facebook

சனி, செப்டம்பர் 04, 2010

கிச்சனில் "தங்ஸ்கள்" படும்பாடு!!

கிச்சனில் "தங்ஸ்கள்" படும்பாடு


நீங்க டைனிங் டேபிளில் உட்கார்ந்துகிட்டு உப்பு சரி இல்ல (Bp இருந்தாலும்) காரம் சரி இல்ல (அல்சர் இருந்தாலும்) என்று சொல்லிக் கிட்டு இருக்காதீங்க பாஸ். ஒரு எட்டு கிச்சனுக்குள்ளும் நுழைந்து அங்க நம்ம தங்ஸ்கள் படுற கஷ்டத்தையும் பாருங்க!! என்ன நான் சொல்றது காதுல விழுதா??

நேற்று தாங்க கிச்சனுக்குள்ளே எட்டிப் பார்த்தேங்க!! என்னா கஷ்டம் ; என்னா கஷ்டம். மற்ற நாட்களிலெல்லாம் கூட பகல் நேரத்து சாப்பாட்டு பிரிபரேசன் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மணி நேரம் என்றால் நோன்பு நேர வேலைகள் அதிகமென்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த ரெண்டு மணி நேரத்தில் கிச்சன் அமளி துமளிப் பட்டு ஓய்கிறது

ஒரு நோன்பு நேர கஞ்சி ஒரு ஜூஸ் கொஞ்சம் பஜ்ஜி அல்லது ஏதாவது வடை சட்னி செய்வதற்கே ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விடுகிறது. அப்புறம் ஏதாவது அடிஷனலா செய்யனும் என்றாலும் இப்ஃதார் விருந்துக்கு யாரையாவது நாம் அழைத்து விட்டாலும் கேட்கவே வேண்டாம். தங்ஸ்கள் படுற பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நோன்பு திறக்க வந்து உட்காருவதே பெறும் பாடாகிவிடும் அவர்களுக்கு. பாவம் தானே!!

நாமெல்லாம் என்ன செய்கிறோம் நல்லா திண்டு புட்டு ஷோபாவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு (சரி காலமேலே தூக்கிப் போடாமே அப்படியும் வச்சுக்குவோம்) மேலே சொன்ன ரெண்டு வரியைத் தானே செய்கிறோம். புரியுதா??

                                                                      
சில நேரங்களில் இவர்கள் அன்பால் செய்யும் அநியாயம் ரொம்பவா சொல்லி மாளாது. சாதரணமா மேலே சொன்ன அய்ட்டங்களை தானே தயார் செய்து சாப்பிடத் தருவாங்க. ஊஹும். ரொம்ப ஓவரான அன்பினாலே தின்ன முடியாதா அளவுக்கு எக்ஸ்ட்ரா அய்ட்டங்களை செய்து சாப்பிடச் சொல்லி அன்பைப் பொழியும் போது கொஞ்சம் ஜோப்பையும் எட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கு!!

அன்னிக்கி அப்படித் தான் மேலே சொன்ன அய்டங்களோடு, எக்ஸ்ட்ரவாய் ஜாலர் முட்டை சமோசா, கஸ்டர்ட், சப்ஜா விதை கலந்த ஜூஸ் (குளிர்சிக்காம்) என்று நிறைய பதார்த்தங்களை செய்து வைத்து விட்டார்கள். என்னால் அவ்வளவா சாப்பிட முடியல! நாம ஒன்றும் புதுமாப்பிள்ளை யல்லவே!

அப்ப தான் நினைத்துக் கொண்டேன். கல்யாணம் முடிந்த புது மாப்பிள்ளைக்கி முதல் நாளன்று சாப்பிட முடியாத அளவுக்கு சாப்பாட்டையும், பலகரங்களையும் செய்து வைத்திருப்பார்கள். வந்திருக்கும் சுற்றமும் நட்பும் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஏன்னா புது மாப்பிள்ளையாச்சே! சந்தோசத்தின் மிகுதியால் அவரால் அதிகமாக சாப்பிட முடியாது. கொஞ்சமாவே கொறிப்பார். புதிய இடம் என்பதால் சங்கோஜமாகக் கூட இருக்கலாம்.

ரெண்டாவது மூனாவது நாளும் அது மாதிரியே செய்து வைப்பார்கள். அப்பவும் அது மாதிரியே சந்தோஷ மிகுதியால் அதிகம் சாப்பிட மாட்டார்.

மாப்பிள்ளை தான் அதிகம் சாப்பிட மாட்டேங்கிறாரே என்று நான்காவது நாள் ஒரு நார்மலான சாப்பாட்டை தான் செய்து வைப்பார்கள். அன்னிக்கு அவருக்கு அதிகமா பசிக்கும். மூணு நாளும் அரைகுறையா சாப்பிட்டது. கிடந்து முழிப்பார். அனுபவமான்னு கேட்கப் படாது.

டிஸ்கி : ஆகவே தங்ஸ்களுக்கு உதவியா நாமளும் கிச்சனில் ஏதாவது உதவிகள் செய்யணும் போலத் தோணுது!! என்ன செய்யலாம்?? நீங்களும் யோசிச்சு சொல்லுங்க சார்!!


                                                                              
                                                                                     

40 கருத்துகள்:

vanathy சொன்னது…

நாட்டாமை, இரக்கப்பட்டா மட்டும் போதாது. உங்கள் மனைவியை ஓய்வெடுக்க சொல்லிட்டு சமையல் வேலைகளை நீங்களே செய்யணும்.
உங்க மனைவி இந்தப் பதிவு பார்த்தாங்களா?? ஆனந்தக் கண்ணீர் விட்டாங்களா?????

ஜெய்லானி சொன்னது…

எனக்கு ஓரு விஷயம் மட்டும் நல்லா புரியுது இப்போ...!!! வாங்குன அடி இப்பிடி ஒரு பதிவு போட வச்சிருக்கு... சரி..சரி.. இது என்ன புதுசா...காயம் எப்படியும் இந்த வாரம் சரியாகிடும் ..பயப்படாதீங்க .

ஜெய்லானி சொன்னது…

@@@vanathy
நாட்டாமை, இரக்கப்பட்டா மட்டும் போதாது. உங்கள் மனைவியை ஓய்வெடுக்க சொல்லிட்டு சமையல் வேலைகளை நீங்களே செய்யணும்.//


ஹய்யோ...ஹய்யோ...

// உங்க மனைவி இந்தப் பதிவு பார்த்தாங்களா?? ஆனந்தக் கண்ணீர் விட்டாங்களா???? //

சில இடத்துல(நேரத்துல) பரிதாபப்பட்டு விட்டுருக்கல்லாம் இல்லையா பாஸ்

ஜெய்லானி சொன்னது…

//நாம ஒன்றும் புதுமாப்பிள்ளை யல்லவே! //

அந்த ஆசை வேற மனசுல இருக்கா...கூப்பிடுங்க வீட்டுகாரம்மாவை எப்படியும் இதை அவங்க கிட்ட சொல்லாம விட ப்போறதில்ல

நாடோடி சொன்னது…

இப்படி ஆதங்க பட்டா மட்டும் போதாது களத்துல இறங்கிட வேண்டியது தான் .. :)

Chitra சொன்னது…

மாப்பிள்ளை தான் அதிகம் சாப்பிட மாட்டேங்கிறாரே என்று நான்காவது நாள் ஒரு நார்மலான சாப்பாட்டை தான் செய்து வைப்பார்கள். அன்னிக்கு அவருக்கு அதிகமா பசிக்கும். மூணு நாளும் அரைகுறையா சாப்பிட்டது. கிடந்து முழிப்பார். அனுபவமான்னு கேட்கப் படாது.


............. சரி, சரி.... நீங்க இவ்வளவு சொல்றதுனால கேக்கல.

GEETHA ACHAL சொன்னது…

நல்லது தான்...நீங்களும் உங்கள் மனைவிக்கு சமையலில் உதவி செய்து கலக்க வாழ்த்துக்கள்...

Menaga Sathia சொன்னது…

நீங்களும் கிச்சனில் நுழைந்து சமையலில் கலக்க வாழ்த்துக்கள்..உங்க மனைவி இந்த பதிவை பார்த்து என்ன சொன்னாங்க??

பொடுசு சொன்னது…

சில (பல) வீட்டுல தங்கப்பன்கள் படும்பாடும் இப்படிதான் இருக்குமாமே!!! உண்மையா பாஸ்????

ஜெயந்தி சொன்னது…

சமையல் ரூமுக்குள்ள போய் கேளுங்க வேலை என்னான்னு தெரியும். பெண்களின் கஷ்டத்தை உணர்வதே பெரிய விஷயம்.

Unknown சொன்னது…

பட்ட அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி
அப்துல் காதர்.
அருமையான பகிர்வு.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//எக்ஸ்ட்ரவாய் ஜாலர் முட்டை சமோசா, கஸ்டர்ட், சப்ஜா விதை கலந்த ஜூஸ் (குளிர்சிக்காம்) என்று நிறைய பதார்த்தங்களை செய்து வைத்து விட்டார்கள். என்னால் அவ்வளவா சாப்பிட முடியல!//

எங்களை ஒரு வார்த்தை கூப்பிடலாம்ல.

சரிசரி அடுத்த முறை நாங்க வரும் போது நீங்களும் சேர்ந்து செய்து கொடுங்க :)

Unknown சொன்னது…

///மாப்பிள்ளை தான் அதிகம் சாப்பிட மாட்டேங்கிறாரே என்று நான்காவது நாள் ஒரு நார்மலான சாப்பாட்டை தான் செய்து வைப்பார்கள். அன்னிக்கு அவருக்கு அதிகமா பசிக்கும். மூணு நாளும் அரைகுறையா சாப்பிட்டது. கிடந்து முழிப்பார். அனுபவமான்னு கேட்கப் படாது.///

இப்படி நீங்க கெஞ்சி கெட்டதுனால விட்டுடலாம்..

இருந்தாலும் ஹா ஹா ஹா...

நல்லாருக்கு பதிவு..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நான் அந்த கஷ்டத்தை தங்ஸ் கொடுக்கிறது இல்ல.. நான் உதவி செய்ய போனாலும் அவங்க வேண்டான்னு சொல்லிருவாங்க..

///என்னால் அவ்வளவா சாப்பிட முடியல! நாம ஒன்றும் புதுமாப்பிள்ளை யல்லவே!...///

இங்க ஒரு புதுமாப்பிள்ளை உக்காந்துருக்கேன் பாத்து.. ஹ ஹா ஹா ஹா..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

// நாட்டாமை, இரக்கப்பட்டா மட்டும் போதாது. உங்கள் மனைவியை ஓய்வெடுக்க சொல்லிட்டு சமையல் வேலைகளை நீங்களே செய்யணும்.
உங்க மனைவி இந்தப் பதிவு பார்த்தாங்களா?? ஆனந்தக் கண்ணீர் விட்டாங்களா????? //

பார்த்தாங்க வாணி,, மொதோ அன்னிக்கே வெங்காயம் வெட்டிக் கொடுத்தப் போதும் மத்தத போகப் போகப் பாத்துக்கலாம்னாம்ங்க! அவங்களுக்கு ஆனந்தமோ இல்லையோ எனக்கு கண்ணீர் வர்றது நிச்சயம். எந்தப் புண்ணியவானோ சொன்னாரு "சீவிங்கத்தப்" போட்டு மென்னுக்கிட்டு வெங்காயம் வெட்டுனா கண் எரியாதாம், கண்ணீரும் வராதாம்!! அவர் வாழ்க!! படிக்கிற உங்களுக்கும், எங்க 'தலை'க்கும் குளு குளுன்னு இருக்கும்.ஈசி..கூல்..(ஹி..ஹி.. என்னை நானே சொல்லிக்கிறேன்)

வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

// எனக்கு ஓரு விஷயம் மட்டும் நல்லா புரியுது இப்போ...!!! வாங்குன அடி இப்பிடி ஒரு பதிவு போட வச்சிருக்கு... சரி..சரி.. இது என்ன புதுசா...காயம் எப்படியும் இந்த வாரம் சரியாகிடும்.. பயப்படாதீங்க. //

புதுசா ஒரு காரியத்தில இறங்கினா பின் வாங்க மாட்டான் இந்த மானத் தமிழன். (ஹி..ஹி.. அது என்ன தான் சொல்றேன். வெளியே சொல்லிக்க வேணாம் பாஸ். கீப் சீக்ரட்)

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//சில இடத்துல (நேரத்துல) பரிதாபப்பட்டு விட்டுருக்கல்லாம் இல்லையா பாஸ்//

இல்ல பாஸ். அப்படி ஒன்னும் அற்புதம் நடந்துடல. சாப்பிட்ட பிளேட்ட கழுவுரதுல ஹெல்ப் ஆரம்பிச்சிருக்கு!! எல்லா காரியத்திலும் கை கொடுப்பேன் என்று சொல்லி முழங்குவான் இந்த மரத் தமிழன்!! ஹி.. ஹி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

// அந்த ஆசை வேற மனசுல இருக்கா...கூப்பிடுங்க வீட்டுகாரம்மா வை எப்படியும் இதை அவங்க கிட்ட சொல்லாம விடப் போறதில்ல//

உங்க தங்கச்சிக்கிட்ட இதெல்லாம் கூடவா போட்டுக் கொடுப்பீங்க மச்சான். க்கி.. க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

//இப்படி ஆதங்க பட்டா மட்டும் போதாது களத்துல இறங்கிட வேண்டியது தான்.. :)//

ஆமா பாஸ் புள்ள குட்டிகளுக்கு மொத்து விளாம இருக்கணுமே (எனக்கும் தான்) ஹி..ஹி..

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

// சரி, சரி.... நீங்க இவ்வளவு சொல்றதுனால கேக்கல. //

இந்த உலகம் இன்னும் நம்மள நம்ப மாட்டேங்குதய்யா!!

சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ GEETHA ACHAL கூறியது...

// நல்லது தான்...நீங்களும் உங்கள் மனைவிக்கு சமையலில் உதவி செய்து கலக்க வாழ்த்துக்கள்...//

ஆஹா தேங்க்ஸ் மேடம்! பூங்கொத்து ஏதுமில்லையா??

GEETHA ACHAL உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Mrs.Menagasathia கூறியது...

// நீங்களும் கிச்சனில் நுழைந்து சமையலில் கலக்க வாழ்த்துக்கள்.. உங்க மனைவி இந்த பதிவை பார்த்து என்ன சொன்னாங்க??//

சந்தோஷமா பாத்தாங்க மேடம்! அது தான் கொஞ்சம் வயத்த கலக்குற மாதிரி இருக்கு. ஹா.. ஹா..

Mrs.Menagasathia உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பொடுசு கூறியது...

//சில (பல) வீட்டுல தங்கப்பன்கள் படும்பாடும் இப்படிதான் இருக்குமாமே!!! உண்மையா பாஸ்???? //

அதுக்கு ஏன் இத்தன கேள்விக் குறி? தங்கப்பன் வீட்டுக்கு நான் இதுவரை போனதில்லை,, இருந்தாலும் யார் அந்த தங்கப்பன் பாஸ்? ஹி.. ஹி..

பொடுசு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெயந்தி கூறியது...

// சமையல் ரூமுக்குள்ள போய் கேளுங்க வேலை என்னான்னு தெரியும். பெண்களின் கஷ்டத்தை உணர்வதே பெரிய விஷயம்.//

அப்படி எல்லோரும் உணரனும் என்பதற்காக தான் இந்த பதிவே! இன்னும் நிறைய இருக்கு எழுத! இப்பவே நிறைய எழுதிட்டா
"ரங்கஸ்"கள் அலறி விடுவார்கள் அலறி.

ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@abul bazar/அபுல் பசர் கூறியது...

// பட்ட அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி!//

இல்லையா பின்ன!! ஆமா நீங்க கிச்சன் பக்கமெல்லாம் போன தில்லையா பாஸ்?? போய்ப் பாருங்க என்ன மாதிரி பத்துப் பதிவு போட்டுட்டு.. கிச்சனே பழியா கிடப்பீங்க. ஹா.. ஹா..

அபுல் பசர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிநேகிதன் அக்பர் கூறியது...

//எங்களை ஒரு வார்த்தை கூப்பிடலாம்ல. சரி சரி அடுத்த முறை நாங்க வரும் போது நீங்களும் சேர்ந்து செய்து கொடுங்க :)//

அடுத்த முறை என்ன? இப்பவே புறப்பட்டு வாங்க, நீங்களும் ஸ்டார் ஜான் சாரும். ஈதுக்கு எங்களுக்கு எட்டு நாள் லீவு. சும்மா நாமலே ஜமாய்ச்சுடுவோம். நா நல்லா சாப்பிடுவேன் சார்!! ஹா..ஹா..

அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பதிவுலகில் பாபு கூறியது

//இப்படி நீங்க கெஞ்சி கெட்டதுனால விட்டுடலாம்..//

கெஞ்சாமே எதுவுமே கிடைக்காது பாஸ்! ஆமா நீங்க என்ன கேட்டீங்க?

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan(ஸ்டார்ஜன்) கூறியது...

// நான் அந்த கஷ்டத்தை தங்ஸ் கொடுக்கிறது இல்ல.. நான் உதவி செய்ய போனாலும் அவங்க வேண்டான்னு சொல்லிருவாங்க..//

இருக்காதா பின்னே!! பிளேட்டை கழுவச் சொன்னா ரெண்டு கிளாசையும் சேர்த்து ஒடச்சு வச்சுட்டு வந்தா?? கொடுத்து வச்ச ஆளு நீங்க தல!

Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// இங்க ஒரு புதுமாப்பிள்ளை உக்காந்துருக்கேன் பாத்து.. ஹ ஹா ஹா ஹா..//

நாம எப்ப ஊருக்கு போனாலும் புது மாப்பிள்ளை தான் பாஸ். அப்படிச் சொல்லணும் . ஹா.. ஹா

Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

Jey சொன்னது…

ஒய், உதவி செய்றேனு போய் ஏதாவது சொதப்பி அடி வாங்கி சாவுங்கடானு... ஒத்த வரில சொல்றே...நல்லாயிரு மக்கா....

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Jey கூறியது...

// ஒய், உதவி செய்றேனு போய் ஏதாவது சொதப்பி அடி வாங்கி சாவுங்கடானு... ஒத்த வரில சொல்றே...நல்லாயிரு மக்கா....//

அடி வாங்கிட்டா மட்டும்..??

இதுவரை வாங்கின அடிக்கே நூறு முறையாவது செத்திருக்கணும்!! அடி விழுந்தா "இரும்புத் தலைவன் எங்க தலைவன்னு" நமக்கு நாமே ஜோரா கத்திக்கிட்டே வெளியே ஓடிடனும்னு சொல்லிக் கொடுத்த உங்களுக்கே மறந்துப் போச்சா பாஸ்,, ஹா..ஹா..

jey உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

ஸாதிகா சொன்னது…

அப்துல்காதர்..உங்கள் வீட்டு தங்க்ஸுகு ரொம்பவே ஐஸ் வச்சிட்டீங்கோ..பார்த்து ஜலதோஷம பிடித்து விடப்போறது.

Abdulcader சொன்னது…

என்ன பாஸ் தொடர்ந்து "தங்ஸ்"
பற்றிய பதிப்பாவே இருக்குது. நிறைய பாதிக்கப்பட்டிரிக்கிறீங்க போல.

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப "அனுபவிச்சு" எழுதி இருக்கீங்க! எனக்கு என்னமோ நீங்க தங்கச்சிக்கு கூடமாட உதவி எதுவும் செய்யறதில்லைன்னு தோணுது.. செய்யுங்க பாஸ். நல்ல பதிவுங்க!

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப "அனுபவிச்சு" எழுதி இருக்கீங்க! எனக்கு என்னமோ நீங்க தங்கச்சிக்கு கூடமாட உதவி எதுவும் செய்யறதில்லைன்னு தோணுது.. செய்யுங்க பாஸ். நல்ல பதிவுங்க!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஸாதிகா கூறியது...

// அப்துல்காதர்..உங்கள் வீட்டு தங்க்ஸுகு ரொம்பவே ஐஸ் வச்சிட்டீங்கோ..பார்த்து ஜலதோஷம பிடித்து விடப்போறது. //

வந்தா இருக்கவே இருக்கிறது எல்லாப் புகழும் இறைவனுக்கே!!ஓதி நெஞ்சில் ஊதிக்கிட்டா எதுவும் கிட்ட நெருங்காது..ஹா..ஹா..

ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ காயலாங்கடை காதர் கூறியது...

//என்ன பாஸ் தொடர்ந்து "தங்ஸ்"
பற்றிய பதிப்பாவே இருக்குது. நிறைய பாதிக்கப்பட்டிரிக்கிறீங்க போல.//

இல்ல! அப்படி பாத்தித்தவர்கள் யாரும் இப்படி சத்தம் போட்டு சொல்லிக்கிட்டிருக்க மாட்டங்க. மற்றவங்க யாரும் பாதித்து விடக் கூடாதே என்ற நல்ல எண்ணம் தான் பாஸ். ஹி..ஹி..

காயலாங்கடை காதர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ மோகன்ஜி கூறியது...

//ரொம்ப "அனுபவிச்சு" எழுதி இருக்கீங்க! எனக்கு என்னமோ நீங்க தங்கச்சிக்கு கூடமாட உதவி எதுவும் செய்யறதில்லைன்னு தோணுது.. செய்யுங்க பாஸ். நல்ல பதிவுங்க!//

இல்ல பாஸ். இவங்கல்லவா அளவுக்கதிகமா நல்லவங்களா இருக்காங்க?? கூட மாட சில்லறை வேலைகள் செய்துக் கொடுத்தாலும், "எங்க அம்மா என்னை எப்படி அலுங்காம வைத்திருந்தார்களோ" அதை பார்த்து விட்டு அது மாதிரியே என்னை கஷ்டப்பட விட மாட்டேன்கிறங்களே. நானென்ன செய்வது?? இது மாதிரி அமைவது தான் ரொம்ப அபூர்வம். அதற்காகவாவது கூட ரெண்டு பதிவ போடலாம் தான். எல்லாரும் படிக்க மாட்டங்க. அடிக்க வருவாங்க. பாஸ் நீங்க அடிக்கடி வந்து சைபீரியா குளிர்ச்சியாய் அளித்து விட்டு போகும் அறிவுரைகள் கோடி பெறும்.

மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

Jaleela Kamal சொன்னது…

mm இது போல யோசிக்க தோணுச்சே அதே பெரிய விஷியம்,

உங்கள் தங்க்ஸ் இத படிச்சிட்டு. இன்னும் இவ்வளவு நல்லவரா. இன்னு ம் இரண்டு ஜாலரப்பாம்ம் சேர்த்து கொடுத்துடுவோம்,

கிச்ச்னில் உதவ் முடியலைன்னாலும், மற்ற வேலைகளை கிளீனிங், வாஷிங் பிள்ளைகளை கவனித்தல் இது போல் உதவலாம்

Jaleela Kamal சொன்னது…

http://allinalljaleela.blogspot.com/2010/09/blog-post.html
தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன், முடிந்த போது எழுதுங்கள்