ஞாயிறு, செப்டம்பர் 12, 2010
மெல்ல விலகும் இருள்கள்..!!
முந்திய இடுகை "மெல்ல ஒளிரும் இரவுகள்" படிக்காதவர்கள் படித்து விட்டு தொடர்ந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.
மெல்ல விலகும் இருள்கள்…!!
மேற்படி செய்திகள் அனைத்தும் அவருடைய மனைவிக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, காரணம் அவர் 'உண்டாகி' இருந்தது தான். இந்த விஷயத்தை நண்பரிடம் போய் நான் தெரியப் படுத்தனுமாம். ஹும்… நல்ல லட்சணம் தான் போங்க!
எனக்குத் தான் இது மாதிரி விவகார மெல்லாம் வந்து வாய்க்குமோ? அல்லது நானே இழுத்து போட்டுக் கொள்கிறேனோ தெரியலங்க!
சவுதி அரேபியாவின் சட்ட திட்டங்கள் என்ன? அதை உணராத நண்பரா அவர்?? இல்லையே!! அரபிக்கில் அக்கவுண்டிங் எழுதும் ஆற்றல் பெற்று, அதை "தர்ஜுமா" எனும் மொழி பெயர்ப்பு செய்யக் கூடிய வல்லமை பெற்றவர் ஜெயிலில் போய் உட்கார்ந்துக் கொண்டால் எப்படி?? சற்று யோசித்துப் பாருங்கள்.
சரி அவ்வளவு பணத்தை எப்படி லண்டனில் இருந்து என் பெயரில் வரவழைத்து இவருடைய ஸ்பான்சரிடம் ஒப்படைப்பது?
என் பெயரில் அவ்வளவு பணம் வந்தால் கேள்வி எழாதா?? ஏற்கனவே ஒவ்வொரு நாடும் பணப் போக்குவரத்தை 'கண்காணிப்பு'
செய்து கொண்டிருக்கும் வேளையில் இது ஒரு புது தொந்தரவா?
இப்படி பலவாறாக கேள்விகள் எழுந்த வண்ணமிருந்தது.
நீங்கள் கூட நினைக்கலாம் அந்த ஸ்பான்சர் பெயருக்கே வரவழைத்து கொடுத்து விடலாமே என்று? இவ்வளவு நடந்த பிறகு அந்த ஸ்பான்சர் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு டீலாவில் விட்டு விட்டால்? இதையும் அவர் அண்ணனே கேட்டார்? நாம் என்ன பதில் சொல்ல முடியும்? சரி உங்க இஷ்டம் என்று சொல்லி விட்டேன். இவைகள் பேசி, அவர் பணம் ரெடி செய்வதற்குள் பத்து பதினைந்து நாள் ஓடி விட்டது.
ரெண்டு லட்சம் ரியால்களை நான்கு பேர் பெயருக்கு ஐம்பது ஆயிரம் ரியால்களாக செக் அனுப்பி, அதை இங்கு ஒரு சவுதி நபரை கார்டியனாக வைத்து கொண்டு போய் அந்த ஸ்பான்சரிடம் ஒப்படைப்பது என்று முடிவானது. சுருங்க சொல்லின் பணம் கைமாறி எங்களுக்கோ வேறு யாருக்கோ போய் விடக் கூடாது என்பது நோக்கம். வியாபார தந்திரமுள்ளவர்களாயிற்றே! எல்லா வித்தைகளும் ஒரு சேர தெரிந்து வைத்திருப்பார்கள். நான் கழன்று கொள்ளலாம் என்று நினைத்த போது நட்பு என்பது இதற்க் கெல்லாம் அப்பாற் பட்டது என்று யோசிக்க வைத்தது. லூசா இவன் என்று கூட பார்க்க ஆரம்பித்தார்கள்.
வாரம் இரண்டு முறை ஜெயிலில் போய் நண்பரை சந்திக்க முடியும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாக. கூட்டம் கூட்டமாய் இந்தப் பக்கமும் அந்த பக்கமும் ஆட்கள். குறுக்கே நான்கு தடுப்பு சல்லடை வலைப் போன்ற கம்பிகளுக்கு அப்பால் நிற்கும் நண்பரை பார்த்து கத்தி கத்தி பேசி விட்டு வந்தாலே போதும் போதுமென்றாகி விடும்.
கணவரிடமிருந்து அடிக்கடி தொலைப் பேசியில் பேசிக் கொண்டிருந்த இவர் மனைவிக்கி சந்தேகம் வந்திருக்க வேண்டும். என் அலைபேசி நம்பர் தெரியாததால் என் சகோதரியிடம் சென்று விசாரித்திருக்கிறது. எங்கள் சகோதரிக்கு விபரம் தெரியாததால் அவர்கள் என்னிடம் கேட்ட போது, அவர்களுக்கு விபரமாகச் சொல்லி, அந்தப் பெண்ணிடம் முழுமையாக சொல்லி விட வேண்டாம், ‘உண்டாகி’ இருப்பதால் நாசூக்காக சொல்லவும் என்று உஷார் படுத்தினேன்.
நான்கு பேருக்கு வர வேண்டிய பணம் வந்து விட்டது. நான்கு பேரும் அவரவர் ID ஐ பேங்கில் காட்டி பணம் எடுக்கணும். மற்ற மூவரும் பணத்தை எடுத்து ரெடியாக வைத்திருக்கும் போது, கார்டியனகப் போட்ட ஒரு சவுதி காரன் அவன் பேரில் வந்த ஐம்பதாயிரம் ரியாலுக்குரிய செக்கை en cash செய்து சுருட்டிக் கொண்டு ஓடி விட்டான். அவனுக்கு சர்வீஸ் சார்ஜ் ஐயாயிரம் ரியால். அதுவும் போச்சு. அவன் வீட்டில் போய் பார்த்து பிடிக்கலாமே என்று நீங்கள் சொல்லலாம். அங்க தான் இருக்கு வில்லங்கம்.
அவன் நம்மிடம் நின்று பேசிக் கொண்டிருந்து காட்டியது யாரோ ஒருவருடைய வீடு. அங்கே கேட்டுக்கு வெளியே நிற்க வைத்தே முழு விபரமும் கேட்டு நம்மை விரட்டி விட்டு விட்டார்கள். இப்படி தில்லு முல்லுகள் ஏராளம்.
சரி போகட்டும் என்று அந்த ஓடிப் போனவனை பிடிக்க இன்னொரு அரபியை ஏற்பாடு செய்த போது, அவனும் இது ஏதோ அனாமத்தாய் வந்த பணம் என்பது போல் அவனிடமிருந்து வாங்கியதை இவன் சுட்டுக்கொண்டு ஓடி விட்டான் என்று விஷயம் ரொம்ப நீளும். நீங்களே ஆயாசப் படுவது தெரிகிறது. ஒருவருக்கொருவர் யாரையும் நம்பாததால் வரும் வினைகள். ஆகவே விஷயத்துக்கு வருகிறேன்.
இன்னொரு தடவை என் பெயருக்கே ஐம்பதாயிரம் ரியால் செக் வந்து மொத்தப் பணத்தையும் ஸ்பான்சரிடம் சென்று ஒப்படைத்த போது மனிதர் மொத்தமாக வாங்கிய ரெண்டு லட்சம் ரியால் பணத்துக்கு வவுச்சர் எழுதி கொடுத்து எங்களை அசர வைத்தார். லண்டனுக்கு தகவல் சொன்ன போது இதை முன்னமே செய்திருக்கலாமே என்று அவர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறை! யார் தலையில் அவ்வளவும் விடிகிறது?
இதற்கிடையே பணத்தை நாம் தோது செய்துக் கொடுத்தாலும், போலீஸ் கேஸ், கோர்ட் கேஸாகி மூன்று மாதம் சிறை வாசமில்லாமல் அவரை வெளியே கொண்டு வர முடியாது என்ற ஒரு நிலை உருவாகிப் போனது, என்று முன்பே சொன்னேனில்லையா… பணத்தைக் கொடுத்தாலும் அது தான் நடந்தது. யாராலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
ஆச்சு..! மூணு மாசம் முடிந்து நண்பர் ஊருக்கு போகும் நாள் வந்தது. ஏர் போர்டுக்கு போனேன். மனிதர் கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ படவில்லை. மாறாக ஐம்பதாயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடினானனே இன்னொரு அரபி,, அவன் அட்ரசை தேடி வையுங்கள். நான் திரும்ப வேறு பாஸ்போர்டில் வந்து பேசிக்கிறேன் என்று போய் விட்டார். பாருங்கள் இவர்களுக்கு குறியெல்லாம் எதில்?? இப்பல்லாம் வேறு பாஸ்போர்டில் திரும்ப இங்கே வருவது அப்படி ஒன்றும் ஈசியான காரியமில்லை. பட்டும் புரியவில்லை இவர்களுக்கு!!
அப்புறம் நண்பர் ஏர்போர்டில் கையில் விலங்கோடு நின்ற போது, அவர் கிட்ட போய் நின்று பேச போலிஸ்காரர்கள் அனுமதி தந்தார்கள். கிட்டத்தட்ட அந்த ஒரு மணி நேரத்தில் நண்பர் மூணு மாசம் பட்ட அவஸ்தையையும், சில சுவராஸ்யங்களையும் சொன்னார். அதை பிறகு நேரம் கிடைக்கும் போது உங்களோடு பகிர்கிறேன் .
டிஸ்கி + புஸ்கி : இதை படிப்பவர்களுக்கு வேணுமானால் இது ஒரு பாடமாக இருக்கலாம்…. எனக்கு? அனுபவமா இல்லை வேறென்ன
நீங்களே சொல்லுங்க…??
லேபிள்கள்:
உண்மை நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
27 கருத்துகள்:
//இதை படிப்பவர்களுக்கு வேணுமானால் இது ஒரு பாடமாக இருக்கலாம்…. எனக்கு? அனுபவமா இல்லை வேறென்ன
நீங்களே சொல்லுங்க…??//
நிச்சயம் இது உங்களுக்கு மனிதர்களை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு, அனுபவம். இந்த மனிதரிடம் இருந்து சற்று விலகியே இருங்கள். இன்னொரு பாஸ்போர்ட்டில் வருவேன் என்று சொல்லும் போதே தெரியவில்லையா அவர் திருந்தப் போவதில்லை என்று. வீணாக சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்
வாழ்க்கையின் எல்லா நொடிகளும் பாடம்தானே:)
நல்ல பாடம்.யாரையும் நம்பக்கூடாது,எந்த புற்றில் எந்த பாம்போ!மனசாட்சியுள்ள நாட்டாண்மை த கிரேட்.பாராட்டுக்கள்.
வாழ்க்கையின் எல்லா நொடிகளும் பாடம்தானே://
பாலா சாரின் கருத்தை நான் ரிப்பீட்டீக்கிறேன்..
//ஐம்பதாயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடினானனே இன்னொரு அரபி,, அவன் அட்ரசை தேடி வையுங்கள். //
ஆஹா வில்லங்கம் வீடுதேடி வரும் போலிருக்கே...!!!
//நான் திரும்ப வேறு பாஸ்போர்டில் வந்து பேசிக்கிறேன் என்று போய் விட்டார். //
ரொம்ப சுத்தம் ..மாட்டினா என்ன தண்டனை தெரியுமா..?
இவ்வளோ பணம் வச்சிருந்தீங்களே அப்ப என் நினைவு கொஞ்சம் கூட இல்லையா பாஸ்... ஒரு மிஸ்ட் கால் குடுத்திருந்தா நடந்தே வந்திருப்பேனே...!!! வட ச்சே.. பணம் போச்சே...!!! அவ்வ்வ்வ்
இப்படியும் சில மனிதர்கள்! கவனமாக இருங்கள்.
இங்கு ஏமாற்றுகாரர்களுக்கா பஞ்சம்...
நல்ல எச்சரிக்கை பகிர்வு அப்துல் நண்பரே.
இது நல்ல ஒரு படிப்பினை, நாட்டாமை. எச்சரிக்கையா இருங்கப்பு.
ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் சற்று ஜாக்கிரதையாகவேயிருங்கள்.
செப்டெம்ப்ர், 2010 8:42 pm
/ஜெய்லானி கூறியது...
இவ்வளோ பணம் வச்சிருந்தீங்களே அப்ப என் நினைவு கொஞ்சம் கூட இல்லையா பாஸ்... ஒரு மிஸ்ட் கால் குடுத்திருந்தா நடந்தே வந்திருப்பேனே...!!! வட ச்சே.. பணம் போச்சே...!!! அவ்வ்வ்வ்//
அதானே. பணமுன்னதும் பாருங்க நம்ம அண்ணாதே எப்படி அஆஆஆஆஆஅன்னு..
வாழ்க்கை என்பதே ஒரு யாத்ரா தானே, அதில் ஒவ்வொரு நொடியும் நமக்கு மற்ற மனிதர்கள் மூலம் பல அனுபவம்.
உண்மைலேயே உங்கள் உதவி சுயநலம் அற்றது.ஆனால் இது போன்றவர்களுக்கு உதவுவது தவறு என்று நான் நினைக்கிறேன்.
///இதை படிப்பவர்களுக்கு வேணுமானால் இது ஒரு பாடமாக இருக்கலாம்…. எனக்கு? அனுபவமா இல்லை வேறென்ன நீங்களே சொல்லுங்க…?? ///
கண்டிப்பா உங்களுக்கு கசப்பான அனுபவம் தாங்க.. !!
@@ kavisiva கூறியது...
// இன்னொரு பாஸ்போர்ட்டில் வருவேன் என்று சொல்லும் போதே தெரியவில்லையா அவர் திருந்தப் போவதில்லை என்று. வீணாக சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் //
மிகச் சரியாயாக கணித்தீர்கள் நானும் அதையே தான் நினைத்தேன்.
கவிசிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ வானம்பாடிகள் கூறியது...
// வாழ்க்கையின் எல்லா நொடிகளும் பாடம்தானே :) //
ஆஹா அசத்தல் தல. "நச்"
வானம்பாடிகள் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ asiya omar கூறியது...
//நல்ல பாடம். யாரையும் நம்பக்கூடாது, எந்த புற்றில் எந்த பாம்போ!மனசாட்சியுள்ள நாட்டாண்மை த கிரேட். பாராட்டுக்கள்.//
ரொம்ப நன்றிங்க மேடம் உங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு!!
asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
** அஹமது இர்ஷாத் கூறியது...
வாழ்க்கையின் எல்லா நொடிகளும் பாடம்தானே://
பாலா சாரின் கருத்தை நான் ரிப்பீட்டீக்கிறேன்..
இது ரொம்ப அநியாயங்க. மத்தவங்க கருத்தை நாம ரிபீட்டிக்கிறது. ஹி..ஹி..
அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ ஜெய்லானி கூறியது...
// ரொம்ப சுத்தம் ..மாட்டினா என்ன தண்டனை தெரியுமா..? //
((பாஸ் உங்க கேள்விக்கு நீங்க சொன்ன இன்னொரு பதிலையே - பதிலா வைக்கிறேன் பாருங்க!!))
ஆஹா வில்லங்கம் வீடுதேடி வரும் போலிருக்கே...!!!
ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ ஜெய்லானி கூறியது...
// இவ்வளோ பணம் வச்சிருந்தீங்களே அப்ப என் நினைவு கொஞ்சம் கூட இல்லையா பாஸ்... ஒரு மிஸ்ட் கால் குடுத்திருந்தா நடந்தே வந்திருப்பேனே...!!! வட ச்சே.. பணம் போச்சே...!!! அவ்வ்வ்வ் //
வந்துச்சு தான்.. ஆனா நீங்க... "எவ்வலோவ்வ்" நல்லவரு.. ஹி ஹி அப்பிடீன்னு நெனச்சு....!! க்கி.. க்கி..
ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ Chitra கூறியது...
// இப்படியும் சில மனிதர்கள்! கவனமாக இருங்கள். //
இப்படி உள்ள மனிதர்கள் திருந்த மாட்டாங்களா மேடம்!!
Chitra உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ நாடோடி கூறியது...
// இங்கு ஏமாற்றுகாரர்களுக்கா பஞ்சம்... நல்ல எச்சரிக்கை பகிர்வு அப்துல் நண்பரே.//
ஆனா நம்மள பார்த்து வர்றாங்களே, நாம என்ன அப்படியா இருக்கோம் பாஸ்!! ஹி..ஹி..
நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ vanathy கூறியது...
// இது நல்ல ஒரு படிப்பினை, நாட்டாமை. எச்சரிக்கையா இருங்கப்பு.//
நம்மளையே குறி வச்சு வர்றாங்களே அது தான் பயமா இருக்கு வான்ஸ்!!
வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ அன்புடன் மலிக்கா கூறியது...
// ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் சற்று ஜாக்கிரதையாகவேயிருங்கள்.//
இருந்தும் பிரயோஜனம் இல்ல சகோதரி! நம்ம மொகத்தில அது மாதிரி எழுதி இருக்கும் போல!! ஹா.. ஹா..
அன்புடன் மலிக்கா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
@@ அன்புடன் மலிக்கா கூறியது...
**ஜெய்லானி கூறியது..
// அதானே. பணமுன்னதும் பாருங்க நம்ம அண்ணாதே எப்படி அஆஆஆஆஆஅன்னு.. //
அது பச்ச புள்ளங்க பாவம். பள்ளிவாசலே கதின்னு கெடக்கும். ஒரு வேள காத்து கருப்பு அண்டியிருக்குமோ?? அதுட பேர சொன்னாலே அதெல்லாம் கூட அண்டாதே!! அதான் எனக்கும் யோசனையா இருக்கு!! ஹி..ஹி...
அன்புடன் மலிக்கா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ சிங்கக்குட்டி கூறியது...
// வாழ்க்கை என்பதே ஒரு யாத்ரா தானே, அதில் ஒவ்வொரு நொடியும் நமக்கு மற்ற மனிதர்கள் மூலம் பல அனுபவம்.//
இருந்தும் பலனில்லை பாஸ்.
சிங்கக்குட்டி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ காயலாங்கடை காதர் கூறியது...
// உண்மைலேயே உங்கள் உதவி சுயநலம் அற்றது. ஆனால் இது போன்றவர்களுக்கு உதவுவது தவறு என்று நான் நினைக்கிறேன்.//
இந்த பாழும் மனசு கேட்க மாட்டேங்குதே பாஸ். அப்புறம் வீட்ல எல்லோரும் நலமா? எங்க "பொடுசு" ஆளையே காணோம்??
காயலாங்கடை காதர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@@ Ananthi கூறியது...
// கண்டிப்பா உங்களுக்கு கசப்பான அனுபவம் தாங்க.. !! //
இருந்தாலும் மனசை தேத்திக்கிறேனுங்க!!
ஆனந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
கருத்துரையிடுக