facebook

திங்கள், மார்ச் 14, 2011

படிக்க வந்த மாணவர்கள்!!


படிக்க வந்த மாணவர்கள்!!


“தேவதை வரும் நேரம்” எழுதிக் கொண்டிருக்கும் போது அந்த
உருவம் நிழலாடியது என்று நான் முடித்திருந்தேன்.

நான் ஜாமியா மதரசாவில் குரான் ஓதப் போய்க் கொண்டிருக்கிற காலத்தில், அங்குள்ள ஹஜரத் (பேரா-விரிவுரையாளர்) குரான்
ஓதிக் (படித்துக்) கொடுக்கும் அழகையும், அவர் சொல்லிக்
கொடுக்கிற விளக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெளியூர்களில் இருந்து நிறைய மாணவர்கள்
படிக்க வருவார்கள். அப்படி போய்க் கொண்டிருந்த ஒரு காலக்
கட்டத்தில் தான் அந்த செய்தியை எங்களுக்குச் சொன்னார்கள்.

கொஞ்சம் தைரியமில்லாதவர்கள் மேற்கொண்டு படிக்காமல்
இப்படியே அங்கிட்டுப் போய் இன்ட்லி மற்றும் தமிழ்மணத்திலும்
ஒட்டு போட்டு விட்டு அவசியம் பின்னூட்டமும் எழுதிவிட்டு
தைரியமாக செல்லும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ஸ்ரீலங்காவில் இருந்து இரண்டு மாணவர்கள் அவரிடம் பாடம்
கற்றுக் கொள்ள வந்து சேர்ந்து, ஹாஸ்டலிலும் இடம் கேட்டு
வாங்கி தங்கி இருக்கிறார்கள். அந்த ரூமில் மொத்தம் இவர்களல்-
லாமல் மேலும் மூன்று பேர் ஆக மொத்தம் ஐந்து பேர்.

அந்த மூவரும் மற்ற நண்பர்களோடு சேர்ந்து சிரித்துப் பேசி
விளையாடி மகிழ்வதும் கும்மாளமடிப்பதுமாய் இருந்தாலும்,
அந்த ஸ்ரீலங்கா நண்பர்கள் மட்டும் தனித்தே போவதும்
வருவதுமாய் இருந்த- தோடல்லாமல், மற்ற மூவரோடும்
சேர்ந்து வெளிய தெருவே கூட போவதில்லை. இது
மற்றவர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்திருக்கிறது!!

ஒரு விடுமுறை நாளில் அந்த மூவரும் பக்கத்தில் இருக்கிற தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டு
கிளம்பி போய் இருக்கிறார்கள். மாலை முதல் ஷோ பார்த்து
விட்டு ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ரூமுக்கு
திரும்பி வர இரவு பதினோரு மணியாகி விட்டது.

அந்த இரண்டு இலங்கை மாணவர்களும் மற்ற நண்பர்கள்
சினிமாவுக்கு போன போதும் அவர்களோடு இவர்கள்
போகாமல் வேறெங்கோ போய்விட்டு, அவர்கள் எல்லோரும்
ரூமுக்கு திரும்பி வந்து படுத்துறங்கிய பின் தான் வந்திருக்-
கிறார்கள்.

சப்தமில்லாமல் லைட்டைப் போட்டு இவர்கள் டிரஸ் மாற்றிக்
கொண்டு, பாத்ரூம் போய்விட்டு அலைந்து விட்டு வந்த அசதியில் கலைத்து போய் படுத்து விட்டார்கள். படுத்தப் பிறகு தான் தெரிந்தது லைட்டை அணைக்காமல் படுத்து விட்டோமே என்று!

மற்ற நண்பர் "ஸ்ஸ்ஸ்...லைட்டை ஆஃப் பண்ணுடா" என்று
ஹஸ்கியாய் இவரிடம் சொல்லவும், இவரும் கையை நீட்டி-
யிருக்கிறார். சுவரில் இருந்த சுவிட்ச் கைக்கு எட்டவில்லை.
எழுந்திருக்க அலுப்பு பட்டுக்கொண்டு நீட்டிய கையை இன்னும்
கொஞ்சம் நீளமாய் நீட்ட, அது நீண்டு கொண்டே போய் சுவிட்ச்
ஆஃப் செய்திருக்கிறது.

இந்தக் காட்சியை, மூவரில் ஒருவர் தூக்கம் வராமல் புரண்டு
படுத்துக் கொண்டிருக்கும் போது பார்த்து விட, பதறிப் போய்
சப்தம் போடாமல் வாயை மூடிக் கொண்டு திக்பிரமையாகிப்
போய், மற்ற இருவரிடம் விடிந்ததும் விஷயத்தை சொல்ல,
பிறகு ஹஜரத்திடம் சென்று முறையிட்டிருக்கிறார்கள்.

ஹஜரத்துக்கு வந்திருப்பவர்கள் இருவரும் யாரென்ற உண்மை
விளங்கி விட்டது. 'ஜின்கள்' என்ற என்ற படைப்புகள்தான் அவை!

(“ஜின்களும் இறைவனுடைய படைப்புகள்தான். நெருப்பாலோ
ஒளியாலோ படைக்கப்பட்டவர்கள். எந்த ரூபத்திலும் வருவார்கள்.
அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு.)

ஹஜரத் அ(வை) (வர்)களை   அழைத்து வரச்சொல்லி....

"நீங்கள் எதற்கு இங்கே வந்தீர்கள்"

"நீங்கள் ஓதும் அழகையும், அதற்கு இலகுவாக சொல்லும்
விளக்கங்- களையும் பலர் சொல்லக் கேட்டு தான் நாங்களும்
இங்கு வந்து சேர்ந்தோம்"

"அப்படியானால் மாணவர்கள் பயிலும் இடங்களுக்கு நீங்கள்
வந்து தொந்தரவு செய்ய வேணாம் நீங்கள் இங்கிருந்து போய்
விடுங்கள்" என்று ஹஜரத் சொல்ல, அவைகள் சென்று விட்டதாக சொன்னார்கள்!!

43 கருத்துகள்:

Anisha Yunus சொன்னது…

//ஒரு விடுமுறை நாளில் அந்த மூவரும் பக்கத்தில் இருக்கிற தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டு
கிளம்பி போய் இருக்கிறார்கள். மாலை முதல் ஷோ பார்த்து
விட்டு ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ரூமுக்கு
திரும்பி வர இரவு பதினோரு மணியாகி விட்டது.//

குர்’ஆன் படிக்க வந்துட்டு படிக்காம தியேட்டர் போனால் இப்படித்தேன். அடுத்த தடவை படத்துக்கு பதிலா அவிங்க ஷோ போட சொல்றேன். :))

’டெர்ரர் பதிவு’ன்னு லேபிள் போடலிய்யா??

Anisha Yunus சொன்னது…

//அவர்களை வசியம்
கூட செய்து, நம்மால் முடியாத வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று சொல்வார்கள்.//

மன்னிக்கவும். இது தவறான தகவல்.அவர்களை நாம் வசியம் செய்வதும், நம்மை அவர்கள் வசப்படுத்துவதும், இரண்டுமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. ஹறாம். தயவு செய்து இந்த வரியை நீக்கி விடவும்.

Anisha Yunus சொன்னது…

சிலர் மேலே கூறிய செயலை இரண்டு தரப்பிலும் செய்கிறார்கள் என்பது வருத்தமளிக்கும் உண்மையே. இருந்தும் அது அனுமதிக்கப்பட்டதில்லை. :((

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ஜின்களை வசியப்படுத்தும் கலை சுலைமான் நபியோடு முடிந்து விட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன புது கதை

Asiya Omar சொன்னது…

புரியுது ஆனா புரியலை...

Unknown சொன்னது…

எனக்கு இதெல்லாம் தெரியாது.. பகிர்வுக்கு நன்றிங்க.. :-)

Mohamed Faaique சொன்னது…

நம்ம நாட்டுக்கு வருகின்ற ஜின் எல்லமே இந்தியால இருந்து வாரதா சொல்லிடு வருதுங்க........
என்னங்க நடக்குது...
///அவர்களை நாம் வசியம் செய்வதும், நம்மை அவர்கள் வசப்படுத்துவதும், இரண்டுமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. ஹறாம். தயவு செய்து இந்த வரியை நீக்கி விடவும்.///
இது புதுசா இருக்கு.....

ஸாதிகா சொன்னது…

படிக்கும் பொழுது நடுக்கமாகத்தான் உள்ளது.
இதனையும் படித்துப்பாருங்களேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனக்கு ஒன்னும் புரியலை....
ம்ம்ம் ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம்...

ஆயிஷா அபுல். சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
இதெல்லாம் மனிதனோட கட்டுக்கதை.

vanathy சொன்னது…

நாட்டாமை, பேய்க் கதையா??? நாஞ்சிலார் பயந்து பூய்ட்டார் போலிருக்கு. இதுக்குப் போய் எதுக்கு இலங்கை பசங்களை இழுத்தீங்க?????

Anisha Yunus சொன்னது…

//Mohamed Faaique கூறியது...
///அவர்களை நாம் வசியம் செய்வதும், நம்மை அவர்கள் வசப்படுத்துவதும், இரண்டுமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. ஹறாம். தயவு செய்து இந்த வரியை நீக்கி விடவும்.///
இது புதுசா இருக்கு.....//

சகோ ஃபாயிக். இதுதான் உண்மை. அவர்களை கட்டுப்படுத்துவதற்கு வழிமுறைகள் இருந்தாலும் அது நபி சுலைமான்(அலைஹ்) காலத்திற்கு பின் தடுக்கப் பட்டுவிட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸில் ஓரிடத்தில் அவர் ஒரு ஜின்னை பிடித்ததையும், அதை கட்டிப்போட்டு மக்கள் முன் காட்ட நினைக்கும்போது சுலைமான்(அலைஹ்) அவர்களின் மதிப்பை எண்ணி விட்டுவிட்டதையும் படிக்கலாம். இந்த தகவலை எனக்கு சொன்னது, சவுதியில் அல்-இமாம் முஹம்மது பல்கலைக்கழகத்தில் படித்து இங்கு பாடங்கள் பல எடுக்கின்ற ஷேக். வலீத் பஸ்யோனி அவர்கள். (http://almaghrib.org/instructors/waleed-basyouni#profile)

நன்றி.

Anisha Yunus சொன்னது…

//ஆயிஷா அபுல். கூறியது...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
இதெல்லாம் மனிதனோட கட்டுக்கதை.//

சகோ ஆயிஷா. ஜின்களை நம்புவது, ஈமானில் ஒரு பங்கு. அவர்கள் சொன்னது உண்மையாயிருந்தால், அப்படி நடக்க வாய்ப்பிருப்பதும் உண்மையே. ஜின்களைப் பற்றி வதந்திகளும் உண்டு, உண்மையும் உண்டு. அல்லாஹூ ஆலம். :)

Anisha Yunus சொன்னது…

வரியை நீக்கியதற்கு மிக மிக நன்றி பாய்.

:))

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அன்னு கூறியது...

// குர்’ஆன் படிக்க வந்துட்டு படிக்காம தியேட்டர் போனால் இப்படித்தேன். அடுத்த தடவை படத்துக்கு பதிலா அவிங்க ஷோ போட சொல்றேன். :)) ’டெர்ரர் பதிவு’ன்னு லேபிள் போடலிய்யா??//

வாங்க சகோ.அன்னு என்ன பண்ண சொல்றீங்க! பசங்க பெற்றோர்கள் கண் பார்வையில் இருந்து சற்று விலகினாலே இப்படி எல்லாம் ஆகி விடுகிறார்கள். என்ன சொல்வது?

’டெர்ரர் பதிவு’ன்னு பதிவுன்னு போட்டால் மக்கள்ஸ் பயந்து போயிடுவாங்கள்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அன்னு கூறியது

// சிலர் மேலே கூறிய செயலை இரண்டு தரப்பிலும் செய்கிறார்கள் என்பது வருத்தமளிக்கும் உண்மையே. இருந்தும் அது அனுமதிக்கப்பட்டதில்லை//

நிச்சயமாய் நீங்கள் சொல்வது மிகவும் சரி. அனுமத்திக்காத அந்த ஒற்றை வரி நீக்கப்பட்டு விட்டது.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ரஹீம் கஸாலி கூறியது...

// ஜின்களை வசியப்படுத்தும் கலை சுலைமான் நபியோடு முடிந்து விட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன புது கதை//

வாங்க ரஹீம். ஆமா அவர்கள் சொன்னதை அப்படியே எழுதிவிட்டேன். அனுமத்திக்காத அந்த ஒற்றை வரி நீக்கப்பட்டு விட்டது.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ asiya omar கூறியது...

// புரியுது ஆனா புரியலை...//

வாங்க சகோ. ஹி..ஹி.. இப்படி இருந்தால் எல்லாமே புரியும்னு அர்த்தம்!

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ பதிவுலகில் பாபு கூறியது...

எனக்கு இதெல்லாம் தெரியாது.. பகிர்வுக்கு நன்றிங்க.. :-)

வாங்க தம்பி. ஆமா இதெல்லாம்
'கண்ணுக்கு' தெரியாது தான். ஹா..ஹா..

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Mohamed Faaique கூறியது...

// நம்ம நாட்டுக்கு வருகின்ற ஜின் எல்லமே இந்தியால இருந்து வாரதா சொல்லிடு வருதுங்க என்னங்க நடக்குது...இது புதுசா இருக்கு.....//

வாங்க தம்பி. என்னாங்க இந்தியால இருந்து ஜின்னு வருதா? நீங்களும் சொல்வது புதுசா தான் இருக்கு!! நீங்க சொன்ன வரிகளை நீக்கியாச்சு.

நன்றி Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஸாதிகா கூறியது...

// படிக்கும் பொழுது நடுக்கமாகத்தான் உள்ளது.//

என்று சொல்லிவிட்டு நீங்க கொடுத்த லிங்கும் ரொம்ப டெர்ர ராவுல இருக்கு அக்கா.

நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஜெய்லானி சொன்னது…

ங்கொக்கா மக்கா ,போன பதிவுல நாகூர் பிஸாது கிளப் பத்தி போடும் போதே நினைச்சேன்...கண்டிப்பா அடுத்த பதிவு இதாதான் இருக்குமுன்னு ..ஹா..ஹா...

ஜெய்லானி சொன்னது…

//இதுக்குப் போய் எதுக்கு இலங்கை பசங்களை இழுத்தீங்க?????//

வான்ஸ் வேனுமின்னா சொல்லுங்க என் கிட்ட ஒரு சாட்டை இருக்கு.. பிச்சுபிடலாம் பிச்சு ...!! :-))

ஜெய்லானி சொன்னது…

///அவர்களை வசியம்
கூட செய்து, நம்மால் முடியாத வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று சொல்வார்கள்.//

நல்ல வேளை நா பாக்குறதுக்கு முன்னே இந்த லைன் இல்ல ..அதனால மன்னிச்சி விட்டுறேன்..!!

யார் யாரையும் வசியம் பண்ன முடியாது..இதான் உண்மை.. கோடியில் ஒரு சிலருக்கு பார்க்க முடியும் ..பேசுவதை உணரமுடியும்...அது இறைவன் கொடுத்த வரம் .அதுக்காக வசியம் எனபது யானையை பானையில் அடைக்கும் கதை முடியுமா?????

Mohamed Faaique சொன்னது…

@ சகோதரி அன்னு ///இந்த தகவலை எனக்கு சொன்னது, சவுதியில் அல்-இமாம் முஹம்மது பல்கலைக்கழகத்தில் படித்து இங்கு பாடங்கள் பல எடுக்கின்ற ஷேக். வலீத் பஸ்யோனி அவர்கள். (http://almaghrib.org/instructors/waleed-basyouni#profile)////

இந்த சம்பவம் உண்மைதான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததாக நினைக்கவில்லை. அவைகளை வசியம் செய்வது என்றில்லை.அவைகளை நன்பர்களாக்கி மருத்துவம் கூட செய்கிறார்கள். இதை வைத்து நாம் சண்டை இடுவதை விட உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது மேல்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ MANO நாஞ்சில் மனோ சொன்னது…

// எனக்கு ஒன்னும் புரியலை.... ம்ம்ம் ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம்... //

வாங்க தல ஒன்னும் பயமில்ல! அதான் 'வணக்கம்' வச்சுட்டீங்கள்ள. 'ஜின்'னு ஒன்னும் செய்யாது எல்லாம் சரியாய்டும். ஹா..ஹா..

நன்றி MANO நாஞ்சில் மனோ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஆயிஷா அபுல். கூறியது...

//அஸ்ஸலாமு அழைக்கும் சகோ இதெல்லாம் மனிதனோட கட்டுக் கதை.//

@அன்னு கூறியது...

சகோ ஆயிஷா. ஜின்களை நம்புவது, ஈமானில் ஒரு பங்கு. அவர்கள் சொன்னது உண்மையாயிருந்தால், அப்படி நடக்க வாய்ப்பிருப்பதும் உண்மையே. ஜின்களைப் பற்றி வதந்திகளும் உண்டு, உண்மையும் உண்டு. அல்லாஹூ ஆலம்.

நன்றி ஆயிஷா அபுல் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

// நாட்டாமை, பேய்க் கதையா??? நாஞ்சிலார் பயந்து பூய்ட்டார் போலிருக்கு. இதுக்குப் போய் எதுக்கு இலங்கை பசங்களை இழுத்தீங்க?????//

வாங்க வான்ஸ். அவராவது பயப்படுறதாவது? சும்மா பாவ்லா காட்டுறார். இலங்கை நண்பர்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். ஆனாலும் தெரிந்த மாதிரி காட்டிக்க மாட்டாங்க.

நன்றி வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//இதுக்குப் போய் எதுக்கு இலங்கை பசங்களை இழுத்தீங்க?????//

// வான்ஸ் வேனுமின்னா சொல்
லுங்க என் கிட்ட ஒரு சாட்டை இருக்கு.. பிச்சுபிடலாம் பிச்சு ...!! :-)) //

எதை சாட்டையையா?????? அவ்வ்வ்வவ்...!!

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// ங்கொக்கா மக்கா, போன பதிவுல நாகூர் பிஸாது கிளப் பத்தி போடும் போதே நினைச்சேன்...கண்டிப்பா அடுத்த பதிவு இதாதான் இருக்குமுன்னு ..ஹா..ஹா...//

வாங்க பரங்கிபேட்டை அவ்லியாவே! உங்க 'ஞான' திருஷ்டியை என்ன வென்பேன் க்கி..க்கி..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// யார் யாரையும் வசியம் பண்ன முடியாது.. இதான் உண்மை.. கோடியில் ஒரு சிலருக்கு பார்க்க முடியும்.. பேசுவதை உணர முடியும்... அது இறைவன் கொடுத்த வரம். அதுக்காக வசியம் எனபது யானையை பானையில் அடைக்கும் கதை முடியுமா?????//

ஆமா, அந்த கோடியில் ஒருவர் தானென்று சொல்லிக் கொண்டு சில பேர் பலரை ஹம்பக் செய்து அவர்களின் பணத்தை சுவாகா பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆகவே
"இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் இந்த மாதிரி, ஏமாற்று பேர்வழிகளை இனியும் நம்பாதிங்க!" (என்று சொல்லிடலாமா தல!)

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பாஸூ பதிவு களைகட்டுது போல...

நல்ல விவாதங்கள் பின்னூட்டத்தின் வாயிலாக.

ஆனால் இது போன்ற சம்பவங்களை சொல்பவர் வேறு ஒருவர் பார்த்ததாகத்தான் சொல்கிறாரே ஒழிய தான் பார்த்ததாக சொன்னதே இல்லை. நீங்கள் உங்களிடம் சொன்னவர் உட்பட...

சிறுவயதில் இருந்து இன்று சொன்ன சம்பவம் வரை சொன்னவர் நேரில் பார்த்ததாக சொன்னேதேயில்லை.

ஜெய்லானி சொன்னது…

//சிறுவயதில் இருந்து இன்று சொன்ன சம்பவம் வரை சொன்னவர் நேரில் பார்த்ததாக சொன்னேதேயில்லை.//

அக்பர் தங்கிட்டு போக எங்க வீட்டுக்கு ஒரு நாள் வாங்களேன்..!! :-)))))

எம் அப்துல் காதர் சொன்னது…

அனீஸ்! உரிமையாய் வந்து எல்லோர் பின்னூட்டத்துக்கும் கருத்தும் சொல்லி, எனது பாதி வேலை பளுவை குறைத்து விட்டீர்கள். ஆபீசில் ப்ளாக்கர் லைன ப்ளாக் பண்ணிட்டாங்க! வீட்டுக்கு நேரம் கழித்து வந்து என்னால் யாருக்கும் அதிகமாய் வந்து பின்னூட்டமிட முடியவில்லை! மிக்க நன்றி!!

மதுரை சரவணன் சொன்னது…

ahlaam alikkum..puriyavillai..iruppinum silavisayangkalai theriya paduththiyamaikku vaalththukkal

மதுரை சரவணன் சொன்னது…

ahlaam alikkum..puriyavillai..iruppinum silavisayangkalai theriya paduththiyamaikku vaalththukkal

ஹுஸைனம்மா சொன்னது…

இதென்ன திகில் கதை தொடர் பதிவு சீஸனா? இதைப் போல அரபுத் தமிழனும் ஒரு திகில் கதை எழுதிருக்காரே!!

அப்புறம் , இந்தக் “கை நீளும் கதையை” ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் முன்னாடியே படிச்ச ஞாபகம். அப்படின்னா எல்லா இடத்திலயும், ரொம்ப காலமா இந்தக் கதை உலா வருது போல!! :-)))

Anisha Yunus சொன்னது…

//இந்த சம்பவம் உண்மைதான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததாக நினைக்கவில்லை. அவைகளை வசியம் செய்வது என்றில்லை.அவைகளை நன்பர்களாக்கி மருத்துவம் கூட செய்கிறார்கள். இதை வைத்து நாம் சண்டை இடுவதை விட உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது மேல். //

ஃபாயிக் பாய், ஷேக். வலீத் பஸ்யோனி, ஒரு இமாம். ரியாதில் முஹம்மது பல்கலைக்கழகத்தில் இந்த துறையை ஸ்பெஷலாக எடுத்து படித்தவர். சிலரை exorcismஇல் இருந்து காப்பாற்றியும் இருக்கிறார். அவரின் இதைப்பற்றிய வகுப்புகள் இங்கே ரொம்ப பிரசித்தம். :)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் சொன்னது…

// சிறுவயதில் இருந்து இன்று சொன்ன சம்பவம் வரை சொன்னவர் நேரில் பார்த்ததாக சொன்னேதே யில்லை//

உண்மை தான் அக்பர். நீங்க சின்ன புள்ளையா இருந்தாலும் கருத்தா பேசி விடுகிறீர்கள். ஹி..ஹி..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி சொன்னது…

// அக்பர் தங்கிட்டு போக எங்க வீட்டுக்கு ஒரு நாள் வாங்களேன்..!! :-)))))//

எதுக்கு????????????? சின்னப் புள்ளங்கள இப்படி எல்லாம் பயங்கட்டாதீங்க பாஸ் ஹி..ஹி..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...

// ahlaam alikkum..puriyavillai
..iruppinum silavisayangkalai theriya paduththiyamaikku வாழ்த்துக்கள்//

வாங்க பாஸ், எங்க ரொம்ப நாளா நம்ம கடை பக்கம் ஆளே காணோம்.

நன்றி மதுரை சரவணன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

// அப்புறம் , இந்தக் “கை நீளும் கதையை” ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் முன்னாடியே படிச்ச ஞாபகம். அப்படின்னா எல்லா இடத்திலயும், ரொம்ப காலமா இந்தக் கதை உலா வருது போல!! :-))) //

உங்களுக்கும் ரொம்ப நாளா தெரிந்த கதை தானா?? நான் ஏதோ புதுசா இருக்கேன்னு எனக்கு நானே நெனச்சுக்கிட்டேன்:-)))))))

நன்றி ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

// ஃபாயிக் பாய், ஷேக். வலீத் பஸ்யோனி, ஒரு இமாம். ரியாதில் முஹம்மது பல்கலைக்கழகத்தில் இந்த துறையை ஸ்பெஷலாக எடுத்து படித்தவர். சிலரை exorcismஇல் இருந்து காப்பாற்றியும் இருக்கிறார். அவரின் இதைப்பற்றிய வகுப்புகள் இங்கே ரொம்ப பிரசித்தம். :) //

நீங்க கொடுத்த லிங்கில் நானும் பார்த்தேன். இங்கும் கேள்விப் பட்டிருக்கிறேன். சரியான தகவல் தான் சகோ.

நன்றி அன்னு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.