facebook

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

வீட்டுக்கொரு 'பட்ட' பெயர் வைப்போம்..!!


வீட்டுக்கொரு 'பட்ட' பெயர் வைப்போம்..!!

வீட்டுக்கொரு இலவச டிவி மாதிரி, வீட்டுக்கொரு மரம்
வளர்ப்போம் என்கிற மாதிரி (வெட்டி நடு வீதில போட்டுட்டா,
எங்கிட்டு??), வீட்டுக்கு வீடு ஒரு 'பட்ட' பெயர் இருக்கும் கவனிச்சிருக்கீங்களா?? பார்க்க, கேட்க வித்தியாசமாகவும்
இருக்கும், நகைச்சுவையாகவும் இருக்கும்.

நான் ஊருக்கு போயிருந்த சமயம் 'அமளி' வீட்ல போய் இதை கொடுத்துட்டு வாவென்று பையனை ஏவிக் கொண்டிருந்தார்கள்.

"அமளீன்னா??!! " என்று வினவினேன்.

வீட்டில் யாருக்கும் தெரியல!! யாரிடம் கேட்கலாம். யோசித்தேன்.

எங்க அக்காவோட சித்தப்பாவோட பாட்டி (அப்படீன்னா எனகென்ன
முறை வேணும் என்று கேட்டா, நீங்க என் பல்லு மேலேயே
கல்லெடுத்து போடுவீங்க, அதனால வேணாம்!!) அது கிட்ட போய்
நேர்முக பேட்டி கண்டேன்.

அது ‘கெக்கே பிக்கே’ வென்று (இல்லாத) பல்லையும், வாயையும்
வைத்து சிரித்து விட்டு அட ‘இவனே’!! (அது எல்லாத்தையும்
அப்படி தான் சொல்லும். அல்லது ‘இவளே’)

"அப்பெல்லாம் வீட்டுக்கு டோர் நம்பர் ஏதுடா? இப்படி பேர் சொன்னா
 தான் வெளங்கும்" என்றது.

“ம்ம் அப்புறம் சொல்லு பாட்டி” என்று சொல்லு முன், பாட்டிக்கு பிடித்த வஸ்து ஏதாவது வாங்கி கொடுத்தால் நிறைய கறக்கலாமே என்று பிடிவாதாமாய் மனதை இழுத்து வைத்து யோசித்தேன்.

“அச்சு வெள்ளமும், கம்மர் கட்டும் ரொம்ப பிடிக்கும்”
என்று முன்பு எப்பவோ ஞாபகத்தில்  இருந்த  மனக் கவுளி
சொன்னது!!   

(ஆஹா அதுக்காக 'ரோஹிணி' கிட்டவா போய் கேட்க முடியும்.
ஏதோ ஒரு படத்தில் கூட 'ரெண்டு அச்சு வெள்ளத்தை' வச்சுகிட்டு பாடிக்கிட்டிருக்குமே!!)

"டேய் யார்டா அங்கே?? அந்த முக்கு கடைக்கு போயி, ஆயிரம் ரெண்டாயிரம் செலவானாலும் பரவாயில்ல. ரெண்டு அச்சு வெள்ளமும், நாலு கம்மர் கட்டும் வாங்கிட்டு வாங்கடா!!”

என்று நானே சவுண்டும் விட்டுக் கொண்டு, நானே எழுந்து போய்
வாங்கிக் கொண்டும் வந்தும் கொடுத்தேன். அதை பார்த்தவுடன்
பாட்டிக்கு பல்லெல்லாம் வாயி!! அந்த அச்சு வெள்ளத்தை சப்பிகிட்டே சொல்ல ஆரம்பித்தது.

நம்ப பக்கத்து வீட்டுக்கு பேரு ஓடு திருப்பி வீடு, அதுக்கு பக்கத்து வீட்டுக்கு பேரு ரத்த குசு வீடு (ஐயோ), பொட்ட கோழி வீடு,
பொசுக்கி வீடு, கண் சிமிட்டி வீடு, கறு துணி வீடு, ஈ தீனி வீடு...

"இரு பாட்டி இரு எழுதிக்கிறேன்" அது பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போனது...

பச்சை மொளகா வீடு, சோத்து பொட்டி வீடு, லட்டு வீடு, பூரான் வீடு,
சக்கர வீடு, பிச்ச வீடு, ஓலைப் பொட்டி வீடு, சோகை வீடு, நரையான்
வீடு..!!

“என்னா பாட்டி இப்படி ஸ்பீடா சொல்றே? நா எழுத வேணாமா??”

“இருடா, நான் ஒரு பாட்டம் சொல்லி முடுச்சிக்கிறேன். இல்லாங்கட்டி மறந்துடும்" என்றது.

சீனி மூட்டை வீடு, பச வீடு, மொளவா நாறு வீடு, கழுவா வீடு,
பீ வரண்டி வீடு (ஹூம்), பச்சைக்கிளி வீடு, தேங்கா வீடு, கொய்யப்
பழ வீடு, தண்ணி கொடத்தார் வீடு...

"பாட்டி கொஞ்சம் மூச்சு விட்டுக்கோயேன்!!"

“இல்லடா, இருடா!!"

மியா மியா வீடு, போண்டா வீடு, யாவாரி வீடு, பனங் கொளத்தார் வீடு, கூத்தூரா வீடு, பாம்பாட்டி வீடு, குடுக்கை வீடு (பொய் குடுக்கையாம்)

"அதுக்கப்புறம்" ..??

அய்யா 'கொட்ட' வீடு, பனங் 'கொட்ட' வீடு, 'கொட்ட' பாக்கு வீடு" சொல்லிவிட்டு சிரித்தது!!

"எத்தனை?? நிறுத்து நிறுத்து..!!."

"யானை சூ##து வீடு"

"அம்மாடி இதென்ன"??

"அதாண்டா இந்த பக்கத்து வீடு" பீச்சாங் கைய காட்டியது..

நாம ஏண்டா கேட்டோம்னு ..... ஙே.!! ஙே..?

-------------------------------------------------------------------------------------------------
“பிட்" நியூஸ் : அப்படின்னதும் நீங்க 'வேறேதும்னு' நெனச்சுக்
காதீங்க! சும்மா ஒரு குறுஞ் செய்தி அம்புட்டுதேங்!

நேற்று ஞாயிற்று கிழமையாதலால் நமக்கு இவ்விடத்தில் ஒரு நா விடுப்பு! ஆதலினால்... ஹாயாக உட்கார்ந்து..."ஹலோ fm" கேட்டுக் கொண்டிருக்கும் போது 'தொகுப்பாளர் பாலாஜி' மிக அழகாக ஒரு செய்தியை சொன்னார்.

“அப்பாவுக்கும் பசங்களுக்கும் அவார்ட் கெடச்சிருக்கு” என்று!

அதாவது "பா" (ஹிந்தி அப்பா) படத்துக்கு அமிதாப் பச்சனுக்கும்,
நம்ம ரெண்டு "பசங்க" ளுக்கும், கிடைத்தை மிக இயல்பாக
சொல்லிக் கொண்டே போனார். ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிசாய் யோசிக்கிறாங்க பாருங்க. “106.4” ‘இது தான் ரைட் நம்பர்’
என்று வேறு சொல்லிக்கிறாங்க. நல்லா இருக்கு!! நீங்களும் கேளுங்க!!

சும்மா இருக்கும் போது, இவர்களெல்லாம் இப்படி யோசித்து பேசும்
போது, மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருக்கு தெரியுமா?? இதையெல்லாம் ஏன் உங்களுக்கு சொல்றேன்னா? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்!!

                                                                           

25 கருத்துகள்:

asiya omar சொன்னது…

எங்க ஊரிலும் இந்த பெயர் வைத்த பழக்கம் இருக்கு.முக்கியமாக வீட்டு பெயர் இனிஷியலை கொண்டு இருக்கும்.ரொம்ப இண்ட்ரெஸ்டிங் பெயர்கள் கூட உண்டு.

vanathy சொன்னது…

நாட்டாமை, இதில் உங்கள் வீட்டு பட்டப் பெயர் எது??? புதுமையான பெயர்கள். எங்க ஊரிலும் இப்படி பட்டப் பெயர்கள் இருந்திச்சு.

philosophy prabhakaran சொன்னது…

இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகை தருகிறேன்.... சிறப்பாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Balaji saravana சொன்னது…

செம இன்ரஸ்டிங் பாஸ்! :)

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

புதுக்கோட்டை வட்டாரத்துல தான் இப்படி வீடுகளுக்கு பெயர் வைப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.

ஸாதிகா சொன்னது…

இந்த வழக்கம் எங்கள் ஊரிலும் உண்டு.கோழியப்பா வீடு,பனங்காய்ச்சக்கை வீடு,மண்டை வீடு,எலக்கச்சாமான் வீடு,வயிற்று மரிக்கா வீடு..சொல்லிக்கொண்டே போகலாம்.இதற்கு காரணங்களும் இருக்கும்.கோழி அப்பா-கோழி நிறைய வளர்ப்பவர்,பனங்காய்ச்சக்கை -பரட்டைதலைஉடையவர்,எலக்கச்சாமான் வீ-தரமற்ர பொருட்களை கொடுப்பவர்,வயிற்று மரிக்கா- தொப்பை உடையவர்..இப்படி பெயர்க்காரணங்கள் இருக்கும்.நீங்களும் பெயர் காரணத்தை பாட்டியிடம் கேட்டு லிஸ்ட் போட்டு இருக்கலாம்.

ஸாதிகா சொன்னது…

அவசியம் உங்கள் வீட்டு பட்டப்பெயரை சொல்லிவிடுங்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

எங்க ஊர்லயும் இப்படி காரணப்பெயர்கள் உண்டு. இப்ப குடும்பங்கள் பெருகிவிட்டதால், கிளைகளும் உண்டு!!

ஜெயந்தி சொன்னது…

வீட்டுப் பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு.

அபி அப்பா சொன்னது…

பொதுவா அதிராம்பட்டிணத்தில் இப்படி எல்லா வீட்டுக்கும் பெயர் உண்டு. ஏன் முன்னே மாயவரத்திலும் இருந்துச்சாம். எங்க் பரம்பரை வீடு பெயர் 'கொட்டா வீடு" எங்க அப்பா பட்ட பெயரே கொட்டா வீட்டு தம்பி தான்.மிகப்பெரிய கொட்டகை வாசலில் குளுமைக்காக போட்டதால் அந்த பெயர்!

அபி அப்பா சொன்னது…

பொதுவா அதிராம்பட்டிணத்தில் இப்படி எல்லா வீட்டுக்கும் பெயர் உண்டு. ஏன் முன்னே மாயவரத்திலும் இருந்துச்சாம். எங்க் பரம்பரை வீடு பெயர் 'கொட்டா வீடு" எங்க அப்பா பட்ட பெயரே கொட்டா வீட்டு தம்பி தான்.மிகப்பெரிய கொட்டகை வாசலில் குளுமைக்காக போட்டதால் அந்த பெயர்!

சசிகுமார் சொன்னது…

இதெல்லாம் உண்மையா மறைக்காம சொல்லிடுங்க

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அட.. சுவாரசியமா இருக்கு. எங்க ஊர்லயும் எங்க மஹல்லாவுல இப்படித்தான் வீடுகளுக்கு பட்டபெயர் உண்டு. ஆனச்சட்டி வீடு, எச்சிமுள்ளு வீடு, தோப்புவீடு, முடுக்குவீடு, முக்கு வீடு, நூல் கம்பெனி வீடு, மரைக்கா வீடு, கொட்டப்பாக்கு வீடு..... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

எங்க வீட்டுக்கு பெயர்கூட வைத்தியர் வீடுன்னு சொல்வாங்க.. ஆமா உங்க வீட்டு பட்டபெயரை சொல்லவே இல்லையே பாஸ்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// எங்க ஊரிலும் இண்ட்ரெஸ்டிங் பெயர்கள் கூட உண்டு.//

அதில் ஒன்னு ரெண்டை எங்களுக்கும் சொல்லியிருக்கலாமே மேடம்.!

நன்றி ஆசியா உமர் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நாட்டாமை, இதில் உங்கள் வீட்டு பட்டப் பெயர் எது??? புதுமையான பெயர்கள். எங்க ஊரிலும் இப்படி பட்டப் பெயர்கள் இருந்திச்சு.//

அந்த 37-ல் ஒன்று தான். ஹா..ஹா..

நன்றி வான்ஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ philosophy prabhakaran கூறியது

// இன்றுதான் உங்கள் வலைப் பூவிற்கு முதல் முறையாக வருகை தருகிறேன். சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். இனி பின் தொடர்கிறேன்//

நல்வரவு!!

வாங்க சார், அவசியம் தொடருங்க!!

நன்றி philosophy prabhakaran முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// செம இன்ரஸ்டிங் பாஸ்! :) //

வாங்க தல!!

நன்றி Balaji saravana வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ புவனேஸ்வரி ராமநாதன் கூறியது

//புதுக்கோட்டை வட்டாரத்துல தான் இப்படி வீடுகளுக்கு பெயர் வைப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.//

நம்ம நாகை மாவட்டத்தில் இல்லாத பட்ட பெயர்களா மேடம். உங்க ஊர் 'கிணத்து தெரு' பக்கம் நம் சொந்தங்கள் நிறைய இருக்காங்க. ஒரு எட்டு அந்த பக்கம் போய் பாத்துட்டு வாங்க. ஹா..ஹா..

நன்றி புவனேஸ்வரி ராமநாதன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// இப்படி பெயர்க்காரணங்கள் இருக்கும்.நீங்களும் பெயர் காரணத்தை பாட்டியிடம் கேட்டு லிஸ்ட் போட்டு இருக்கலாம்.//

அப்படி லிஸ்ட் போட்டா பெரிய கட்டுரை மாதிரி யாகிவிடுமே!! அதான்.

// அவசியம் உங்கள் வீட்டு பட்டப்பெயரை சொல்லிவிடுங்கள்//

அவசியம் சொல்றேன். ஆனா நீங்களே கண்டு பிடிக்கலாமே!!

நன்றி ஸாதிகாக்கா வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

// எங்க ஊர்லயும் இப்படி காரணப்பெயர்கள் உண்டு. இப்ப குடும்பங்கள் பெருகிவிட்டதால், கிளைகளும் உண்டு!! //

ஆஹா அப்படியா. நீங்களும் சொல்லி இருக்கலாமே. ஏன் சொல்லலை??

நன்றி ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது...

// வீட்டுப் பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு //

இதில் நல்ல பெயரென்று ஒன்று இருக்கா siss ?? ஹா.. ஹா..

நன்றி ஜெயந்தி வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அபி அப்பா கூறியது...

// எங்க் பரம்பரை வீடு பெயர்
'கொட்டா வீடு" எங்க அப்பா பட்ட பெயரே கொட்டா வீட்டு தம்பி தான்.மிகப்பெரிய கொட்டகை வாசலில் குளுமைக்காக போட்டதால் அந்த பெயர்! //

ஆஹா அருமையான பேரா இருக்கே சார்! அப்படி இருந்தா தான் பரவா யில்லையே!!

நன்றி அபி அப்பா வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சசிகுமார் கூறியது...

// இதெல்லாம் உண்மையா?? மறைக்காம சொல்லிடுங்க //

உண்மைதான் சார்,ஆனா மறைக்கல பாஸ் அப்படியே எழுதிட்டேன். ஹா.. ஹா..

நன்றி சசிகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸ்டார் ஜான் கூறியது...

// எங்க வீட்டுக்கு பெயர்கூட வைத்தியர் வீடுன்னு சொல்வாங்க.. ஆமா உங்க வீட்டு பட்டபெயரை சொல்லவே இல்லையே பாஸ்.//

வைத்தியர் வீட்டு பிள்ளையா நீங்க? ஒரு மருத்துவ குறிப்பு கூட எழுதலையே ஏன்?? எங்க வீட்டு பெயர் "எட்டாவது அதிசயம்" ஙே..? ஹா.. ஹா..

நன்றி ஸ்டார் ஜான் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Jaleela Kamal சொன்னது…

engka uurilum ippdi peyar uNdu