வியாழன், அக்டோபர் 21, 2010
அரசியலுக்கு அப்பாற்பட்டு!!
அரசியலுக்கு அப்பாற்பட்டு!!
நான் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவனும் இல்லை. இருந்தாலும்
இதை படித்த உடன் நாம் எந்த காலத்தில் வாழ்கிறோம் என்ற
நினைவே மேலோங்கி நிற்கிறது. ஒரு மாறுதலுக்காக, அரசியலிலும்
ஒரு பார்வை. நீங்களும் ஒரு 'தம்' பிடித்து படித்து வையுங்கள்.
இக்கட்டுரையினை வெளியிட்ட ஜூவிக்கு ஒரு நன்றி. ஊழல், கொலை, கொள்ளை, திருட்டு, அதிகார துஷ்பிரயோகம் இவற்றில் ஊறித்திளைக்கும் தமிழக அரசியல்வாதிகளில் இப்படியும் ஒருவர் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் சற்றே மனதிற்கு சந்தோஷம் தரும் செய்தி அல்லவா. இதோ அந்தச் செய்தி.
சைக்கிள் செயின் நீளத்தில் தொங்கும் தங்கச் சங்கிலி, பளபளா நிறத்தில் முரட்டு பிரேஸ்லெட், கார், பங்களா… ‘மக்கள் பணி’ ஆற்றிவரும் இன்றைய கவுன்சிலர்களே இப்படிப்பட்ட அடையாளங் களோடுதான் வலம் வருகிறார்கள். ஆனால், மருத்துவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவர் ஒழுகும் குடிசை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா!
சென்னையை ஒட்டிய திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. எம்.பி-யான டாக்டர் வேணுகோபால்தான் அந்த எளிமையான மனிதர். பெரம்பூர் லோகோ ஜி.கே.எம். காலனியில் இருக்கிறது எம்.பி-யின் குடிசைக் குடியிருப்பு. வீட்டின் முன்புறத்தில் இருக்கும் வெட்டவெளியிலேயே தகரக் கொட்டகை அமைத்து தினமும் பொது மக்களை சந்திக்கிறார். நாம் சென்றிருந்த நேரம், நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் வீடு இழந்த நெமிலிச்சேரி மக்கள் தங்கள் குறைகளை எம்.பி-யிடம் சொல்லி கதறிக் கொண்டிருந்தனர்.
”எம்.பி-யாகிறதுக்கு முன்னாலேயே முழுநேர டாக்டரா இந்தத் தொகுதி முழுக்க அறிமுகமானவர்தான் வேணுகோபால். கொடுங்கையூரில் இருக்கிறது அவரோட கிளினிக். அதிகபட்ச ஃபீஸே 25-தான்… ஏழைப்பட்ட சனங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் தன்னோட செலவிலேயே மருந்து மாத்திரையையும் வாங்கிக் கொடுப்பார். இப்பவும் இங்கே வந்திருக்கிற மக்கள்ல பாதிப்பேர் தங்களோட சொந்தப் பிரச்னைகளைச் சொல்ல வந்திருக்காங்கன்னா, மீதிப்பேர் தங்களோட வியாதிகளுக்காகத் தான் வந்திருக்காங்க…” என்று எம்.பி-யின் இன்னொரு முகத்தைக் காட்டி புளகாங்கிதம் அடைகிறார்கள் ஏரியாவாசிகள்.
மகளின் இதய ஆபரேஷன் செலவுக்கு வழி கேட்டு வந்தவருக்கு
பிரதமர் நிவாரண உதவித் தொகையின் கீழ் நிதி வழங்குவதற்கான ஏற்பாடு, பட்டா கேட்டு முறையிட்ட திருமுல்லைவாயல் நரிக் குறவர்களுடன் ஆலோசனை…. என்று அடுத்தடுத்துபடுபிஸியாக
இருந்தார் எம்.பி.! அவரது குடிசை வீட்டிலோ வந்திருப்பவர்களுக்கு
சுடச்சுட காபி தயாராகிக்கொண்டு இருந்தது.
”நந்தனம் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போதே அ.தி.மு.க-வின் மாணவர் அணித் தொண்டராகக் கட்சி வாழ்க்கையை ஆரம்பித்தவர். மிகுந்த பொருளாதாரச் சிக்கலுக்கிடையே பகுதி நேர வேலைகள் பார்த்துக் கொண்டே எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் பொறுப்பு அதிகம். உடன் பிறந்த மூன்று தம்பிகள், மூன்று தங்கைகளையும் படிக்க வைத்துக் கல்யாணமும் செய்துவைத்தார்.
வேலை காரணமாக இரண்டு தம்பிகளும் வேறு ஏரியாவில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட… இப்போது எம்.பி. குடும்பமும் அவரது தம்பி குடும்பமும் இந்த ஓட்டு வீடு, குடிசை வீடு இரண்டிலும் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். 2004-லேயே புது வீடு கட்டுவதற்காக கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தார் டாக்டர். ஆனால், அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென்று கட்சி இவருக்கு ஸீட் ஒதுக்கவே பணத்தை எல்லாம் செலவழித்து தேர்தலில் நின்று தோற்றுப்போனார்.
அதன் பின்பு பழையபடி கட்சிப் பணி, மருத்துவத் தொழில் என்று இருந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 2008 தேர்தலில் அம்மா ஸீட் ஒதுக்கினார்கள். தொகுதி முழுக்க இலவச மருத்துவ முகாம் நடத்துவது, கட்சிக்காகக் கடுமையாக உழைப்பது என்று எளிமையும் நேர்மையுமாக சுற்றிச் சுழன்ற டாக்டரை மக்களும் எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்!” என்று ஒரு டாக்டர், எம்.பி.யான கதையை உணர்ச்சி பூர்வமாக விளக்கினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
”எங்கே போறதா இருந்தாலும் ரயில்லதான் போவார். டெல்லிக்கு மட்டும்தான் ஃப்ளைட்டுல போவார். ரயில் வசதி இல்லாத குக் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வசதியாக இப்போது
தான் பேங்க் கடனில் ஒரு கார் வாங்கி இருக்கிறார். எவ்வளவோ
பேருக்கு வீடு, மனை, பட்டா… வாங்க உதவிகள் செய்கிறார்.
ஆனாலும் தனக்குன்னு ஒரு வீடு கட்ட இதுவரையிலும்
யோசிக்கவே இல்லை. கேட்டா…. ‘பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்.
கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்’னு சொல்றார்!” என்கிறார்கள்
அக்கம் பக்கக் குடும்பத்தினர்.
வேணுகோபாலின் வீட்டை வலம் வந்தோம். சின்னஞ்சிறிய அந்தக்
குடிசை வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சமையலறை, அருகிலேயே தங்கி ஓய்வெடுக்க வசதியாக ஒரு கட்டில்… எதிரில் அமைந்திருக்கும் சிறிய ஓட்டு வீட்டின் ஒரு பகுதியில் எம்.பி-யின் தாயாருக்கு ஒரு கட்டில். மொத்தக் குடும்பத் தினரும் பயன்படுத்த ஒரேயரு பழைய பீரோ.
பொதுமக்கள் சந்திப்பை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த வேணுகோபால்,
”என்ன சார் என் வீட்டை இவ்வளவு ஆச்சர்யமா பார்த்துட்டு இருக்கீங்க…?” என்றபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.
”ஒரு மருத்துவரா நோயாளிகளை மட்டுமே திருப்திப்படுத்திக்கிட்டு
இருந்த என்னை, எம்.பி-யாக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புத் தந்தாங்க அம்மா. இதுவே எனக்குப் போதும். மற்றபடி இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? இந்த வீட்டுல யிருந்துதானே நான் டாக்டருக்குப் படிச்சு இன்றைக்கு எம்.பி-யாகவும் ஆகியிருக்கேன்! என்ன… இந்த மழையில ஓட்டு வீடு மட்டும் அங்கங்கே கொஞ்சம் ஒழுகிச்சு. கெயிட்டி தியேட்டர் பக்கத்துல 300 கொடுத்து பழைய விளம்பர ஃப்ளெக்ஸ் ஒண்ணை வாங்கிட்டு வந்து ஓட்டு மேல போர்த்திவிட்டேன். இப்ப பிரச்னை எதுவும் இல்லை!” என அவர் பேசிக்கொண்டே போக… நாம் இருப்பது தமிழ்நாட்டில்தானா எனக் கிறுகிறுத்துப் போனோம்.
”எப்படி சார்… இவ்வளவு எளிமையா வாழுறீங்க..?” என அடக்க முடியாத ஆச்சர்யத்தோடு நாம் கேட்க… ”இருக்க இடம் இல்லாம எத்தனையோ பேருங்க ரோட்டோரம் ஒண்டிக் கிடக்கிறாங்க… அவங்களோட ஒப்பிட்டா நான் பெரிய பணக்காரனாச்சே சார்! வசிக்கிற இடம் எப்படி இருந்தால் என்ன… வாழுற முறை நல்லா இருந்தா சரிதானே சார்…” என்றார் வெகு இயல்பாக.
இந்த வார்த்தைகளை இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் வாதிகளுக்கும் அச்சடித்துக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது நமக்கு!
நன்றி : ஜூவி - த.கதிரவன்
நன்றி : http://velichathil.wordpress.com/
லேபிள்கள்:
அரசியலுக்கு அப்பாற்பட்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
20 கருத்துகள்:
இப்படியும் ஒருவரா?! ஆச்சரியமா இருக்கு. மக்கள் காமராஜரை தோற்கடிச்ச மாதிரி இவரையும் ஆக்கிடாம இருந்தா சரிதான்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அய்யா.
மாஷா அல்லாஹ்...உண்மையிலேயே தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறீர்களா என்று இருக்கிறது.
Good Job Mr.MP!!
”எப்படி சார்… இவ்வளவு எளிமையா வாழுறீங்க..?” என அடக்கமுடியாத ஆச்சர்யத்தோடு நாம் கேட்க… ”இருக்க இடம் இல்லாம எத்தனையோ பேருங்க ரோட்டோரம் ஒண்டிக் கிடக்கிறாங்க… அவங்களோட ஒப்பிட்டா நான் பெரிய பணக்காரனாச்சே சார்! வசிக்கிற இடம் எப்படி இருந்தால் என்ன… வாழுற முறை நல்லா இருந்தா சரிதானே சார்…” என்றார் வெகு இயல்பாக.
இந்த வார்த்தைகளை இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் வாதிகளுக்கும் அச்சடித்துக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது நமக்கு!
....A Big Salute!!!!
//இப்படியும் ஒருவரா?! ஆச்சரியமா இருக்கு. மக்கள் காமராஜரை தோற்கடிச்ச மாதிரி இவரையும் ஆக்கிடாம இருந்தா சரிதான்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அய்யா.
// repeat...
உண்மைலேயே கிரேட் சார்..!! இந்த முன்மாதிரி நெஞ்சை நிறைக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!!! பகிர்ந்தமைக்கு நன்றி!!
இந்த வார்த்தைகளை இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் வாதிகளுக்கும் அச்சடித்துக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது நமக்கு!
Yes Chitrakka.
இப்படிப்பட்ட இவரை அவரது அரசியல் கட்சியாவது இன்னும் கொஞ்சம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரலாமே ..
சில நல்லக்கண்ணுகள் இன்னும் இருக்காங்க.
Great..
ஆச்சரியமான மனிதர்தான்..
Good Post..
எல்லா அரசியல்வாதியும் இப்படி இருந்தா.... ஹ்ம்ம்... நம்மால பேரு மூச்சு தான் விட முடியுது
இந்த மாணிக்கங்கள் எல்லாம் மாயவரம் வந்து தேர்தல்ல நின்னா நான் தலையிலே தூக்கி வச்சுகிட்டு ஓட்டு கேட்பேன். (எந்த கட்சியா இருந்தாலும்)வாழ்க அவரது பணி!
"வசிக்கிற இடம் எப்படி இருந்தால் என்ன… வாழுற முறை நல்லா இருந்தா சரிதானே சார்…”
நல்ல மனிதர்..,இப்படியும் சிலர் இருக்கிறார்களே என்று நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு..
நல்ல பகிர்வு. நன்றி அப்துல்காதர் சார்.
டாக்டர் வேணுகோபாலன் அவர்களுக்கு என் இரு கரம கூப்பி,அவரின் எளிமை தொடரவும்,அதுவே பிறரையும் தொற்றவும் பிரார்த்தனைகளுடன் வணங்குகின்றேன்.
நாட்டாமை, நல்ல பதிவு & நல்ல மனிதர். இதெல்லாம் படிச்சு யாராச்சும் ஒருத்தர் திருந்தினால் நல்லது.
ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு. கக்கன், காமராஜ் ஞாபகம் வருது. பகிர்வுக்கு நன்றி.
டாக்டர் வேணுகோபாலன் M P அவர்களுக்கு, "ஒட்டு போட்டு"
'ஜெயிக்க வைத்த'அனைத்து நல்ல
உள்ளங்களுக்கும் நன்றி!!
chitrax
sriramanandaguruji
kavipakam
bharani
menagasathia
ganga
muthumalar
asaithambi
maharaj
balajisaravana
kaelango
jailani
arasu08
Vino23
tharun
ambuli
Karthi6
ganpath
easylife
boopathee
subam
inbadurai
RDX
karthikvlk
Dev
abdulkadher
sramse2010
mannanmagal
hareekaa
maragadham
aasifaa
shahi
soundar1987
kanavinban
rukya
azhagiyanila
poomayil
rosemary
Riyas363
yamsasi2003
Venugopal_Krishnan
sidhu
Sivaramkumar
acmang
simlish
starjan
கருத்துரை வழங்கிய
* கவிசிவா நன்றி!
* அன்னு நன்றி!
* சித்ரா நன்றி!
* mrs.மேனகாசத்தியா நன்றி!
* முஹம்மது ஆரிப் நன்றி!
* இளங்கோ நன்றி முதல் வரவுக்கு!
* தருமி நன்றி முதல் வரவுக்கு!
* பதிவுலகில் நன்றி!
* அமைதிசாரல் நன்றி!
* அஹமது இர்ஷாத் நன்றி!
* சிவா நன்றி!
* அபி அப்பா முதல் வரவுக்கும் உணர்வு பூர்வமான கருத்துக்கும் நன்றி!
கருத்துரை வழங்கிய
* அன்புசிவம் நன்றி முதல் வரவுக்கு!
* ஸ்டார்ஜான் நன்றி!
* மோகன்ஜி நன்றி!
* வானதி நன்றி!
* ஹுசைனம்மா நன்றி!
அனைவருக்கும் நன்றி!!
கருத்துரையிடுக