உலகின் நம்பர் #1 முன் மாதிரி கிராமம்
ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?
வயல், பம்ப்செட், கால்நடைகள், பண்ணையார், ஆலமரம், நாட்டாமை, பஞ்சாயத்து, சொம்பு, பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல. இங்கு வசிக்கும்
அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம்
டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி
கையிருப்பாக இருக்கிறது. மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால்
இலவசமாகதான் வழங்கப்படுகிறது.
அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம்
டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி
கையிருப்பாக இருக்கிறது. மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால்
இலவசமாகதான் வழங்கப்படுகிறது.
வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில்
இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்
திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்'
என்று கூறி, உலகெங்கும் இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின்
திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து கட்டுரைகளாக
எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை
விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்
தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.
ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில்
ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில்
வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில் 'ஹூவாக்ஸி' எப்ப்டி இருந்தது என்று. சில வருடங்
களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய
களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய
குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுர
கிலோ மீட்டர் தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை.
அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில்.
சம்பாதிக்கும் சொற்பப் பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப்
போகும் சராசரி கிராம வாழ்க்கை.
ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார்.
எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.
அந்த மனிதர் "ஹூ ரென்பாவ்". அந்த கிராம கம்யூனிஸ்ட்
கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர்
மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல
நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய
நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.
கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக
சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.
நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.
கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக
சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.
ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக
40 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான்.ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர் காலத்தை நிர்ணயித்தார்.முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.
நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர்
காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராம
வாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும்
கடுமையான உழைப்பினைத் தர முன் வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பது தான்
ஹூவின் திட்டம். இது தான் உண்மையான 'சோஸலிஸம்' என்று
அவர் சொன்னார்.
கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன்
கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே
மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு
வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டு மொத்தமாக
வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டு மொத்தமாக
பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.
'ஹூவாக்ஸி' வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். 'ஜியாங்சூ'
மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான்
இருக்கின்றன.
இன்று 'ஹூவாக்ஸி' கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது
சதவிகிதம் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்
கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு.
இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான
இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான
மூலப் பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும்
பொருட்கள் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்'ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில்
இருக்கும் தொழில்கள்.
'ஹூரென்பாவ்', பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது
பெரும்மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில்
எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கி
விடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான
ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக்
குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு இவைதான்
ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு
கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூரென்பாவ்.
ஹூரென்பாவ் உருவாக்கியிருக்கும் ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்
தான் என்கிற போதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும்
சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும்
இருக்கிறது.
இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை.
ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப்
பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட
முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர்.
இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும்.
மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில்
வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில் உள்ள
வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக்
கொள்ளும். இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி
கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.
அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும்
மறுத்து விட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம்.
வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.
வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.
மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித
சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள்.
அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி
அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி
சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப்படும். அடிப்படை சம்பளத்தில்
இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒரு முறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதி களையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதி முறைகள் உண்டு.
கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த
எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி
பணி யாற்றிய ஹூ ரென்பாம சில வருடங்களுக்கு முன்பாக
தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்
களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகி
விட்டது. மக்கள் தொகை 35,000.
எவ்வளவுதான் சட்டதிட்டங்கள்,விதிமுறைகள் எல்லாம் சிக்கலான தாகவும், கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொரு
வரும் 82 வயதான ஹூரென்பாவ் மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். 'ஹூவாக்ஸி' வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக ஊரின் நடை
பாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள்
மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு
எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?
************************************************************************************************************************
தமிழ் மணத்தெரிவில் உள்ள எனது பதிவுகள்.
செய்திகள்/ நிகழ்வுகளின் அலசல் பகுதியில்
41 கருத்துகள்:
ஆச்சர்யமா இருக்கு...
தமிழ்மணத்தில் உங்கள் பதிவு விருது பெற வாழ்த்துக்கள்...
புதுமையான தகவல்களை தெளிவாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை நண்பரே,
தமிழ்மணத்தில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் மற்றும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தெரியாத தகவல்கள்........
எல்லாமே அருமை.....
தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அழகான செய்தி..சீனர்கள் எப்பவும் உழைப்பாளிகள் சகோ...இது மாதிரி இன்னும் நூறு கிராமங்கள் அங்கே தோன்றினாலும் ஆச்சர்யம் இல்லை...நம்ம நாட்டில் கிராமங்கள் பூராவும் காலியாய்ட்டு வரது எவளவு துரதிர்ஷ்டம்..என்ன தான் ஹூ ரென்பா ஆசைபட்டாலும் அந்த மக்களிடையே இருந்த யூனிட்டி தான் சகோ இந்த வெற்றிக்கு பெரிய காரணம்...நம்ம ஊரில் ஜாதி,மதம் னு அப்பவும் ஒரு கும்பல் சதி பண்ணி கெடுத்து விட்டுரும்...இந்த communist நாடுகளுக்கு இது கொஞ்சம் சௌகரியம் தான்:)) இப்போ உள்ள communist பற்றியும்,அழிஞ்சு போன சோவியத் union ஐயும் நான் இப்போ நினைவு படுத்த விரும்பல...:)) ஆனால் நிஜமாய் இதெல்லாம் இப்போ உள்ள ஊழல் decade இல் கூட அருமையான இந்த செய்தி படிச்சு சந்தோஷம் சகோ..பகிர்வுக்கு நன்றி...நீங்க கொடுத்த விருதுக்கும் நன்றி...:)) ஹாப்பி நியூ இயர்...:))))) தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
கொடுத்து வச்சவங்க...
தமிழ்மண வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.
இப்படி ஒரு கிராமமா?? ஒரு சல்யூட்!!
யுவ கிருஷ்ணா பதிவில் வந்த தகவல்களை வரி மாறாமல் போட்டுவிட்டு , ஒரு நன்றி கூட சொல்லாமல் , நீங்களே எழுதியது போல சொல்வது என்ன நியாயம்
தல அவரிடம் பெர்மிசன் கேட்டு அவர் சொன்ன பிறகு தான் இதை போட்டிருக்கிறேன். அவருடைய மெயில் அட்ரஸும் போட்டிருக்கிறேனே நீங்க பார்க்கலையா?? நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதில் இப்படி கேட்டு போடுவதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆமா இவ்வளவு கேட்கிறீங்களே நீங்க யார் என்றே சொல்லவில்லையே??
ரொம்ப சுவாரசியமா இருக்கு.. இப்படியெல்லாம் நடக்குமா?.. நம்மூர்ல சாத்தியம் உண்டா..
விருது வாங்க லேட்டா வந்திருக்கேன்.. ஏதாவது குறைச்சி கொடுத்திடாதீக.. ஆமா எனக்கு புல்அமொண்ட் வந்திரணும்..:))
மிகவும் வியப்பாக உள்ளது.
மிகவும் வியப்பாக உள்ளது.
நல்லாத்தான் இருக்கு. ஆனால் சுதந்திரம் இல்லாத வசதியால் என்ன புண்ணியம்.
தங்க கூண்டுதான் ஞாபகம் வருது.
அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
தமிழ்மண வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்..
புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.
ஐயா....!!! உள்ளே வரலாமா..? வரவர மிரட்டல் ஓவரா இருக்கே..!! :-)
அருமையான கிராமம்
அருமையான தாத்தா
அருமையான பதிவு ..!!
@@@அறிவில்லாதவன் --// யுவ கிருஷ்ணா பதிவில் வந்த தகவல்களை வரி மாறாமல் போட்டுவிட்டு , ஒரு நன்றி கூட சொல்லாமல் , நீங்களே எழுதியது போல சொல்வது என்ன நியாயம் //
எந்த பேரை சொல்லி உங்களை கூப்பிடுவது ..?????
திட்டிட்டேன்னு சண்டைக்கு வரகூடாது... :-)
ஒரு கிரெடிட் கார்டு வாங்கினா அட்டை தம்மாதூண்டு சிறுசா இருக்கும் .ஆனா ரூல்ஸ் 40 பக்கம் புக்கா வரும் .அதுல இருக்கிறதை படிக்க முடியாது அவ்வளவு சிறுசா இருக்கும்
அது மாதிரி அண்ணாத்தே கீழே பொடி எழுத்துல போட்டதை கவனிக்கலையா
நன்றி : புதிய தலைமுறை http://www.luckylookonline.com/
உங்க பேரை பாத்ததும் எனக்கு என் ஸ்கூல் வாத்தியார் நினைவு வருது ஹி..ஹி..
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது!!//
நல்லா இருக்கீங்களா..? நான் ஒன்னுமே சொல்லல... கேக்கல...!!..பாக்கல...!!
//Starjan ( ஸ்டார்ஜன் )
ரொம்ப சுவாரசியமா இருக்கு.. இப்படியெல்லாம் நடக்குமா?.. நம்மூர்ல சாத்தியம் உண்டா..//
ஷேக் கண்டிப்பா நடக்கும் ..இந்த பதிவு போட்ட அண்ணாச்சியை நைட்டோட நைட்டா கிட் நாப் பண்ணினா டோட்டல் அமவுண்டும் கிடைக்கும் .
பிப்டி பிப்டி ..? வசதி எப்படி ? ஹி..ஹி..
//நல்லாத்தான் இருக்கு. ஆனால் சுதந்திரம் இல்லாத வசதியால் என்ன புண்ணியம்.//
அக்பர் , டையாபடிஸ் ஆள் கிட்ட சக்கரை மூட்டையை குடுத்தா என்ன செய்வான் ..?
நாளைக்கு சாகப்போறவன் கிட்ட 10 கோடி குடுத்தா என்ன செய்வான் ..?
பேங்கில மட்டும் பணத்தை வச்சிகிட்டு 10 நாள் லீவு கிடைக்காம உழைச்சி என்ன புண்ணீயம் ...?
புட் பாத்துல குடையை போடுவதை விட ஆளுக்கு ஒரு குடையை குடுக்குறது பெட்டர் இல்லையா.?
ஒரே மாதிரி வீடு இருந்தா அட்ரஸ் மாறி போய்ட மாட்டாங்களா... ((இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல ))
இன்னும் 12 சந்தேகம் இருக்கு..
(1)கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது.
இதை உங்களூக்கு சொன்னது யார்..?
(2)//இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும் //
இவ்வளவு புத்திசாலி ஒரு வயர் லெஸ் வச்சிக்க தெரியாதா.அதுவும் மொபைல் போனில் கூட கனெக்ட் செய்யலாமே..!!
//அவர். மக்கள் மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?//
அந்த அக்கரை இருந்தா வெளியே போகிறவங்களுக்கு இது வரை உழைத்த பொருள்களை அங்கேயே விட்டு விட்டு போக சொல்ல முடியுமா..?
//மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால்
இலவசமாகதான் வழங்கப்படுகிறது.//
## எல்லாமே இலவசம் ஓக்கே..
## பேங்கில் உள்ள பணம் என்ன செய்ய உதவும்..?
## ஊரை விட்டு வெளியே போகக்கூடாது..?
## வாரம் முழுவதும் உழைப்பு ..!!
மொத்தத்துல ஜெயில் வாழ்க்கை :-)
போன பதிவுக்கே இன்னும் பதில் வரல ..இதுக்கும் வராட்டி இன்னும் 42 சந்தேகம் தொடர்ந்து வரும் :-)
@ philosophy prabhakaran
வாங்க பிரபா நன்றி!
@ மாணவன்
வாங்க மாணவன் நன்றி!
@ ஆமினா
வாங்க ஆமினா நன்றி!
@ ஆனந்தி.. கூறியது...
// நம்ம நாட்டில் கிராமங்கள் பூராவும் காலியாய்ட்டு வரது எவளவு துரதிர்ஷ்டம்..//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ. அரசியல் அமைப்பில் கூட நிலங்களை கூறு போடுவது போல் தான் மனிதர்களை தனித்தனியே பிரித்து (நீங்கள் சொன்ன unity) இல்லாது செய்து விடுகிறார்கள். பிறகு எப்படி இது மாதிரி வெற்றியெல்லாம் சாத்தியம்.
வாங்க ஆனந்தி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
@ வாங்க ம.தி.சுதா நன்றி
@ வாங்க முஹம்மது ஆரிப் நன்றி
@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...
// ரொம்ப சுவாரசியமா இருக்கு.. இப்படியெல்லாம் நடக்குமா?.. நம்மூர்ல சாத்தியம் உண்டா..//
நாமெல்லாம் ஊருக்கு போயிட்டா ஒருவேளை நடக்கும் சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
விருது வாங்க லேட்டா வந்திருக்கேன்.. ஏதாவது குறைச்சி கொடுத்திடாதீக.. ஆமா எனக்கு புல்அமொண்ட் வந்திரணும்..:))
உங்களுக்கு ஃபுல்லு தான். ஃஹாபே நான் வச்சுக்கிறேன். ஆனா விருந்துக்கு முந்தி வந்திடனும். சொல்லிட்டேன்!!
நன்றி ஷேக் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@ வாங்க ஸாதிகாக்கா நன்றி
@ வாங்க சண்முககுமார் நன்றி
@ வாங்க பிரஷா நன்றி
@ வாங்க asiya omar நன்றி
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
//நல்லாத்தான் இருக்கு. ஆனால் சுதந்திரம் இல்லாத வசதியால் என்ன புண்ணியம். தங்க கூண்டுதான் ஞாபகம் வருது.//
நீங்க சொல்லவதெல்லாம் உண்மை தான் அக்பர். ஆனா இங்கே தல ஜெய்லானி வந்து என்ன சொல்லியிருக்குன்னு ஒருதடவை படிச்சுங்க. அம்மாடியோவ்...!!
நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஜெய்லானி கூறியது...
// ஐயா....!!! உள்ளே வரலாமா..?
உள்ளே வந்துபுட்டு இதென்ன கேள்வி.(புள்ளங்கள்லாம் ரொம்ப தான் படிப்பா படிக்கிது. ஹி..ஹி..:-)))
//வரவர மிரட்டல் ஓவரா இருக்கே..!! :-)//
யாரு நானா? நீங்களா? நானொன்றும் கடையப் போட்டுட்டு வெளிய ஓடிடல!!
@ அருமையான கிராமம்- இருங்க வெளில இருட்டிக்கிட்டு வருதே!
@ அருமையான தாத்தா-ஏ..யப்பா மழை வர்ற மாதிரி இருக்கே!!
@ அருமையான பதிவு ..!!-உலகம் தலை கீழா புரண்டுடுச்சுடா யப்பா..
ஆமா இப்படியெல்லாம் பாராட்ட உங்களுக்கு எப்படி மனசு வருது தல??
@!@ ஜெய்லானி கூறியது...
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது!!//
// நல்லா இருக்கீங்களா..? நான் ஒன்னுமே சொல்லல... கேக்கல...!!..பாக்கல...!!//
ம்ம்ம்ம்.. இது தான் நல்ல புள்ளைக்கு அழகு!!
ஜெய்லானி கூறியது...
//ஷேக் கண்டிப்பா நடக்கும் ..இந்த பதிவு போட்ட அண்ணாச்சியை நைட்டோட நைட்டா கிட் நாப் பண்ணினா டோட்டல் அமவுண்டும் கிடைக்கும். பிப்டி பிப்டி ..?
வசதி எப்படி ? ஹி..ஹி..//
என்னை கடத்தியா??? அவ்வ்வ்வவ்.. 'அனு'வை கடத்தினாலும் அம்புட்டுக்கு அம்புட்டு உங்களுக்கு பலன் கிடைச்சாலும் கிடைக்கும் (என்னா??) கிடைக்க்க்கும்... க்கி..க்கி..
@!@ ஜெய்லானி கூறியது...
//அக்பர், டையாபடிஸ் ஆள் கிட்ட சக்கரை மூட்டையை குடுத்தா என்ன செய்வான் ..?நாளைக்கு சாகப்போறவன் கிட்ட 10 கோடி குடுத்தா என்ன செய்வான் ..?பேங்கில மட்டும் பணத்தை வச்சிகிட்டு 10 நாள் லீவு கிடைக்காம உழைச்சி என்ன புண்ணீயம் ...?புட் பாத்துல குடையை போடுவதை விட ஆளுக்கு ஒரு குடையை குடுக்குறது பெட்டர் இல்லையா.?ஒரே மாதிரி வீடு இருந்தா அட்ரஸ் மாறி போய்ட மாட்டாங்களா... ((இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல )) //
பாஸ் இதெல்லாம் சந்தேக கேசுல சாரி.., சந்தேகப் பதிவுல சேர்த்துக்க வேண்டிய கேள்விகளா பாஸ்.
(அம்மாடி..! ரவுண்டு கட்டி வளச்சு வளச்சு அடிக்கிறாங்கப்பா.!!!) மீய..பாவம் பார்க்கிறதில்லையா கண்ணு!!!!
ஜெய்லானி கூறியது...
// இன்னும் 12 சந்தேகம் இருக்கு.. (1)கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது. இதை உங்களூக்கு சொன்னது யார்..?//
இருங்க திரும்பி (பரிதாபமாக..!!) பார்த்துக்கிறேன். அய்யா அம்மா அக்கா அண்ணன் தங்கச்சி இப்படி யாருமே இல்லையா என்னை காப்பாத்த?? இருங்க பட்டாக்கும், மங்குனிக்கும், பன்னிகுட்டிக்கும் டயல் ஃப்ரீல ஒரு போன் பேசிட்டு வர்றேன். (எங்கே எங்கே ஓடுறீங்க பாஸ் நில்லுங்க! நில்லுங்க!!) க்கி..க்கி..
ஜெய்லானி கூறியது...
// இவ்வளவு புத்திசாலி ஒரு வயர் லெஸ் வச்சிக்க தெரியாதா.அதுவும் மொபைல் போனில் கூட கனெக்ட் செய்யலாமே..!!//
செய்யலாமே,,,, தாராளமா கனெக்ட் செய்யலாம். ஆனா செஞ்சு என்ன பிரயோஜனம். யார் கூட பேச முடியும். பேசினாலும், பேசியவர்கள் தலைவர்கிட்ட சொல்லாமலா இருக்கப் போகிறார்கள். தலைவர் unity-ஐ மனதில் கொண்டு ஊரை விட்டு தள்ளி வைக்கும் அபாயமும் இருக்கே!!
@!@ ஜெய்லானி கூறியது...
// அந்த அக்கரை இருந்தா வெளியே போகிறவங்களுக்கு இது வரை உழைத்த பொருள்களை அங்கேயே விட்டு விட்டு போக சொல்ல முடியுமா..?//
டிஸ்கி எல்லோருக்குமே பொது என்றால், தயவு தாட்சண்யம் என்ன வேண்டி கெடக்கு??
// ## எல்லாமே இலவசம் ஓக்கே..## பேங்கில் உள்ள பணம் என்ன செய்ய உதவும்..?## ஊரை
விட்டு வெளியே போகக்கூடாது..?## வாரம் முழுவதும் உழைப்பு ..!!மொத்தத்துல ஜெயில் வாழ்க்கை :-)//
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இங்கேயும் அய்யன் வள்ளுவனும்
"ஊரோடு சேர்ந்து வாழ்" என்று தானே செப்பினார். இதுக்கு என்னான்றீங்க??
@!@ ஜெய்லானி கூறியது...
//போன பதிவுக்கே இன்னும் பதில் வரல ..இதுக்கும் வராட்டி இன்னும் 42சந்தேகம் தொடர்ந்து வரும் :-) //
ஆஹா பேஷா அனுப்புங்க தல. நான் அனுப்பியதையும் சரி செய்து, அதோடு சேர்த்து அனுப்புங்க. உங்க பொன்னான 'கருத்துக்கள்' அடுத்தப் பதிவுக்காக வெய்டிங்..!! அவ்வ்வ்வவ்...
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துச் செறிவான வழக்காடளுக்கும்.
கருத்துரையிடுக