facebook

திங்கள், அக்டோபர் 18, 2010

'உஷார்ப் படுத்து’ங்க...!!

















'உஷார்ப் படுத்து’ங்க...!!

எனது நண்பர் ஒருவர் இங்கு (சவுதியில்) இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் வந்து பகிர்ந்து கொண்டார். அது நம்மில் பலருக்கு பாடமாக, உதவியாக கூட இருக்கலாம்.

அதைப் பற்றி உங்களோடு ..!!!

இவரும் இவருடைய மூத்த மகனும் இங்கிருக்கிறார்கள்.
இவருடைய மனைவியும் இளைய மகனும் ஊரில் இருக்கிறார்கள்.
மாதா மாதம் சம்பளம் வாங்கி எங்கள் வங்கி வழியாகத் தான்
பணம் அனுப்பி வைப்பார். சேமிப்பில் எப்போதும் ஓரளவு பணம் வைத்திருப்பார். அந்த  மாத செலவுக்காக தேவைப் பட்ட பணத்தை
எடுத்துக் கொள்ளச் சொல்லி ஒப்புதல் கொடுத் திருக்கிறார்

அவர்கள் அந்த ஊரில் (பெயர் தவிர்க்கப் படுகிறது) உள்ள வங்கி (பெயரும் தவிர்க்கப் படுகிறது) யில் பணம் எடுக்க சென்ற போது, கவுண்டர் ஸ்டாஃபாக இருந்த பெண்ணிடம் விபரம் சொல்ல, சலானை ஃபில்லப் செய்து கொடுங்கள் என்று கேட்கவும், தனக்கு எழுத வராது என்று சொல்ல, பரவாயில்லை கையொப்பமிட்டு மட்டும் தாருங்கள் நான் மீதியை எழுதிக் கொள்கிறேன் என்றி ருக்கிறார்.

இவரும் ஒரு சலானில் கையொப்பமிட, அது லேசான குளறுபடியாக, அதை கிழித்துப் போடாமல் கசக்கி கவுண்டர் மேலேயே வைத்து விட்டு, இன்னொரு சலானில் கையொப்பமிட்டு கொடுத்து பணத்தை எடுத்து சென்றிருக்கிறார். note : இவர் எடுத்து சென்ற பணம் பத்தாயிரம். சேமிப்பில் மீதி இருந்த பணம் அறுபத்தைந்தாயிரம்.

இது முடிந்து பதினைந்து நாள் கழித்து இவர்களுக்கு ஏதோ அவசர தேவைக்காக பணம் ஐம்பதாயிரம் தேவைப் பட்டிருக்கிறது. கணவரின் ஒப்புதலுடன் வங்கியில் சென்று விபரம் சொல்லி கேட்க, உங்கள் அக்கவுண்டில் வெறும் ஐயாயிரம் மட்டுமே இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். இவர் அங்கேயே விளக்கம் கேட்காமல், பதறிப் போய் வீட்டுக்கு வந்து, கணவருக்கு போனில் தகவல் சொல்லி இருக்கிறார்.

இவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் நாட்டாமை என்னிடம் வந்து விட்டார். நாம தான் அப்பவும் இப்பவும் எப்பவும் எல்லோருக்கும் உதவும் அறிவுக் களஞ்சியமாச்சே! "நீங்க எல்லாருமே இப்படி என்னை புகழ்ந்தால்.. ஹி..ஹி.. நான் என்ன செய்வேன் (இருக்கட்டும்.. இருக்கட்டும்)

"நீங்க ஒன்னும் பதஸ்ட்டப் படாதீங்க. ஊரில் விபரமா பேசக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்" என்றேன். "அவங்க தாய் மாமா இருக்கார்" என்றார்.

அவரிடம் "நாளை பேங்க் டேமஜரிடம் போய், "இது மாதிரி விவகாரம் நடந்திருக்கு. நீங்க தீர்வு சொன்னா சரி... இல்லையேல் போலீஸுக்கு தகவல் சொல்லிட்டு, வில்லங்களை விவரித்து எழுதும் பத்திரிகையின் பெயரையும் சொல்லி, கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போகும் படியாய் இருக்கும் என்று மட்டும் சொல்லச் சொல்லுங்க போதும் " என்றேன்.

எப்பூடி??!! நாமெல்லாம் சட்டங்கள்லேயே, பல சட்டங்களை கரச்சு குடிச்சவங்களாச்சே. நம்மகிட்டேயேவா?? ஓஹோன்னானாம்.

அந்த மங்குனி டேமஜர் அரண்டு போய், "நீங்க அப்படியெல்லாம் ஒன்றும் செய்து விட வேண்டாம். அதற்குள்ள தீர்வை நாளை சொல்கிறேன்", என்று சொல்லி இவரை அனுப்பி விட்டு, உள்ளே வட்ட மேஜை மாநாடு நடத்தி இருக்கார். (பேங்க்ல வட்ட மேஜை யெல்லாம் இருக்கா... என்ன??)

நடந்த மேட்டர் இது தான். இவர் மனைவி கிழித்துப் போடாமல்,
ஞாபக மறதியாய், கவுண்டர் பெண்மணியின் மேஜை மேல்,
கையொப்ப மிட்ட சலானை வைத்து விட்டு வந்தது தான். அந்த பெண்மணியும், வங்கியின் கேஷியரும், அந்த சலானை வைத்து ஐம்பதாயிரம் பணத்தை 'உஷார்' செய்திருக்கிறார்கள். விவரம் வெளிச்சத்துக்கு வராமலிருக்க,  அந்த பெண்மணியை அன்றே
‘சஸ்பென்ட்’ செய்திருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், அந்த கேஷியர் மட்டும் என்ன ‘புண்ணியம்’ செய்திருந்தார் அவரை மட்டும் விட்டு வைக்க??

இங்கிருந்து நாம் அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாத்தித்து அனுப்புவதை எல்லாம் இந்த மாதிரி வாழும் புண்ணியவான்கள் நம் மக்களை இப்படி அல்லல் படுத்துவதற்கு தானா??

டிஸ்கி : இது சம்பத்தப் பட்ட வங்கி 'ஆப்பீசர்'கள்,  ஊழியர்கள் யாரேனும், இதைப் படிக்க நேர்ந்தால் உணர்ச்சி (இருந்தால்) வசப்பட்டு இங்கே கருத்துரை எழுதி விடாதீர்கள். நான் முடிந்த வரை மூடி மறைத்தே எழுதியிருக்கிறேன். அப்புறம் உங்கள் வங்கியின் பெயர் ஊரறிந்த விஷயமாகி விடும். இது எங்கள் வலையுலக சகோதர எழுத்தாளர்களுக்கும், எங்களைப் படிக்கும் வாசகர்களை 'உஷார்ப்'  படுத்தவுமே....!!

                                                                          

38 கருத்துகள்:

vanathy சொன்னது…

நாட்டாமை நாட்டாமை தான். பணம் மறுபடி கிடைச்சுதா இல்லையா? நல்ல விழிப்புணர்வு பதிவு.

பெயரில்லா சொன்னது…

ஒரு அவசியமான மற்றும் விழிப்புணர்வு தரக்கூடிய பதிவு அப்துல்!

Asiya Omar சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோ.நாட்டாண்மையின்னு சும்மாவா பேரை வச்சோம்.

Riyas சொன்னது…

GOOD POST SIR.

நாடோடி சொன்னது…

க‌ண்டிப்பா‌ அனைவ‌ரும் தெரிந்து கொள்ள‌வேண்டிய‌ விச‌ய‌ம் தான்...

Jaleela Kamal சொன்னது…

சில பேர் பதட்டத்தில் செய்வது இப்படி உழல் பேர் வழிகள் உஷாராகிடுராங்க.

நல்ல விழிப்புனர்வு பதிவு, படிப்பவர்கள், மற்ற தோழி, தோழர்க்ளுக்கு இதை பகிர்ந்து கொள்வ்து நல்லது

Chitra சொன்னது…

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்! Alert ஆக இருக்க சொல்லும் பதிவுக்கு நன்றிங்க....

ஜெயந்தி சொன்னது…

தன்னோட உழைப்பில் வந்த பணம் மட்டுமே தனக்கு சொந்தம்ன்னு எப்போ நினைக்கப்போறாங்களோ?

ISR Selvakumar சொன்னது…

எச்சரிக்கையாக இருன்னு சொல்ற நல்ல பதிவு.

அன்புடன் மலிக்கா சொன்னது…

விழிப்புணர்வு தரக்கூடியஒரு அவசியமான பதிவு.. உசாராயிருங்கோ மக்கா அப்படின்னு நட்டாம சொல்லுதாக கேட்டுகோங்க
மக்கா..

Radhakrishnan சொன்னது…

நீங்க யோசனைக்காரர் மட்டுமல்ல, அனைவரையும் உஷார்படுத்தும் புத்திக்காரர். நல்ல பதிவு.

பொடுசு சொன்னது…

nice sharing... carry on

மோகன்ஜி சொன்னது…

உபயோகமான பதிவு..

Anisha Yunus சொன்னது…

இப்படியும் ஒரு பொழப்பா.....சுப்ஹானல்லாஹ்....மரண மயமும் இறைவனின் தண்டனை பற்றிய பயமும் இல்லாதவர்களாலெயே இப்படி செய்ய முடியும். ஏன் அந்த கேஷியரை ஒன்னும் பண்ணலை...டேமெஜரோட தில்லுமுல்லுகளும் வெளியெ வந்துடும்னு இருக்கலாம். நாணயத்துக்கு பெயர் போனவர்கள் பெண் ஊழியர்கள் என்ற எண்ணமே தூளாகி விட்டது...தேவையான பதிவு பாய். இனிமே உஷாரா இருக்க சொல்லுங்க. இதுக்கு டெபிட் கார்டு வெச்சுக்கறதுதான் உத்தமம்!!

நிகழ்காலத்தில்... சொன்னது…

சலான் பூர்த்தி செய்கிற விசயத்தில் அக்கறை தேவை என்பதை தெளிவாக சொல்லி விட்டீர்கள்

வாழ்த்துகள்

Unknown சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு.. நன்றி..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடி ஆத்தீ..........இப்பிடி எல்லாமா பொழப்பை நடத்துறாய்ங்க?????!!!

ஹுஸைனம்மா சொன்னது…

பணம் திருப்பி கிடைச்சுடுச்சில்லியா? எப்படிலாம் கவனமா இருக்கவேண்டியிருக்கு பாருங்க!!

பதிவிட்டு எச்சரித்ததற்கு நன்றி.

thiyaa சொன்னது…

நல்ல பதிவு.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// பணம் மறுபடி கிடைச்சுதா இல்லையா? //

கிடைக்காட்டி தான் நாம விட்டுடுவமாக்கும்??

நன்றி வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// நாட்டாண்மையின்னு சும்மாவா பேரை வச்சோம்.//

பார்ரா..!! இதுக்காவாவது வம்ப வெலகொடுத்து வாங்கனுமக்கும் ஹா..ஹா (சும்மா தமாசு)

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// ஒரு அவசியமான மற்றும் விழிப்புணர்வு தரக்கூடிய பதிவு அப்துல்!//

வாங்க சரவணா!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Riyas கூறியது...

// GOOD POST SIR.//

தேங்ஸ் ரியாஸ் சார்!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// க‌ண்டிப்பா‌ அனைவ‌ரும் தெரிந்து கொள்ள‌வேண்டிய‌ விச‌ய‌ம் தான்...//

வாங்க தல, எப்ப வர்றீங்க ??

நன்றி ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// சில பேர் பதட்டத்தில் செய்வது இப்படி உழல் பேர் வழிகள் உஷாராகிடுராங்க.//

அதுவும் பெண்களின் பதட்டத்தை சொல்லாதீங்க, அம்மாடியோவ்!!

நன்றி Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// எப்படியெல்லாம் ஏமாற்று கிறார்கள்! Alert ஆக இருக்க சொல்லும் பதிவுக்கு நன்றிங்க....//

எதுவுமே சொல்வதற்கில்லை. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் காலமாப் போச்சு!!

நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது...

// தன்னோட உழைப்பில் வந்த பணம் மட்டுமே தனக்கு சொந்தம்ன்னு எப்போ நினைக்கப் போறாங்களோ?//

அவங்கள அப்படி நினைக்க விடாதா சூழ்நிலைகள் நிறைய இருக்கு siss

நன்றி ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ r.selvakkumar கூறியது...

// எச்சரிக்கையாக இருன்னு சொல்ற நல்ல பதிவு.//

வாங்க சார், எப்படி இருக்கீங்க..??

நன்றி r.selvakkumar உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்புடன் மலிக்கா கூறியது...

// விழிப்புணர்வு தரக்கூடியஒரு அவசியமான பதிவு. உசாராயிருங்கோ மக்கா அப்படின்னு நட்டாம சொல்லுதாக //

வாங்க மல்லிகாக்கா உங்கள மாதிரி நாலு பேர் சப்போட்டுக்கு இருந்தா நம்ம பேர் விளங்கிடும். ஹி..ஹி!!

நன்றி அன்புடன் மலிக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ V.Radhakrishnan கூறியது...

// நீங்க யோசனைக்காரர் மட்டுமல்ல, அனைவரையும் உஷார்படுத்தும் புத்திக்காரர். நல்ல பதிவு.//

சார் நீங்க என்னை அளவுக்கதிகமா புகழ்றீங்க! அது எனக்கே நல்லா தெரியுது. தன்னடக்கம் தடுக்குது. இருந்தாலும் நீங்கள் தந்ததை தலை தாழ்த்தி பெற்றுக் கொள்கிறேன். ஹா..ஹா.. நன்றி சார்!!

V.Radhakrishnan சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பொடுசு கூறியது...

//nice sharing... carry on//

வாங்க சார், எங்க உங்க சஹாக்களேயே காணோம்.

நன்றி பொடுசு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// உபயோகமான பதிவு..//

வாங்க ஜீ நல்லா இருக்கீங்களா!!

நன்றி mohanji உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

//இப்படியும் ஒரு பொழப்பா சுப்ஹானல்லாஹ்....மரண பயமும் இறைவனின் தண்டனை பற்றிய பயமும் இல்லாதவர்களாலெயே இப்படி செய்ய முடியும்.//

இன்னும் நிறைய நாள் வாழ்வோம்னு நினைக்கிறாங்களோ என்னமோ??

//நாணயத்துக்கு பெயர் போனவர்கள் பெண் ஊழியர்கள் என்ற எண்ணமே தூளாகி விட்டது.//

இதற்கு நானென்ன சொல்ல..!!

//இதுக்கு டெபிட் கார்டு வெச்சுக்கறதுதான் உத்தமம்!!//

அதில் நடக்காத அக்கிரமும், அடாவடி, அத்துமீறல்களை விடவா??

நன்றி அன்னு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நிகழ்காலத்தில்... கூறியது...

// சலான் பூர்த்தி செய்கிற விசயத்தில் அக்கறை தேவை என்பதை தெளிவாக சொல்லி விட்டீர்கள் //

வாங்க சார். மக்களுடைய கவனம் சரியா இருக்கணும். நல்லா இருக்கீங்களா??

நன்றி நிகழ்காலத்தில்...முதல் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

// நல்ல விழிப்புணர்வு பதிவு.. நன்றி..//

வாங்க பாஸ். நல்லா இருக்கீங்களா??

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாஞ்சில் மனோ கூறியது...

// அடி ஆத்தீ...இப்பிடி எல்லாமா பொழப்பை நடத்துறாய்ங்க?????!!! //

பேங்க்ல சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவுங்க சார் அதனால,அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் ....!!??

நன்றி நாஞ்சில் மனோ உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

// பணம் திருப்பி கிடைச்சுடுச் சில்லியா? எப்படிலாம் கவனமா இருக்கவேண்டியிருக்கு பாருங்க!! //

இதில் மட்டுமல்ல... பணம் கேஷியரிடமிருந்து வாங்கும் போதும்!! நிறைய கள்ள நோட்டு புழக்கங்கள் அங்கிருந்து தான் வெளியேறுகிறதுன்னு ஒரு தகவல் இருக்கு!!

நன்றி ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தியாவின் பேனா கூறியது...

// நல்ல பதிவு.//

வாங்க நல்ல இருக்கீங்களா??

நன்றி தியாவின் பேனா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஓட்டு பதிவுக்கும்.