இந்த வாரம் சகோதரி ஹுசைனம்மா அவர்கள்.
**Story of Appreciation** (நன்றி பாராட்டும் கதை) என்பது ஒருவர் தான் ஆசைப்பட்ட எண்ணமாக இருக்கலாம். ஆனாலும் அது ஒரு மிகச்
சிறந்த அர்த்தமுள்ள செய்தியை நவீன சமூகத்திற்கு எடுத்துரைக்
கிறது. அப்படி ஒரு கதையை எனக்கு இணையத்தில் அனுப்பித் தந்தது சகோதரி ஹுசைனம்மா. இந்தக் கதையை படித்து விட்டு
மற்ற மின்னஞ்சல்கள் போல் பர்சனல் மெயிலில் கிடப்பில்
போட்டு வைக்க மனசில்லை. உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளவே விருப்பமுள்ளவனாக இருக்கிறேன்.
இதை மொழியாக்கம் செய்து தந்தவர் தம்பி ஜாஃபர் சாதிக்.
(இவரை முன்பே உங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்).
அந்த மொழியாக்கம் கட்டுரை வடிவில் இருந்ததால் சற்றே
அதன் மெருகு குறையாமல் 'கதை' வடிவில் அமைத்திருக்கிறேன்.
இதைப் படித்து விட்டு உங்கள் உணர்வுகளைச் சொல்லுங்கள்!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி சொல்லும் நேரம்..!!
ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்த
இளைஞன் ஒருவன் நேர்காணலுக்குப் அழைக்கப் பட்டிருந்தான். இளைஞனின் CV யில் நல்ல மதிப்பெண்களும் பல சிறப்பான
கல்விச் சான்றிதழ்களும் இருப்பதைக் கண்டு அதன் நிர்வாக
இயக்குனர் இறுதி நேர்காணலுக்குப் பின், அவனை நியமனம்
செய்ய தீர்மானித்து, மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.
"தம்பி நீ படிக்கிற காலத்தில் உனக்கு 'ஸ்காலர்ஷிப்' (உதவித்-
தொகை) ஏதும் கிடைத்ததா?
"இல்லீங்க சார்"
"உன் படிப்பு செலவை எல்லாம் உங்க அப்பா கவனித்துக்
கொண்டாரா?"
"இல்லை சார் எனக்கு ஒரு வயதாகும் போதே அப்பா
இறந்துட்டாங்க. என் அம்மா தான் எல்லா செலவையும் கவனிச்சுக்கிட்டாங்க!!”
"உங்க அம்மா எங்க வேலை செய்றாங்க"
"துணித் துவைக்கிற கூலித் தொழிலாளி சார்!!"
"ஓ அப்படியா...!! அப்ப உன் கையைக் காட்டு?"
காட்டினான். . அவனது கைகள் மிருதுவாகவும் பளபளப்பாகவும்
இருந்தன.
"நீ உங்க அம்மாவுக்கு எப்பவாவது உதவியாய் இருந்திருக்கிறாயா?"
"இல்லீங்க சார், எங்க அம்மா அதுமாதிரி எப்போதுமே
எதிர்பார்த்ததில்லை. நான் மேலும் மேலும் படிப்பதையும்
நிறைய கற்றுக் கொள்வதையும் தான் விரும்பினாங்க!"
நிர்வாக இயக்குனர் சற்று நிதானித்து அந்த இளைஞனைப்
பார்த்து…
"நான் ஒன்று சொல்வேன் நீ அதன்படி செய்ய வேண்டும்...
செய்வியா??!!"
"சரிங்க சார் சொல்லுங்க !"
இன்று வீட்டிற்கு சென்றவுடன்,
"உங்க அம்மாவின் கைகளை நீ கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு நாளை காலை வந்து என்னை பார் ” என்றார்.
இளைஞனுக்கு வேலை கிடைத்து விடுமென மனதில் பொறி
தட்டியது.
உற்சாக துள்ளலாய் வீட்டிற்கு திரும்பியவுடன், அம்மாவை
தன்னருகே அழைத்து, மேற்கண்ட உரையாடலை பகிர்ந்துக்
கொண்ட பின்னர் தன் அம்மாவின் கைகளை கழுவ அனுமதிக்கு
மாறு வேண்டிக் கொண்டான்.
சந்தோஷமும் ஆச்சரியமும் கலந்த ஒரு உணர்வில்அந்த தாய்
என்னும் மனிதம் தன் மகனை தன் கைகளை கழுவ அனுமதித்தது.
அந்த இளைஞன் தன் அம்மாவின் கைகளை பார்த்தவுடன்
அதிர்ந்தான். அன்றுதான் தன் அம்மாவின் சுருங்கிய கைகளையும் அவற்றில் நிறைய புண்கள் இருந்ததையும் அவன் கவனித்தான்.
எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பார்த்து பார்த்து மெதுவாக
சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான். அப்போது அந்த இளைஞனின்
கண்களில் முட்டிக் கொண்டு கண்ணீர் வர ஆரம்பித்தது.
உள்ளுக்குள் தேம்பினான் “அம்மாஆஆ..!!” என்று விம்மலாய்....
சில புண்களை அவன் கழுவும்போது வலியால் அம்மாவின்
கைகள் துடித்தன. அந்த அளவிற்கு சில கோரப்புண்கள். தினமும்
ஊரார் துணிகளைக் துவைத்த இந்த இரண்டுக் கைகள்தான் தன்
பள்ளிச் செலவிற்கு உதவியதா...?? அப்போதுதான் அவன் மனம்
முதன் முதாலாக உணர ஆரம்பித்தது.
அம்மாஆஆஆ..!! விம்மி அவன் உடம்பு குலுங்கியது.
“எனது கல்வி உயர்விற்கும், பட்டப் படிப்பிற்கும் எதிர்காலத்திற்கும் கொடுக்கப்பட்ட விலைதான் அம்மாவின் கையிலிருந்த புண்களா ??”
அம்மா… அம்மா… அம்மா… என்னவென்று நான் சொல்வேன்
மருகினான்.
அம்மாவின் கைகளை கழுவியபின், ஏதும் பேசாமல் அம்மா துவைக்கவிருந்த மற்ற துணிகளையும் சத்தமில்லாமல்
அமைதியாக துவைத்தான்.
அடுத்த நாள் காலையில் அந்த இளைஞன் தன்னை நேர்காணல்
செய்த நிர்வாக இயக்குனரை அலுவலகத்தில் சென்று சந்தித்தான். இளைஞனின் கலங்கிய கண்களைப் பார்த்துவிட்டு….
“நேற்று என்ன செய்தாய்? என்ன கற்றுக் கொண்டாய்
என்பதை எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டார்.
“நான் என் அம்மாவின் கைகளை கழுவியதோடு அவர்கள் துவைக்கவிருந்த மற்ற துணிகளையும் துவைத்தேன் சார்”
என்று பதிலளித்தான்.
"அப்போது உன் உணர்வுகள் எப்படி இருந்தது என்று சொல்ல
முடியுமா?"
“முதலாவதாக “நன்றி பாராட்டுதல்” என்றால் என்னவென்று
இன்று நான் தெரிந்து கொண்டேன். என் அம்மாவின் உதவியின்றி,
என் வாழ்வில் வெற்றி என்ற ஒன்று இருந்திருக்காது.
இரண்டாவதாக, என் அம்மாவுக்கு உதவி செய்ய அவர்களுடன்
சேர்ந்து அவர்களின் வேலையில் பங்கெடுத்ததன் மூலம் ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது எவ்வளவு கடினம் எனபதை
இன்று தான் உணர்கிறேன்.
மேலும் மூன்றாவதாக குடும்ப உறவின் முக்கியத்துவத்தையும்
அதன் மதிப்பையும் நான் கற்றுக் கொண்டேன்” என்றான்.
“என் நிறுவனத்தின் மேலாளராக இருக்க வேண்டியவரிடம்
இதைத்தான் எதிர்பார்த்தேன். மற்றவர்கள் தனக்கு செய்யும்
உதவிக்கு நன்றி பாராட்டுபவரை, காரியங்களை நிறைவேற்ற எதிர்கொள்ளும் கஷ்டங்களை மதித்துணர்பவரை, பணத்தை
மட்டுமே தம் வாழ்நாளின் குறிகோளாக கொள்ளாத நபரைத் தான்
பணியில் அமர்த்த விரும்புகிறேன். நீ இன்றுமுதல் இந்த
பணியில் சேர்ந்து கொள்ளலாம்”. என்றார்.
அதன்பின் அந்த இளைஞன் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து
நிறுவன ஊழியர்களிடம் நன் மதிப்பை பெற்றான். நிறுவனமும்
வெகு சிறப்பாக முன்னேறியது.
டிஸ்கி : கொஞ்சம் நீளமானது..!!
தன்னைத் தானே கவனிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படாமல், பேணி வளர்க்கப்பட்ட, கேட்ட போதெல்லாம் கொடுத்து பழக்கப் படுத்திய
குழந்தை தனக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்ற மனப்பாங்-
கோடும் தன் தேவைகளையே பற்றியே சிந்திப்பவனாகவும்தான் இருப்பான்.
அவனுடைய பெற்றோர்களின் முயற்சிகளை பற்றி அறியாத-
வனாகவும் இருப்பான். அவன் வேலைக்கு செல்லும்போது தன்
பேச்சை அனைவரும் கேட்பார்கள் என்று நினைத்துக் கொள்வான்.
அவன் மேலாளராக ஆகும்போது மற்ற வேலையாட்களின்
கஷ்டங்களை அவனால் தெரிந்து கொள்ள முடியாது. அதனால் மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பான்.
இது போன்ற தன்மையுடையவர்கள் கல்வியில் சிறந்து
விளங்கலாம், சில காலம் வெற்றியில் மிதக்கலாம், ஆனால்
கடைசியாக எதையும் சாதித்த உணர்வே அவர்களிடம்
இருக்காது.
எப்போதும் வெறுப்பும், எதுவும் அடையவில்லை என்ற புலப்பமே இருக்கும். மேலும் இருப்பதைக் கொண்டு திருப்தியடைய முடியாமல் மேலும் மேலும் பொருள் தேடி போராட்டத்திலேயே வாழ்நாளை கழிப்பார்கள்.
உங்கள் குழந்தைகள் ஆடம்பரமான பெரிய வீட்டில் வாழட்டும்,
சிறந்த உணவை உண்ணட்டும், பெரிய திரையில் தொலைக்-
காட்சியும் பார்க்கட்டும். ஆனாலும், நீங்கள் புல்வெட்டும்போது
அதிலும் அவர்களை பங்கு கொள்ள விடுங்கள்.
சாப்பட்டுக்கு பின், தான் சாப்பிட்ட தட்டை, கோப்பைகளை தன்
சகோதர சகோதரிகளுடன் கழுவவிடுங்கள். இதனால் உங்களுக்கு
ஒரு வேலைகாரியை வைக்க உங்களிடம் வசதியில்லை என்று
ஆகி விடாது,
மாறாக உங்கள் குழந்தை மேல் நீங்கள் சரியான அன்பைக் காட்டுவதற்காக. நீங்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும்
ஒரு நாள் உங்கள் குழந்தைகளின் தலைமுடியும் அந்த இளைஞனின் தாயின் தலைமுடிபோல் வெள்ளையாகி விடும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இதனால் உங்கள்
பிள்ளை மற்றவர்களின் சிரமங்களை மதித்துணர்ந்து அதே
கஷ்டங்களை தானும் அனுபவிப்பதன் மூலம் மற்றவர்களுடன் சேர்ந்து குழுவாக வேலை செய்ய கற்றுக்கொள்கிறான்.
முடிந்தவரை உங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும்
இந்தக் கதையையும் டிஸ்கியையும் பகிந்துக் கொள்ளுங்கள்.
இது சிலரின் எதிர்காலத்தையே அற்புதமாக மாற்றி அமைக்கும் வாய்ப்புள்ளது!!!
நன்றி!! அன்புடன் எம் அப்துல் காதர்.
64 கருத்துகள்:
மிக அருமையான உணர்ச்சி ததும்பும் கதையை அழகாக எடுத்தாண்ட விதம் கூடுதல் எழில் சேர்க்கிறது. வாழ்த்துகள்!!
டிஸ்கி சொன்ன நீதி சூப்பர்...
நானும் அந்தக் கதையைப் படிச்சேன்!
மிக அழகா சொல்லியிருக்கீங்க பாஸ்!
டிஸ்கி சூப்பர்
story of appreciation -இந்த மெயில் ரொம்ப நாளாக சுற்றி வருகிறது,தமிழாக்கம் அருமை.
நல்லாயிருக்குங்க.... வாசித்துவிட்டு கண் கலங்கிட்டேன்..
என்னது காந்தியை சுட்டுட்டாங்களா..?
//"Nothing is impossible" //
பெர்முடா ஸ்கொயருக்கு போய்ட்டு வர (?) ஒரு ஆள் வேனுமாம் வசதி எப்படி...?
////"Nothing is impossible" //
மூக்கால சாப்பிடனும் முடியுமா...?
////"Nothing is impossible" //
2 கிலோ மிளகாய் பவுடரை மட்டும் டிஃபனா சாப்பிடனும் அனுப்பவா..?
//"Nothing is impossible" //
இதே சவுதியில இப்போ குளிர் காலத்துல ஹீட்டர் இல்லாம அரை மனிநேரம் குளிச்சிட்டு தலை துவட்டாம இருக்க முடியுமா..?
////"Nothing is impossible" //
இதே சவுதியில வெய்யில் நேரத்துல ஒரு நாள் முழுக்க (24 Hs ) ஏ/சி இல்லாம இருக்க முடியுமா...?
////"Nothing is impossible" //
ஊருக்கு போகும் போது ஃபிளைட்டில போகாம நீங்க மட்டும் நடந்தே போகனும் ரெடியா..? முடியுமா..?
//"Nothing is impossible" //
6 மாசம் சம்பளமே குடுக்காம கம்பெனி வேலை செய்ய சொல்லுது அப்ப இதே வார்த்தையை சொல்லிட்டு தொடர்ந்து வேலை செய்வீங்களா...?
//"Nothing is impossible" //
உங்களால தலை கீழா நின்னுகிட்டு தண்ணீர் குடிக்க முடியுமா
//"Nothing is impossible" //
தலையை மட்டும் தானா திருப்பி கண்ணாடி இல்லாம உங்க முதுகை நீங்களே பார்க்க முடியுமா..?
//"Nothing is impossible" //
தண்ணீர் சேர்க்காம சோறு சமைச்சி காட்ட முடியுமா...?
//"Nothing is impossible" //
அரை லிட்டர் பேதி மருந்தை குடிச்சிட்டு ஆடாம அசையாம அங்கயே ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்க முடியுமா...?
//"Nothing is impossible" //
ஒரு அரை பிடி மூக்கு பொடியை மூக்கு குள்ள தினிச்சிட்டு தும்மல் போடாம இருக்க முடியுமா..?
//"Nothing is impossible" //
நெத்தியை சுருக்காம , கண்ணை மூடாம வாயை திறக்காம ஒரு தும்மல் போட்டு காட்ட முடியுமா..?
முதல்ல ஜெய்லானியால இது மாதிரி டார்ச்சர் கொடுக்காம இருக்க முடியுமா. ஹா.ஹா..ஹா...
பாவம் தல ஒரு நல்லெண்ணத்துல சொல்லிட்டாரு. விட்டிடுங்க ஜெய்லானி :)
நல்ல கருத்துள்ள பதிவு.
//முதல்ல ஜெய்லானியால இது மாதிரி டார்ச்சர் கொடுக்காம இருக்க முடியுமா. ஹா.ஹா..ஹா...//
அக்பர் இது நான் குடுத்த டார்ச்சர் இல்ல ..ஆஹா..பக்கத்துக்கு கீழே போட்டிருந்த வார்த்தை இது... இதெல்லாம் நீங்க கவனிக்கிறது இல்லையா..?ஹா..ஹா..
//பாவம் தல ஒரு நல்லெண்ணத்துல சொல்லிட்டாரு. விட்டிடுங்க ஜெய்லானி :) //
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு . அதுக்குள்ள ஆணி வந்துட்டுது அதான் விட்டுட்டேன் . திரும்பவும் முதல்லேருந்து ஆரம்பிக்கவா...?ஆரம்பிக்கவா ????
//வழங்குக
சொல்வதை அழகாய் - மிடுக்காய் - மனத்தைக் கொள்ளை கொள்ளும்படி - சொல்லிவிட்டு போங்க!! //
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ..அறிவா இருக்கீங்க ..புத்திசாலியா இருக்கீங்க ...
இப்படி சொல்ல ஆசைதான் ..ஆனா அது மாதிரி இருக்கனுமே ஹி...ஹி...
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது!! //
ஆத்தாடீஈஈஈ..இதென்ன வில்லங்கமா இருக்கு ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
குழந்தை படம் அருமை :-)
((எந்த காலத்துல பதிவை பாராட்டி இருக்கிறோம் இப்ப நல்லா இருக்குன்னு சொல்ல ஹா..ஹா.. ))
சிந்திக்கவைத்த நெகிழ்வான கதை. ஒவ்வொருவரும் உணரக்கூடியது.
ஆஹா.. பக்கத்துல ஹா ஹா ஹா..ன்னு சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் ஜெய்லானிக்கு சவுதிக்கிளை சார்பில் இந்த பொன்னாடையை போர்த்துகின்றேன்.
ஜெய்லானி ஜெய்லானிதான்.
நல்ல ஒரு கருத்தைக் கண்டவுடன், அதை மற்றவர்களும் பயன்பெறுமாறு, சிரமம் எடுத்து மொழிபெயர்த்துப் பதிவில் இட்ட உங்களின் நல்லெண்ணம் பெரிது!! (நான் வழக்கம்போல ஒருசிலருக்கு ஃபார்வேர்ட் மட்டுமே செய்தேன், அதைவிட பிளாக்கின் ரீச் அதிகம்.)
ஆங்கிலத்தில் வாசித்திருந்தாலும், தமிழில் வாசிக்கும்போது மனதை மிகவும் உருக்குகிறது. நன்றி உங்கள் ஆர்வத்திற்கு, கருத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும்வண்ணம் மொழிபெயர்த்த ஜாஃபருக்கும்!
//ஜெய்லானி சொன்னது…
////"Nothing is impossible" //
இதே சவுதியில வெய்யில் நேரத்துல ஒரு நாள் முழுக்க (24 Hs ) ஏ/சி இல்லாம இருக்க முடியுமா...?//
பலர் இருக்கிறார்கள். சவூதியில் பிச்சைக்காரர்கள் உண்டு. அவர்களுக்கு ஏசி தருவது யார்? மேலும், சாலை வேலைகள் போன்ற பல கடும் பணிகள் செய்பவர்கள் இருக்கிறார்களே? அரபுநாடுகளில் பார்க்குகளில் தங்கும் நிலையில் உள்ள “கல்லிவல்லிகள்”?
ஏன், நேற்று முன் தினம், ராஸ் அல் கைமாவில் தள்ளாடும் வயதில் உள்ள முதியவர் ஒருவர் பலப்பல வருடங்களாக வீடே இல்லாதவராக ரோட்டில் தங்கிக் கொண்டிருந்தார் என்று செய்தித்தாளில் படித்தேன்.
இப்படித்தான் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற நிலை வந்துவிட்டால், எதுவும் முடியும், இறையாற்றலுடன்!!
பை தி வே, ஏஸி கண்டுபுடிச்சு எத்தினி வருஷம் இருக்கும்? :-)))))))))))))
//இப்படித்தான் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற நிலை வந்துவிட்டால், எதுவும் முடியும், இறையாற்றலுடன்!!//
ஆஹா...சீரியஸா போய்ட்டீங்களே..!!..விதி விலக்குகள் ஒன்னோ ரெண்டோ இருக்கு நான் சொன்னது நடை முறையில் உள்ளதை
இந்தக் கதையை மொழிபெயர்க்கச் சொல்லி என் அண்ணன் (நான் காதர் நானா என்றுதான் அழைப்பேன்) காதர் அவர்கள் என்னை கடந்த ஒரு வாரமாக துரத்தி அடித்து விட்டார்கள். ஒரு விசயத்தை ஒருவரைக்கொண்டு எப்படி செய்வது என்பதை அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கும் மேலாக வங்கியில் இருக்கும் அவஸ்தைகளுக்கிடியிலும் இந்த நல்ல விஷயத்தை தன் நண்பர்களிடம் பகிர்ந்தே தீர வேண்டுமென்ற ஆவல் மகத்தானது. பாராட்டப்பட வேண்டியது. காதர் நானாக்கு அவர்களின் உயர்வான எண்ணங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன், ஜாஃபர் சாதிக்
//பை தி வே, ஏஸி கண்டுபுடிச்சு எத்தினி வருஷம் இருக்கும்? :-))))))))))))) //
அங்கேயே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அரபிகளுக்கு அது தேவையில்லை .ஆனால் நம்மை மாதிரி ஆட்களுக்கு அது இல்லாமல் அங்கு இருக்கவே கண்டிப்பாக முடியாது..மங்கி டிரெஸ் இல்லாம ஒரு நாள் ஏன் அரை நாள் அங்கே இருக்க முடியாது . குளிர் காலத்துல வாரக்கணக்குல குளிக்காத ஆட்களை (ரியாத் சிட்டி )நான் பார்த்திருக்கிறேன் .
யூ ஏ ஈ குளிர் ஒரு குளிரே இல்லை. :-))இங்கு ஹியூமிடிட்டி இருக்கு பாலைவனத்துல அது இல்லாம ஓவன் மாதிரி இண்டஷன் சூடு அடிக்கும் :-)
Another thing I forgot to add in my previous post. Brother Kader has given beautiful touches polishing touches by changing the Original wirtten Tamil lanaguage to spoken language. It really suits in as a beautiful dialogue and adds originality. (Temporarily out of Tamil font) Anbudan, Jafar Sadiq
Another thing. Brother Kader has added polish to my translation by changing the original lanaguage to dialogue style here and there which adds value and originality to the article. Anbudan, Sadiq (Temporarily out of Tamil font)
jafar கூறியது...
//Another thing I forgot //
//Another thing//
இரண்டு பேருக்குமிடையேயுள்ள நல்ல நட்பும், புரிதலும் மிக்க மகிழ்ச்சி தருகிறது. இதுபோன்ற நட்புகள் நம் வாழ்வில் கிடைக்கும் பேறு. வாழ்த்துகள் இருவருக்கும்!!
அருமை அருமை, இது எல்லோருக்கும் மெயிலில் வந்தாலும், இங்கு மொழி பெயர்த்து பகிர்ந்து கொண்ட விதம் மிக அருமை.
டிஸ்கி சூப்பர்.
மெழி பெயர்த்த தம்பி ஜாபருக்கும் பாராட்டை தெரிவித்துடுங்க.
மதிப்பிற்குரிய ஜலீலா கமால், தங்கள் பாராட்டுக்கு அன்பிற்கு நன்றி.
அன்புடன், ஜாஃபர் சாதிக்
அருமையா மொழி பெயர்த்த சகோ ஜாபருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். உணர்வு பொங்கும் கதை!!
மதிப்பிற்குரிய ஆமினா அவர்களுக்கு, தங்கள் பாராட்டுக்கு நன்றி
அன்புடன்,
சாதிக்
கதை நல்லா இருக்கு.
ஜெய்க்கு என்ன ஆச்சு? உங்களை ஒத்தைக்கு ஒத்தை வர சொல்றாரா?? தைரியமா போங்க. நான் இங்கே safeஆஆஆ பதுங்கி இருப்பேன்.
//ஜெய்க்கு என்ன ஆச்சு? உங்களை ஒத்தைக்கு ஒத்தை வர சொல்றாரா?? தைரியமா போங்க. நான் இங்கே safeஆஆஆ பதுங்கி இருப்பேன்.//
அது ஒன்னுமில்ல ...கொக்கு ஒத்த கால்ல ஏன் நிக்குது ..பதிலை பார்த்ததும் கடை ஓனர் எஸ்கேப் ஹி..ஹி.. :-)) ( சொன்ன மாதிரி 21 கமெண்ட் போட்டதுக்கு அமவுண்ட் வயர் டிரான்ஸ்பர் பண்ணிடுங்க ))
ஜெய்,
//சொன்ன மாதிரி 21 கமெண்ட் போட்டதுக்கு அமவுண்ட் வயர் டிரான்ஸ்பர் பண்ணிடுங்க //
அதான் மேட்டரா? என்னவோ நல்ல வசதியா இருந்தா சரிதான். நானும் கொஞ்சம் கை மாத்தா கடன் கேட்கலாம்ணு நினைக்கிறேன்.
//நானும் கொஞ்சம் கை மாத்தா கடன் கேட்கலாம்ணு நினைக்கிறேன்.//
என்னாதூஊஊஊஊ கடனா ? அதெல்லாம் குடுக்கிற மாதிரி இல்ல ..வேனுமுன்னா சும்மா கேளுங்க ..டாலரா வேனுமா..? இல்ல யூரோவா வேனுமா..? எது வசதி..!!
@!@ முஹம்மது ஆரிப் கூறியது...
// மிக அருமையான உணர்ச்சி ததும்பும் கதையை அழகாக எடுத்தாண்ட விதம் கூடுதல் எழில் சேர்க்கிறது. வாழ்த்துகள்!!//
வாங்க முஹம்மது ஆரிப் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ philosophy prabhakaran கூறியது
// டிஸ்கி சொன்ன நீதி சூப்பர்...//
வாங்க philosophy prabhakaran நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Balaji saravana கூறியது...
// நானும் அந்தக் கதையைப் படிச்சேன்! மிக அழகா சொல்லி யிருக்கீங்க பாஸ்!டிஸ்கி சூப்பர்//
வாங்க Balaji saravana நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ asiya omar கூறியது...
//story of appreciation -இந்த மெயில் ரொம்ப நாளாக சுற்றி வருகிறது, தமிழாக்கம் அருமை.//
வாங்க asiya omar நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Mohamed Faaique கூறியது...
// நல்லாயிருக்குங்க.... வாசித்துவிட்டு கண் கலங்கிட்டேன்..//
வாங்க Mohamed Faaique நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து ரைக்கும்.
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// நல்ல கருத்துள்ள பதிவு...//
தல ஜெய்லானிய நான் பார்த்துக்கிறேன் பாஸ்.
வாங்க சிநேகிதன் அக்பர் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது
// சிந்திக்கவைத்த நெகிழ்வான கதை. ஒவ்வொருவரும் உணரக்கூடியது.//
ஜெய்லானிக்கு பொன்னாடை போர்த்திய உங்களுக்கு ஒரு நன்றி பாஸ்!! ஸ்டார்ஜன்உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஒரு நன்றி.
@!@ ஹுசைனம்மா கூறியது...
//நான் வழக்கம்போல ஒருசிலருக்கு ஃபார்வேர்ட் மட்டுமே செய்தேன், அதைவிட பிளாக்கின் ரீச் அதிகம் ஆங்கிலத்தில் வாசித்திருந்தாலும், தமிழில் வாசிக்கும் போது மனதை மிகவும் உருக்குகிறது. நன்றி உங்கள் ஆர்வத்திற்கு, கருத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் வண்ணம் மொழி பெயர்த்த ஜாஃபருக்கும்!//
வாங்க ஹுசைனம்மா,அனைத்து வேலைகளையும் தம்பி தான் ஆர்வத்துடன் செய்து கொடுத்தார். அந்த கட்டுரை வடிவத்தை பேச்சு வழக்கில் மாற்றி பாலிஷ் டச் கொடுத்தது என் வேலை. எனது பணி நிமித்தமும், இங்கே குடும்ப மிருப்பதாலும், இதில் அதிக நேரம் இதற்கு செலவிட முடியவில்லை. But all credit goes to thambi only!!
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து ரைக்கும்.
@!@ ஜலீலா கமால் கூறியது...
//அருமை அருமை, இது எல்லோருக்கும் மெயிலில் வந்தாலும், இங்கு மொழி பெயர்த்து பகிர்ந்து கொண்ட விதம் மிக அருமை. மெழி பெயர்த்த தம்பி
ஜாஃ பருக்கும் பாராட்டை தெரிவித்துடுங்க.//
தம்பி உங்க வருகைக்கு தனியாக நன்றி சொல்லி எழுதிவிட்டார். தம்பியை நீங்கள் எல்லோரும் உற்சாகப் படுத்தி எழுதுவது அவருக்கு தனி ஆர்வத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை.
ஆகவே நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஆமினா கூறியது...
// அருமையா மொழி பெயர்த்த சகோ ஜாஃபருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். உணர்வு பொங்கும் கதை!!//
வாங்க சகோ. ஆமினா உங்களுக்கும் தம்பி தனியாய் நன்றி தெரிவித்து எழுதி இருக்கிறார். உங்களின் இந்த கருத்துரை அவருக்கு மேலும் உற்சாகமூட்டும்.
நன்றி ஆமினா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ vanathy கூறியது...
// ஜெய்க்கு என்ன ஆச்சு? உங்களை ஒத்தைக்கு ஒத்தை வர சொல்றாரா?? தைரியமா போங்க. நான் இங்கே safeஆஆஆ பதுங்கி இருப்பேன்.//
நீங்க safeஆஆஆ பதுங்கி இருந்து 'ஆஹா டிவி'யில் நாளை மறுநாள் அவசியம் பாருங்க. ஒத்தைக்கு ஒத்தை யார் ஜெயிக்கிறான்னு!! ஹா.. ஹா..
நன்றி vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ vanathy கூறியது...
//அதான் மேட்டரா? என்னவோ நல்ல வசதியா இருந்தா சரிதான். நானும் கொஞ்சம் கை மாத்தா கடன் கேட்கலாம்ணு நினைக்கிறேன்.. //
//என்னாதூஊஊஊஊ கடனா ? அதெல்லாம் குடுக்கிற மாதிரி இல்ல.. வேனுமுன்னா சும்மா கேளுங்க.. டாலரா வேனுமா..? இல்ல யூரோவா வேனுமா..? எது வசதி..!!//
அமெரிக்கால இருந்துக்கிட்டு கடனா?? உலக வங்கிய பக்கத்துலேயே வச்சுக்கிட்டு!! என்னாதிது வான்ஸ். தலய ஒரு 'சைன்' பண்ணச் சொல்லுங்க பல கோடி புரட்டலாம். பாருங்க என்னா கூவு கூவுது பாருங்க. அவ்வ்வ்வவ்..
நன்றி vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
தல ஜெய்லானிக்கு!! தங்களின் அனைத்து கருத்துக்கும் நன்றி பாஸ்!!. உங்கள் கேள்விகள் அனைத்தும் தனிபதிவாகிறது. நாளை அல்லது மறுநாள் பப்ளிஷ் ஆகும். அதற்குரிய அமௌண்ட் வயர் ட்ரான்ஸ்ஃபர் அனுப்பி விட்டேன் ஹா.. ஹா.. நன்றி நன்றி!!
ஆஹா.. எவ்வளவு அருமையான கருத்துக்களைக் கொண்ட பதிவு..
படிக்காமல் மிஸ் பண்ணியிருப்பேன்.. நினைவூட்டியதற்கு ரொம்ப நன்றிங்க..
எவ்வளவோ பிள்ளைகள்.. பெற்றோரின் கஷ்டம் தெரியாமலேதான் இருக்காங்க...
பெத்தவங்களும் பிள்ளைகளுக்கு அந்தக் கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம்னு இருந்திடறாங்க..
பிள்ளைகள் ஒவ்வொருவரும் பெற்றோரின் கஷ்டங்களைத் தானே புரிஞ்சுக்கனும்.. புரிஞ்சுக்குவாங்க அந்த இளைஞனைப் போல்.. என்னைப்போல்..
ஏனோ மனசு ரொம்பக் கஷ்டமாயிடுச்சு..
நன்றிங்க..
அழகிய கருத்துக்கள்.அருமையான பகிர்தல்
//தல ஜெய்லானிய நான் பார்த்துக்கிறேன் பாஸ். //
என்னா பில்டப்பூ
//நீங்க safeஆஆஆ பதுங்கி இருந்து 'ஆஹா டிவி'யில் நாளை மறுநாள் அவசியம் பாருங்க. ஒத்தைக்கு ஒத்தை யார் ஜெயிக்கிறான்னு!! ஹா.. ஹா.. //
என்னாதூஊஊஊ ஆஹா டீவியா..????? இது எப்போ..????
//தங்களின் அனைத்து கருத்துக்கும் நன்றி பாஸ்!!. உங்கள் கேள்விகள் அனைத்தும் தனிபதிவாகிறது. நாளை அல்லது மறுநாள் பப்ளிஷ் ஆகும்.//
நான் அன்னைக்கி விரதம் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் ..இதென்ன கிணறு வெட்ட பூதம் (ஙே) கிளம்புது...ஹி..ஹி...
நானும் ரவுடிதான்....நானும் ரவுடிதான்........நானும் ரவுடிதான்....ஹோய்...
@!@ பதிவுலகில் பாபு கூறியது
// பிள்ளைகள் ஒவ்வொருவரும் பெற்றோரின் கஷ்டங்களைத் தானே புரிஞ்சுக்கனும்.. புரிஞ்சுக்குவாங்க அந்த இளைஞனைப் போல்.. என்னைப்போல்.... //
நீங்கள் தானே இளைஞர்களுக்கு முன் உதாரணம் பாஸ் So keep it up..
நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஸாதிகா கூறியது...
// அழகிய கருத்துக்கள்.அருமையான பகிர்தல் //
வாங்க ஸாதிகாக்கா..
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து ரைக்கும்.
@!@ ஜெய்லானி கூறியது...
// என்னா பில்டப்பூ...//
டிவி ஆரம்பிக்கும்போது இந்த மாதிரி விளம்பர பில்டப்பெல்லாம் கொடுத்தா தான் போட்ட காச எடுக்க முடியும் பாஸ்.. ஹி ஹி..
// என்னாதூஊஊஊ ஆஹா டீவியா..????? இது எப்போ..????//
லைசன்ஸ்'ல சின்ன சிக்கல் ... very soon ....!!
// நான் அன்னைக்கி விரதம் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்
..இதென்ன கிணறு வெட்ட பூதம் (ஙே) கிளம்புது...ஹி..ஹி...//
நீங்க விரதமா இருந்தாலும், ஆள வச்சு அடிப்பம்ல ஹி..ஹி...
//நானும் ரவுடிதான்....நானும் ரவுடிதான்........நானும் ரவுடிதான்....ஹோய்...//
சரி சரி இப்படி கூவி தைரியப் படுத்திக்க வேணாம். என் பேர உங்க பேரோடு சொல்லி மூணு தடவ ஓதி ஊதிங்க. எல்லாம் சரியாய்டும். டாகுடர் தம்பியின் 'காவலன்' ரிலீஸ் மாதிரி, நம்ம "ஒத்தைக்கு
ஒத்தை யார் ஜெயிக்கிறா" ரிலீஸ் தேதி சற்றே தள்ளி போகிறது. ஹி.. ஹி.. தியேட்டர் கிடைக்கல. இடையில் எல்லாம் 'அவார்ட் கொடுக்கிராய்ங்க', ரிலீசாகி டஃப் கொடுத்துடுச்சு.." அவ்வவ்வ்வ்வ்..
'தல' நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது!!//
எதையுமே சொல்லிட்டு செய்ற உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.
ரொம்ப அருமையான சீரியஸான கதை. தமிழாக்கம் செய்த மின்னஞ்சலில் அனுப்பிய சகோ ஹுசைனம்மா அவர்களுக்கும், பல்பேர் படிக்க வேண்டும் என்று நினைத்த காதர் பாய் அவர்களுக்கும், கடுமையான வேலை பளுவிலும் மொழிபெயர்த்த ஜாஃபர் பாய் அவர்களுக்கும் நன்றி.
சங்கத்த கூட்டி ரகளை செய்து கொண்டிருக்கும் சகோ ஜெய்லானி அவர்களுக்கு டேரா துபாய் சார்பாக இந்த பொன்னாடைய போர்த்துகின்றேன்.
கருத்துரையிடுக