facebook

திங்கள், செப்டம்பர் 27, 2010

கண்களினால் காண்பதெல்லாம்...!!!

                                                                               

கண்களினால் காண்பதெல்லாம்...!!!


இன்னமும் மழை விட்டாலும் தூவானம் விடலை என்று சொல்வார்களே அதுமாதிரி வெயில் இந்த வருஷம் போட்டு தாக்கிக் கொண்டு தானிருக்கிறது. ஆனாலும் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கும் நம் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.

எங்கள் ஆபீசுக்கு எதிரே சுத்தமாய் ஒரு பில்டிங்கை இடித்து தரை மட்டமாக்கி விட்டு, புது கட்டிடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அதில் எல்லோருமே நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். மேஸ்திரி மட்டும் எகிப்தை சேர்ந்தவர்கள். பில்டிங் ஓரளவு எழுந்து மேற்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேவையான கான்க்ரீட் சிமெண்ட் ஜல்லி கலவைகள் கலந்த டிரக், பின் பக்கம் யானைப் போல் ஒன்று வருமே, அது வந்து நின்றால் போடும் சப்தம் டுர்ர்ர்ர் தான்.

அன்றைக்கு அப்படி தான் அந்த டிரக் வந்து நின்றது. அந்த டிரக்கை சரியாக பார்க் செய்து நிறுத்தி விட்டு, பசி போலும் அதன் டிரைவர் பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட போய் விட்டார். அதனோடு வந்த உதவியாளரோ 'கிளி'யோ அங்கே நின்றுக் கொண்டிருந்தார். கட்டிடப் பணிக்கு அந்த கான்க்ரீட் கலவை என்ன அவசர தேவையோ தெரியலை. அங்கே இங்கே டிரைவரை தேடிவிட்டு அவர் வரலை என்றவுடன் கூட வந்தவரிடம் சொல்ல அவரும் ஏதோ விவரம் தெரிந்தவர் போல்,

கலவையை கொட்ட வேண்டிய பைப்பை கொண்டு போய் பில்டிங் மேற்க் கூரைப் பக்கம் நிலை நிறுத்தி பிடிக்கு முன்னே சுவிட்சை ஆன் செய்ய, கண் சிமிட்டும் நேரம் தான்..அதன் ஃபோர்ஸ் திறனில் அந்த பைப் ஒரு ட்விஸ்ட் அடித்து திரும்பி..

கலவை பீரிட்டு எங்கள் ஆபீஸ் கண்ணாடி விளம்பர லோகோ
வாசலில் நின்றிருந்த கார் மற்றும் நடந்து கொண்டிருந்த
மனிதர்கள் ஒரு சேர அடிக்க, கருங்கல் ஜல்லி கண்ணாடியில் பட்டு அடித்த சப்தம் எந்த ‘டெசிபலில்’ சொல்வதென்று எனக்கு தெரியலை.

நாம் படங்களிலெல்லாம் பார்த்திருக்கிறோமே போர் நடக்கு
மிடங்களில் துப்பாக்கியால்  சரமாரியாய் டுட்டுட்டுட்டுட்டுட்...
சடசடசடசட என்று சுடுவார்களே அது மாதிரியான டிஜிட்டல்
சர்ர்ரவுண்டு சவுண்டில்,, அம்மாடியோவ்வ்வ்வ் ஒரு கணம்
அந்த சப்தத்தை கொஞ்சம்  நினைத்துப் பாருங்கள். எல்லாப்
பக்கமும் திடீரென்று அதிர எல்லோருக்கும்  குலை நடுங்கிப்
போனது. அந்த இடமே கொஞ்ச நேரம் அமளி துமளிப் பட்டுப் போனது.

எல்லாமே இவர்களுக்கு அவசரம் தான். இப்ப நினைப்பதை இப்பவே முடிக்கணும். நல்லவேளை யாருக்கும் எந்த பாதிப்பு மில்லை. நிதானம் என்பது பில்டிங் வேலைப் பார்ப்பவர்களுக்கு அதிகமாய் வேண்டும் சொல்வார்கள்.

அங்கங்கே நின்றிருந்த காரில் பீறிட்டு அடித்த கலவையையும், எங்க ஆபீஸ் கண்ணாடிகளில் பட்ட சிமெண்ட் கறைகளையும் உடனே அவர்களே ஆட்களை அனுப்பி கிளீன் செய்து தந்தார்கள். ஆனால் மேலே இருக்கும் விளம்பர லோகோ மட்டும் அந்த சம்பவம் நடந்ததற்கு சாட்சியாய் கரைகள் படிந்ததாய் இன்னும் அப்படியே....!!!


 
                                          

30 கருத்துகள்:

முஹம்மது ஆரிப் சொன்னது…

புதுசா இருக்கே. இது மாதிரி எங்கும் இதுவரை நடந்ததாக கேள்விப் பட்டதில்லையே?? ஆனா இதையெல்லாம் பார்க்கும் போது காமன் வெல்த் மாநாடு ஞாபகம் வராதுல்ல!!??.

vanathy சொன்னது…

நினைக்கவே பயமா இருக்கு, நாட்டாமை. மக்களுக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை தானே?

kavisiva சொன்னது…

இப்படியும் நடக்குதா! கஷ்டம்தான்

மோகன்ஜி சொன்னது…

இப்படிப்பட்ட விபத்துக்கள் கவனக் குறைவினாலும்,அலட்சியத்திலுமே ஏற்படுகிறது.. மக்களாய்ப் பார்த்து திருந்தினால் தான் உண்டு!

பொடுசு சொன்னது…

இது போன்ற தவறுகள் பெரும்பாலும் மேற்பார்வையாளரின் அலட்சியமே காரணமாக இருக்கும். இங்கே (கத்தாரில்) இது போல் நடக்கும் பட்சத்தில் மேற்பார்வையாளர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார். யாருக்கும் பதிப்பு இல்லை என்பதில் மகிழ்ச்சி.

நாடோடி சொன்னது…

என்ன‌ சொல்ல‌.. பாதிப்பு இல்லாத‌து ம‌கிழ்ச்சியே!!

Sheikmohamed சொன்னது…

இது போன்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகள்தான் இப்போது அதிகம்.ஆண்டவன் அருளால் யாருக்கும் எந்த பாதிப்புப்பும் இல்லையே அதுவரை சந்தோசம் .

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல சுவாரசியமா சொல்லிருக்கீங்க அப்துல்காதர். இதுமாதிரி நேரங்களில் கவனம் தேவை. நல்ல பகிர்வு.

Anisha Yunus சொன்னது…

சுப்ஹானல்லாஹ். எல்லாமே ஒரு நொடியின் தவறிலோ அல்லது அலட்சியத்திலோதான் நடக்கின்றது. சட்டபூர்வமாக ஒன்றும் நடக்க வில்லையா பாய்? (நம்மூராக இருந்தால் இந்த கேள்வியே இல்லை!!)

அரபுத்தமிழன் சொன்னது…

//யானைப் போல் ஒன்று வருமே//

ரசித்தேன்.

சம்பவத்துக்கும் தலைப்புக்கும் லிங்க் கெடக்கலியே :)

ஸாதிகா சொன்னது…

அப்பா..இப்படியெல்லாம் நடகின்றதா?

ஜெயந்தி சொன்னது…

இதுக்குத்தான் சொல்வாங்க பதறாத காரியம் சிதறாது.

புல்லாங்குழல் சொன்னது…

எந்த அதிர்ச்சியையும் சுவராசியமாக்கி விடுகின்றது உங்கள் எழுத்து. உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் ஒரு எக்ஸ்ட்ரா சுவராசியம். அது என்ன நாட்டாமை என்கின்றார் வானதி!

Anisha Yunus சொன்னது…

அப்துல காதர் பாய், உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

saravanakumar sps சொன்னது…

இது போன்ற தவறுகள் பெரும்பாலும் மேற்பார்வையாளரின் அலட்சியமே காரணமாக இருக்கும். safty officer உற்ங்கிவிட்டாரா..என்ன்

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ முஹம்மது ஆரிப் கூறியது...

// ஆனா இதையெல்லாம் பார்க்கும் போது காமன் வெல்த் மாநாடு ஞாபகம் வராதுல்ல!!??.//

வராது பாஸ்!!

நன்றி முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

// நினைக்கவே பயமா இருக்கு, நாட்டாமை. மக்களுக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை தானே?//

ஆமாம்... அதை நினைத்து திருப்தி பட்டுக்க வேண்டியது தான்.

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ kavisiva கூறியது...

// இப்படியும் நடக்குதா! கஷ்டம்தான்//

கஸ்டமில்லாவிட்டால் வாழ்கை இல்லை என்று ஒரு கவிதையில் சொன்னது யார்??

நன்றி கவிசிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ மோகன்ஜி கூறியது...

// இப்படிப்பட்ட விபத்துக்கள் கவனக்குறைவினாலும், அலட்சியத்திலுமே ஏற்படுகிறது. மக்களாய்ப் பார்த்து திருந்தினால் தான் உண்டு!//

அந்த வேலைகளை செய்பவர்களும் மக்கள் தானே!

~நன்றி மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பொடுசு கூறியது...

//இங்கே (கத்தாரில்) இது போல் நடக்கும் பட்சத்தில் மேற்பார்வை யாளர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்.//

இப்பல்லாம் காண்ட்ராக்ட்கள்
"பத்தாவது" கைக்கு மாறி கிடைக்கும் போது, பாதுகாப்பும் அப்படி இப்படி தான்.

~நன்றி பொடுசு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

//என்ன‌ சொல்ல‌.. பாதிப்பு இல்லாத‌து ம‌கிழ்ச்சியே!!//

ஆமா பாஸ்..

~நன்றி நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Nickyjohn கூறியது...

//இது போன்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகள்தான் இப்போது அதிகம்.//

அலட்சியத்துக்கு என்ன காரணமென்று அறிந்து ஆவன செய்தாலே, இது மாதிரி யான செய்திகள் வராது தானே!!

~நன்றி Nickyjohn உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

//இதுமாதிரி நேரங்களில் கவனம் தேவை.//

ஆமாம் ...!!

~நன்றி Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அரபுத்தமிழன் கூறியது...

// சம்பவத்துக்கும் தலைப்புக்கும் லிங்க் கெடக்கலியே :) //

பழைய தமிழ் படங்கள் பார்த்து கெட்டுப் போயிட்டீங்க பாஸ் ஹி..ஹி..

~நன்றி அரபுத்தமிழன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

//அப்பா..இப்படியெல்லாம் நடகின்றதா? //

நடக்கிறதே!!

~நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது...

// இதுக்குத்தான் சொல்வாங்க பதறாத காரியம் சிதறாது.//

அது உண்மை தான்!!

~நன்றி ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

//(நம்மூராக இருந்தால் இந்த கேள்வியே இல்லை!!)//

எப்படி??

~நன்றி அன்னு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அன்னு கூறியது...

//அப்துல காதர் பாய், உங்களை ஒரு மெகா(!!)தொடருக்கு அழைத்தி ருக்கிறேன்.தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.//

//http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

நிச்சயமா சகோதரி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ saravanakumar sps கூறியது...

// இது போன்ற தவறுகள் பெரும்பாலும் மேற்பார்வையாளரின் அலட்சியமே காரணமாக இருக்கும். safty officer உற்ங்கி விட்டாரா..என்ன் //

சில இடங்களில் சப் காண்ட்ராக்ட் களில் இது மாதிரி நடக்கிறது.

நன்றி saravanakumar sps உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஒ.நூருல் அமீன் கூறியது...

// எந்த அதிர்ச்சியையும் சுவராசியமாக்கி விடுகின்றது உங்கள் எழுத்து. உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் ஒரு எக்ஸ்ட்ரா சுவராசியம். அது என்ன நாட்டாமை என்கின்றார் வானதி!//

அந்த பட்டத்தை அவங்க தான் ஒரு தொடரில் புனைவாக வைத்துக் கொடுத்தாங்க!! இப்பவும் அதையே..!!

நன்றி ஒ.நூருல் அமீன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.