facebook

திங்கள், செப்டம்பர் 20, 2010

அன்புள்ள நண்பனுக்கு..!!

                                                                    









அன்புள்ள நண்பனுக்கு...!!!


சொத்து பத்து சேர்க்க வென்றே சொந்தங்களை பிரிந்தாயே

சொந்தமாய் வீடு வேண்டும்; கார் வேண்டும் என்றாயே

வாங்கினாயா?? இல்லை... அவைகளை விற்றாயா?? விற்றுவிட்டு

வெளிநாடு சென்றதெல்லாம் திரும்ப மீட்காப் பொருளாச்சு.


சேர்ந்த மாதிரி உன் மனைவியோடு எத்தனை நாள்; வருஷம்

வாழ்ந்தாய்; சந்தோசித்தாய்; இன்னமும் பெற்ற குழந்தைகளெல்லாம்

மச்சினிகளோடு சேர்ந்து உன்னை மச்சான் என்று கூப்பிடுவதாகச்

சொன்னாயே, உண்மையா?


வந்த கடனை அடைக்கு முன்னே வெகேஷன் வந்தாச்சு

அதற்கும் சேர்த்து ஒரு வட்டிக் கடன் வாங்கியாச்சு !


இடையே பேசிய அலைபேசியில் இல்லாள்                              

கேட்ட நகையும் இல்லை என்று சொல்லாமல்,

மகளும் மகனும் கேட்டதையும், சொந்தங்களை

மகிழ்விக்க கேட்ட பொருள்களும் வாங்கியாச்சு!


உன் அம்மாவுக்கு எதேகிலும் வாங்கினாயா?? சொல் நண்பா !!

யாரறிவர் பெற்ற துயர் நீ யன்றோ உணர வேண்டும்!


எத்தனை நாள் இங்கிருப்போம் என்ற வரம் வாங்கி வந்தோம்

சொல்லிக் கொள்ள ஏதுமில்லை; சொல்ல வழி தோனவில்லை.


இந்தியா பட்ட கடனை விடவா உன் கடன்?

அதுவே வல்லரசாகும் போது

ஒன்றிக் கொள்ள ஒரு வீடும், உடுத்திக் கொள்ள ஓருடையும்

வயிறார உண்ண உணவும் நீ பிறந்த பூமியிலா கிடைக்காது?


யோசி!! ஒவ்வொரு முறை நீ திரும்பி வெளிநாடு

போகும் போதும் நீ உடுத்தி இருக்கும் உடைகள் கூட

உனக்கு மிஞ்சாது; நீ போட்டிருக்கும் சட்டை உனதா

என்ற கேள்வி எழும்.                                                                                


நல்லதோ கெட்டதோ ஒன்று உன் மனைவி

பிள்ளைகளை உன்னோடு அழைத்துக் கொள்;

இல்லையேல் நீ அவர்களோடு போய் இருந்துக் கொள்.


நீ எங்கு வேணும்னாலும் வாழ் ; இப்ப

என் சொல் பேச்சை கேள்.

.



 
 
 
 
 
 

28 கருத்துகள்:

vanathy சொன்னது…

சூப்பர்! நிறைய வரிகள் மனதை தொடுகின்றன.

பெயரில்லா சொன்னது…

சுடும் உண்மை :(

Chitra சொன்னது…

நல்லதோ கெட்டதோ ஒன்று உன் மனைவி

பிள்ளைகளை உன்னோடு அழைத்துக் கொள்;

இல்லையேல் நீ அவர்களோடு போய் இருந்துக் கொள்.


......இந்த வார்த்தைகளில் உள்ள அறிவுரை - உண்மை - வேதனை - ஆதங்கம் - எல்லாம் அருமையாக புரிகிறது.

ஜெய்லானி சொன்னது…

போன பதிவுல தங்ஸ் மெயில் நெம்பர் கேட்டதுக்கு . அதுக்குன்னு இப்படியா ஒரு பதிவு ச்சே..ரொம்ப மோசம் நீங்க..!! ஹா..ஹா..:-))

ஜெய்லானி சொன்னது…

உண்மைதான் ஆனால் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

நல்லதோ, கெட்டதோ... மனைவி பிள்ளைகளுடன் வாழப் பழகுன்னு...உங்க அறிவுரை தூள்...:-))

நல்லா இருக்குங்க.. :-)

Asiya Omar சொன்னது…

அருமை சகோ.அப்துல் காதர்.

நாடோடி சொன்னது…

சொல்வ‌து அனைத்தும் உண்மைதான்.. :)

Ahamed irshad சொன்னது…

அத்தனை வார்த்தைகளும் உண்மைங்க அப்துல்காதர்..அருமை கலக்குங்க இதே போல் அடிக்கடி..வாழ்த்துக்கள்

பொடுசு சொன்னது…

உண்மயில், ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைத்தன. வாழ்துக்கள்...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஏற்கனவே சோகத்துல இருக்கோம் ஏம்ணே இப்படி வெறுப்பேத்துறீங்க.

அப்படியே என்னைப்பார்த்து சொல்ற மாதிரி இருந்துச்சி :)

நாங்களும் பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் ஏழுவருஷமா இப்படித்தான் சொல்லிட்டு இருக்கோம். ஆனா ஒரு ஸ்டெப்பும் எடுக்க முடியலை.

கவிதை உண்மையிலேயே அருமை சகோ.

Unknown சொன்னது…

வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்பவர்களின் உண்மை நிலையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் காதர்.

நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மையே.

இதுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு செல்லும் ஒவ்வொருவரின் நிலைமையும்.

கவிதை வரிகள் கலக்கல்.
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

அருமையான பதிவு.. உங்களுடைய ஆதங்கத்தை அருமையா வெளிப்படுத்தியிருக்கீங்க..

ஸாதிகா சொன்னது…

..சேர்ந்த மாதிரி உன் மனைவியோடு எத்தனை நாள்; வருஷம்

வாழ்ந்தாய்; சந்தோசித்தாய்; இன்னமும் பெற்ற குழந்தைகளெல்லாம்

மச்சினிகளோடு சேர்ந்து உன்னை மச்சான் என்று கூப்பிடுவதாகச்

சொன்னாயே, உண்மையா?
// நெகிழ வைத்த வரிகள் .அருமையான கவிதை அப்துல்காதர்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

// சூப்பர்! நிறைய வரிகள் மனதை தொடுகின்றன.//

மனதில் ஒரு தாக்கம், அது எல்லோருக்கும் படனும் என்பதற்காக...

நன்றி வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Balaji saravana கூறியது...

சுடும் உண்மை :(

நன்றி balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

//......இந்த வார்த்தைகளில் உள்ள அறிவுரை - உண்மை - வேதனை - ஆதங்கம் - எல்லாம் அருமையாக புரிகிறது //

நிறைய பேர் அது மாதிரி இங்கே வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் மேடம்!

நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

// போன பதிவுல தங்ஸ் மெயில் நெம்பர் கேட்டதுக்கு. அதுக்குன்னு இப்படியா ஒரு பதிவு ச்சே..ரொம்ப மோசம் நீங்க..!! ஹா..ஹா..:-)) //

ச்சே ச்சே.. அதுக்காகவெல்லாம் ஒரு பதிவா?? நீங்க உங்க தங்ஸ ஷார்ஜாவுக்கு அழைச்சிக்கிட்டு வரணும், நாங்க அங்க வந்தா 'புவ்வாவுக்கு' ஒரு வழி கிடைக்குமே என்ற ஆதங்கத்தினால் .... ஹி ஹி

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

// உண்மைதான் ஆனால் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே..//

கிடைக்கணும்...! கிடைக்கும்...!! முயற்சி வேணும் பாஸ்! நானும் அப்படி ஒரு வேதனையில் வெந்த போது முயற்சித்த பின் கிடைத்தது பலன்.

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ananthi கூறியது...

//நல்லதோ, கெட்டதோ... மனைவி பிள்ளைகளுடன் வாழப் பழகுன்னு... உங்க அறிவுரை தூள்...:-)) நல்லா இருக்குங்க..:-)

இங்கே இவர்கள் தேடுவதும்,, அங்கே அவர்கள் வாடுவதும் ரொம்ப வேதனைங்க!!

நன்றி ஆனந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

// அருமை சகோ.அப்துல் காதர். //

சும்மா இப்படி சொன்னா மட்டும் எப்படி மேடம்?? கவிதைக்கு ஏதும் "அவார்ட்" கிடையாதா?? (consider பண்ணுங்க)..
ஹா..ஹா..

நன்றி ஆசியா உமர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

// சொல்வ‌து அனைத்தும் உண்மைதான்.. :) //

கல்யாணம் எப்ப பாஸ்!! அப்புறம் தான் "சொல்வ‌து அனைத்தும் உண்மைதான்" என்று அடிச்சி சத்தியம் பண்ணனும் ஹி.. ஹி..

நன்றி நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அஹமது இர்ஷாத் கூறியது...

//அத்தனை வார்த்தைகளும் உண்மைங்க//

இப்ப தான் ஊருக்கு போயிட்டு வந்த நீங்க சொன்னா உண்மை தாங்க பாஸ்! ஹா.. ஹா..

நன்றி அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பொடுசு கூறியது...

// உண்மயில், ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைத்தன. வாழ்துக்கள்...//

வாங்க பாஸ் எங்க உங்கள ஆளையே காணோம் ஊருக்குப் போய் இருந்தீங்களா?? புதிய பதிவெல்லாம் போட்டா எனக்கு நீங்க லிங்க் கொடுங்க பாஸ்!

நன்றி பொடுசு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// அப்படியே என்னைப் பார்த்து சொல்ற மாதிரி இருந்துச்சி //

அப்படியா!! நல்ல விதமா ஊருக்குப் போயிட்டு, பரக்கத்தா சலாமத்தா ரஹ்மத்தா திரும்பி வாங்க. அப்படியே ஊரில் எல்லோரையும் விசாரித்து சலாம் சொன்னதாக சொல்லுங்க பாஸ்!!

நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ abul bazar கூறியது...

// வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்பவர்களின் உண்மை நிலையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள். இதுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு செல்லும் ஒவ்வொருவரின் நிலைமையும்.//

தப்பு நம்ம பேரில் தான். பகட்டாய் புது சட்டையுடன் வாசனைப் பொருள்களுடன் போய் இறங்கினால்?? இனிமே வெறும் சூட்கேசுடன் போய் இறங்கிப் பார்க்கணும். (ஒரு பயபுள்ளைக மதிக்க மாட்டானுக அது வேற விஷயம்!! ஹி..ஹி..)

நன்றி அபுல் பசர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பதிவுலகில் பாபு கூறியது...

// அருமையான பதிவு.. உங்களுடைய ஆதங்கத்தை அருமையா வெளிப் படுத்தியிருக்கீங்க..//

வாங்க அப்துல், பிஸி நேரத்திலும் வந்து கருத்துரை சொல்றீங்க!! அது மாதிரி லைட்டா ஒரு பதிவையும் போட்டுடுங்க! உங்க ப்ளாக்
"வெறிச்சோடின" மாதிரி இருக்கு.

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஸாதிகா கூறியது...

// நெகிழ வைத்த வரிகள். அருமையான கவிதை //

தன் கணவர் எப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் என்பதை 'தங்ஸ்' களும் புரிந்து கொள்ளனும். அதுக்காகவேணும் அவர்கள் இங்கே வரணும்.

நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.