facebook

திங்கள், அக்டோபர் 04, 2010

சாடுதல் + ஜம்ப்பிங் !!

                                                                            
சாடுதல் + ஜம்ப்பிங் !!

நம்மில் நிறைய பேருக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு தூரத்து சொந்தத்தில், (ஒன்று விட்ட, ரெண்டு விட்ட, டூ விட்ட....!! அண்ணன்ஸ், தம்பிஸ், மாம்ஸ், மச்சான்ஸ், சித்தப்ஸ், பெரியப்ஸ்) என்று நிறைய பேர் இங்கு சவுதி வந்து சம்பளம், வேலை, தட்ப வெப்ப நிலை... இன்னும் பிற சூழ்நிலைகள் சரியில்லாமல், கம்பெனியை விட்டு, ஸ்பான்சரை விட்டு ( சாடி + ஜம்ப்பிங்) வெளியேறி இருக்கக்கூடும். அதெல்லாம் இங்கே சகஜம்ங்க.. என்று சொல்பவர்களுக்கெல்லாம் இந்த செய்தியை எடுத்து சொல்லி பகிர்ந்து கொள்ளுங்கள்.

எமது நண்பர் 'ஸ்டீபன்' தனது "நாடோடியின் பார்வையில்" சவுதியில் நம் மக்கள் படும் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதையும் படியுங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------

சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. செப்டம்பர் 25, 2010 முதல் மார்ச் 23, 2011 வரை 6 மாதங்களுக்கான கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டு ள்ளதாக சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி, “சவூதி பிரஸ் ஏஜென்ஸி” தெரிவிக்கின்றது

உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா போன்ற விசாக்களில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து, விசா காலாவதியான பிறகும், சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டினர், அருகிலுள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் (வாஃபிதீன்) பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறலாம் என அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

விசா காலாவதியாகியுள்ள வெளிநாட்டவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வெளியேற வேண்டும் என்றும், இந்த பொதுமன்னிப்பு காலக்கெடு முடிந்தும் வெளியேறாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். மேலும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்களும் கடுமையாக தண்டிக்கப் படுவதோடு, அபராதம், சிறை தண்டனை, வாகனங்கள் பறிமுதல் முதலிய நடவடிக்கைகளோடு, அவர்களது படங்களும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

செப்டம்பர் 23 ஆம் தேதி, சவூதி அரேபியாவின் தேசிய நாளை யொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில் சிறிய குற்றங்கள் செய்து சிறைச்சாலைகளில் வாடி வரும் சவூதி மற்றும் வெளிநாட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படுவர்.

ஏறக்குறைய 30 இலட்சம் வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதர வளைகுடா நாடுகள் சிலவற்றை பின்பற்றி சவூதி அரேபியாவும் இந்த பொது மன்னிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நன்றி : tntj .net                                             ரியாதிலிருந்து … ஃபெய்ஸல்
                                                                                       

21 கருத்துகள்:

vanathy சொன்னது…

நாட்டாமை, நல்ல அறிவிப்பு. இங்கிருந்து கம்பி எண்ணாமல் ஊர் போனால் எல்லோருக்கும் நல்லதே.

நாடோடி சொன்னது…

ந‌ம்ம‌ இடுகைக்கு விள‌ம்ப‌ர‌ம் கொடுத்த‌ற்கு ந‌ன்றி த‌ல‌.. நீங்க‌ள் சொல்லியிருக்கும் விச‌ய‌த்தை புரிந்து கொண்டு ச‌வுதியை விட்டு ம‌க்க‌ள் வெளியேறினால் ந‌ல்ல‌து...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான பகிர்வு.. நிறையபேர் பல காரணங்களினால் ஓடிப்போயி வேலைப்பார்க்கிறாங்க.. அவங்களுக்கு ஒரு விடிவு காலம் வந்தா நல்லதுதான்.

Nickyjohn சொன்னது…

நல்ல வாய்ப்பு . ஆறு வருசமா ஊருக்கு போகாம இருக்கிற ஆளுக்கிட்ட இதை எடுத்து சொல்லியும் கண்டுக்காம இருக்குற ஜென்மங்கள என்ன செய்ய !!!
திரவியம் தேடு என்ற பதிவில் நீங்க சொன்ன மாதிரி நிறைய பேர் இருக்காங்க. அவங்கள அரசாங்கம் தான் விரட்டனும்

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல பகிர்வு..

kavisiva சொன்னது…

இந்த அறிவிப்பு தேவையானவர்களைச் சென்று அடையுமா?! ஏன்னா பெரும்பாலும் அவங்க மறைவு வாழ்க்கைதானே வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. அவர்களுக்கு அறிவிப்பதற்கு வேறு ஏதேனும் வழி இருந்தால் அதையும் செய்யுங்கள் நண்பர்களே!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க.வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நாட்டாமை, நல்ல அறிவிப்பு. இங்கிருந்து கம்பி எண்ணாமல் ஊர் போனால் எல்லோருக்கும் நல்லதே.//
வான்ஸ் ஒரு வாரமா எல்லார் கிட்டயும் சொல்லி சொல்லி ஓஞ்சு போயிட்டேன். அதுக்கப்புறம் தான் இந்த பதிவு!!

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

அன்னு சொன்னது…

நல்ல அறிவிப்பு. ஒபாமாதான் பெரிய மனசா அத்தனை பேருக்கும் குடியுரிமை கொடுத்துர்றேன்னு சொல்லியிருக்கார். என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்காதான் இல்ல...(யார் வூட்டு நிலம்னு யாரும் கேக்கக்கூடாது!!) :)

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

// நீங்க‌ள் சொல்லியிருக்கும் விச‌ய‌த்தை புரிந்து கொண்டு ச‌வுதியை விட்டு ம‌க்க‌ள் வெளியேறினால் ந‌ல்ல‌து...//

சம்பாத்தியம் பெரிசா, காசு பெரிசா, ஊருக்கு போறது பெரிசான்னு யோசிக்கிறாங்களோ??

நன்றி நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// நிறையபேர் பல காரணங்களினால் ஓடிப்போயி வேலைப்பார்க்கிறாங்க.. அவங்களுக்கு ஒரு விடிவு காலம் வந்தா நல்லதுதான்.//

வந்தாலும் போக மாட்டங்க போலிருக்கே!!

நன்றி Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Nickyjohn கூறியது...

// நல்ல வாய்ப்பு. ஆறு வருசமா ஊருக்கு போகாம இருக்கிற ஆளுக்கிட்ட இதை எடுத்து சொல்லியும் கண்டுக்காம இருக்குற ஜென்மங்கள என்ன செய்ய//

நிறைய பேருக்கு எங்களால் முடிந்த வரை சொல்லியும் அனுப்பியாச்சு!!

நன்றி Nickyjohn உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Nickyjohn கூறியது...

// திரவியம் தேடு என்ற பதிவில் நீங்க சொன்ன மாதிரி நிறைய பேர் இருக்காங்க. அவங்கள அரசாங்கம் தான் விரட்டனும்//

"நம்ம அரசாங்கம் கூப்பிடும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருக்காங்களோ என்னமோ??"

நன்றி Nickyjohn உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பதிவுலகில் பாபு கூறியது...

// நல்ல பகிர்வு..//

வாங்க பாபு ..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ kavisiva கூறியது...

// இந்த அறிவிப்பு தேவையான வர்களைச் சென்று அடையுமா?! //

அடையும், ஆனா போக மாட்டங்க..!

//ஏன்னா பெரும்பாலும் அவங்க மறைவு வாழ்க்கைதானே வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. அவர்களுக்கு அறிவிப்பதற்கு வேறு ஏதேனும் வழி இருந்தால் அதையும் செய்யுங்கள் நண்பர்களே!//

மறைவு வாழ்க்கை என்றாலும், மலையினுல், குகையினுல் போய் வாழ்வதல்ல. எல்லோருமே எல்லோருக்கும் தெரிந்து தான் அடைக்கலம் கொடுந்த்து வைத்திருக்கிறார்கள். இந்த செய்தி மேக்ஸிமம் எங்களால் முடிந்த வரை பேங்குக்கு வருபவர்களிடம் சொல்லி அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம்.

நன்றி kavisiva உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து கூறியது...

// பகிர்வுக்கு நன்றிங்க. வாழ்த்துக்கள்.//

வாங்க நித்திலம் ...!!

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

ஈரோடு தங்கதுரை சொன்னது…

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அன்னு கூறியது...

// நல்ல அறிவிப்பு. ஒபாமாதான் பெரிய மனசா அத்தனை பேருக்கும் குடியுரிமை கொடுத்துர்றேன்னு சொல்லியிருக்கார். என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்கா தான் இல்ல...(யார் வூட்டு நிலம்னு யாரும் கேக்கக்கூடாது!!):) //

நீங்க பெரிய ஆளுங்க. ஒபாமா அம்மடியோவ்வ்வ்வ்...!! எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும்... அது தாங்க எங்க வேண்டுதலும், துஆவும்!! இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்கானு ஊரை மறந்துடாதீங்க அன்னு!! ஹா..ஹா..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஈரோடு தங்கதுரை கூறியது...

//அப்புறம், ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன். அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். //

http://erodethangadurai.blogspot.com/

நேற்றே பார்த்தேன். இருங்க... அதை உங்க வீட்டில் வந்து சொல்றது தான் மரியாதை!!இப்ப வர்றேன்..!!

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

Ananthi சொன்னது…

நீங்க எப்பங்க இப்படி சீரியஸ்-ஆ ஆனீங்க...??
சும்மா தாங்க..

உண்மையில் நல்ல பகிர்வு :-))

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Ananthi கூறியது...

// நீங்க எப்பங்க இப்படி சீரியஸ்-ஆ ஆனீங்க...?? சும்மா தாங்க..//

??? ஙே..? ??? ...!!!!

// உண்மையில் நல்ல பகிர்வு :-)) //

நன்றி ஆனந்தி, மீண்டும் மீண்டும் வருக, இப்படி என்னை குழப்புக!! ஹி..ஹி..!!