facebook

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

வியாழக் கிழமையானா வரும் ஜுரம்! !

                                                                          

கல்யாணமாகியும் வெளிநாடுகளில், மனைவி மக்களை விட்டு தனித்து வாழும் இளைஞர்கள் அனைவர்களும் பேச்சிலர்கள் தான். என்றாலும் வியாழக் கிழமை வந்து விட்டால் எப்ப வேலை முடியும் என்ற ஒரு ஆர்வம். வேலை முடிந்து அவரவர் ரூமில் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு, இரவு வரும் போது இருக்கும் ஆரவாரம். ரெக்ரியேசன்களில், ஜிம் களில், கூட்டம் கூட்டமாய்...! DVD கேம் களில் ஒரு கும்மாளம். சினிமாப் படங்கள் பார்த்துக் கொண்டு திரியும் ஒரு ரசிக்கும் பட்டாளம்.

அது மாதிரியே எங்கள் ரூம்களிலும் சில நண்பர்கள், ஊர்காரர்கள் எல்லாம் ஒன்று கூடும் நேரம் அந்த மாதிரி வியாழக் கிழமை இரவுகளில் தான். பேச்சுக்கும் அரட்டைக்கும் பஞ்சமிருக்காது. ஒரு குரூப் சீட்டாடிக் கொண்டிருக்கும். ஒரு குரூப் படம் பார்த்துக் கொண்டிருக்கும். நாங்களெல்லாம் உலக ஞானங்கள் (??) அதிலும் கேள்வி ஞானங்கள் மிக்கவர்களாயிற்றே (??) ஏதாவது சப்ஜெக்டைப் பற்றி பேசி அக்கு வேறு ஆணி வேறாய் அலசி காயப் போடும் வரை ஓய மாட்டோம்னா பார்துங்களேன்.

அன்று பேய்களைப் பற்றி ஒரு டாபிக். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானப் பேய்களைப் பற்றி பேசி விவாதம் வேற.

ஒவ்வொருவர் சொன்ன பேயும் அப்ப தான் நாம் உலகத்திலேய மொத மொத கேள்வி படுகிற மாதிரி உள்ள பேய்களைப் போல் பேச ஆரம்பித்து விட்டார்கள் சில விஷயங்களை தான் நாம் குருட்டாம் போக்கில் நம்பி விடுவோமே. அது மாதிரி தான் இந்த பேய்களின் விஷயங்களும். இதில் வீர தீரமாய் பேசுபவர்களுக்குக் கூட பேய்கள் என்றால் ஒரு அரட்டி தான்போல. நாம மட்டும் எம்மாத்திரம்??

அங்கங்கே டிவி பார்த்துக் கொண்டும், சீட்டாடிக் கொண்டிருந்த வர்களும், டீப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட ஆர்வக் கோளாறில் (அல்லது பயந்துக் கொண்டு) எங்களோடு வந்து ஐக்கிய மாகி விட்டார்கள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் எங்களுக்கெல்லாம் நேரம் போனதே தெரிய வில்லை. அவரவர்கள் தூங்கு வதற்குரிய நேரம் போய் இரவு மணி இரண்டுக்கு மேலாகி விட்டது. அவரவர் தத்தம் ரூமுக்கு புறப்பட்டு போய் சிறிது நேரமாகி யிருக்கும்.

சிறிய முனகலுடன் மெல்ல ஒரு சப்தம். "இர்ர்ர்ரர்ர்ர்ர் கேய்ய்யய்யி" மெல்லிய ஹஸ்கி வாய்ஸில் ஆரம்பித்தது, போகப் போக “உறர்ர்ர்ரர்ர்ர்ர் ஆஆஆஆஆ” என ஹை பிட்ச் அளவுக்கு போக குளிர் நாள் ஆதலால் எல்லா ரூமிலும் ஏசி ஏதும் ஆன் செய்யபடாமல் இருந்ததால் அந்த சப்தம் எங்களை பீதியில் ஆழ்த்தி குலை நடுங்க வைக்க ஆரம்பித்தது. அப்படியே உறைந்துப் போய் நின்றோம். ஒருவருக் கொருவர் பேசக் கூட திராணி யில்லை. அப்படி...!!                                                                
                                                                                                                         
வயிற்றிற்க்கும் தொண்டைக்கும் இடையில் ஏதோ உருண்டு வந்து அடைத்துக் கொண்டது போன்ற ஒரு திகைப்பு. முதுகந்தண்டில் ஜிலீரென்று ஏதோ ஊர்வதைப் போல் ஒரு அவஸ்தை..!

கதவை திறந்தால் ஏதுமாகி விடுமோ என்று பயம் வேறு. என்ன இது,, இப்படி எப்பவும் ஆனாதில்லையே என்று மனதை தைரியப் படுத்திக் கொண்டு, நானும் எனது நண்பரும் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தோம். வெளியே யாரையும் காணோம். சப்தம் வந்த திசையை மெல்ல யூகித்து திரும்பினோம்!!

அங்கே கண்டக் காட்சி.....!

எங்களை இன்னும் நிலை குலைய வைத்தது. எங்கள் ரூமில் பேய்க் கதைக் கேட்டு கொண்டிருந்த ஒரு நண்பர், இன்னொரு பாகிஸ்தானியின் குரல்வலையை பிடித்துக் கொண்டிருக்க, அந்த பாகிஸ்தானி இவருடைய குரல் வலையைப் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சப்தம் மட்டும் மேலே சொன்னது மாதிரி வந்துக் கொண்டே இருந்தது. விட்டால் ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்வார்களோ என்ற பயம் வந்து, உடனே சற்றும் தாமதிக்காமல் இருவருடைய குரல் வலையிலிருந்தும் கைகளை பிரித்து எடுத்து ஆசுவாசப் படுத்தினோம். ஆனால் எங்கள் நண்பர் மட்டும் ஓய்ந்தவராகவில்லை. சப்தமும் உறுமலும் அவருடைய கண்கள் வெளியே தள்ளியபடி பார்க்கவே ரொம்ப கிலியாக இருந்தது. அம்மாடியோவ்...! பய புள்ளைக என்னா  ஒரு அக்குரும்பு!!

அந்த பாகிஸ்தானி ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். அவரை சமாதானப் படுத்தி அவருடைய ரூமுக்கு அனுப்பி வைத்து விட்டு, இவரை கை தாங்கலாக ரூமுக்கு அழைத்து வந்து படுக்கையில் சாய்த்து உட்கார வைத்து முகத்தில் நீர் தெளித்து, தெளிய வைத்தோம். இருந்தாலும் கையெல்லாம் முறுக்கிக் கொண்டு மனுசர் ஓய்ந்தவராகத் தெரிய வில்லை. பிறகு டீ ஊற்றிக் கொடுத்து, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து அவரை ஓரளவு நிலைக்கு கொண்டு வந்தோம். அப்ப்பாடா...!! தெளிந்து விட்டார். இப்ப கேட்டா செய்தி கிடைக்குமென்று மெல்ல பேச்சுக் கொடுத்தோம்.

"இங்கேருந்து வெளியே போனேனா. அந்த பக்கமெல்லாம் லைட் வெளிச்சம் பத்தாம லேசா இருட்டாவே இருந்துச்சு. அப்ப Dormitari கிட்ட எதுத்தாப்ல ஏதோ ஒரு உருவம் குதித்து வந்தது. கொல்லி வாய் பிசாசு மாதிரி வாயில வெளக்கேத்திக் கொண்டு...! எனக்கா பயமாப் போச்சு. இந்தப் பக்கம் திரும்பி பின்னாடி ஒங்க ரூமுக்கு ஓடியாந்தா எங்கே என் பொரடியிலே அடிச்சிடுமோன்னு, அந்த பேய நானே கழுத்தை பிடித்து நசித்து கொன்றுடலாம்னு"... திரும்பவும் கைகளை முறுக்கிக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். யாப்பா.. என்ன சொல்வது. மனுசர் ஆடித்தான் போய்ட்டார் போலிருக்கு.. பாவம்.

இவர் வெளியே போன சமயம் அந்த அப்பாவி பாகிஸ்தானி one bath room போக வெளியே வந்திருக்கிறார். குளிர் நேரமாதலால் blanket டை தலையிலிருந்து உடம்பு வரைப் போர்த்தி, வாயில் ஒரு சிகரெட்டையும் பத்த வைத்துக் கொண்டு, (நம்ப நண்பர் இவர் பின்னாடி வரும் சப்தம் கேட்டு) அவர் சற்றே திரும்பிப் பார்க்க.... பேய்க் கதைக் கேட்ட பீதியில் போய்க் கொண்டிருந்த நம்மாளு,, ஆஹா போய்க் கொண்டிருப்பது பேய் தானென்று, டபாரென்று பாய்ந்து விட்டார் கழுத்தைப் பிடிக்க..

நடந்தது இது தாங்க....! நம்புங்க...!!

                                                                       
                                                                                              
                                                                                        

38 கருத்துகள்:

Unknown சொன்னது…

என்ன ஒரு கொலை வெறி....

நாடோடி சொன்னது…

ஆஹா.. ந‌ல்ல‌ கிள‌ப்புறாங்கைய்யா பீதியை!!!!!!!...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்ன ஒரு கொலை வெறி....

Menaga Sathia சொன்னது…

ha ha haa....

ஜெய்லானி சொன்னது…

நாங்கலெல்லாம் வீட்டில பேய வச்சிகிட்டு வெளிய தேட மாட்டோமே..

ஜெய்லானி சொன்னது…

பாவம் ஒருத்தரை கொலைகாரனா மாத்த போய்ட்டீங்களே .இது நல்லாவா இருக்கு..?

ஜெய்லானி சொன்னது…

கடைசியில அந்த அழகிய பேய படமா போட்டதுக்கு ரொம்ப நன்றிங்னாஆ..!!ஹி..ஹி..

Unknown சொன்னது…

ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் நைட் நேரத்துல பேய் கதையெல்லாம் பேசக்கூடாது..

Unknown சொன்னது…

கதையோடு ஒன்றி போய்விட்டற்போல் உங்கள் நண்பர்.அந்தளவுக்கு பேய் கதை அவரை பாதித்து இருக்கிறது.
உங்கள் ரூம் நண்பர் என்று வேற சொல்கிறீர்கள்.
கொஞ்சம் கவனமாக இருந்துகொள்ளுங்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இந்த காலத்துல இப்படி ஒரு ஆளா?

நல்லாத்தான் இருக்கு உங்க கூத்து.

நாங்களெல்லாம். பேய்கதை கேட்டா, ஒரு ஆள் துணை இல்லாமல் வெளியே போறதில்லையாக்கும் :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அய்யயோ.. படிக்கவே ரொம்ப திரில்லா ஆகிருச்சி அப்துல்காதர் சார்.. பேய்க்கதை இவ்வளவு வேலை செய்ஞ்சிருக்கா.. எம்மாடி என்னா பயம்.. படிக்க படிக்க ரொம்ப சுவாரசியம்.. இதுக்குதான் ராத்திரி நேரத்துல பேய்க்கத படிக்க கேட்ககூடாதுன்னு பெரியவா சொல்லுவாங்க..

சௌந்தர் சொன்னது…

பேய் கதை ஒருத்தரை கொலைகாரனா ஆக்கி இருக்கும்...ஒருத்தனை பேய்யா ஆக்கி இருக்கும்...

Ramesh சொன்னது…

நல்லா விறுவிறுப்பா எழுதறீங்க...நல்லா இருக்கு உங்க எழுத்து நடை...திகிலாத்தான் இருக்கு...

Abdulcader சொன்னது…

நல்ல வேலை சீக்கிரம்மா தடுத்தீங்க இல்லன்ன அந்த பாகிஸ்தானி அநியாயமா மண்டையபோட்டிருப்பான்.

Abdulcader சொன்னது…

நல்ல வேலை சீக்கிரம்மா தடுத்தீங்க இல்லன்ன அந்த பாகிஸ்தானி அநியாயமா

மண்டையபோட்டிருப்பான்.

ஜெய்லானி சொன்னது…

இதென்ன கள்ள ஆட்டமா இருக்கு ஓட்டு போடற வரைக்கும் பேய் இருந்துச்சு இப்ப கானேமே ..!!! அவ்வ்வ்வ்வ்வ்.(( இனி அடுத்த பதிவிலிருந்து உஷராயிடுவோமுல்ல ))

vanathy சொன்னது…

அப்துல்காதர், இது என்ன எல்கேஜி பசங்களாட்டம் பேய் கதை பேசிண்டு. எனக்கு மட்டும் சொல்லுங்க அந்த பாகிஸ்தானி அப்பாவியை ஏன் அப்படி செய்தீர்கள் ( ஜெய் அந்தப் பக்கம் போனதும் சொல்லுங்க ).
நல்லா இருக்கு உங்கள் பதிவு.
இனிமே பேய்க் கதை வேண்டாம்.

Mohamed Faaique சொன்னது…

உலகத்துல இப்படி எல்லாமா நடக்குது... ?

Jaleela Kamal சொன்னது…

பேய் கத படிக்கும் போது பயமா இருந்தது.

சரி சரி நம்புரோம்,

எம் அப்துல் காதர் சொன்னது…

என் இனிய உள்ளங்களுக்கு நான் நோன்பு திறந்து விட்டு வந்து உங்கள் எல்லோருக்கும் பதில் எழுதுகிறேன். அது வரை புதிய இடுகையை படித்துக் கொண்டிருங்கள். நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ கலாநேசன் கூறியது...

//என்ன ஒரு கொலை வெறி....//

சம்பவம் நடந்த அன்னிக்கி நான் கோர்டுக்கு வரலீங்க பாஸ். அதனால ஈரங்கி கேட்டுக்கிறேங்க. ஹா..ஹா.

கலாநேசன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

//ஆஹா.. ந‌ல்ல‌ கிள‌ப்புறாங்கைய்யா பீதியை!!//

எதிர் கட்சி வக்கீல் பீதி என்று, கோர்ட்டுக்குள் பீதியை கிளப்புவதால்,, கணம் கோர்ட்டார் அவர்களை.... ஹி..ஹி..

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ வெறும்பய கூறியது...

//என்ன ஒரு கொலை வெறி..//

சம்பவம் நடந்த அன்னிக்கி நான் கோர்டுக்கு வரலீங்க என்று மீண்டும் சொல்லிக்கிறேங்க.. ஹா..ஹா..

வெறும்பய உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Mrs.Menagasathia கூறியது...

//ha ha haa....//

வாங்க சகோதரி!!

Mrs.Menagasathia உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//நாங்கலெல்லாம் வீட்டில பேய வச்சிகிட்டு வெளிய தேட மாட்டோமே..//

பேயே இப்படி சொன்னாலும் அத நாங்க நம்ப மாட்டோமே!! க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//பாவம் ஒருத்தரை கொலைகாரனா மாத்த போய்ட்டீங்களே. இது நல்லாவா இருக்கு..?//

இதுவே நீங்களும் நானுமா இருந்தா?? (இதப் படிக்கிற வாணிக்கு எப்படி இருக்கும்) கொஞ்சம் நெனச்சுப் பாருங்க பாஸ். ஹி..ஹி. (தமாசு)

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//கடைசியில அந்த அழகிய பேய படமா போட்டதுக்கு ரொம்ப நன்றிங்னாஆ..!!ஹி..ஹி..//

அந்த அழகியே உங்க கனவுல பேயா வந்தா எப்புடி இருக்குங்கண்ணா க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அப்துல்காதர் கூறியது...

//ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் நைட் நேரத்துல பேய் கதையெல்லாம் பேசக்கூடாது..//

வாங்க "பதிவுலகில் பாபு", பேய்க் கதையே இரவு நேரங்களில் சொன்னாத் தான் இண்டரெஸ்ட்.

அப்துல்காதர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

abul bazar/அபுல் பசர் கூறியது...

//கதையோடு ஒன்றி போய்விட்டற் போல் உங்கள் நண்பர். அந்தளவுக்கு பேய் கதை அவரை பாதித்து இருக் கிறது. உங்கள் ரூம் நண்பர் என்று வேற சொல்கிறீர்கள். கொஞ்சம் கவனமாக இருந்துகொள்ளுங்கள்.//

எதுக்கும் நீங்க சொன்ன மாதிரி உஷாராவே இருக்கணும் தான் போல.

abul bazar/அபுல் பசர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிநேகிதன் அக்பர் கூறியது...

//நாங்களெல்லாம். பேய்கதை கேட்டா, ஒரு ஆள் துணை இல்லாமல் வெளியே போறதில்லை யாக்கும் :) //

நாங்கல்லாம் வெளியவே போறதில்லை. ஆமா பேயின்னு ஒன்னு இருக்கா பாஸ்.

சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

//இதுக்குதான் ராத்திரி நேரத்துல பேய்க்கத படிக்க கேட்ககூடாதுன்னு பெரியவா சொல்லுவாங்க..//

உண்மைதாங்க ஷேக். அந்த பெரியவங்களே குழந்த பிள்ளைகள துணைக்கி கூட்டி போவாங்க கவனிச்சிருக்கீங்களா??

Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சௌந்தர் கூறியது...

//பேய் கதை ஒருத்தரை கொலைகாரனா ஆக்கி இருக்கும்...ஒருத்தனை பேய்யா ஆக்கி இருக்கும்...//

அப்படியானா ஒருத்தர் ஜெயிலில் இருப்பார். இன்னொருத்தர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பார். சரி தானே.

சௌந்தர் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ரமேஷ் கூறியது...

//திகிலாத்தான் இருக்கு...//

பயப்புடக் கூடாது பாஸ். பக்கத்திலே பாபு சார் இருக்கங்கல்லோ. ஹா ஹா

ரமேஷ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ காயலாங்கடை காதர் கூறியது...

// நல்ல வேலை சீக்கிரம்மா தடுத்தீங்க இல்லன்ன அந்த பாகிஸ்தானி அநியாயமா மண்டையபோட்டிருப்பான்.//

உண்மைதாங்க நீங்க சொல்றது. ஆமா "Instrumentation" க்கு காயலாங்கடை என்று பேர் வச்சிருக்கீங்களா இல்ல வேறெதுவுமா?? என்பேர்ல எதுவும் கோபமில்லையே ஹா.. ஹா..

காயலாங்கடை காதர் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

// இதென்ன கள்ள ஆட்டமா இருக்கு ஓட்டு போடற வரைக்கும் பேய் இருந்துச்சு இப்ப கானேமே.!!! அவ்வ்வ்வ்வ்வ்.(( இனி அடுத்த பதிவிலிருந்து உஷராயிடுவோமுல்ல)) //


பேய் அப்பப்ப வரும் போவும். இப்ப போய் பாருங்க இருக்க இல்லையான்னு?? வித விதமா மாறிக்கிட்டே இருக்கும்ல. ஹி..ஹி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

//அப்துல்காதர், இது என்ன எல்கேஜி பசங்களாட்டம் பேய் கதை பேசிண்டு.//

அப்பா இப்பவாவது ஒத்துக் கிட்டீங்களே. எல்கேஜி படிப்பு படிச்ச எனக்கு அந்த நாட்டமை போஸ்ட் ப்ளீஸ்?? ஹி..ஹி..

// எனக்கு மட்டும் சொல்லுங்க அந்த பாகிஸ்தானி அப்பாவியை ஏன் அப்படி செய்தீர்கள் (ஜெய் அந்தப் பக்கம் போனதும் சொல்லுங்க). //

அந்த ஜெய் நம்ம விட்டு வேறு அங்கே இங்க போகாது. காதையும் கண்ணையும் இங்க தான் வச்சிருக்கும்!! க்கி..க்கி..

//இனிமே பேய்க் கதை வேண்டாம்//

பேயின்னா அம்புட்டு பயமா வாணி,, (நான் ஜெய் கிட்ட சொல்ல மாட்டேன்) ஹா..ஹா..

vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Mohamed Faaique கூறியது...

// உலகத்துல இப்படி எல்லாமா நடக்குது... ?//

என்னா பாஸ் இப்படி கேட்டுப் புட்டீங்க??

Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Jaleela Kamal கூறியது...

// பேய் கத படிக்கும் போது பயமா இருந்தது. சரி சரி நம்புரோம்,//

பேய்க்கி காலில்லை,, கையில்லை,, ஆனா அரஞ்சு புடுமாம். எப்புடி?? வாங்க ஜலீலக்கா நீங்க நம்பித்தான் ஆகணும்.

Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!