facebook

வியாழன், ஜூலை 29, 2010

மலைச்சாமி

                
                                                 
இங்கு சவுதியில் Al gosaibi, Al zamil, Kanoo, Olayan, Jufali, Ali Reza ஆகிய ஐந்தாறு பெரிய கம்பெனிகள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் செமி கவர்ன்மெண்ட் என்று சொல்வார்கள். அந்த கம்பெனி ஒன்றில் தான் நம்ம மலைச்சாமி வீட்டு டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவரின் பூர்வீகம் மதுரை என்றாலும் வசிப்பிடம் தற்போதைய மதரசாப் பட்டணம். நாங்கள் அவரை செல்லமாக சாமி என்றே அழைப்போம்

பெரியக் கம்பெனி வீட்டு டிரைவர் ஆகையால் சம்பளம் மூவாயிரம் ரியாலுக்கு குறையாமல் வாங்கினார். பெரிய அளவில் படிப்பு இல்லா விட்டாலும் விவரமா பேசுவார். மற்றவர்களை அவர் சொல்லி நகையாடியது கிடையாது. ஆனால் மற்றவகளின் கிண்டல் பேச்சுகளில் வகையாக மாட்டிக் கொள்வார்.

இரவு எத்தனை மணியானாலும் எங்கள் ரூமை கடந்து போகும் போது, போனில் கூப்பிட்டு “ஒரு சுலைமானி போட்டு வைங்க”(பால் கலக்காத டீக்கு அந்த பேர்) என்று சொல்லி குடித்து விட்டு தான் போவார்.

இந்த மாதிரி மேல் மட்டத்து குடும்பங்களில் எல்லாம்
மட்டன் கறி கிலோக் கணக்கில் வாங்க மாட்டார்கள்.
முழு ஆடுகள் தான். இவர் தான் போய் அறுத்து, வெட்டி
வாங்கி வருவார். இப்படி தான் ஒரு நாள் எங்களுக் கெல்லாம் லீவு நாளாக இருந்ததால் எங்களையும் தன் கூட வரச் சொன்னார். சரி சும்மா தானே இருக்கோம் என்று எங்களின் இரண்டு மூன்று நண்பர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போனோம்.

அவர் நேராக அரபுகாரனிடம் சென்று ஏதேதோ
சொல்லி விலைபேசி ஒரு ஆட்டை வாங்கி வெட்டச் சொல்லிவிட்டார். எட்டி நின்றதால் அவர் என்ன பேசினாரென்று எங்களுக்கு விளங்கல. இருந்தாலும் நம்மில் கூட வந்த கிண்டல் புடுச்ச நண்பர் ஒருவர் "சாமி ஆட்டுக் கறியில் முடி ஒட்டிக் கிட்டா
அது அவ்வளவா நல்லா இருக்காது. அதனால முடி ஒட்டாம வெட்டிக் கொடு என்று அரபுக்காரனிடம் போய் சொல்லு" என்று சொல்ல, அவரும் இவர்களின் கிண்டலை கவனிக்காமல் போய்க் கொண்டிருந்தார்.

நாங்கள் அவருக்குத் தெரியாமல் பின்னாடியே போனோம். அவர் அந்த அரபுக்காரனிடம், தன் முழங் கையை நீட்டி,  இன்னொரு கை விரலால் தொட்டுக் காட்டி, "மேரா போலோ.. (B)பால் டச் நை கரோ"   என்றார். (நான் சொல்கிறேன் முடி படாம வெட்டிக்  கொடு என்று அர்த்தமாம்)  நாங்க ளெல்லாம் விழுந்து புரண்டு சிரித்தோமே யொழிய, சாமி சளைக்கவில்லை. "ஏப்பா
நான் சொன்னது அவனுக்கு வெளங்குனுச்சு, அவன் சொன்னது எனக்கு வெளங்கிடுச்சு, போவியளா" என்பார் முத்தாய்ப்பாக..

இனி சாமியோடு ஒட்டிய அவரது சொந்த நிகழ்வுகளுக்குள்  பேசிக் கொண்டே போகலாம்
வாங்க!!

சாமிக்கு சவுதியிலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டி ருக்கிற காரணத்தினாலும், இங்கு பழகியவர்களின் ஈர்ப்பினாலும் முதல் குழந்தை பிறந்தவுடன் (இப்போதைக்கு முந்திய மன்னரின் பெயரான) ஃபஹத் என்ற பெயரை  வைத்து விட்டார். நாங்கள் ஏனென்று கேட்ட  போது "இந்த மண் தான் என்னை செழி
செழிப்பாக வாழ வைத்தது, இதற்கு நானென்ன கைம்மாறு செய்தேன்" என்பார் இந்த படிக்காத மேதை.

இரண்டாவது பிரசவத்தின் போது ரெட்டைக் குழந்தை
பிறந்ததால், பிரசவம் பார்த்த டாக்டரின் பெயரான மேரி
என்று பெண் குழந்தைக்கும், இன்னொரு ஆண் குழந்தைக்கு தனது குல சாமியின் பெயரையும் வைத்து விட்டார்.

இவைகளுக்கு குடும்பத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும்,
அவைகளை புறம் தள்ளி வைத்து விட்டே சமாளித்து வந்தார். பிள்ளைகள் வளர்ந்து ஸ்கூல் படிப்பை எட்டும் வரை...!

அதன் பின் தான் குழந்தைகளை ஸ்கூலில் சேர்த்த போது சின்ன சின்னதாய் பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கின. ஃபஹத், மேரி என்கிற பெயர்களை மாற்றச் சொல்கிறார்கள் என்று வந்து சொன்னார். ஏன்?

அது மாதிரி பெயர்கள் வைக்கக் கூடாதா??


                                               

31 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

மலைச்சாமி கதை நல்லாயிருக்கு.தொடரா?

Ahamed irshad சொன்னது…

Good..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மலைச்சாமி ரொம்ப நல்ல மனிதராக இருக்கிறார்.

இன்னும் தொடருமா?

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அதானே.. பெயரில் என்ன இருக்கிறது?..

vanathy சொன்னது…

பெயரில் என்ன இருக்கு? என் உறவினர் பெண் சொன்னார், அவரின் வகுப்பில் ஒரு பையனின் பெயர் ஹிட்லர்.

முஹம்மது ஆரிப் சொன்னது…

சாமியின் எண்ணங்கள் போற்றுதலுக்குரியவை! அருமை!

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ ம‌னித‌ராக‌ தெரிகிறார் ம‌லைச்சாமி.... தொட‌ருமா?..

ஜெய்லானி சொன்னது…

அவர் மலைசாமி இல்லை எவரெஸ்ட் சாமி . ஆமா என்னது சின்னதா முடிச்சிட்டீங்க டாக்குன்னு முடிஞ்சமாதிரி இருக்கு

ராஜவம்சம் சொன்னது…

சாமிக்கு வாழ்த்துக்கள்.

Al gosaibi யில் தான் வேலை செய்கிறேன் ரியாத்தில்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

//மலைச்சாமி கதை நல்லாயிருக்கு.தொடரா?//

இல்லை மேடம் இது உண்மைக் கதை. தொடராய் எழும் எண்ணமில்லை.

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அஹமது இர்ஷாத் கூறியது...

//Good..//

ரைட்டு..

அஹமது இர்ஷாத் உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அக்பர் கூறியது...

//மலைச்சாமி ரொம்ப நல்ல மனிதராக இருக்கிறார். இன்னும் தொடருமா?//

அவரின் ஒரு பிம்பத்தை மட்டுமே உங்களின் பார்வைக்கு வைத்தேன். அந்த நல்ல மனிதரின் சுவாரஸ்யங்களை பிரிதொருமுறை பார்க்கலாமே!

அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan(ஸ்டார்ஜன்) கூறியது...

//அதானே.. பெயரில் என்ன இருக்கிறது?..//

ஷேக், உங்களின் இந்த கேள்விக்கு, வாணியின் பதிலோடு இணைக்கப் பட்டிருக்கிறது.

Starjan(ஸ்டார்ஜன்)உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

பா.ராஜாராம் சொன்னது…

சுவராசியமான பகிர்வு சார்.

மலைச்சாமி, fahad, மேரி.

முக்கியமான உணர்வும், இடுகையும் சார். (அதி முக்கியமாய், கடைசி கேள்வி)

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

//பெயரில் என்ன இருக்கு? என் உறவினர் பெண் சொன்னார், அவரின் வகுப்பில் ஒரு பையனின் பெயர் ஹிட்லர்.//

ஆமா நான் உங்களிடம் கேட்ட விஷயமே வேற. மலைச்சாமி குடும்பத்தில், முஸ்லிம் பெயர் + கிறிஸ்டியன் பெயர் வைத்தது தான். அந்த ஸ்கூலில் பெயரை மாற்றி வைத்தால் தான் சேர்த்துக் கொள்வதாக சொன்னார்கள் என்றார். ஏன் என்ற கேள்வி இன்னும் மிச்சமிருக்கு??

வானதி உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ முஹம்மது ஆரிப் கூறியது...

//சாமியின் எண்ணங்கள் போற்றுதலுக்குரியவை! அருமை!//

உண்மை தான் சார்!!

முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

//ந‌ல்ல‌ ம‌னித‌ராக‌ தெரிகிறார் ம‌லைச்சாமி.... தொட‌ருமா?..//

இல்லை.. அவரே தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்>>>

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//அவர் மலைசாமி இல்லை எவரெஸ்ட் சாமி//.

நிச்சயமா....!!

//ஆமா என்னது சின்னதா முடிச்சிட்டீங்க டாக்குன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு//

ஆமா காரணம் நீங்கள் தான்!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ராஜவம்சம் கூறியது...

//சாமிக்கு வாழ்த்துக்கள்//

சொல்லிடுறேன் சார்!!

// Al gosaibi யில் தான் வேலை செய்கிறேன் ரியாத்தில்.//

அப்படியா சார் ரொம்ப சந்தோசம். chatting வாங்களேன்!!

ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

kavisiva சொன்னது…

நன்றி மறவாத நல்ல மனித சாமியண்ணே!

ஆமாம் பெயரில் என்ன இருக்கு? நமக்கு இஷ்டப்பட்ட பெயரை நம் பிள்ளைகளுக்கு வைக்கக் கூட நாட்டில் உரிமை இல்லையா? என்ன கொடுமை சார் இது?

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நன்றி தமிழிஷ்/இன்ட்லி

** Hi mabdulkhader,

Congrats!

Your story titled 'மலைச்சாமி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 31st July 2010 02:42:02 AM GMT

Here is the link to the story: http://ta.indli.com/story/312070

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பா.ராஜாராம் கூறியது...

//மலைச்சாமி, fahad, மேரி. முக்கியமான உணர்வும், இடுகையும் சார்.

(அதி முக்கியமாய், கடைசி கேள்வி)//

கரெக்ட் மக்கா, மிகச் சரியாக ஊடுருவி இருக்கிறீர்கள்!!

பா.ரா சார் உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ kavisiva கூறியது...

//நன்றி மறவாத நல்ல மனித சாமியண்ணே!//

நிச்சயமாய் எல்லோருக்கும் இது மாதிரி எண்ணங்கள் வர வேண்டும்,, தல ஜெய்லானி சொன்ன மாதிரி இவர் எவரெஸ்ட் சாமி தான்!!

kavisiva உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி!

ஸாதிகா சொன்னது…

சுவாரஸ்யமாக உள்ளது சகோதரரே!மலைச்சாமி நன்றி உள்ளம் மிக்க சாமியாக இருப்பார் போலிருக்கே!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஸாதிகா சொன்னது…

//சுவாரஸ்யமாக உள்ளது சகோதரரே! மலைச்சாமி நன்றி உள்ளம் மிக்க சாமியாக இருப்பார் போலிருக்கே! //

ஆமாம் சகோதரி,, அது மாதிரியான ஆத்மாக்கள் அமைவது அபூர்வம்!!

ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் மிக்க நன்றி!!

புல்லாங்குழல் சொன்னது…

என் பள்ளித் தோழனுடைய தந்தை தி.மு.க. வைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கத்தின் நேசர் அதனால் அவனுக்கு அன்பில் முஹம்மது என பெயர் வைத்து விட்டார். உங்கள் மலைசாமியோ வித்தியாசமான மனித நேசம் உள்ளவராக தெரிகிறார். இருந்தாலும் அடையாள சிக்கல் என்பது குழப்பமான விசயம் தான்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஒ.நூருல் அமீன் கூறியது...

//இருந்தாலும் அடையாள சிக்கல் என்பது குழப்பமான விசயம் தான்.//

பரவாயில்லையே நீங்கள் சொன்ன விஷயமும் கூடுதலான தகவலை தருகிறதே.

நூருல் அமீன் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி!!

ஜெய்லானி சொன்னது…

////ஆமா என்னது சின்னதா முடிச்சிட்டீங்க டாக்குன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு//

ஆமா காரணம் நீங்கள் தான்!!//

இந்த பழி பாவம்தான் வராம இருந்துச்சி இப்ப இதுவுமா...(புரோஃபைல் போட்டோ நல்லாதானய்யா இருந்துச்சு அந்த சிரிச்ச முகம் ஏன்யா மாத்தினே)

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

// (புரோஃபைல் போட்டோ நல்லாதானய்யா இருந்துச்சு அந்த சிரிச்ச முகம் ஏன்யா மாத்தினே) //

யோவ் படமா அது?? பன்னாட்டு வாசகர்களும் ரசிக்கிற மாதிரி கேட்டா,, இப்படியா?? இன்னும் பார்த்தது, படித்தது, கேட்டது எல்லாத்தையும் ரோசிச்சு, ஒரு நல்ல படமா கொடும்..அப்ப பார்க்கலாம். உம்ம ரசனைய... க்கி க்கி

http://rkguru.blogspot.com/ சொன்னது…

மலை என்று மலைதான்....அதில் சாமி வந்தால் மலைச்சாமி......எங்கள் வாழ்த்துகளுடன் வாழ்க

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ rk guru கூறியது...

//மலை என்றும் மலைதான்....//

நிச்சயமா சார்..!

rk guru உங்கள் வருகைக்கும் கருத்துரை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி!