facebook

வியாழன், அக்டோபர் 14, 2010

எண்ணத்த எழுதுறோம்.!!


எண்ணத்த எழுதுறோம்...!!


எண்ணத்த எழுதுறோம் (எழுத்துப் பிழை இல்லை) அதாவது
“எண்ணங்களை எழுதுகிறோம்”. அப்படி!!

நம்மில் நிறைய பேர் கமெண்ட்ஸ் போட்டுட்டு திரும்ப போய், அதற்கு என்ன பதில் எழுதி இருக்காங்க என்று படித்துப் பார்க்கிறோமா என்பது தெரியவில்லை. நாம் அவசியம் சென்று படித்துப் பார்க்கணும். பதிவில் ஒரு மாதிரியும், கருத்தில் வேறு மாதிரியும் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும். நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று இதை படிக்கும் 'அந்த' நபருக்கு புரியும்

சிலர் கமெண்ட்ஸுக்கு பதில் போடுவாங்க. சிலர் மாட்டங்க. எழுதுபவர்கள் அவரவர் வேலை நிமித்தம் மனதில் தோன்றுவதை எழுதிவிட்டு, பிறகு பிஸியாகி விடுவார்கள். அதை நாம் குறையாய் எடுத்துக் கொள்ளக் கூடாது. இயன்றவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இருக்கணும். சரி வாங்க இப்ப டபார்னு மேட்டருக்கு ஜம்பிடுவோம்.

----------------------

நேயர் விருப்பம் :

முன்பு நீங்க சிலோன் ரேடியோ கேட்டீர்கள் என்றால் "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருக்கும், எமது ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்" என்று ஒரு குரல் கணீரென்று ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் “கே. எஸ். ராஜா” என்று சொல்வார்கள். அதை நான் கேட்டதில்லை. ஆனால் சமீபத்தில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க சென்ற போது, மனுஷன் அவர் பேசியதை பெரும்பாலானவைகளை ரெகார்ட் செய்து வைத்திருந்தார். அம்ம்மா...!! என்ன மாதிரி ஒரு குரல். கேட்டவுடன் அப்படியே மலைத்து சொக்கி தான் போனேன். இப்போது அவர் உயிருடன் இல்லையாமே ரேடியோ ரசிகர்களுக்கு பெரிய இழப்பு தான். ஆனாலும் நம் அனைவர்களின் சார்பாக அவர் குரலுக்கு ஒரு 'ராஜ சல்யூட்!'

இப்ப இதை எதுக்கு சொல்ல வர்றேன்னா....!!

நீங்கள் கேட்டவை :

// சகோ.அப்துல் காதர் உங்கள் ப்ளாக்கிற்கு வந்தவுடன் தமிழ் பாடல்கள் பாடுகிறதே! எப்படி? //

asiya omar துபாய் அல் அய்ன்- இலிருந்து கேக்றாங்க!!

(((இது ஒரு நல்ல கேள்வி!!))) :-

யாரும் என் மேல் பாயாதீங்க!! முன்பு ‘D D’ யில் 'எதிரொலி'யில் இப்படி தான் சொல்வார்கள். இப்ப அது ‘பொதிகை’யாகி, காற்றாகி, மரமாகி, பிஞ்சாகி, பூவாகி, திரும்ப மண்ணுக்குள் விதையாகிக் கொண்டிருக்கிறது. விருட்சமாவது எப்போது??

அதை கவர்ன்மெண்ட் பார்த்துக் கொள்வார்கள் என்றால், பார்க்கிற மக்கள் என்னாவார்கள். இது ஒரு நல்ல கேள்வி?? (நாமும் கேப்போம்ல!! ) ஹி..ஹி!!

இப்ப நாம் சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம்.
"வந்தேமாதரம் சசி" சொல்லாததையா நாம் சொல்லப்
போறோம்.

இது ரொம்ப சிம்பிள். பெரும்பாலான வலைப் பக்கங்களில் சென்றால் நிறைய விஷயங்களை 'கேதர்' செய்து வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் நாம் படிக்கும் போதோ எழுதும் போதோ ஏதாவது இசை பொழிவுகள் நம்மை ஆக்கிரமித்து சூழ்ந்திருக்கும் போது நிறைவாய், நிறைய எழுதத் தோன்றும். படிக்கிற காலங்களிலிருந்து அப்படி தான். இப்பவும் இப்படி தான். நம் வலைப் பூவுக்கு வரும் மக்கள் உருப்படியாய் இதையாவது கேட்டுக் கொண்டிருக்கட்டுமே!

இந்த வலை பூவின் கீழே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் F M இல், நீங்கள் வலைப் பூவுக்கு வந்த உடனே ( ‘muthal fm’) ஸ்டேஷன் இல் இருந்து ஏதாவது பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நடுவில் (CHOOSE BUTTON)-ஐ கிளிக்கினீர்கள் என்றால், கிட்டத்தட்ட 50-60 ஸ்டேஷன் லிஸ்ட் திறக்கும். உங்களுக்கு BBC NEWS முதற்கொண்டு, உலகில் உள்ள எல்லா fm களும் திறக்கும்.

dash board – design (வடிவமைப்பு) சென்று..copy செய்து..
உங்களுக்கு தேவைப் பட்ட இடத்தில் (இந்த வலைப்பூவில் வலது புறத்தில் உள்ளது போல)   paste பண்ணி save செய்து விடவும். அவ்வளவு தான். இனி உலக fm களெல்லாம் உங்கள் விரல் நுனியில்.

டிஸ்கி : இப்ப எல்லாமே மாறிப் போய் மொபைலிலும், வாட்சிலும் fm ரேடியோக்கள் வந்து விட்டாலும், "பொட்டி ரேடியோ" வைச் சுற்றி குடும்பமே கேட்டு ரசித்த காலம் எங்கே?!


                  

30 கருத்துகள்:

மோகன்ஜி சொன்னது…

நல்லா இருக்கு காதர்பாய்! போட்டி ரேடியோவில் ஞாயிறு மாலை ஒலிச்சித்திரம் கேட்டு புதன் இரவு பத்து மணிக்கு ப்.சுசீலா தாலாட்ட கண்ணுறங்கி... நினைக்க சுகமா மட்டும் இல்ல .. சின்ன சோகம் கூட வருதில்லையா?

முஹம்மது ஆரிப் சொன்னது…

நினைத்து பார்க்கவே சந்தோஷமா இருக்கு தம்பி! ராஜா, அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் என்று அறிவிப்பாளர்கள் வந்து கொடி கட்டி பறந்த காலம். உங்கள் காலங்களில் 'சூரியன்'fm .... ம்ம்ம். ஆனாலும் அது ஒரு பசுமையான நினைவு தான். பகிர்ந்தமைக்கு நன்றி!

Chitra சொன்னது…

முன்பு ‘D D’ யில் 'எதிரொலி'யில் இப்படி தான் சொல்வார்கள். இப்ப அது ‘பொதிகை’யாகி, காற்றாகி, மரமாகி, பிஞ்சாகி, பூவாகி, திரும்ப மண்ணுக்குள் விதையாகிக் கொண்டிருக்கிறது. விருட்சமாவது எப்போது??


.....இத்தனை நம்பிக்கை வச்சுருக்கிற உங்களுக்காகவது, சீக்கிரம் விருட்சமாக வளரட்டும். :-)

Balaji saravana சொன்னது…

நல்ல தகவல் பாஸ்!

//‘D D’ யில் 'எதிரொலி'யில்//
ஏதேதோ பழைய நினைவுகள்.. :)

asiya omar சொன்னது…

சகோ, ஆஹா ! மிக்க நன்றிங்க நல்ல பகிர்வுக்கு மகிழ்ச்சி.

சௌந்தர் சொன்னது…

நல்ல தகவல் நன்றாக சொல்லியவிதம் நன்றாக இருக்கிறது

ஸாதிகா சொன்னது…

நல்ல பகிர்வு.

sweatha சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

பதிவுலகில் பாபு சொன்னது…

சுவாரசியமா எழுதியிருக்கீங்க.. நல்லாயிருக்கு..

V.Radhakrishnan சொன்னது…

அருமையான எண்ணம். மிகவும் சிறப்பு.

Jaleela Kamal சொன்னது…

haiஹை பாட்டு கேட்டுட்டே பதிவ படிகக்லாமா? ரேடியோவை பார்த்ததும் பள்ளிகாலங்களில் குடும்பதோடு உட்கார்ந்து 3 ஞாயிற்று கிழமை களில் நாடகம் பாட்டு கேட்கும் நினைவு அசை போடுது,
இன்பமாய் இருக்கு,
ஏரிகரை ஓரம் வீடு,,,

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

பாட்டு கேக்கும்போது நம்மை மறந்து அதில் லயிக்க வைக்கும். நல்லதொரு விஷயம்.

பகிர்வு அருமை.

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல் ந‌ண்ப‌ரே.. அப்ப‌ ந‌ம்ம‌ த‌ள‌த்திலேயும் பாட்டு கேட்டுட‌ வேண்டிய‌து தான்.

vanathy சொன்னது…

நாட்டாமை, நல்ல பதிவு. அப்துல் ஹமீது குரல் கேட்டால் அப்படி ஒரு ஆனந்தம்.
கமன்ட் போட்டுட்டு சப்ஸ்கிரைப் பண்ணினால் நல்லது. நான் அப்படித்தான் செய்வேன். சில நேரங்களில் பதில் போடுவேன். பல நேரங்களில் வேலை மிகுதியால் போட முடிவதில்லை.

அரபுத்தமிழன் சொன்னது…

ஆஹா அப்து,
ரேடியோன்னா, அது சிலோன் ரேடியோதான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கும். நம்மூர் ஸ்டேஷன்கள்ள எப்பப் பாத்தாலும் 'டொய் டொய்ங்'னு வீணை சத்தம் மட்டும் தான் கேட்கும்.
ஆனா அவங்க புரோகிராம்லாம் சூப்பரா இருக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// போட்டி ரேடியோவில் ஞாயிறு மாலை ஒலிச்சித்திரம் கேட்டு புதன் இரவு பத்து மணிக்கு ப்.சுசீலா தாலாட்ட கண்ணுறங்கி... நினைக்க சுகமா மட்டும் இல்ல .. சின்ன சோகம் கூட வருதில்லையா? //

ம்ம்ம் பழைய நினைவு திரும்பிடுச்சா. அதெல்லாம் ஒரு கனாக் காலம் பாஸ்!!

நன்றி மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ முஹம்மது ஆரிப் கூறியது...

// ராஜா, அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் என்று அறிவிப்பாளர்கள் வந்து கொடி கட்டி பறந்த காலம். உங்கள் காலங்களில் 'சூரியன்'fm .... ம்ம்ம். //

வாங்க ஆரீப் சார்!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

//...இத்தனை நம்பிக்கை வச்சுருக்கிற உங்களுக்காகவது, சீக்கிரம் விருட்சமாக வளரட்டும்.:-)//

நம்பிக்கை நம்பிக்கையாவே இருக்கு மேடம்.

நன்றி சித்ரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

//‘D D’ யில் 'எதிரொலி'யில்//
ஏதேதோ பழைய நினைவுகள்.. :)

நல்ல தகவல் பாஸ்!
வாங்க பாலாஜி சரவணா!!

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// சகோ, ஆஹா! மிக்க நன்றிங்க நல்ல பகிர்வுக்கு மகிழ்ச்சி.//

வாங்க siss!! உங்களுக்காக எழுதிய மெயில் தான் அது, எல்லோருக்கும் இருக்கட்டுமே என்று அது ஒரு பதிவாகிப் போனது.

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சௌந்தர் கூறியது...

// நல்ல தகவல் நன்றாக சொல்லியவிதம் நன்றாக இருக்கிறது //

வாங்க சௌந்தர் சார். நல்லா இருக்கீங்களா??

நன்றி சௌந்தர் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// நல்ல பகிர்வு.//

வாங்க ஸாதிகாக்கா சார். நல்லா இருக்கீங்களா??

நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ sweatha கூறியது...

// நல்லா இருக்குங்க //

வாங்க sweatha சார். நல்லா இருக்கீங்களா??

நன்றி sweatha உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

//சுவாரசியமா எழுதியிருக்கீங்க.. நல்லாயிருக்கு..//

வாங்க பாஸ் நல்லா இருக்கீங்களா??

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ V.Radhakrishnan கூறியது...

// அருமையான எண்ணம். மிகவும் சிறப்பு.//

வாங்க டாக்டர் சார் நல்லா இருக்கீங்களா??

நன்றி V.Radhakrishnan உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

//ஹாய் ஹை பாட்டு கேட்டுட்டே பதிவ படிகக்லாமா? ரேடியோவை பார்த்ததும் பள்ளிகாலங்களில் குடும்பதோடு உட்கார்ந்து 3 ஞாயிற்று கிழமை களில் நாடகம் பாட்டு கேட்கும் நினைவு அசை போடுது, இன்பமாய் இருக்கு,ஏரிகரை
ஓரம் வீடு,,,//

பழைய ஞாபகமா ஜாலீலாக்கா, ஏரிக்கரை வீடா?? கொடுத்து வச்ச சீதேவி தான் நீங்க!! ஹா.. ஹா..

நன்றி Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// பாட்டு கேக்கும்போது நம்மை மறந்து அதில் லயிக்க வைக்கும். நல்லதொரு விஷயம். //

பாட்டு கேட்டுகிட்டே ஜாலியா இருந்தா BP டென்ஷன் வாராதாமே சார்!!

நன்றி Starjan(ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

//அப்ப‌ ந‌ம்ம‌ த‌ள‌த்திலேயும் பாட்டு கேட்டுட‌ வேண்டிய‌து தான்.//

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க பாஸ்!!

நன்றி நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// அப்துல் ஹமீது குரல் கேட்டால் அப்படி ஒரு ஆனந்தம். //

அவருடைய ஞாபக திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

//கமன்ட் போட்டுட்டு சப்ஸ்கிரைப் பண்ணினால் நல்லது. நான் அப்படித்தான் செய்வேன். சில நேரங்களில் பதில் போடுவேன். பல நேரங்களில் வேலை மிகுதியால் போட முடிவதில்லை.//

அப்படியா இதுவும் ஒரு புதிய செய்தி தான் வான்ஸ்.

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அரபுத்தமிழன் கூறியது...

// ரேடியோன்னா, அது சிலோன் ரேடியோதான் நம்மூர் ஸ்டேஷன்கள்ள எப்பப் பாத்தாலும் 'டொய் டொய்ங்' னு வீணை சத்தம் மட்டும் தான் கேட்கும். ஆனா அவங்க
புரோகிராம்லாம் சூப்பரா இருக்கும்.//

இது உண்மையோ உண்மை பாஸ்.

நன்றி அரபுத்தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.