facebook

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

"ரங்ஸ்"களின் ஆ‘தங்ஸ்’!!!

                                                                  
"ரங்ஸ்"களின் ஆ‘தங்ஸ்’!!!


என் நண்பர் ஒருவர் தன் மனசில் உள்ள ஆ'தங்ஸ' ...ச்சே.. ஆ'ரங்கஸ' சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார்.

..........என்னன்னு

“எம் பொண்டாட்டி என்ன ஒரு பைசாவுக்கு மதிக்க மாட்டேங்குறா?

"நீதான் சொல்லுவியே அவங்க உன்ன ஆஹா ஓஹோ ன்னு வச்சுக்குராங்கன்னு"

"அதெல்லாம் அப்ப"

" இப்ப என்னா"

"பையன் கால் மேல கால் போட்டுக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தாம்பா
அதுக்கு அடிக்கிறாப்பா"

"பையனைத் தானே"

"என்னை"

"என்னது..தூ..தூ?"

"ஆமாப்பா ஆமா"

"விளக்கமாச் சொல்லு?"

""முன்பெல்லாம் பையன் அது மாதிரி செஞ்சா, "அப்பா மாதிரியே புள்ள கால் மேல கால் போட்டுக்கிட்டு படிக்கிறான்னு" பெருமையா சொல்லுவா."

"சரி இப்ப?"

"பயபுள்ள கால் மேல கால் போட்டுக் கிட்டு படிக்கிது
வெளங்குமான்னு,, கால்லேயே அடிக்கிறாப்பா"

"சரி விடுப்பா குழந்தைகள கொஞ்சம் அடிச்சு வளத்தா தப்பில்ல"

"அட நீ வேற,, அவன் எந்த கால மேல தூக்கிப் போட்டு படிச்சானோ, அதே மாதிரி எனது வலது கால்லேயே அடிக்கிறாப்பா....!! அப்ப தான் அவன் திருந்துவானாம்"

ஙே..?

சரி அதெல்லாம் விடு...

"பொம்புள புள்ளப்பா தூங்கிக்கிட்டிருந்தா அதுக்கு அடிக்கிறாப்பா"

"என்னா...தூ தூங்குற புள்ளைய அடிக்கிறாங்களா??

"இல்ல ... என்னைப்பா..."

“இல்ல இப்பவும் வெளங்கல..விளக்கமாச் சொல்லு..!!”

"ஏண்டா நான் சொல்றத புஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க..ஆஆஆஆ ஆஆஆஆஆ?"

"சரி.. சரி.. கூல் டவுன் சொல்லு "

""முன்னெல்லாம் கொழந்த தூங்கிக் கிட்டிருந்தா, "பாரு அப்பா மாதிரி என்னா ஸ்டைலா, படா ஜோரா நெத்தியில கைய வச்சுக்கிட்டு தூங்குறா"...ம்பா""

"சரி"

"கேட்க கேட்க ஜிவ்வுன்னு இருக்கும்"

"பின்ன இப்ப என்ன?"

"அன்னிக்கி அது மாதிரி தாம்பா புள்ள எங்கிட்ட படுத்து தூங்கிக் கிட்டிருந்தா, “பொளேர்” ன்னு என்ன அரஞ்சுப்புட்டு, நெத்தியில இருந்த புள்ளைடா கைய்ய எடுத்துப் போட்டுட்டு, "என்னா நெனப்புல தூங்குதோ" ன்னு சொல்லிக்கிட்டே தூக்கிட்டு போறா.. பதறிடுச்சு புள்ள "

"புள்ள பதறுனுச்சா... நீ பதறுனியா....??"

"நண்பனாடா நீ?"

"அப்ப எங்கிட்ட வந்து ஏன் சொல்றே?"

"பின்னே பான்-கீ-மூன் கிட்டயா போய் சொல்ல முடியும்?"

போய்ட்டான்.....

நான் : கிர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்

கிஸ்கி : இதெல்லாம் ‘என்னை’ நானே நண்பனாய் கற்பனை
செஞ்சுகிட்டு எழுதினதான்னு யாரும் எதிர் கேள்வி கேட்கப் படாது??

கேட்டா... (அசரீரீ)

பிச்சுப்ப்.. புடுவேன்.. பிச்ச்ச்சு..... ஆமாஆஆஆஅ ....!!


36 கருத்துகள்:

மோகன்ஜி சொன்னது…

சுவாரஸ்யமா கதையை சொல்லியிருக்கீங்க.. நகைச்சுவை சரளமா உங்களுக்கு வருது. தொடர்ந்து கலக்குங்க பிரதர்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ மோகன்ஜி சொன்னது…

//சுவாரஸ்யமா கதையை சொல்லியிருக்கீங்க.. நகைச்சுவை சரளமா உங்களுக்கு வருது. தொடர்ந்து கலக்குங்க பிரதர்! //

வாங்க மோகன்ஜி!

நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும்!!

Chitra சொன்னது…

பாவங்க நீங்க..... சாரி, பாவம்ங்க உங்கள் நண்பர்! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

Anisha Yunus சொன்னது…

எதிர் கேள்விதானே பாய் கேக்கக் கூடாது, சரியான ஒரு கேள்வியே மண்டைய குடையுதே. ஆமா...இது கதையா அனுபவமா? (ஒரியாக்காரரிடம்...ஏனுங்...நாம வேற வீடு மாறறோம் இல்ல?)

Unknown சொன்னது…

ஹா ஹா ஹா.. சுவாரஸ்யமா இருந்தது..

Unknown சொன்னது…

ஹா ஹா ஹா.. சுவாரஸ்யமா இருந்தது..

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா.. கலக்குற நண்பா..

//இதெல்லாம் ‘என்னை’ நானே நண்பனாய் கற்பனை
செஞ்சுகிட்டு எழுதினதான்னு யாரும் எதிர் கேள்வி கேட்கப் படாது??//

கேக்க மாட்டோமே.. கேக்கவே மாட்டோம்... ஏன்னா அது எங்களுக்கு தெரியுமே ;)

நாடோடி சொன்னது…

அடி ப‌ல‌மோ... ஹி..ஹி..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ரொம்ப நல்லா காமெடியா எழுதியிருக்கீங்க.. சுவாரசியா இருந்தது.... கடைசியில என்னாச்சி..

Unknown சொன்னது…

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு...

Sheikmohamed சொன்னது…

இதற்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா .
அப்பாவ மாதிரியே ராஜ பார்வை அப்படின்னு சந்தோசமா இருக்கையிலே பேசுறதும் .

அப்பன மாதிரியே திருட்டு முழி என்று கோபமா இருக்கையில் திட்டுறதும்.குழந்தைகள் மூலமா தன் உணர்வுகளை வெளியிடுவது
சகஜம் தானே

அருமையான பதிவு . உங்கள் எழுத்துக்களில் எல்லாம் இயல்பான
நகைச்சுவை ரசிக்கும் படி இருக்கிறது .

Asiya Omar சொன்னது…

அட என்னமா எழுதறீங்க,பிழைக்க தெரிஞ்ச ஆளு.

ராஜவம்சம் சொன்னது…

ஏய்யா கொஞ்சமாவது வெட்க மானம் எதுனா இருக்கா என்னா இது சின்னபுள்ள தனமா கல்யாணம் ஆன ஆம்பளைனாளே அப்படித்தான்னு எல்லோருக்கும் தெரியுமைய்யா நாங்களா வெளியிலயா சொல்லிக்கிட்டு இருக்கோம்.

எங்க கதையெல்லாம் பதிவா போடனும்னா பதிவுலகமே பத்தாதுய்யா
ஒவ்வொரு நாளைக்கு ஒருமாதிரியில்ல வாங்குறோம். (சாலமன் அய்யா நினைப்புங்க)

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra சொன்னது…

// பாவங்க நீங்க..... சாரி, பாவம்ங்க உங்கள் நண்பர்! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... //

வெளில சொல்ல வேணாம் மேடம் அப்படியே நமக்குள்ளேயே இருக்க.. ஹா.. ஹா.. ஹா..

நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

vanathy சொன்னது…

இப்படி பப்ளிக்ல நீங்களும் , நீங்களும் ( அதான் உங்கள் நண்பரை சொன்னேன் ) அடிச்சுக்கலாமா? நல்லா இருக்கு, நாட்டாமை.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

// எதிர் கேள்விதானே பாய் கேக்கக் கூடாது, சரியான ஒரு கேள்வியே மண்டைய குடையுதே. ஆமா...இது கதையா அனுபவமா?

என் நண்பரின் அனுபவக் கதை எப்பூடி.. !! ஹி.. ஹி..

//(ஒரியாக்காரரிடம்...ஏனுங்...நாம வேற வீடு மாறறோம் இல்ல?) //

நா மதராசிங்க,,அந்த ஒரியகாரர் யாருங்கோவ்வவ்வ்வ்வ் ((ஏ.. அப்துல்... ஒரு குரூப்பு உன்னை தோண்டி துறுவுறதுக்குன்னு ரெடியா வருது கொஞ்சம் உஷாராவே இரு. இது என்னை நானே சொல்லிக் கிட்டதுங்க.. ஹி..ஹி..))

நன்றி அன்னு உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

வந்து படிச்சிட்டோம்ங்க... ஆனா நான் போட்ட மூணு கமெண்ட்ஸ்ல ஒன்னு அங்கே டெலிட் ஆகியிருக்கு அதுக்கு ரீசன் என்னா??? சொல்லுங்க பாஸ்!! சொல்லாங்காட்டி உடமாட்டேன் அக்காங்..க்கி..க்கி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

// ஹா ஹா ஹா..சுவாரஸ்யமா இருந்தது..//

வாங்க பதிவுலகில் பாபு உங்கள் பிஸி நேரத்திலும் எங்களோடு கருத்துக் களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// கேக்க மாட்டோமே.. கேக்கவே மாட்டோம்... ஏன்னா அது எங்களுக்கு தெரியுமே //

ஹி..ஹி..அது இன்னாங்க பாஸ் என் கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க

பாலாஜி சரவணா வருகைக்கும் எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// அடி ப‌ல‌மோ... ஹி..ஹி.. //

இல்லாங்காட்டி இப்படி வந்து புலம்புவேனா..ச்சே..புலம்புவானா?? ஹி..ஹி..

நாடோடி உங்கள் வருகைக்கும் எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan(ஸ்டார்ஜன்) கூறியது...

// ரொம்ப நல்லா காமெடியா எழுதியிருக்கீங்க.. சுவாரசியா இருந்தது.... கடைசியில என்னாச்சி..//

என்ன பாஸ் அடி பின்னி எடுக்குறாங்கன்னு வந்து புலம்புறான், அப்புறம் என்னாச்சி என்று கதை கேட்கிறீங்க ஹி.. ஹி.. வரட்டும் விசாரிப்போம்!!

Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதி கூறியது...

// நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு...//

வாங்க சிநேகிதி நலம் நலமறிய ஆவல்

உங்கள் முதல் வருகைக்கும் எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@! ராஜவம்சம் கூறியது...

//எங்க கதையெல்லாம் பதிவா போடனும்னா பதிவுலகமே பத்தாதுய்யா ஒவ்வொரு நாளைக்கு ஒருமாதிரியில்ல வாங்குறோம். (சாலமன் அய்யா நினைப்புங்க)//

"இப்படி சொன்னா மட்டும் நாங்க திருந்திடுவமாக்கும்" ஹி..ஹி.. (இதுவும் மேடை "ராஜா", ஸ்ரேயாவின் அப்பா நெனப்புங்க.!!)

நன்றி ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நீங்களும் உங்க ஃப்ரெண்டும் பேசிக்கிட்டிருக்கச்சே ஒரு அசரீரி எட்டிப்பாக்குதே.. அதான் நாட்டாமையா ??.(எதிர்க்கேள்விதானே கேக்கப்படாது, இது துணைக்கேள்வி :-))

அலைகள் பாலா சொன்னது…

செம காமெடி பாஸ்.

Vishnu சொன்னது…

வீட்டுக்கு வீடு வசப்படிதானுங்களே( நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்) இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

ஸாதிகா சொன்னது…

அப்துல்காதரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Nickyjohn கூறியது...

//இதற்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா? அப்பாவ மாதிரியே ராஜ பார்வை அப்படின்னு சந்தோசமா இருக்கையிலே பேசுறதும், அப்பன மாதிரியே திருட்டு முழி என்று கோபமா இருக்கையில் திட்டுறதும். குழந்தைகள் மூலமா தன் உணர்வுகளை வெளியிடுவது. சகஜம் தானே!!//

வாங்க பாஸ். ஆமா, நிச்சயமா அனுபவஸ்தர்கள் சொல்லும் போது கேட்டுக்கணும்னு நான் சொல்லமாட்டேன்னு சொல்ல மாட்டேன். ஹி..ஹி..

Nickyjohn உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// அட என்னமா எழுதறீங்க, பிழைக்க தெரிஞ்ச ஆளு. //

ஹி..ஹி.. நீங்க சொன்னா சரியாதானிருக்கும் மேடம்!

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

//இப்படி பப்ளிக்ல நீங்களும், நீங்களும் (அதான் உங்கள் நண்பரை சொன்னேன்) அடிச்சுக்கலாமா? நல்லா இருக்கு, நாட்டாமை.//

இப்படி நீங்களும் (வான்ஸ் உங்களை தான்!!)நீங்களும், நீங்களும் என்று சொல்லும் போது எனக்கே எனக்கு என் மேல கொஞ்சம் டவுட் வருது ஹி..ஹி..

vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அமைதிச்சாரல் கூறியது...

//நீங்களும் உங்க ஃப்ரெண்டும் பேசிக்கிட்டிருக்கச்சே ஒரு அசரீரி எட்டிப்பாக்குதே..அதான் நாட்டாமையா?? (எதிர்க்கேள்விதானே கேக்கப்படாது, இது துணைக்கேள்வி:-))//

வாங்க! வாங்க!! அமைதி! அமைதி!! கேள்வில வேற துணை கேள்வி இருக்கா?? நா 'எஸ்' ஆயிடுறேன் ஹி..ஹி..

அமைதிச்சாரல் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அலைகள் பாலா கூறியது...

// செம காமெடி பாஸ்.//

வாங்க பாஸ்! மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Vishnu கூறியது...

//வீட்டுக்கு வீடு வசப்படிதானுங்களே (நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்) இதுக்குப் போய் அலட்டிக்கலாமா? //

நெசமாத்தானா?? ஹய்யோ.. ஹய்யோ.. நம்ம பக்கத்திலேயே நீங்க இருக்கும் போது எனகென்ன கவலை!! ஹா..ஹா..

விஷ்ணு உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

//அப்துல்காதரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது.//

இங்க பாருங்கய்யா என் நிலமைய. முத்திரைக் குத்தி ஸ்டாம்ப் அடிச்சிட்டாங்க. ஹா..ஹா..

ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//கேட்டா... (அசரீரீ)

பிச்சுப்ப்.. புடுவேன்.. பிச்ச்ச்சு..... ஆமாஆஆஆஅ ...///

ஹ்ம்ம் கும்ம்....சரி விடுங்க கேக்கல...
ஆமாஆஆஆஆஆ ........... அதென்னங்க, பதிவும் போட்டுபுட்டு, படிச்சி கேள்வி கேட்டா பிச்சி போடுவேன்னு மிரட்டுறீங்க.. உங்களுக்கே நல்ல இருக்குதாங்க :-)))

Jaleela Kamal சொன்னது…

இது பிள்ளை பிறந்து முதலில் செய்யும் ஓவ்வொரு குறும்புகளும் ரசிக்கும் படி இருக்கும்,
அதே வளர வளர பெற்றோர்களுக்கு பயம் வந்துடும். ஒரு கால கட்டத்தில் இது போல் சில இடங்களில் தங்க்ஸுக்கும், ரங்ஸுக்கும் நடப்பது தான்.