facebook

புதன், ஜனவரி 26, 2011

100-வது பதிவு ஒரு முன்னோட்டம்..!!


100-வது பதிவு ஒரு முன்னோட்டம்..!!

இன்று  நூறாவதுப் பதிவு எழுதப் போவதாக நினைத்துதூங்கிக் கொண்டிருக்கும் போதே, விழித்துக் கொண்டிருப்பதாக  ஒரு  கனவு  வந்ததுங்க!! (ஆரம்பிச்சுட்டாங்கைய்யா....!!! என்று நீங்க அலறுவது  கேட்குது... ஹி..ஹி.. நான் அப்படியாப் பட்ட ஆளா?? நீங்களே சொல்லுங்க!! யாரச் சொன்னாலும் என்னை நீங்க சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்ஏன்னா? எல்லா  கமெண்ட்ஸிலும் என்னை நீங்க போட்டு  'குமுறுரத' வச்சு தான் அவ்வ்வ்வ்....!!!

இந்தியாவின் கறுப்புப் பணம் வெளிநாட்டில் இருப்பது   வெறும்
"இருபது லட்சத்து எழுபதாயிரம் கோடியாம்" (இதில் வருகிற
சைபரை எண்ணினாலே நாம பேஜாராகி விடுவோம்.பிறகு
அதை எழுதினால்...!! ) என்று பிரணாப் முகர்ஜி  சொன்ன போது,
தூங்கிய நாம் அப்படியே  தூங்கிக் கொண்டிருக்கக்  கூடாதான்னு  தொப்புன்னு  மயக்கம் போட்டு விழாத குறை!

இவங்களுக்கெல்லாம் தெரியாமலா நம் பணம் நாட்டை விட்டு  வெளியே போகும். இதுல நூத்தி   அறுபது கோடிய திரும்ப 
மீட்டுட்டாங்களாம். அதெப்படி??  நாமெல்லாம் அரசியல் பேசக்
கூடாது கூடாதுன்னு ஒதுங்கி போறதுனாலே தானே இவங்-
கல்லாம் இப்படி செய்ய ஆரம்பிசிருக்காங்க? நாமெல்லாம்
அரசியல் பேச ஆரம்பிசிட்டோம்னா? இவங்க நெலம என்னாகுறது.
சரி இனி நாமும் அரசியல் பேச ஆரம்பிக்கணும்ங்க!! அப்ப  தான்   சரியா  வருவாங்க !! அது தான்  எப்படி?? நீங்களே   சொல்லுங்க!! அவ்வ்வ்வ்....!!!

***********************************************************************************
துபாய்ல உள்ள ப்ரூஜ்  கலிஃபா டவர் டாப்புல உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில், காபி ஜூஸ் ஃப்ரீயா கொடுக்கிறாங்களாம். அதை
குடிக்க கூட்டம் அலைமோதுதாம். மேலே நின்னு உலகத்தைப்
பார்த்த மாதிரியும் ஆச்சு. காபி ஜூஸ் குடித்த மாதிரியும் ஆச்சு.
வெளியே வரும் போது மட்டும் குடித்ததற்கு இருநூறு திர்ஹம்
வாங்கிடுராங்கலாம். இதை வேற சன் நியூஸ்  சானல்ல 
பெருமையா  சொல்லிக்கிறாங்க.  ஏன் இதை துபாய், ஷார்ஜா, அல் அய்ன் பதிவர்களெல்லாம் கண்டுக்கவே மட்டேங்கிராங்க. பதிவுல
போட்டு கிழி கிழி என்று கிழிக்க வேண்டியது தானே!

ஒருவேளை ஏற்கனவே  போட்டு கிழிச்சிட்டாங்களோ!! நாம் தான்
படிக்காம விட்டுட்டோமோ. வேக வேகமா வந்து படிக்கிறதுல நாம
கில்லாடியாச்சே!! ஹி..ஹி..இருக்கும் இருக்கும். நம்ம பதிவர்-
கலெல்லாம் லேசுப்பட்டவர்களிலையே!! (பேச்சு பேச்சா இருக்கும்
போது வன்முறை நோ..ப்ளீஸ்!!)

***********************************************************************************
ரொம்ப நாளாச்சு என் நண்பர் ஒருவரைப் பார்த்து. எங்கள்
இருப்பிடத்திலிருந்து வெகு தூரமிருப்பதால், ரொம்ப
எடுத்தேத்தியாக இருந்தது. அதற்கான நேரம் இன்று தான்
வாய்த்தது. எனது 'மாணிக்க வாசகத்தை' அழைத்துக் கொண்டு
ரூமுக்குள் நுழைந்தவுடன் மாத்திரை மருந்து பட்டைகள்
மேசை முழுக்க இறைந்து கிடக்க, நண்பர் 'பிளாங்கெட்' போர்த்தி
தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்து பெட் நண்பரிடம் விசாரித்தேன்.
"ரெண்டு நாளா காய்ச்சல் தலைவலி தங்கடம்" என்றார்.
"அப்படியா என்கிட்டே சொல்லவே இல்லையே?" என்றேன்.

(சொன்னா மட்டும்..?? மனசாட்சி எகிறியது!!) உண்மைதான்.
நானென்ன செய்து விட முடியும்??

"நான் பிறகு வர்றேன் இப்ப அவரை எழுப்ப வேணாம் தூங்கட்டும்"
என்று சொல்லிவிட்டு நகரும் போது, மாத்திரை பாக்கெட்டில்
தமிழில் எழுதியிருந்த வாசகம்  என்னை ஈர்த்தது. எடுத்துப் பார்த்தேன் "குலுறு-சல்ல கடுப்புக்கு" என்று கிறுக்கி கிறுக்கி எழுதியிருந்தது.

அந்த நண்பர், "நாங்க அப்படி தான் எழுதி வச்சுக்குவோம். பின்னாடி அதுமாதிரி (ஜுரம்) வரும் போது டொக்டர் மாரை தேடி போவ வேனாமில்லையிண்டு. நான் உங்க நண்பரிடம் 'கஞ்சுபராக்கு'
போடாமே பனியில் உட்ர்கார்ந்திருக்காதியோன்னு சொன்னேன். கேட்கிராறில்ல" என்று ஒரு பாட்டம் பேசி முடித்தார்.

'கஞ்சுபராக்கு' ன்னா என்ன எனக்கு விளங்கவில்லை. சிரிப்பு வேறு
வந்து தொலைத்தது!! அடக்கிக் கொண்டு அவரிடமே கேட்டேன்.
ஹி..ஹி.. ஆண்கள் உள்ளே போட்டுக் கொள்ளும் பனியனுக்கு
அவங்க ஊரில் அப்படி சொல்வாங்களாம். இது எந்த ஊர்
பாஷைங்கோ??

வெளியே வரும்போது பக்கத்து ரூமிலிருந்து யாரோ கதவை
திறந்து வெளியே போக சரேலென்று அந்த ரூமிலிருந்து
"மலர்கொள்ள வந்த தலைவா வா! மனம் கொள்ளவந்த இறைவா
வா!" பாடல் வரி காதில் விழுந்தது. ஆண்களை தலைவன், இறைவன் என்றெல்லாம் (ஹி..ஹி..!!)  வர்ணிக்கிறார்களே, அப்ப நல்லப் பாட்டாத்தானிருக்கும் என்று மனதில் சிலாகித்துக் கொண்டு
ஒரு கணம் திரும்பி டிவியை பார்த்தேன் அதில் ஜெயா டிவி
சிம்பல் தெரிந்தது!! அது என்ன படம், பாட்டின் தலைப்பு என்ன
என்று விளங்காவிட்டாலும், தலைவனை புகழ்ந்து பாடும்
பாடலெல்லாமா இந்த டிவியில் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டேன்!!

டிஸ்கி : ஆமா மேலே வைத்திருக்கும் தலைப்புக்கும் நீங்க எழுதி
இருக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டு யாரும்
கமெண்ட்ஸ் போட்டுடாதீங்க!! இது வெறும் முன்னோட்டம்னு
பேரு வைக்காம கொஞ்சம் லுக்கா  வைக்கலாமேன்னு தான்!!

48 கருத்துகள்:

Riyas சொன்னது…

வடை வடை வடை...

Riyas சொன்னது…

ஆஹா ஆஹா ஆஹா கலக்கல்..


நம்ம கடைப்பக்கமும் வந்து போறது

Chitra சொன்னது…

இந்த பதிவை தூக்கத்திலேயே டைப் பண்ணலியே....

மாணவன் சொன்னது…

பதிவு அருமை நண்பரே,

உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

இப்படியும் ஒரு பதிவு தேத்தலாம்னு ஐடியா கொடுத்ததற்கு மிக்க நன்றி...

Unknown சொன்னது…

நடத்துங்க...நடத்துங்க...

பொன் மாலை பொழுது சொன்னது…

//மலர்கொள்ள வந்த தலைவா வா! மனம் கொள்ளவந்த இறைவா
வா!" பாடல் வரி காதில் விழுந்தது.
அது என்ன படம், பாட்டின் தலைப்பு என்ன
என்று விளங்காவிட்டாலும்,//

படம் பாத காணிக்கை, பீம் சிங் டைரக்ட் செய்த அருமையான படங்களில் ஒன்று.
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா
ஜெமினி, விஜய குமாரி இவர்களின் காதல் கனவு பாட்டு.
நல்ல படம். பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

ரைட்டு! :)
//Chitra கூறியது...
இந்த பதிவை தூக்கத்திலேயே டைப் பண்ணலியே...//
ஹி ஹி.. அதே டவுட்டு தான் எனக்கும். :)

Asiya Omar சொன்னது…

100-பதிவுன்னு ஒரு முன்னோட்டம்,அதுக்கு பின்ன ஒரு பின்னூட்டம் போட வேண்டாமா?

Jaleela Kamal சொன்னது…

அரசியல் பக்கம் நமக்கு வேணாம் இன்னும் இது போல் எத்தனை முகர்ஜிகள் இருக்கிறார்களோ
புர்ஜ் கலீபா இது வரை கிழே நின்னு தண்ணீ டான்ஸ் ஆடுரத தான் பார்த்து வரோம், இன்னும் மேலே போக.

அங்கு டீ காபி ஃபிரியா, அதான் எண்ட்ரண்ஸ்க்கு காசு வாங்கிடுராஙக் அத சொல்றீங்கலா

கஞ்சு பராக்கு ஹிஹிஹி புது பெயர், நானும் முதலில் பான் பராக்கோன்னு நினைத்தேன்.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
குடியரசு தினம் அன்று 100 வது பதிவு\

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னத்த சொல்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கஞ்சுபராக்கு இல்ல அது கஞ்சிபராக்குன்னு நெனைக்கிறேன், ராமநாதபுரத்து வட்டார வழக்குச் சொல் அது. கஞ்சி போட்டு யூஸ் பண்ணும் ஃப்ராக்னு அர்த்தம் வருமோ என்னவோ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கக்கு - மாணிக்கம் கூறியது...
//மலர்கொள்ள வந்த தலைவா வா! மனம் கொள்ளவந்த இறைவா
வா!" பாடல் வரி காதில் விழுந்தது.
அது என்ன படம், பாட்டின் தலைப்பு என்ன
என்று விளங்காவிட்டாலும்,//

படம் பாத காணிக்கை, பீம் சிங் டைரக்ட் செய்த அருமையான படங்களில் ஒன்று.
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா
ஜெமினி, விஜய குமாரி இவர்களின் காதல் கனவு பாட்டு.
நல்ல படம். பாருங்கள்./////

கேப் பாத்து அடிக்கிறீங்களேண்ணே..... ஹி...ஹி...!

ஹுஸைனம்மா சொன்னது…

/இனி நாமும் அரசியல் பேச ஆரம்பிக்கணும்ங்க!! .... நீங்களே சொல்லுங்க!! அவ்வ்வ்வ்....!!! //

ஹாஆஆஆவ்வ்வ்வ்... கொட்டாவிதான் வருது, அரசியலை நினைச்சா!!

//ஏன் இதைதுபாய், ஷார்ஜா, அல் அய்ன் பதிவர்-
களெல்லாம் கண்டுக்கவே மட்டேங்கிரங்க//

நல்லவேளை என்னைச் சொல்லலை; நான் அபுதாபிப் பதிவர்!!

(ஆமா, அது என்னா ‘மட்டேங்கிரங்க’? - இது எந்த ஊர் பாஷைங்கோ?)

//பதிவுல போட்டு கிழி
கிழி என்று கிழிக்க வேண்டியது தானே//

ஏன் நீங்க கிழிக்கிறதுதானே? கிழிச்சா, உங்களை நார் நாராக் கிழிச்சுடுவாய்ங்கன்னு தெரிஞ்சுதானே அடுத்தவங்களைத் தூண்டிவிடுறீங்க? அரசியல்வாதியாகுறதுக்கு முன்னோட்டமோ இது?

ஃபிரீயாக் கொடுக்குறான்னா பினாயிலைக் கூடக் குடிப்போமுன்னு எத நீட்டுனாலும் வாங்கிகிட்டு, காசு கேட்டா கிழிக்கணுமாக்கும்?

//கொஞ்சம் லூக்கா வைக்கலாமேன்னு//
லூக்கா???!!!!! இது என்னா மொழிங்கோ?

:-)))))))))))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>இன்று நூறாவதுப் பதிவு எழுதப் போவதாக நினைத்து, தூங்கிக் கொண்டிருக்கும் போதே, விழித்துக் கொண்டிருப்பதாக ஒரு கனவு வந்ததுங்க!!

rajini pada ஓபனிங்க் மாதிரி செம கலக்கல்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>
டிஸ்கி : ஆமா மேலே வைத்திருக்கும் தலைப்புக்கும் நீங்க எழுதி
இருக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டு யாரும்
கமெண்ட்ஸ் போட்டுடாதீங்க!! இது வெறும் முன்னோட்டம்னு
பேரு வைக்காம கொஞ்சம் லூக்கா வைக்கலாமேன்னு தான்!!


edhuvum keekkalai எதுவுமே கேக்கலை ஹா ஹா ஹா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

// (பேச்சு பேச்சா இருக்கும்
போது வன்முறை நோ..ப்ளீஸ்!!)//


எங்கே துபாய் ஷார்ஜா அபுதாபி அல்அலைன் பார்ட்டிகள் வந்து கும்முங்கைய்யா....

அரபுத்தமிழன் சொன்னது…

இப்பத்தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள நூறு பதிவா ஆஆஆ...
பயப்படாதீங்க கண்ணுல்லாம் போட்டுற மாட்டேன் :)

இலங்கைத் தமிழர்கள் எப்போதும் அழகுத் தமிழல்லவா பேசுவார்கள்.
மாத்திரமல்ல அவர்கள் பேச்சில் மரியாதை இருக்கும்.

நீங்களும்தான் 'இல்லாக்காட்டி' என்று எழுதவும் செய்கிறீர். அது என்ன தமிழ் ?

(அப்பாடி பின்னாடி வந்து கும்முறவங்களுக்கு ஒரு க்ளூ கொடுத்தாச்சு :)

ஸாதிகா சொன்னது…

ஏங்க ..காபி ,ஜுஸ் குடிச்சதுகப்புறமாக 200 திர்ஹம் கலெக்ட் பண்ணுறாங்கன்னா பர்ஸில் காசே வச்சிக்காமல் இருந்தால்...மாவாட்ட சொல்லுவாங்களா?

ஆயிஷா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

கலக்கல்.பதிவு அருமை.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Menaga Sathia சொன்னது…

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

யாரெல்லாம் படிச்சிட்டு பின்னூட்டம் போடுறாங்கங்கிறதை கண்டுபிடிக்க இந்த டெக்னிக் உதவும் தல.

பாருங்க எத்தனை பேர் வாழ்த்து சொல்லியிருக்காங்க :)

நானும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விரைவில் சதம் அடிக்க வாழ்த்துகள்.

ஹேமா சொன்னது…

காதர்...100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க.

நடுவில இலங்கைத் தமிழையும் கலாய்ச்சிருக்கீங்க.நானும் சிரிச்சிட்டேன்.அவர் மட்டக்களப்புத் தமிழரா?ஈழத்திலும் வட்டார வழக்குத் தமிழில் மாற்றங்கள் இருக்கு.
சிலநேரங்களில் எங்களுக்கே புரியாமல் இருக்கும் !

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரியாஸ் கூறியது

// வடை வடை வடை...ஆஹா ஆஹா ஆஹா கலக்கல்.. நம்ம கடைப்பக்கமும் வந்து போறது//

வடை உங்களுக்கு தான் பாஸ்!! அவசியம் வர்றேன் ரியாஸ்!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// இந்த பதிவை தூக்கத்திலேயே டைப் பண்ணலியே....//

வாங்க டீச்சர். ஹி..ஹி.. கொஞ்சம் கொஞ்சம்.

நன்றி Chitra உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மாணவன் கூறியது...

// பதிவு அருமை நண்பரே,//

வாங்க மாணவன் சார்..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

//இப்படியும் ஒரு பதிவு தேத்தலாம்னு ஐடியா கொடுத்ததற்கு மிக்க நன்றி...//

வாங்க தல உங்களுக்கு தெரியாத ஐடியாவா??

நன்றி Philosophy Prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கலாநேசன் கூறியது...

// நடத்துங்க...நடத்துங்க...//

எப்பவும் இதுமாதிரி உங்க ஆசீர்வாதம் வேணும் தல!!

நன்றி கலாநேசன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

!@! கக்கு மாணிக்கம் கூறியது...

// படம் பாத காணிக்கை, பீம் சிங் டைரக்ட் செய்த அருமையான படங்களில் ஒன்று.பூஜைக்கு வந்த
மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா,,,ஜெமினி, விஜயகுமாரி இவர்களின் காதல் கனவு பாட்டு. நல்ல படம். பாருங்கள்.//

ஆஹா அண்ணே அசத்திட்டீங்க. இனி உங்களிடமே பழையப் பாட்டுக்கு நாங்கள் தஞ்சம். வாழ்க கக்கு சார். ஹா..ஹா..

நன்றி கக்கு மாணிக்கம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

//ரைட்டு! :) //Chitra கூறியது... இந்த பதிவை தூக்கத்திலேயே டைப் பண்ணலியே...//
ஹி ஹி.. அதே டவுட்டு தான் எனக்கும். :) //

தல ஹி...ஹி..அதே! அதே!!

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

// 100-பதிவுன்னு ஒரு முன்னோட்டம், அதுக்கு பின்ன ஒரு பின்னூட்டம் போட வேண்டாமா? //

ஆமா.. ஆமா... அவசியம் போடணும் டீச்சர்.

நன்றி asiya omar தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜலீலா கமால் கூறியது...

// அங்கு டீ காபி ஃபிரியா, அதான் எண்ட்ரண்ஸ்க்கு காசு வாங்கிடுராஙக் அத சொல்றீங்கலா//

இல்லை ஜலீலாக்கா அந்த கொடுமைய ஏன் கேட்கிறீங்க ஒரு காபிக்கே இருநூறு திர்ஹமாம். அதை தான் அப்படி காமெடியா சொன்னேன்!

// 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினம் அன்று 100 வது பதிவு//

பதிவில் நான் என் நூறாவது பதிவு என்றா சொன்னேன் ஜலீலாக்கா!! முன்னோட்டம் என்று தானே சொன்னேன். ஹா..ஹா..

நன்றி ஜலீலா கமால் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

// கஞ்சுபராக்கு இல்ல அது கஞ்சிபராக்குன்னு நெனைக்கிறேன், ராமநாதபுரத்து வட்டார வழக்குச் சொல் அது. கஞ்சி போட்டு யூஸ் பண்ணும் ஃப்ராக்னு அர்த்தம் வருமோ என்னவோ? //

அப்படியா தல, எனது ரொம்ப நாளைய தீராத சந்தேகத்தை தீர்த்த மாமணியே நீங்கள் வாழ்க ஹி..ஹி..

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

// கேப் பாத்து அடிக்கிறீங்க ளேண்ணே..... ஹி...ஹி...! //

இத யாரையும் டபுள் மீனிங்ல திட்டலையே பன்னி சார் ஹி..ஹி..

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுசைனம்மா கூறியது...

//ஏன் இதைதுபாய், ஷார்ஜா, அல் அய்ன் பதிவர்களெல்லாம் கண்டுக்கவே மட்டேங்கிரங்க//

// நல்லவேளை என்னைச் சொல்லலை;
நான் அபுதாபிப் பதிவர்!! //

இது என்ன வகையான எஸ்கேபிசம் ஹுசைனம்மா. அவைகள் அத்தனையும் UAE என்ற ஒரே குடையின் கீழே தானே வருது. அவ்வ்வ்வ்..!!

நன்றி ஹுசைனம்மா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுசைனம்மா கூறியது...

// (ஆமா, அது என்னா ‘ மட்டேங்கிரங்க’? - இது எந்த ஊர் பாஷைங்கோ?) //

//கொஞ்சம் லூக்கா வைக்கலா மேன்னு// //லூக்கா???!!!!இது என்னா மொழிங்கோ?//

அம்மாடி கொஞ்சம் குமுருறாங்கன்னு சொன்னவுடனே நீங்க இந்த குமுறு குமுறிட்டீங்களே ஹுசைனம்மா. நான் பாவம் இல்ல!! இருங்க diclomax தடவிக்கிட்டு வர்றேன். ஹி.. ஹி..

நன்றி ஹுசைனம்மா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

ஹுசைனம்மா கூறியது...

//பதிவுல போட்டு கிழி கிழி என்று கிழிக்க வேண்டியது தானே//

// ஏன் நீங்க கிழிக்கிறதுதானே? கிழிச்சா, உங்களை நார் நாராக் கிழிச்சுடுவாய்ங்கன்னு தெரிஞ்சுதானே அடுத்தவங்களைத் தூண்டிவிடுறீங்க? அரசியல்வாதியாகுறதுக்கு முன்னோட்டமோ இது?//

மீ அதுக்கு சூட்டபிள் ஏஜோ அனுபவமோ இல்ல ஹுசைனம்மா, அனுபவப் பதிவர்களுக்கு அதுக்குள்ள சூட்சுமமும், பக்குவமும் இருக்கும். அதான் அப்படி சொன்னேன். இது முன்னோட்டமில்லை - பொறுக்க முடியாத குமுறல்!!

நன்றி ஹுசைனம்மா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சி.பி.செந்தில்குமார் கூறியது...

//>>>>இன்று நூறாவதுப் பதிவு எழுதப் போவதாக நினைத்து, தூங்கிக் கொண்டிருக்கும் போதே, விழித்துக் கொண்டிருப்பதாக ஒரு கனவு வந்ததுங்க!!rajini pada ஓபனிங்க் மாதிரி செம கலக்கல்//

வாங்க தல, உங்கள மாதிரியுள்ள அனுபவப் பதிவர்களெல்லாம் இது மாதிரி அடிக்கடி வந்து உற்சாக டானிக் கொடுத்தால் சந்தோசம் ரெட்டிப்பாகும் தல!!

நன்றி சி.பி.செந்தில்குமார் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சி.பி.செந்தில்குமார் கூறியது...

// லூக்கா வைக்கலாமேன்னு தான்!!// // edhuvum keekkalai எதுவுமே கேக்கலை ஹா ஹா ஹா//

கொஞ்சம் spell, fall ஆயிடுச்சு ஹி..ஹி.. ரைட்டு.. சரி பண்ணிட்டேன் பாஸ்!!

நன்றி சி.பி.செந்தில்குமார் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

// (பேச்சு பேச்சா இருக்கும் போது வன்முறை நோ..ப்ளீஸ்!!)//

// எங்கே துபாய் ஷார்ஜா அபுதாபி அல்அலைன் பார்ட்டிகள் வந்து கும்முங்கைய்யா....//

என்னன்னா ஒரு கொலவெறி....!! ஹி..ஹி..

நன்றி மனோ உங்கள் வருகைக்கும் கருதுருரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அரபுத்தமிழன் கூறியது...

// இப்பத்தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள நூறு பதிவா ஆஆஆ...
பயப்படாதீங்க கண்ணுல்லாம் போட்டுற மாட்டேன் :)//

பதிவ படிச்சீங்களா...!!! (என்னா போங்க!!!!)

// நீங்களும்தான் 'இல்லாக்காட்டி' என்று எழுதவும் செய்கிறீர். அது என்ன தமிழ்?//

இது தான் எல்லோருடைய நிரந்தரத் தமிழ் தல!!

// (அப்பாடி பின்னாடி வந்து கும்முறவங்களுக்கு ஒரு க்ளூ கொடுத்தாச்சு :)//

நீங்களுமா..மா..மா...??? ஒரு குரூப்பா தான் கெலம்பி யிருக்காங்கய்யா..!!

நன்றி அரபுத்தமிழன் உங்கள் வருகைக்கும் கருதுருரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// ஏங்க ..காபி, ஜுஸ் குடிச்சதுகப்புறமாக 200 திர்ஹம் கலெக்ட் பண்ணுறாங்கன்னா பர்ஸில் காசே வச்சிக்காமல் இருந்தால்... மாவாட்ட சொல்லுவாங்களா?//

வெறும் காபிக்கி தான் அந்த 200 திர்ஹம், உள்ளே நுழையும் போதே புடுங்கிடுவாங்க...!! நான் சும்மா தமாசுக்காக அப்படி இடுகையில் எழுதினேன் சகோ.

நன்றி ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆயிஷா கூறியது...

// அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} கலக்கல். பதிவு அருமை.100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

வ அலைக்கும் சலாம் வாங்க சகோ, பதிவு இருக்கட்டும். நீங்க படிச்சீங்களா இல்லையான்னு தான் எனக்கு கலக்காமா இருக்கு!!

நன்றி ஆயிஷா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ S.Menaga கூறியது...

// 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! //

பதிவ படிச்சீங்களா மேனகா!! (:-o

நன்றி S.Menaga உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தோழி பிரஷா கூறியது...

// 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! //

பதிவ படிச்சீங்களா தோழி பிரஷா!! (:-o

நன்றி தோழி பிரஷா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// யாரெல்லாம் படிச்சிட்டு பின்னூட்டம் போடுறாங்கங்கிறதை கண்டுபிடிக்க இந்த டெக்னிக் உதவும் தல.பாருங்க எத்தனை பேர் வாழ்த்து சொல்லியிருக்காங்க:)//

வாங்க தல கவனிச்சிட்டீங்களே!! என்னத்த சொல்றது!!

//நானும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விரைவில் சதம் அடிக்க வாழ்த்துகள்.//

ம்ம்ம் Thanks அக்பர், உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹேமா கூறியது...

// காதர்...100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க//

இது 100 ஆவது பதிவல்ல ஹேமா!!

//நடுவில இலங்கைத் தமிழையும் கலாய்ச்சிருக்கீங்க.நானும் சிரிச்சிட்டேன்.அவர் மட்டக்களப்புத் தமிழரா? ஈழத்திலும் வட்டார வழக்குத் தமிழில் மாற்றங்கள் இருக்கு.
சிலநேரங்களில் எங்களுக்கே புரியாமல் இருக்கும்!//

ஆமா கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க. அவர் மொரட்டுவ தமிழர்!!

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.