facebook

வியாழன், செப்டம்பர் 16, 2010

மனிதர்களை அறிந்துக் கொள்ளும் தருணம் எது??




மனிதர்களை அறிந்துக் கொள்ளும் தருணம் எது?? 

விடுமுறை முடிந்து "ஆப்பீஸ்"  திறந்தாச்சுங்க.  கூட்டமோ கூட்டம் அள்ளுதுங்க. விடுமுறை நாளில் வாங்கி வைத்திருந்த சம்பளங்களை சேர்த்து கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக் கிறார்கள். மூச்சு முட்டுதுங்க. எங்களுக்கு முதலாளிகள் ஓனர்கள் அல்ல. கஸ்டமர்கள் தான்.

எப்படீன்னா நாங்க CUSTOMER SUPPORT என்று அவர்களுக்காக வேலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும், அந்த கஸ்டமர்கள் நமக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க. நம்மிடமே வந்து  நம்மைப் பற்றி கம்ப்ளைண்ட்   சொல்லிக் கொண்டு தானிருப்பார்கள். எப்படீன்னா அவர்களே எங்களிடம் வந்து சத்தம் போடுவார்கள், அழுவார்கள், அடம் பிடிப்பார்கள். அது   ஒரு   தனி  ரகம்.

சில நேரங்களில் நம் கண்கள் "மானிட்டரில்" இருக்கும் போது, வரிசையில் சில தெரிந்தவர்கள் நிற்பார்கள். அது நமக்கு தெரிய வாய்ப்பில்லை தானே. அந்த சமயம் நிமிர்ந்து பார்க்கக் கூட நொடிப் பொழுது கிடைக்காது. அப்படி ஒரு கூட்டம் வந்து அப்புகின்ற நேரமாக இருக்கும். அப்ப அவர்கள் கியூவில்  நம் கிட்ட வந்து "நாங்க வந்ததைக் கூட கவனிக்காமல் இருக்கீங்களே?? " என்று குறை சொல்வார்கள். இதற்கு நாம் என்ன பதில்சொல்வது??.

இப்படி இவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒரு கஸ்டமரின் கார்டு கவனப் பிசகாக,  இன்னொரு கஸ்டமரின் கார்டு நம்பருக்கு மாற்றி அடிக்கப்பட்டு, தமிழ்  நாட்டுக்கு  போக   வேண்டியது,  ஜார்கண்டுக்கு போய் விடும். இது   மாதிரி சில  சமயங்களில்  நடந்திருக்கு.  கடைசியில் நாம் தான் கப்பம் கட்ட வேண்டி வரும்.  நம்மை இப்படி தான் புரிந்துக் கொள்கிறார்கள். நம் எதிராளிகள். அதாவது நம் எதிரே நிற்பவர்கள். நம்மிடம் அன்னியோன்யமாய் பழகியவர்கள். (இப்படி தானேங்க சொல்லணும்..!)

கவுண்டரில் எவ்வளவு நேரம் தான் சிரித்த முகமா உட்கார்ந்து இருப்பது. நாமும்  மனிதர்கள்  தானே. நாமென்ன பொம்மைகளா? அல்லது  ஊர்வலம் போகும் மாப்பிள்ளை மார்களா?? (இதைச் சொன்னால் சில பெரியதலைகள் என்னை அடிக்க வரும் ஹி..ஹி) சில  நேரங்களில்  கண் திருஷ்டி பட்ட மாதிரி நம்மைப் பற்றி நன்கு அறிந்தவர்கலே கூட நொடிப் பொழுதில் நம்மை சூடேற்றி விட்டு சென்று விடுவார்கள்டென்ஷனாகிப்  போவோம்அதற்கெல்லாம் அசைந்துக் கொடுத்தால் இங்கே வேலைக்காவாது என்று இப்பல்லாம் ஒரு புன்னைகையோடு...!! .

சில நேரங்களில் அது சுவாரஸ்யமாகக் கூட இருக்கும். ரசிக்கும் மனசு இருப்பவர்களுக்கு மட்டும்அதை  நான் ரசித்துக் கொண்டு தானிருப்பேன்ஏன்னா அது எனக்கு பழகிப் போச்சுங்க!!  ரசிச்சு பழகிட்டா டென்ஷன் ஃ ப்ரீயல்லவா??

18 கருத்துகள்:

நாடோடி சொன்னது…

நீங்க‌ள் சொல்வ‌து உண்மைதான்.. வேலையின் க‌வ‌ன‌த்தில் சில‌ ந‌ட்புக‌ள் ந‌ம்மை த‌வ‌றாக‌ நினைக்க‌ வாய்ப்பு உண்டு.. அவ‌ர்க‌ள் சொல்வ‌தை கேட்டு சிரித்து கொள்வ‌தை விட‌ என்ன‌ செய்ய‌முடியும் :)

Chitra சொன்னது…

ரசிச்சு பழகிட்டா டென்ஷன் ஃ ப்ரீயல்லவா??

....true...true... absolutely true!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சரியாச் சொல்லிருக்கீங்க அப்துல் காதர்.. சில சமயங்கள் நாம் அவர்களை கண்டுக்காமத்தான் இருக்கவேண்டிய சூழ்நிலை.. ஆனால் நம் சூழ்நிலை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.. என்ன செய்ய.. அவர்கள் அப்படித்தான்..

ஸாதிகா சொன்னது…

//ரசிச்சு பழகிட்டா டென்ஷன் ஃ ப்ரீயல்லவா??// 10 சதவிகிதம் சரி.

அலைகள் பாலா சொன்னது…

அது என்னங்க 10 சதவிகிதம்? மீதி 90

:(

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///கவுண்டரில் எவ்வளவு நேரம் தான் சிரித்த முகமா உட்கார்ந்து இருப்பது/////

அதானே.. எம்புட்டு நேரம் தான் வலிக்காத மாதிரியே...நடிக்கிறது..!!
நல்லா இருக்குங்க..

ராஜவம்சம் சொன்னது…

சரியா சொன்னிங்க வாடிக்கையாளர்களை
நேரடியா அனுகும்போது இன்னும் பல பிரச்சனை இருக்கு.

//ஒரு கஸ்டமரின் கார்டு கவனப் பிசகாக, இன்னொரு கஸ்டமரின் கார்டு நம்பருக்கு மாற்றி அடிக்கப்பட்டு,//

மனசுல பதியிரமாதிரி எங்கிட்ட ஒரு a/c நம்பர் இருக்கு மெயில்ல அனுப்பவா!

vanathy சொன்னது…

நல்லா இருக்கு, நாட்டாமை. இப்பெல்லாம் கருத்து கந்தசாமி போல ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மெஸேஜ் சொல்றீங்க!

Unknown சொன்னது…

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க..

உண்மைதாங்க.. சில சூழ்நிலைகள்ல நம்ம நண்பர்களே நம்ம வேலைகளைப் புரிஞ்சுக்காம கோவிச்சுக்கறாங்கதான்.. :(

எம் அப்துல் காதர் சொன்னது…

*** நாடோடி கூறியது...

//வேலையின் க‌வ‌ன‌த்தில் சில‌ ந‌ட்புக‌ள் ந‌ம்மை த‌வ‌றாக‌ நினைக்க‌ வாய்ப்பு உண்டு.. அவ‌ர்க‌ள் சொல்வ‌தை கேட்டு சிரித்து கொள்வ‌தை விட‌ என்ன‌ செய்ய‌முடியும் :)//

நீங்க‌ள் சொல்வ‌து உண்மைதான் ஸ்டீபன். நிறைய நேரங்களில் அவர்கள் புரிந்து கொள்ளுதலும், நாம் விளக்கம் சொல்லக் கூடிய வாய்ப்புகளும் மிகக் குறைவே.

ஸ்டீபன் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

*** Chitra கூறியது...

// ரசிச்சு பழகிட்டா டென்ஷன் ஃ ப்ரீயல்லவா?? //

..true...true... absolutely true!

ஆமா நானும் அதுவே ரிப்பீட்ட்டுடு...

சித்ரா உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

*** Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// சில சமயங்கள் நாம் அவர்களை கண்டுக்காமத்தான் இருக்கவேண்டிய சூழ்நிலை.. ஆனால் நம் சூழ்நிலை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.. என்ன செய்ய.. அவர்கள் அப்படித்தான்..//

அப்படியும் விட்டு விட முடிய வில்லையே!

Starjan (ஸ்டார்ஜன்) உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@@ ஸாதிகா கூறியது...

//ரசிச்சு பழகிட்டா டென்ஷன் ஃ ப்ரீயல்லவா??//

10 சதவிகிதம் சரி.

உங்கள் அனுபவத்தில் அப்படி என்றால் நானென்ன சொல்ல ஸாதிகாக்கா ஹி.. ஹி..

ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@@ அலைகள் பாலா கூறியது...

// அது என்னங்க 10 சதவிகிதம்? மீதி 90 :( //

அதானே !!!!

அலைகள் பாலா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@@ Ananthi கூறியது...

///கவுண்டரில் எவ்வளவு நேரம் தான் சிரித்த முகமா உட்கார்ந்து இருப்பது///

//அதானே.. எம்புட்டு நேரம் தான் வலிக்காத மாதிரியே..நடிக்கிறது.!!//

உண்மைய இப்படியா பப்ளிக்ல. எப்படி இப்புடி ஆனந்தி!! ஹி..ஹி.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@@ ராஜவம்சம் கூறியது...

//ஒரு கஸ்டமரின் கார்டு கவனப் பிசகாக, இன்னொரு கஸ்டமரின் கார்டு நம்பருக்கு மாற்றி அடிக்கப்பட்டு,//

((மனசுல பதியிரமாதிரி எங்கிட்ட ஒரு a/c நம்பர் இருக்கு மெயில்ல அனுப்பவா!))

என்ன டபுள் ஜீரோ டபுள் ஜீரோ; ட்ரிபுள் ஜீரோ ட்ரிபுள் ஜீரோ வா பாஸ்!! ஹி.. ஹி.. அதென்ன நீங்களே சொல்லுங்களேன் தல புண்ணியமா போகும்!!

ராஜவம்சம் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@@ vanathy கூறியது...

// நல்லா இருக்கு, நாட்டாமை. இப்பெல்லாம் கருத்து கந்தசாமி போல ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மெஸேஜ் சொல்றீங்க! //

ஹி..ஹி..வான்ஸ் வெளியே சொல்லிடாதீங்க!! இந்த சின்ன மனசு தாங்க மாட்டேங்குது.... அப்படியே வச்சுக்க தெரியல! எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்ளாமேன்னு தான்...!!

வானதி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@@ பதிவுலகில் பாபு கூறியது...

// உண்மைதாங்க.. சில சூழ்நிலைகள்ல நம்ம நண்பர்களே நம்ம வேலைகளைப் புரிஞ்சுக்காம கோவிச்சுக்கறாங்கதான்.. :( //

நண்பர்கள் என்றால் தலையில் தட்டி புரிய வச்சுடலாம் நோ probs; மற்றவங்க தான் irritating!!

பதிவுலகில் பாபு வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!