்லா' சொல்லி சாப்பிடுங்க!!

Philosophy Prabhakaran சொன்னது…

சாப்பாட்டுக்கடை என்ற தலைப்பை பார்த்ததும் ஆர்வம் அதிகமாகி ஓடி வந்தேன்... எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ஆச்சர்யங்கள் இல்லாதது வருத்தமே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அங்கும் குளிரா பாஸ்! இங்கு ( பிரான்சில் ) தாங்க முடியல!

ஆமினா சொன்னது…

ஜெய்லானி வாய்ஸ் ரொம்ப சூப்பராயிருக்கு

Asiya Omar சொன்னது…

அளவுடனே திம்போம்
நல்முடனே வாழ்வோம்

--சூப்பர்,பரங்கிபேட்டை என்றவுடன் நானும் சகோ.ஜெவை தான் நினைத்தேன்,இப்படி காலையிலேயே கண்ணில் இத்தனையும் காட்டி எதைச் செய்ய எதை விட..இன்று வீட்டில் அனைவரையும் இதை காட்டியே ஓட்ட வேண்டியது தான்..
பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி சகோ.கானா உலகநாதன் அளவுக்கு புகழ் பெற சான்ஸ் இருக்கு சகோ.யார் அந்த புண்ணியவான்,அவருக்கு என் பாராட்டுக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

ஜெய்லானி யின் குரல் வளம் ஆச்சர்யம். நக்கல் நையாண்டி இல்லாமல் ஒழுங்காக பயிற்சி இருந்திருதால் இன்னுமொரு சாகுல் ஹமீதாக வந்திருக்கலாம்.

ஸாதிகா சொன்னது…

யப்பா..நல்ல குரல் வளம்,எடுப்பான பசியைதூண்டும் பாடல் வரிகள்.ஜெய்லானிக்கு இவ்வளவும் சாப்பிட ஆசையா?சரியான சப்பாட்டுராமரா இருப்பார் போலிருக்கு.பூஸ்,வான்ஸ் சீக்கிரம் வாங்க.

Chitra சொன்னது…

தல ஜெய்லானி தங்கள் ஊர் (பரங்கிபேட்டை)
சாப்பாட்டு வகைகளைப் பற்றி தானே இயற்றி, தானே பாடி, எனக்கு
U-tube பில் அனுப்பியிருந்தார். அந்த பதிவையும், அவரது குரல்
வளத்தை நீங்களே கேட்டு சொல்லுங்க!! வாழ்க தல ஹி..ஹி..!!


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... செமையா பாடி இருக்கிறார்.... வாழ்க!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//தல ஜெய்லானி தங்கள் ஊர் (பரங்கிபேட்டை)
சாப்பாட்டு வகைகளைப் பற்றி தானே இயற்றி, தானே பாடி, எனக்கு
U-tube பில் அனுப்பியிருந்தார். அந்த பதிவையும், அவரது குரல்
வளத்தை நீங்களே கேட்டு சொல்லுங்க!! வாழ்க தல ஹி..ஹி..!//

இதையெல்லாம் பார்த்துட்டு அவரு உங்களை சும்மாவா விடுவாரு. அவரு பதிவுல உங்களை என்ன பாடு படுத்த போறாரோ :)

//மற்ற ஏரியாவிலெல்லாம் அப்படியில்லையென தெரிவிக்கிறார்கள்.
இந்த வருடம் எங்களுக்கு இது புதுசாய் தெரிகிறது. நன்றி தம்மாம் முனிசிபாலிட்டிக்கு!! //

ம்ம்ம். நடத்துங்க.

ஊர் நிலமைக்கு இங்கு பரவாயில்லைன்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்.

மீனவர் பிரச்சினை: ஒன்று படுவோம்!! வென்று காட்டுவோம் !!

ஜெய்லானி சொன்னது…

////தல ஜெய்லானி தங்கள் ஊர் (பரங்கிபேட்டை)
சாப்பாட்டு வகைகளைப் பற்றி தானே இயற்றி, தானே பாடி, எனக்கு
U-tube பில் அனுப்பியிருந்தார். அந்த பதிவையும், அவரது குரல்
வளத்தை நீங்களே கேட்டு சொல்லுங்க!! வாழ்க தல ஹி..ஹி..!//

அடப்பாவி மக்கா....கவுத்திட்டியே....பத்த வச்சிட்டியே பரட்டை.....அவ்வ்வ்வ்

நான்...அவன் ...இல்லை...

ஜெய்லானி சொன்னது…

//இதையெல்லாம் பார்த்துட்டு அவரு உங்களை சும்மாவா விடுவாரு. அவரு பதிவுல உங்களை என்ன பாடு படுத்த போறாரோ :) //

அக்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....என் மூணாவது கண்ணையும் திறக்க வச்சிட்டீங்க.... (( இந்த பதிவுல நா எத்தனை பேருக்கு பதில் சொல்வேன்..அவ்வ்வ்...அவ்வ்வ்..அவ்வ்வ்)))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது /

// நான்...அவன் ...இல்லை... //

என்ன... part-3 ஆஆஆஆ.. இத நாங்க நம்பனுமா க்கி..க்கி !!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சாப்பாட்டு கடையில் இன்னும் கொஞ்சம் காரம், மனம்,சேர்த்து சுவையாக கொடுக்கவும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது..

//((( இந்த பதிவுல நா எத்தனை பேருக்கு பதில் சொல்வேன்.. அவ்வ்வ்... அவ்வ்வ்.. அவ்வ்வ்))) //

ஒவ்வொரு பதிவிற்கும் ஒழுங்கா வந்து கமெண்ட்ஸ் போட்டிருந்தா இந்த வம்பு வந்திருக்குமா? ஒழுங்கா உங்க கடையிலாவது புதுச் சரக்கு போட்டீங்களா?? இல்லையே!! போய் கட்டிலுக்கு கீழே, பனமரத்து மேலே ஒளிஞ்சுக்கிட்டா...?? அவ்வவ்... அவ்வவ்... அவ்வ்வ்வ்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த தடவ சாப்பாட்டுல மசாலா கொஞ்சம் கம்மிதான்.!

athira சொன்னது…

ஆ... ஜெய்யின் குரலா இது... நாகூர் ஹனிபா தோத்துப்போயிடுவார்போல இருக்கே...

ஜெய்யுக்கு ஆஆஆஆஆஆசனம் இப்போ நல்லா வேர்க் ஆகுது:).

ஜலீலாக்கா சொன்னா ஜெய் பாடுறார் ஓடிவந்து கேளுங்க என, அதுதான் ஓஓஓஓஓஓடிவந்தேன்.


கடசிலயாவது பாடினவரின் படம் வருமெனப் பார்த்தால் மிஸ்டர் பீன் நிற்கிறார்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஊஊஊஊஊசிக்குறிப்பு:
பாட்டைப் பப்ளிக்கிலே போட்டு ஜெய்யின் வயதைத்தெரியப்படுத்திய அப்துல் காதருக்கு நண்டி நண்டி நண்டி.... குரலை வச்சே கணக்கெடுப்பமில்ல:)))). மீயா எஸ்ஸ்ஸ்ஸ்...

athira சொன்னது…

ஸாதிகா சொன்னது…
யப்பா..நல்ல குரல் வளம்,எடுப்பான பசியைதூண்டும் பாடல் வரிகள்.ஜெய்லானிக்கு இவ்வளவும் சாப்பிட ஆசையா?சரியான சப்பாட்டுராமரா இருப்பார் போலிருக்கு.பூஸ்,வான்ஸ் சீக்கிரம் வாங்க.
////
ஸாதிகா அக்கா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.
இல்ல ஸாதிகா அக்கா ஜெய் தவம் செய்கிறார் சாப்பிடாமல், அதுதான் பொறுக்கமுடியாமல் சாப்பாட்டைப் பற்றியே ஒரு பாட்டு....

ஜெய்லானி சொன்னது…

//கடசிலயாவது பாடினவரின் படம் வருமெனப் பார்த்தால் மிஸ்டர் பீன் நிற்கிறார்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

ஏன் நாந்தான் ‘’அங்கே’’ இருக்கிறேனே பார்க்கலையா..?

//பாட்டைப் பப்ளிக்கிலே போட்டு ஜெய்யின் வயதைத்தெரியப்படுத்திய அப்துல் காதருக்கு நண்டி நண்டி நண்டி.... குரலை வச்சே கணக்கெடுப்பமில்ல:)))). //

இன்னும் எல் கே ஜி தான் போய்கிட்டு இருக்கேன் ..அதுக்குள்ள... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

செ.சரவணக்குமார் சொன்னது…

என்னாது பைப்ல சுடுதண்ணி வருதா? ம்ம்ம்.. நல்லாயிருங்க ஓய்..

மீனவர் பிரச்சனை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

டயூனுக்குப் பொருத்தமாய் வார்த்தைகளைப் போட்டு,
பிசிறில்லாமல், அருமையாய் பாடினீர்கள், ஜெய்லானி!
உண்மையிலேயே அசந்துவிட்டேன்.
இதைப் பதிந்தமைக்கு அப்துல் காதர், உங்களுக்கு நன்றி!

வெந்நீர் வரும் குழாய் செய்தி - வியப்பு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

மீனவர் பிரச்னைபற்றி எழுதியமைக்கு, பாராட்டுக்கள்! நன்றி!

athira சொன்னது…

ஜெய்லானி கூறியது...
//கடசிலயாவது பாடினவரின் படம் வருமெனப் பார்த்தால் மிஸ்டர் பீன் நிற்கிறார்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

ஏன் நாந்தான் ‘’அங்கே’’ இருக்கிறேனே பார்க்கலையா..? ////////
அதில யாரும் தலைகீழாக இல்லையே....:)))))


/////இன்னும் எல் கே ஜி தான் போய்கிட்டு இருக்கேன் ..அதுக்குள்ள... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்/// எந்த எல் கே ஜி யைச் சொல்றீங்க..... :). கடவுளே நான் இனி இந்தப்பக்கம் தலையே வைக்கமாட்டேன்:))).... புடிச்சுப்பாருங்க பார்ப்பம்..... மீயா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Anisha Yunus சொன்னது…

:))

எம் அப்துல் காதர் சொன்னது…

எல்லோரும் வாங்க!!!
வாங்க அதிரா (பூஸார்-நலமா?) வாங்க அன்னு (நலமா?)

உங்கள் எல்லோருக்கும் நாளை வந்து பதில் சொல்வேன். இப்ப மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...!!

vanathy சொன்னது…

கடவுளே! இவ்வளவு நடந்திருக்கோ. ஜெய், என் குலதெய்வம் பாலசுப்ரமணியம் உங்க முன்னாடி நிற்க முடியுமா??? இல்லை. ஒரு தேர்ந்த பாடகன் போல என்ன ஒரு தெளிவு, தங்கு தடையின்றி அருவி போல கொட்டுது.

நாட்டாமை, ஜெய் என்ன செய்தாலும் இப்படி ஒரு பதிவா போடோணும்.

மீனவர்கள் பற்றிய செய்திக்கு நன்றி.

குளிர் என்று போர்த்திக் கொண்டு படுக்காமல் வெளியே போய் வர வேண்டும். சரியா, நாட்டாமை.

Jaleela Kamal சொன்னது…

ஆஹா சாப்பாடு வகைகளும் பிரமாதம், ஜெய்லானியின் குரல் வளமும் அருமை.

Jaleela Kamal சொன்னது…

அதிரா நான் சொல்ல வந்தத நீங்க சொல்லிபூட்டீங்க.
ஜெய் குரலில் நாஹூர் ஹனீபாவையே மிஞ்சி விட்டார்.

பொருத்தமான சாப்பாட்டு கடை

மோகன்ஜி சொன்னது…

ஜெயலானியின் குரல் ரொம்ப கேட்ட மாதிரியே இருக்கு காதர்பாய்!பரங்கிபேட்டை எங்க கடலூருக்கு பக்கத்துல இருக்கிரதாலா?
சுடுநீர் வரத்துக்கு வாழ்த்துக்கள். கொடுத்துவச்ச மகராசன். தேச்சி தேச்சி குளிக்கலாம்.!
மீனவர் பிரச்சினையில் உங்கள் முனைப்புக்கு என் வணக்கங்கள் சகோதரா!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹாஜா மொஹைதீன் கூறியது...

// நானும் பல பதிவுகளில் ட்ரை பண்ணி இருக்கேன். ஆனால் இப்ப தான் வடை கிடைச்சிருக்கு!!//

வாங்க ஹாஜ மொஹைதீன் உங்கள் ஆர்வத்திற்கும், கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Philosophy Prabhakaran கூறியது

//சாப்பாட்டுக்கடை என்ற தலைப்பை பார்த்ததும் ஆர்வம் அதிகமாகி ஓடி வந்தேன்... எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ஆச்சர்யங்கள் இல்லாதது வருத்தமே...//

வாங்க Philosophy Prabhakaran அடுத்தமுறை அஞ்சு கறி சோறும், மீன் பிரியாணியும் போட்டுடுவோம்.

பிரபா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மாத்தி யோசி கூறியது...

// அங்கும் குளிரா பாஸ்! இங்கு (பிரான்சில்) தாங்க முடியல! //

வாங்க பாஸ், என்ன பண்றது பொழப்புக்காக எதையெல்லாம் தாங்க வேண்டியிருக்கு!!

நன்றி மாத்தி யோசி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// ஜெய்லானி வாய்ஸ் ரொம்ப சூப்பராயிருக்கு//

இது ஒரு சாம்பிள் தான்!! இனி வரிசையாய் MP3 அளவுக்கு வரும்.

நன்றி ஆமினா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// சகோ.கானா உலகநாதன் அளவுக்கு புகழ் பெற சான்ஸ் இருக்கு //

நல்லா சொன்னீங்க. அவர் கூட லேட்டா தானே புகழ் பெற்றார்.

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கக்கு - மாணிக்கம் கூறியது...

// ஜெய்லானியின் குரல் வளம் ஆச்சர்யம். நக்கல் நையாண்டி இல்லாமல் ஒழுங்காக பயிற்சி இருந்திருதால் இன்னுமொரு சாகுல் ஹமீதாக வந்திருக்கலாம்.//

உங்களுக்கு புரியுது அண்ணே! ஆனா தல அதை எல்லாம் அசால்ட்டா நெனைக்கிதே! என்ன செய்ய??

நன்றி கக்கு - மாணிக்கம் சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...
//யப்பா..நல்ல குரல் வளம், எடுப்பான பசியைதூண்டும் பாடல் வரிகள்.ஜெய்லானிக்கு இவ்வளவும் சாப்பிட ஆசையா?சரியான சப்பாட்டுராமரா இருப்பார் போலிருக்கு.//

சேச்சே...அப்படி எல்லா மில்ல ஸாதிகாக்கா, பாடனும் மற்றவர்களை அட்ராக்ட் செய்யணும் என்ற பேரார்வம் தான் காரணம். மற்றபடி சாப்பாடெல்லாம் ஜாஸ்தியா சாப்பிட மாட்டார் என் ஆருயிர் நண்பன். அது எனக்கு நல்லாவே தெரியும். பாட்டில் ஒருவரியை நீங்க கவனிக்கலையா??
"அளவுடனே திம்போம் நல்முடனே
வாழ்வோம்" என்று வருதே!!

நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சித்ரா கூறியது...

//......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... செமையா பாடி இருக்கிறார்.... வாழ்க! //

வாங்க டீச்சர், உங்கள் வாழ்த்து அவரிடம் சேர்க்கப்பட்டது!!

நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர்...

// இதையெல்லாம் பார்த்துட்டு அவரு உங்களை சும்மாவா விடுவாரு. அவரு பதிவுல உங்களை என்ன பாடுபடுத்த போறாரோ :) //

இதெயெல்லாம் போட்டுக் கொடுக்க ஒரு குரூப் கிளம்பியாச்சா!! அவ்வ்வ்வ்..

நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது..

//அக்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....என் மூணாவது கண்ணையும் திறக்க வச்சிட்டீங்க.... //

அதென்னா மூணாவது கண். பனமரத்து மேல ஏறி உட்கார்ந்து நொங்கு (மூணு கண்) சாப்பிட்ட கதையா?? அவ்வ்வ்வ்!!!

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

// சாப்பாட்டு கடையில் இன்னும் கொஞ்சம் காரம், மனம்,சேர்த்து சுவையாக கொடுக்கவும்//

இது கொஞ்சம் டயட் சாப்பாடு. அடுத்த முறை கல்யாண விருந்து தான்!!

நன்றி ரஹீம் கஸாலி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//இந்த தடவ சாப்பாட்டுல மசாலா கொஞ்சம் கம்மிதான்.!//

அடுத்த முறை 'பன்னீஸ் கிச்சன்ல' இருந்து கடன் வாங்கியாவது விருந்து வச்சிருவோம்!! கேட்டா
'வெளங்கிடும்னு' சொல்வீங்களே!! ஹா.. ஹா..

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

athira கூறியது...

// ஆ... ஜெய்யின் குரலா இது... நாகூர் ஹனிபா தோத்துப்போயிடுவார்போல இருக்கே...ஜெய்யுக்கு ஆஆஆஆஆஆசனம் இப்போ நல்லா வேர்க் ஆகுது:).//

ஆசனமாஆஆஆஆஆ....!! இது எப்பத்திலிருந்து??? பாட்டு பாடிக்கிட்டே ஆசனமாஆஆஆஆஆ
...!!! ம்ம்ம்ம் ஹி..ஹி..ஹி.. பாஸ் அப்படியே ஒரு அம்ருத வாஹினி பாடி அனுப்புங்க!!

நன்றி athira உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// கடசிலயாவது பாடினவரின் படம் வருமெனப் பார்த்தால் மிஸ்டர் பீன் நிற்கிறார்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

பாடினவரின் படம் உங்களுக்கு எத்தன வேணும் பூஸ்!!

// ஊஊஊஊஊசிக்குறிப்பு: பாட்டைப் பப்ளிக்கிலே போட்டு ஜெய்யின் வயதைத் தெரியப்படுத்திய அப்துல் காதருக்கு நண்டி நண்டி நண்டி.... குரலை வச்சே கணக்கெடுப்பமில்ல
:)))). மீயா எஸ்ஸ்ஸ்ஸ்...//

ஓஹோ அப்படி ஒரு பாய்ண்ட் of வியூ இருக்கா?? இல்லையே வயசு
'இளமை எனும் பூங்காற்று' ரகமாத்தானே இருக்கு!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// இல்ல ஸாதிகா அக்கா ஜெய் தவம் செய்கிறார் சாப்பிடாமல், அதுதான் பொறுக்க முடியாமல் சாப்பாட்டைப் பற்றியே ஒரு பாட்டு.....//

இது சாப்பாட்டு தவமா?? வில் வித்தை கற்றவராயிற்றே கர்ர்ர்ர்ர்ர்..

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//கடசிலயாவது பாடினவரின் படம் வருமெனப் பார்த்தால் மிஸ்டர் பீன் நிற்கிறார்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

ஏன் நாந்தான் ‘’அங்கே’’ இருக்கிறேனே பார்க்கலையா..?

பாடலில் நின்றிருக்கிறீர்கள் தல!! அத அவங்க கவனிக்கல!! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...!!

//பாட்டைப் பப்ளிக்கிலே போட்டு ஜெய்யின் வயதைத்தெரியப்படுத்திய அப்துல் காதருக்கு நண்டி நண்டி நண்டி.... குரலை வச்சே கணக்கெடுப்பமில்ல:)))). //

//இன்னும் எல் கே ஜி தான் போய்கிட்டு இருக்கேன்
..அதுக்குள்ள... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

எல் கே ஜி லேயே இவ்வளவு விவரமா!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ செ.சரவணக்குமார் கூறியது...

// என்னாது பைப்ல சுடுதண்ணி வருதா? ம்ம்ம்.. நல்லாயிருங்க //

வாங்க தல நீங்களும் இந்தப் பக்கம் வந்துட்டா என்ன??

நன்றி செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ NIZAMUDEEN கூறியது...

// வெந்நீர் வரும் குழாய் செய்தி - வியப்பு! //

வாங்க நிஜாம் எங்களுக்கும் மிகுந்த வியப்பு தான்.

நன்றி NIZAMUDEEN உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அதிரா கூறியது...

//// ஏன் நாந்தான் ‘’அங்கே’’ இருக்கிறேனே பார்க்கலையா..? ////

/// அதில யாரும் தலைகீழாக இல்லையே....:)))))//

எங்களுக்கு 'கிளைகள்' ஏதும் இல்லை என்று சொன்னாரே!! நீங்க அதை சொல்றீங்களா??
இல்லை கவனிக்கலையா??

//எந்த எல் கே ஜி யைச் சொல்றீங்க..... :)

Laughing King the Great ஆக
இருக்குமோ!! க்கி..க்கி..

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

// :)) //


வாங்க அன்னு நலமா??

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// ஒரு தேர்ந்த பாடகன் போல என்ன ஒரு தெளிவு, தங்கு தடையின்றி அருவி போல கொட்டுது. நாட்டாமை
ஜெய் என்ன செய்தாலும் இப்படி ஒரு பதிவா போடோணும். //

தோளில் தலையாட்டி (மோகன்) துண்டு மட்டும் போடலங்றீங்க, தல இப்பவே இத பார்த்தா போனில் நம்மை (நான் ரொம்ப பயந்த புள்ளன்னு) மிரட்டும்!! அவ்வ்வ்வ் ...

//குளிர் என்று போர்த்திக் கொண்டு படுக்காமல் வெளியே போய் வர வேண்டும். சரியா, நாட்டாமை.//

வாக்கிங்கா?? அது பாட்டுக்கு நடந்துகிட்டு தான் இருக்கு!! மற்றபடி உடம்பு ஊசி மாதிரி ஆயிடுச்சு!! ஹி.. ஹி.. வெளியே சொல்லிடாதிங்க!!

நன்றி வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// ஆஹா சாப்பாடு வகைகளும் பிரமாதம், ஜெய்லானியின் குரல் வளமும் அருமை! அதிரா நான் சொல்ல வந்தத நீங்க சொல்லி பூட்டீங்க.ஜெய் குரலில் நாஹூர் ஹனீபாவையே மிஞ்சி விட்டார்.//

அப்படி சொன்னா எங்கூர் ஹனிபா கோச்சுக்க மாட்டாரா ஜலீலாக்கா.

எல்லோரும் தலைய புகழோ புகழ்ன்னு புகழ்ந்துட்டீங்க!! ஒரு வகையில் அந்த புகழுக்கு நானும் காரணமா யிட்டேன். அத நெனெச்சா நெஞ்சு பெருமையில் விம்முகிறது. ஹா..ஹா..

நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// ஜெயலானியின் குரல் ரொம்ப கேட்ட மாதிரியே இருக்கு காதர்பாய்!பரங்கிபேட்டை எங்க கடலூருக்கு பக்கத்துல இருக்கிரதாலா?//

ஆஹா நீங்க கடலூருக்கு பக்கமா ஜி, ஆமா எங்க நம்ம கட பக்கம் ரொம்ப நாளா ஆளையே காணோம்.

நன்றி மோகன்ஜி வருகைக்கும் கருத்துரைக்கும்

Jaleela Kamal சொன்னது…

சாப்பாடு பாட்ட கேட்டு உண்ட மயக்கமா காதர் காக்காவுக்கு..