facebook

சனி, அக்டோபர் 02, 2010

மனதினிலே பார்த்து விட்டேன்!

                    
மனதினிலே பார்த்து விட்டேன்!


அன்னிக்கி அது மாதிரி தாங்க வார லீவு வீட்டிலிருந்தேங்க. பாத்ரூமுக்கு குளிக்கப் போன நான் மறதியோ பழக்க தோஷமோ, போவட்டும், 'தங்ஸ்'க்கு உதவியா இருக்கட்டுமேன்னு சுத்தமா பக்கெட்லேந்து சிட் அவுட் வாஷ் பேஸின் வரைக்கும் பளிச்ன்னு கிளீன் செய்து வைத்து விட்டு, (பேச்சிலர்ஸ்ஸா இருந்த போது இதைத்தானே செய்துக் கொண்டி ருந்தோம் என்ற நினைப்பிலேயும் ) ...

குளித்து விட்டு வெளில வந்தா ஒரே கலைப்பா இருக்கேன்னு ஒரு லெமன் ஜூஸ் போடச் சொல்லி (அல்ல போட்டு) குடித்து விட்டு (இப்படி சொல்வதனால ‘ரங்ஸ்’ களெல்லாம் என்னை தாப்பா எடுத்துக்கப் படாது. ஏன்னா அங்கிட்டும் அப்படி தானென்று எங்களுக்கு அப்பவே தெரியும்ங்க ஹி..ஹி.. ) சரி மேட்டருக்கு வர்றேன்.

பின்னர் அவுக பாத்ரூம் போய்  பாத்திருப்பாங்க போல, பதறியடிச்சிக் கிட்டு ஓடியார்ராக (அப்படித் தான் எனக்கு தெரிந்தது) என்னமோ ஏதோ வென்று பதறிப் போய் 'லேப்டாப்பை' தூக்கி பெட் மீது வீசி விட்டு, எழுந்தே நின்று விட்டேன்!

"என்னாங்க இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்க"

"என்..ன்னா.. ?" என்றேன்.

"பாத்ரூம இப்படி பளிச்சுன்னு கிளீன் செஞ்சு வச்சிருக்கீங்க பக்கெட்டேல்லாம் பள பளாங்குது...? "

அதுக்கு..??

"ஹி..ஹி.."

"அய்யய்யோ சிரிக்கிறாங்க டோய்... மண்டைக்குள் ஏதோ பொறி தட்டி பல்பு எரிந்தது..தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போலிருந்தது, சுதாரிச்சிக்கிட்டு.."

"அதுக்கென்ன இப்ப ? "

ஏதும் விளங்காதவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு....
(நாம் தான் அதெல்லாம் கரெக்ட்டா செய்வோமே...!!)

"ஒன்னுமில்லீங்க..ஹி..ஹி..! "

(அய்யய்யோ மறுபடியும் சிரிக்கிறாங்க டோய் எடத்த காலி பண்ணிட்டு குதிச்சு ஓடுடாய்.., என்று மனசு சொன்னாலும், சிரிச்சிட்டாங்களே இன்னொரு மனசு அடியெடுத்து கொடுக்க, நானும் ஹி..ஹி.. (இதுக்குப் பேர் வழிதலல்ல கம்பீரம்னு எடுத்துக்கணும் ஹி..ஹி..)

இந்த 'தங்ஸ்'களெல்லாம் செம கில்லாடிங்க! நம்ம முகத்தில் என்ன எழுதியிருக்குன்னு அப்படியே ‘ஸ்கான்’ பண்ணிடுவாங்க...

(அத மறைக்க  ஏதாச்சும் கூடிய விரைவில்  கண்டு பிடிக்கணும். இருக்கட்டும் கண்டு பிடிப்போம்..)

அந்த நேரத்தில் கோட்டை விட்டோம் அம்புட்டுதேன்... அப்படி என்னா எழுதி இருந்துச்சோ என் முகத்தில் எனக்கே தெரியலீங்க.. எனக்கெப்படி தெரியும். அதானே!! அவுக படிச்சிட்டாக போல… படிச்சவுகல்ல...!!

ஆஹா இத ரொம்ப நுணுக்கமா ஹேண்டில் பண்ணனும் டோய் என்று நெனச்சுக்கிட்டிருக்கும் போதே...'அவங்க சொன்னாங்க'...,

"நா என்னா தான் கிச்சான கிளீன் பண்ணினாலும் (பண்ணினாத் தானே) கிச்சன்..கிச்சன்.. மாதிரி இல்ல.. அதனால ...!"

"வெளங்கிடும்" என்று சொன்னது வெளியில் தெரியாம அதை காற்றில் மேய விட்டுட்டு, பிறகு pause button-ன on பண்ணி..

"அதனால ..!! " (இப்பவும் கம்பீரமாக கேட்டேன்..)

"நீங்களே கிளீன் பண்ணிடுங்க" ஒரு க்கி..க்கி.. விட்டுப் போய்ட்டாங்கைய்யா ..!!

சொந்த செலவில் சூனியம்.., தலையில் மஞ்சத் தண்ணி .., சேச்சே ...அதெல்லாம் சொல்ல மாட்டேங்க.. இதுல வலையுலக “அன்புச்” சகோதரிக லெல்லாம் ஒன்று சேர்ந்து 'தங்ஸ்'க்கு உதவியா இருங்கன்னு என்று வேற அட்வைஸ் மழை (..நற.. நற..) செய்ததாலும்..!!

இருங்க... !

ஏதோ ஒரு வாசனை வருதே!! அதென்ன...?? காபி வாசனை மாதிரி...!! கண் முழிச்சிட்டேங்க...!!

'தங்ஸ்' எதிரே புன்னகையுடன் முகத்தை வைத்துக் கொண்டு காபியுடன் வந்து எழுப்ப..

அட... அது... புரூ காபிம்மா... நம்புங்க...!!

அடடா 'தங்ஸ்'களெல்லாம் என்ன சொன்னாலும் எவ்வளவு
நல்லவுக, நாம தான்  தப்பு தப்பா புரிஞ்ச்சிக்கி றோம்னு நெனக்கக் கூடாதுன்னு...நெனச்சிக்கிட்டே எழுந்து பாத்ரூமைப் பார்க்க ஓடினேன்.

ஹி..ஹி.. இப்பயும் அங்கிட்டு தான் வேலையா??


22 கருத்துகள்:

நாடோடி சொன்னது…

அய்யோ..அய்யோ.. :)

asiya omar சொன்னது…

அடடா அது ப்ரூவா நான் பில்டர் காபின்னுல நினைச்சேன்.

Nickyjohn சொன்னது…

எவ்வளவு அடிச்சாலும் (வேலை சொன்னாலும் ) தாங்குகிறார் .....
அண்ணன் ரொம்ப நல்லவர்
புண் பட்ட மனதை புரு காபி குடித்து ஆற்றுக

முஹம்மது ஆரிப் சொன்னது…

இதெல்லாம் உண்மையா? கனவா?? வாங்க காபி சாப்ட்டுக்கிட்டே பேசுவோம்!! ஹி.. ஹி..

மோகன்ஜி சொன்னது…

ஸ்வாரச்யமால்ல இருக்கு.. ப்ருகாப்பி இரண்டாம் டிகாக்ஷன் தானான்னு கண்டுபிடிச்சீங்களா

Balaji saravana சொன்னது…

காப்பி எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே ;)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// அய்யோ..அய்யோ.. :) //

இப்படி சொன்னா நான் அழுதுடுவேன் ஆமா... ஹி..ஹி..

நன்றி ஸ்டீபன் உங்கள் வருகைக்கும், வாழ்த்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

//அடடா அது ப்ரூவா நான் பில்டர் காபின்னுல நினைச்சேன்.//

ஆமாங்க மேடம் எனக்கும் தூக்க கலக்கத்துல புரியலிங்...ஹி..ஹி..

நன்றி ஆசியா உமர் உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Nickyjohn கூறியது...

// புண் பட்ட மனதை புரு காபி குடித்து ஆற்றுக //

புரு காபி அவ்வளவு நல்லதுங்களா சார் ஹி..ஹி..

நன்றி Nickyjohn உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ முஹம்மது ஆரிப் கூறியது...

// இதெல்லாம் உண்மையா? கனவா?? வாங்க காபி சாப்ட்டுக்கிட்டே பேசுவோம்!! ஹி.. ஹி..//

இப்படியெல்லாம் கேட்டா நாங்க உண்மைய சொல்லிடுவமாக்கும் க்கி.. க்கி..

நன்றி முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// ஸ்வாரச்யமால்ல இருக்கு.. ப்ருகாப்பி இரண்டாம் டிகாக்ஷன் தானான்னு கண்டுபிடிச்சீங்களா //

முதல் டிகாஷன் போடுறதுக்கே சிரமப்படுவோம். பிறகு எப்படி ரெண்டாவது? நீங்க ரொம்ப குறும்பு சார்!! ஹி..ஹி௦..

நன்றி மோகன்ஜி உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

//காப்பி எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே ;)//

நீங்க கிண்டல் ஏதும் பண்ணலியே பாஸ் ஹி..ஹி..!!

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..

அன்னு சொன்னது…

கனவுக்கே இந்த பில்டப்பு....இனி உண்மையிலேயே க்ளீன் பண்ணிட்டாலும்...ஹூம்ம்...நடத்துங்க நடத்துங்க....எங்களுக்கும் காலம் வரும்!! அப்ப பார்த்துக்கறோம்...அண்ணிய கொஞ்சம் நம்ம வலைப்பக்கம் வரச்சொல்லுங்களேன்...ஹிஹிஹி...நல்ல விஷயமெல்லாம் கத்துக் கொடுக்கத்தான்..:)

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

கனவு ஒரு நாளைக்கு நனவாகுமோ!.. கனவுலே இப்படி அசத்துதீங்கன்னா.. அப்ப நிஜத்துல?.. மனைவி ஒரு மாணிக்கம் இல்லயா அப்துல்காதர் சார்..

ஹுஸைனம்மா சொன்னது…

வீட்டம்மா காபி தந்தது மட்டும்தான் கனவுன்னு நான் கரெக்டா புரிஞ்சுகிட்டேன்!! சரிதானே!!

அஹமது இர்ஷாத் சொன்னது…

ம்ம் வாழ்க்கை இப்படி போகுதா..சுவராஸ்யமான எழுத்துங்க.. ப்ச் அசத்துறீங்க....

vanathy சொன்னது…

//பாத்ரூமுக்கு குளிக்கப் போன நான் மறதியோ பழக்க தோஷமோ, போவட்டும், 'தங்ஸ்'க்கு உதவியா இருக்கட்டுமேன்னு சுத்தமா பக்கெட்லேந்து சிட் அவுட் வாஷ் பேஸின் வரைக்கும் பளிச்ன்னு கிளீன் செய்து //

நாட்டாமை, உங்கள் மறதி நல்லா இருக்கோணும். இப்படி எல்லா ஆண்களுக்கும் வருமா????

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அன்னு சொன்னது…

// அண்ணிய கொஞ்சம் நம்ம வலைப்பக்கம் வரச் சொல்லுங்க ளேன்...ஹிஹிஹி...நல்ல விஷயமெல்லாம் கத்துக் கொடுக்கத்தான்..:) //

ஆஹா ஃபியூச்சர்ல இப்படி வேற பிளான் இருக்கா ?? நா எஸ்ஸ்ஸ்ஸ் ஹா..ஹா..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// மனைவி ஒரு மாணிக்கம் இல்லயா//

மனைவி பேரு மணிக்கம்னா, கணவன் பேரு என்னா?? ஹி.. ஹி..

//கனவுலே இப்படி அசத்து தீங்கன்னா.. அப்ப நிஜத்துல?..//

"இதுவரை இல்லை.. இனிமேயும் இருக்காது!! ஏன்னா நீங்க சொல்ற மாணிக்கம் அவுக"

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஹுஸைனம்மா கூறியது...

// வீட்டம்மா காபி தந்தது மட்டும்தான் கனவுன்னு நான் கரெக்டா புரிஞ்சுகிட்டேன்!! சரிதானே!! //

வீட்டம்மா இத பார்த்தா மனச உட்டுட மாட்டங்களே ஹி..ஹி..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அஹமது இர்ஷாத் கூறியது...

//ம்ம் வாழ்க்கை இப்படி போகுதா..சுவராஸ்யமான எழுத்துங்க.. ப்ச் அசத்துறீங்க....//

தல.. உடம்பு.. தேவலையா ??

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

/// நாட்டாமை, உங்கள் மறதி நல்லா இருக்கோணும். இப்படி எல்லா ஆண்களுக்கும் வருமா???? ///

ஆஹா எல்லா "சிஸ்ஸும்" ஒன்னு கூடி மீட்டிங் போட்டாச்சா!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.