facebook

புதன், ஆகஸ்ட் 25, 2010

திரவியம் தேடு!!!

       
திரவியம் தேடு
என்று சொல்லி  நம்மை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.  அனுப்பி வைத்த சொந்தங்களை  நாம்  பார்க்க ஆசைப் படாவிட்டாலும், அவர்கள் நம்மைப் பார்க்க ஆசைப் பட மாட்டார்களா?? அதற்காக மனைவி யையும், பிள்ளைகளையும் சொந்தங்களையும் பிரிந்து  வாடத்தான் வேண்டுமா? இது கேள்வி. பல நேரங்களில் இது மாதிரி எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தாலும் விடை தெரியாத வகையில் தானிருக்கிறது

இங்கே சம்பாதிக்க வந்திருக்கும் பல பேர் குடும்ப சூழ்நிலைகளினாலோ  அல்லது கடன் சுமையாலோ இன்னும் சில பேர் சம்பாதித்து சொத்து சேர்ப்பதற்க்கென்றே (குடும்பத்தை பிரிந்திருந்தாலும் பரவாயில்லை என்று) வந்திருப்பவர்களை நாம் சந்தித்து பேசும் போது ரெண்டு வருடமாச்சு, மூணு வருடமாச்சு, அஞ்சு வருடமாச்சு என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்கள். சிலர் பத்து வருடமாகக் கூட ஊருக்கே போகாமல் இங்கே இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஏன் இப்படி  இவர்கள்  என்று நம் முன் ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது???

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் கல்யாணம் செய்துக் கொண்டு இங்கே
வந்தவர் ஐந்து வருடம் ஊருக்கே போகலை. இவருடைய செயல்கள் என்ன வென்றால் நன்றாக சம்பாதிப்பது நண்பர்களுக்கு செலவு செய்ய வேண்டியது ஊருக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அனுப்ப வேண்டியது இரவில் லேசாக வாய்வழி போதை ஏற்றிக் கொள்ள வேண்டியது.

இப்படியே அவருடைய காலங்கள் போய்க் கொண்டிருக்கிற வேளையில் அமைதியா இருந்த அவருடைய மனைவி உஷாராகி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டது. “ஊருக்கு வர்றீங்களா இல்லையா” என்பது தான்?? நியாயம் தானே.

ஊருக்கு சென்ற யாரோ அவர் மனைவியிடம் அவரைப் பற்றி ஏதேதோ போட்டுக் கொடுக்க,, அவரோடு பழகிய நம்மைய நாட்டாமையாக்கி புட்டாய்ங்க. அடப் அடப்பாவிகளா!! ம்ம்.. நமக்கு வேண்டியது தான் என்று நம் நிலையை நினைத்துக் கொண்டேன்.

அப்ப நான் ஊரில் இருந்தேன். கல்யாணம் முடிந்து ஒரு மாசமே இருந்து விட்டு போன மனிதர் ஐந்து வருடமாகியும் ஊர் வரலை என்றால், ஒரு மனைவியின் ஆதங்கம் எப்படி இருக்கும்?? நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். இதற்கிடையே இவர் சம்பாதித்துத் தான் அந்த  குடும்பம் ஓடனும் என்ற அவசியமில்லை. சொந்த அத்தைப் பொண்ணு தான். ஓரளவு வசதியாக உள்ளவர்கள்.

நான் இங்கு வந்த உடன் அவரிடம் அன்பாய் சொல்லிப் பார்த்தேன், அதட்டி சொல்லிப் பார்த்தேன், மிரட்டி சொல்லியும் பார்த்தேன். (நாம நாட்டாமன்னா என்ன பெரிய ரௌடிக் கூட்டமா?? பச்ச மண்ணுங்க) காரியம் நடக்கலை...

திடீரென்று அந்த பொண்ணு இன்னொரு குண்டை தூக்கிப் போட்டது. ஒன்று அவர் ஊர் வரணும் இல்லை என்றால் எதையாவது குடித்து  என்னை மாய்த்துக் கொள்வேன் என்று. மனிதர் லேசாக அசைந்த மாதிரி இருந்தது பிடித்துக் கொண்டேன். டூட்டி முடிந்து போகும் போதும் வரும் போதும் மனிதரை மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தேன்.

அவர் சொந்தமாக கடை வைத்திருந்த படியால் சரியான ஸ்பான்சர் அமையாதலால் மனிதர் மதில்மேல் பூனையாகிக் கொண்டிருந்தார். இப்படியாக நாளும் பொழுதும் ஓடி ஆறு மாதத்திற்கு மேலாகி விட்டது.

இவரே என்னிடம் காசுக் கொடுத்து இவர் மனைவியிடம் போனில் பேசச் சொல்வார். இவர் முன்னாடியே இவர் சொல்லச் சொன்னதை சொல்வேன். ஏனென்றால் இவர் பேச்சை அது நம்புகிற மாதிரி தெரியவில்லை.

கடைசி அஸ்திரம் போட்டது பாருங்கள், நான் திருச்சபையில் சேர்ந்து கன்யாஸ்திரி ஆகப் போகிறேன் என்று சொல்லி ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு அவங்க அக்கா வீட்டுக்கு வந்து விட்டது. மனிதர் மிரண்டு தான் போனார். நானும் கரையாய் கரைத்த கரைப்புக்கு பலன் இருந்தது.

பிறகு ஊருக்குப் போனார் - இருந்தார் - வந்து விட்டார்.

நான் இந்த தடவை நான் ஊருக்குப் போய் இருந்த போது (எங்க ஊருக்கு பக்கம் தான் அவர் ஊரும்)  எங்கள் வீட்டில் ஒரு விசேஷம், அதற்கு அழைக்கப் போய் இருந்தோம். அப்ப தான் அவர் மனைவியை முதல் முதல் பார்க்கிறேன். நீங்க ஊருக்கு போன உடனே “நீங்க ஊருக்கு போனவுடனே மாமாவ வரச் சொல்லுங்க” என்றது. கேட்க நம் மனசுக்கே பாவமா தெரிந்தது.

ஆச்சுங்க ஏழு வருஷம் போனது தெரியல. பெண் குழந்தை பிறந்து வளர்ந்து அழகாய் ஸ்கூலுக்கு போய்க் கொண்டிருக்கிறது.அந்த குழந்தையைக் கூட இன்னும் போய் பார்த்த பாடில்லை.அவருக்கா ஆர்வம் வர வேண்டாமா?? கடந்த இரண்டு வருடமாக ஊருக்குப் போவதாக சொல்லி எடுத்த பேச்சு இதோ அதோ என்று காலம் கடத்திக் கொண்டிருக்கிறார். போன பாடில்லை!! என்னச் சொல்வது??

மதங்களை போதித்துச் சென்ற மாமனிதர்கள் கூட பிரிந்து வாழச் சொல்ல வில்லை. சேர்ந்து வாழும் தத்துவத்தை தான் சொல்லி விட்டு சென்றார்கள்.

பாடம் என்பது படித்து தான் வரணும் என்பதல்ல. அனுபவத்திலும் வரலாம் என்பதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன். இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள். இருக்கிறார்கள். நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.



27 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//இப்படியும் மனிதர்கள் //
படிக்கிற எங்களுக்கே அவர்மேல கோவம் வருதே!
நீங்க சும்மாவா விட்டீங்க?!

Unknown சொன்னது…

எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு இதே அனுபவம் ....வருத்தமாக இருக்கிறது ..

செ.சரவணக்குமார் சொன்னது…

என்ன சொல்றது தல. சவுதியில இப்பிடியும் ஒரு ஆளா?

இருந்தாலும் நீங்க நாட்டாமையா இருந்து மெரட்டுனத நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது ஹி ஹி.

Asiya Omar சொன்னது…

இங்கேயே இப்படி அனுபவித்து பழகியவர்களுக்கு ஊருக்கு போனாலும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்க முடியாது.குடும்ப பற்று இல்லாதவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.விஷா காலாவதியாக கடைசி நாள் வரை ஊரில் தான் இருப்பேன் அடம்பிடிக்கிற சிலரையும் பார்த்திருக்கேன்,மனைவியரே போய் அடுத்த சபர் வாங்கன்னு தேற்றி அனுப்புவதையும் பார்த்து இருக்கேன்.இது தான் உலகம் இப்படி தான் என்று நாம் என்று எதையும் எடை போட முடியாது.அவரவர் மனநிலையை பொருத்தது,என்ன சொல்றீங்க சகோ?

Unknown சொன்னது…

தான் சுகமா இருந்தாமட்டும் போதும்னு சுயநலவாதிகளால நிறையப் பேர் இருக்காங்க.. ஆனா நீங்க சொல்ற ஆள் ரொம்ப ஓவர்..

கண்டுபிடுச்சு தலையிலையே கொட்டணும் போல இருந்தது படிக்கும்போது..

Abdulcader சொன்னது…

இவனுங்கள்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணுறானுங்க.

நாடோடி சொன்னது…

இதுபோல் நிறைய‌ பேர் இருக்காங்க‌... ஒரு டெம்பிளேட் லைப்புக்கு வாழ‌ ப‌ழ‌கிவிட்டார்க‌ள்.. இவ‌ர்க‌ளை போல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் திரும‌ண‌ம் செய்யாம‌ல் இருப்ப‌து தான் ந‌ல்ல‌து.. :))

vanathy சொன்னது…

இவர் ஏன் கல்யாணம் செய்து கொண்டார்.??ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கி விட்டார் என்றே தோணுது!! . நாட்டாமை வேலை நல்லா தான் செய்கிறீங்க!!!!

ஜெய்லானி சொன்னது…

நீங்க நாட்டாமையா க்கி...க்கி... சொம்பு இல்லாம சொன்னா இப்பிடிதான் தீர்ப்புக்கு ஆறு மாசம் ஆகும் .

இழுத்து வச்சி தலையில “நங்”குன்னு நாலு கொட்டினா அடுத்த ஃபிளைட்டில ஊர் போய் சேர்ந்திருப்பார்

ஜெய்லானி சொன்னது…

ஒருத்தர் ஊர் போகாட்டி அதுக்கு ஏதாவது பர்ஸனல் காரனம் இருக்கும் பொதுவா நாம யாரையும் குற்றம் குறை சொல்லக்கூடாது..மிஸ்டர் நாட்டாமை .. அப்புறம் எதுக்கு சுப்ரீம் கோர்ட் ஹைக்கோர்ட் இருக்கு ..

ஜெய்லானி சொன்னது…

//இரவில் லேசாக வாய்வழி போதை ஏற்றிக் கொள்ள வேண்டியது.//

இதை நான் பிரிண்ட் எடுத்து சவுதி போலிஸ்கிட்ட குடுத்தா என்ன ஆகும் தெரியுமா..?

முதல்ல உள்ளே போகப்போரது நீங்கதான் பாஸ்...!! சவுதி சட்டம் தெரியுமுல்ல ...

யாரு நாட்டாமை..???ஹி..ஹி...ஹா..ஹா.....ஹா....க்கி..க்கி...

ஜெய்லானி சொன்னது…

//திரவியம் தேடு
என்று சொல்லி நம்மை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.//

//இதற்கிடையே இவர் சம்பாதித்துத் தான் அந்த குடும்பம் ஓடனும் என்ற அவசியமில்லை.//


ரெண்டுமே எங்கேயே இடிக்குதே ...கொஞ்சம் பாருங்க நாட்டாமை...((என்கிட்டேயேவா..!!!))

Chitra சொன்னது…

மதங்களை போதித்துச் சென்ற மாமனிதர்கள் கூட பிரிந்து வாழச் சொல்ல வில்லை. சேர்ந்து வாழும் தத்துவத்தை தான் சொல்லி விட்டு சென்றார்கள்.

பாடம் என்பது படித்து தான் வரணும் என்பதல்ல. அனுபவத்திலும் வரலாம் என்பதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன். இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள். இருக்கிறார்கள்.!!


....... ம்ம்ம்.... வாசிக்கும் போது, வருத்தமாகத்தான் இருக்கிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

நீங்க என்ன பண்ணுவீங்க.. சொல்ல தான் முடியும்..
சொல் பேச்சை எடுத்துக் கொள்ளதவரின் மனைவி நிலைமை தான் வருத்தமா இருக்கு..
ஹ்ம்ம்.. அவரா மனம் மாறி ஊருக்கு போயி வந்தால் தான் உண்டு..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Balaji saravana கூறியது...

//படிக்கிற எங்களுக்கே அவர்மேல கோவம் வருதே! நீங்க சும்மாவா விட்டீங்க//

என்ன சொல்றது. ஒரு எல்லைக்கு மேல அது நண்பரா இருந்தாலும் வற்புறுத்த முடியாதே பாஸ். அப்படிதான் இதுவும்.

பாலாஜி சரவணா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

// எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு இதே அனுபவம்.... வருத்தமாக இருக்கிறது..//

எல்லாமே கனவில் நடப்பது போல, முடிவில்லாத நிழல்களாய் நீண்டு கொண்டே போகிறது சார்.

கே.ஆர்.பி.செந்தில் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ செ.சரவணக்குமார் கூறியது...

// சவுதியில இப்பிடியும் ஒரு ஆளா? //

எங்காவது ஒரு இடத்தில் நூற்றில் ஒரு சில பேர் இப்படி அமைகிறார்கள். நீங்க சவுதிக்கு புதுசு தல அதான் இப்படி ஒரு கேள்வி??

செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

// இங்கேயே இப்படி அனுபவித்து பழகியவர்களுக்கு ஊருக்கு போனாலும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்க முடியாது. குடும்ப பற்று இல்லாதவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.விஷா காலாவதியாக கடைசி நாள் வரை ஊரில் தான் இருப்பேன் அடம்பிடிக்கிற சிலரையும் பார்த்திருக்கேன், மனைவியரே போய் அடுத்த சபர் வாங்கன்னு தேற்றி அனுப்புவதையும் பார்த்து இருக்கேன். இது தான் உலகம் இப்படி தான் என்று நாம் என்று எதையும் எடை போட முடியாது. அவரவர் மனநிலையை பொருத்தது, என்ன சொல்றீங்க சகோ?//

ஆஹா வாழ்க்கையின் எதார்த்தத்தை ரொம்ப அருமையாய் சிம்பிளாய் நாளைந்தே வரிகளில் எடுத்து சொல்லி விட்டீர்கள் சகோ. அத்தனையும் நிஜம்.

சகோ ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பதிவுலகில் பாபு கூறியது...

//தான் சுகமா இருந்தாமட்டும் போதும்னு சுயநலவாதிகளால நிறையப் பேர் இருக்காங்க.. ஆனா நீங்க சொல்ற ஆள் ரொம்ப ஓவர்.. கண்டுபிடுச்சு தலையிலையே கொட்டணும் போல இருந்தது படிக்கும்போது..//

உங்க ஆதங்கம் புரியுது பாபு. தலயில் கொட்டுற அளவுக்கு நாம் உரிமை எடுத்துக் கொள்ள முடியாதே!!

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ காயலாங்கடை காதர் கூறியது...

// இவனுங்கள்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணுறானுங்க.//

அதானே! இதை உரியவர்கள் உணர்ந்துக் கொள்ளலையே?? நம்மை மாதிரி உள்ளவர்கள் மனசு தானே கிடந்து பரிதவிக்கிது.

காயலாங்கடை காதர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

// இதுபோல் நிறைய‌ பேர் இருக்காங்க‌... ஒரு டெம்பிளேட் லைப்புக்கு வாழ‌ ப‌ழ‌கிவிட்டார்க‌ள்.. இவ‌ர்க‌ளை போல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் திரும‌ண‌ம் செய்யாம‌ல் இருப்ப‌து தான் ந‌ல்ல‌து.. :))//

உண்மை தான் ஸ்டீபன், இதை அவர்கள் கல்யாணம் செய்வதற்கு முன்னமே யல்லவா யோசிச்சிருக்கனும்??

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

// இவர் ஏன் கல்யாணம் செய்து கொண்டார்.?? ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கி விட்டார் என்றே தோணுது!!//

நிச்சயமா!! எல்லாருக்குமே இந்த ஃபீலிங்க்ஸ் தான் மனசுக்குள்ளே ஓடுது வாணி!!

vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

// நீங்க நாட்டாமையா க்கி...க்கி... சொம்பு இல்லாம சொன்னா இப்பிடிதான் தீர்ப்புக்கு ஆறு மாசம் ஆகும் //

லேட்டா வந்தது தான் வந்தீங்க பாஸ். ஒரு ஜோடா வெத்தில பாக்கு வாங்கி வந்திருக்கக் கூடாது?? ஹி..ஹி.. நாட்டாம ஒரு ஜபர் தஸ்தா இருந்திருப்பேன்ல..??

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//இரவில் லேசாக வாய்வழி போதை ஏற்றிக் கொள்ள வேண்டியது.//

// இதை நான் பிரிண்ட் எடுத்து சவுதி போலிஸ்கிட்ட குடுத்தா என்ன ஆகும் தெரியுமா..?முதல்ல உள்ளே போகப் போரது நீங்கதான் பாஸ்...!! சவுதி சட்டம் தெரியுமுல்ல...யாரு நாட்டாமை..???ஹி..ஹி... ஹா..ஹா.....ஹா....க்கி..க்கி..//

பாஸ் நீங்க எந்த ஜெனரேஷன்ல இருக்கீங்க?? தம்மாமுக்கு பக்கத்திலே சிஹாத், கத்தீஃப் என்று ஒரு ஏரியாவே இருக்கு. மல்லுகள் இத ஒரு குடிசை தொழிலாவே செய்றாங்க பாஸ்(மற்றத போனில் சொல்றேன்)

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//திரவியம் தேடு என்று சொல்லி நம்மை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.//
//இதற்கிடையே இவர் சம்பாதித்துத் தான் அந்த குடும்பம் ஓடனும் என்ற அவசியமில்லை.//

ரெண்டுமே எங்கேயே இடிக்குதே...கொஞ்சம் பாருங்க நாட்டாமை...((என்கிட்டேயேவா..!!!))

தலைப்பையும் நடுவிலும் முடிவையும் படிச்சா அப்படி தான் கேள்வி வரும் பாஸ். ஹி.. ஹி... சரி கிடக்கட்டும் கீழே பாருங்க யாரு பல்ப் தர்றதுன்னு தெரியும். க்கி க்கி
----------------------------------------------------------------------

@@ஜெய்லானி கூறியது...

// இழுத்து வச்சி தலையில “நங்”குன்னு நாலு கொட்டினா அடுத்த ஃபிளைட்டில ஊர் போய் சேர்ந்திருப்பார் //

//ஒருத்தர் ஊர் போகாட்டி அதுக்கு ஏதாவது பர்ஸனல் காரனம் இருக்கும் பொதுவா நாம யாரையும் குற்றம் குறை சொல்லக்கூடாது..மிஸ்டர் நாட்டாமை .. அப்புறம் எதுக்கு சுப்ரீம் கோர்ட் ஹைக்கோர்ட் இருக்கு..//

படிச்சீங்களா?? க்கி க்கி நான் எப்போதும் நிதானமான நாட்டாமை தான் ஹி.. ஹி.. ரெண்டுமே எங்கேயே இடிக்குதே...கொஞ்சம் பாருங்க பாஸ் ((என்கிட்டேயேவா..!!!)) க்கி க்கி

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

//ம்ம்ம்.... வாசிக்கும் போது, வருத்தமாகத்தான் இருக்கிறது. //

நிச்சயமா மேடம் நம்முடைய வேண்டுதல்கள் தான் அவரை திருத்தனும்!!

சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ananthi கூறியது...

//நீங்க என்ன பண்ணுவீங்க.. சொல்ல தான் முடியும்.. சொல் பேச்சை எடுத்துக் கொள்ளதவரின் மனைவி நிலைமை தான் வருத்தமா இருக்கு..ஹ்ம்ம்.. அவரா மனம் மாறி ஊருக்கு போயி வந்தால் தான் உண்டு ..ம்!!//

ஆமாம் மேடம் அவர் குடும்பம், பிள்ளைகளை நினைத்தால் தான் சங்கடமா இருக்கு!!

ஆனந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!