facebook

புதன், அக்டோபர் 06, 2010

சுவாரஸ்யங்கள் என்பது....!!!

                                                                               

சுவாரஸ்யங்கள் என்பது...மனதிலிருந்து பொங்கி பிரவாகமாய் வருவது தானே!  சுணக்கமாய் இருக்கும் போது மூச்சை உள் இழுத்து மெது மெதுவாய் வெளியே விட்டு மனதை சுறுசுறுப்பாக்கி கொள்ளணும். அப்படி செய்தால் அலை அலை என பொங்கும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. SO, நீங்க ஃபிரெஷ்ஷா ஆயிட்டீங்களா?? வாங்க..,,

கேரளாவில் உள்ள "பத்தனம்திட்டா" மாவட்டத்தில் "வளஞ்ச வட்டம்" என்று ஒரு ஊர் இருக்கிறது. இங்கிருந்து பணம் அனுப்ப வரும் நபரிடம் " வட்டம் வளைந்து" தானே இருக்கும். பின்னே எப்படி அந்த ஊருக்கு அப்படி பேர் வந்தது? என்று கேட்டால் அவருக்கு சொல்லத் தெரியவில்லை.

உங்களில் யாருக்கேனும் தெரியுமா? (ஜமால் சார்!! நீங்க ‘அதிரை’யில் பிறந்தாலும், கோட்டயத்திலா இருக்கீங்க!! இப்படியே வந்து சத்தம் போடாம படிச்சிட்டு போனா எப்படி?? விவரம் சொல்லலாம்ல. கேப்போம்ல!! )

கேரளாவில் பெரும்பாலான வீடுகளுக்கு டோர் நம்பர் கிடையாது. சமீபத்தில் தான் திருவனந்தபுரம் சிட்டியில் கூட டோர் நம்பர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டின் பெயர், ஊரின் பெயர், மாவட்டம் பெயர் இருந்தாலே போதும் போஸ்டல் டிபார்ட்மென்ட் இலகுவாய் கொண்டு போய் சேர்ப்பித்து விடுகிறது.

காலிகட் (கோழிக்கோடு) மாவட்டத்திலிருந்து ஒரு நபர் பணம் அனுப்ப வருவார். அவர் வீட்டின் பெயர் "நூறு ஏக்கரில் வீடு" (வேலை பார்ப்பதோ எண்ணூறு ரியால் சம்பளத்துக்கு!!) "நூறு ஏக்கரில் வீட்டை வைத்துக் கொண்டு, எதுக்கு இங்கே வேலைக்கு வந்தாய்” என்று கேட்டால், அந்த ஆள் சிரிக்கிறார்.

இன்னொரு வீட்டின் பெயர் "வீடு வில்ல வீடு" (என்னங்க இது??)

திருவனந்தபுரத்தில் இன்னொரு ஊரின் பெயர் "நெய் யாற்றின் கரா" (neyyattinkara) (தேனும் பாலும் ஆறா ஓடும்னு கேள்வி பட்டிருக்கிறோம். இங்க நெய்யா ஓடும் போல..!!) இளையராஜா சார் கூட ஒரு பாட்டில் இந்த ஊர் பெயரை சொல்லி பாடுவார்.

இன்னொரு ஊரின் பெயர் "சிறையின் கீழ்" (chirayinkil) நான் கூட நினைத்துக் கொள்வதுண்டு. உயரமான இடத்தில் ஜெயில் இருக்கும், அதுக்கு கீழே ஊர் இருக்கும் போல!! இல்லையாம். தண்ணீரை சிறை பிடித்து வைத்திருப்பதால் (அணைக்கட்டு) அந்த பெயராம். (என்னங்கடாது... !!)

இன்னும் நம்ம கன்யாகுமரி மாவட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் ஊர் பெயர்களே சுவாரஸ்யமாய் இருக்கும்.

"அஞ்சு கிராமம்" (‘ஒரு’ கிராமத்தையே நம்மால் சமாளிக்க முடியலே! இதுலே அஞ்சு கிராமமா?? ஸ்டீபன் என்னாதிது??)

"கருங்கல்" (ஊர் பெயர் தாங்க..!!)

திங்கள் மார்க்கெட், புதன் மார்க்கெட், வெள்ளி மார்க்கெட் இப்படி நாட்கள் பெயர்களிலேயே ஊர்கள் பெயரும். அத்தனையும் சந்தைகள் கூடும் நாள்.

நாகை மாவட்டத்தில் “பூந்தோட்டம்” என்று ஒரு ஊர். சுற்றி பார்த்தீர்கள் என்றால் வெறும் “கருவக்காடா” இருக்கும். இப்ப அவைகள் சரி செய்யப்பட்டிருந்தால், பிளாட்கள் போட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கும்.

“மயிலாடுதுறை” யில் ஒரு ‘மயில்’ கூட ஆடி நான் பார்த்ததில்லை (அப்ப எதுக்கு அந்த பேர் - ஊர் காரங்க தெரிந்தா சொல்லுங்க!!)

விட்டா... (action packed) மாதிரி, சுவாரஸ்யம் packed என்று சொல்லிக்கிட்டே போவீங்களோ??!!

கேக்குது.. கேக்குது..

நீங்க சொல்வது கேக்குதுங்க!!

அதனால... ??

அதனால என்னவா??

நீங்க "எஸ்" ஆகிடுங்க!!!

நாங்க கமெண்ட்ஸ் பக்கம் போறோம்.

ஹி.. ஹி.. இப்படியும் (வோட்டும், கமெண்ட்ஸும்) போட சொல்வோம்ல !!

                                                                          

39 கருத்துகள்:

முஹம்மது ஆரிப் சொன்னது…

சர்ர்தான் ஊர் பெயரிலேயே இவ்வளவு சுவாரஸ்யமிருக்கா ?? ம்ம்ம். ரைட்டு !!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இந்த மாதிரி ஊர் பெயர்களை படிக்கும்போது சுவாரசியமா இருக்கிறது.

இன்னும் சுவாரசியமான ஊர்களின் பெயர்களை இங்கே குறிப்பிட்டுள்ளேன். படித்துப் பாருங்களேன்..

ஊரு விட்டு ஊரு வந்து

Chitra சொன்னது…

மாவட்டம் மாவட்டமாக ஊர் பெயர்களை இப்படி தொகுத்து போடலாமே!

Sheikmohamed சொன்னது…

திடீர்னு ஊரு பேரெல்லாம் ஆராய்ச்சி பண்றீங்க .அய்யயோ பேரருசு படம் ஏதும் பார்த்தீங்களா சார்

பெயரில்லா சொன்னது…

Nickyjohn சொன்னது…
//திடீர்னு ஊரு பேரெல்லாம் ஆராய்ச்சி பண்றீங்க .அய்யயோ பேரருசு படம் ஏதும் பார்த்தீங்களா சார்//

அப்படி எதுவும் விபரீதமா ஆயிடலையே நண்பா!

vanathy சொன்னது…

வித்யாசமான பெயர்கள் தான்.

//அஞ்சு கிராமம்" (‘ஒரு’ கிராமத்தையே நம்மால் சமாளிக்க முடியலே! இதுலே அஞ்சு கிராமமா?? ஸ்டீபன் என்னாதிது??)//

இதுக்கு ஏன் நீங்கள் ஸ்டீபனை இழுக்கிறீங்க, நாட்டாமை. ஸ்டீபனுக்கும் இதற்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

Asiya Omar சொன்னது…

very interesting.

Unknown சொன்னது…

வித்தியாசமான பெயர்களைக் கொண்ட ஊர்கள்தான்.. நம்ம ஊர்பக்கமும் இந்த மாதிரி வித்தியாசமான பெயர்களைக் கொண்ட ஊர்கள், கிராமங்கள் நிறைய இருக்கு.. :)

அரபுத்தமிழன் சொன்னது…

ஆஹா பக்கங்கள் அப்துல் காதருக்கு சூடா ஒரு மணியார்டர் அனுப்ப முடியுமா :-)

நாடோடி சொன்னது…

த‌ல‌.. ஊர் பேர‌ சொன்னா அனுப‌விக்க‌னும் ஆராய‌க்கூடாது (எப்ப‌டியெல்லாம் ச‌மாளிக்கிற‌து).. :)))

உண்மையில் எல்லா ஊரின் பெய‌ருக்கும் ஒரு வ‌ர‌லாற்றுக் க‌தை இருக்கும்.. :)

நாடோடி சொன்னது…

@ vanathy சொன்னது…
வித்யாசமான பெயர்கள் தான்.

//அஞ்சு கிராமம்" (‘ஒரு’ கிராமத்தையே நம்மால் சமாளிக்க முடியலே! இதுலே அஞ்சு கிராமமா?? ஸ்டீபன் என்னாதிது??)//

இதுக்கு ஏன் நீங்கள் ஸ்டீபனை இழுக்கிறீங்க, நாட்டாமை. ஸ்டீபனுக்கும் இதற்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ///

ச‌கோ.. இது என‌து மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஊராம்.. ந‌ம்ம‌ நாட்டாமை க‌ண்டுப்பிடிச்சி சொல்லுறாரு.. ஹி..ஹி...

Ahamed irshad சொன்னது…

சூப்பரான தொகுப்பு சார். நல்லா சிரிச்சேன்...இதே மாதிரி ஏதாவது ஒரு டாபிக் எடுத்து கலக்கிகிட்டே இருங்க...அருமை அருமை..

ஆங்... நாகப்பட்டினம் மாவட்டத்தில 'சிக்கல்'ன்னு ஒரு ஊரு இருக்காமே அத விட்டுடீங்களே..

ஹுஸைனம்மா சொன்னது…

சாத்தான்குளத்தை விட்டுட்டீங்களே? (உங்க ஊரோ அது?) :-))

சுவாரஸ்யமான பதிவு!!

பவள சங்கரி சொன்னது…

ரொம்ப சுவாரசியமான பதிவுங்க......வாழ்த்துக்கள்....பாட்டு வேற நல்லாயிருக்குதுங்க....அதுக்கு ஒரு ஓட்டு...ஹ..ஹா....

http://rkguru.blogspot.com/ சொன்னது…

வித்யாசமான பெயர்கள்...சுவாரஸ்யமான பதிவு

மோகன்ஜி சொன்னது…

காதர்... ஊர் பெயர்கள் குறித்து ஏதும் ஆராய்ச்சி நடந்துள்ளதா என்று தெரியவில்லை. புது தகவல்கள் பழைய ஊர்கள் பற்றி..

அன்புடன் மலிக்கா சொன்னது…

சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

சுவாரஸ்யம் சுவாரஸ்யம்..

Riyas சொன்னது…

சுவாரசியமான பதிவு..

http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html

Unknown சொன்னது…

ரொம்பவும் விதியாசமான பெயர்களாக இருக்கே...

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ முஹம்மது ஆரிப் கூறியது...

// சர்ர்தான் ஊர் பெயரிலேயே இவ்வளவு சுவாரஸ்யமிருக்கா ?? ம்ம்ம். ரைட்டு!!//

சுவாரஸ்யங்களைப் பற்றி எழுத எழுத நமக்கும் அது பற்றிக் கொள்ளும்.

நன்றி முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கு!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
// இந்த மாதிரி ஊர் பெயர்களை படிக்கும்போது சுவாரசியமா இருக்கிறது.//

ஆஹா படிச்சுப் பார்த்தேன் பாஸ் அருமையா இருக்கு.

// இன்னும் சுவாரசியமான ஊர்களின் பெயர்களை இங்கே குறிப்பிட்டுள்ளேன். படித்துப் பாருங்களேன்..//

ஊரு விட்டு ஊரு வந்து (உங்களுக்கும் தானுங்கோ!!)

நன்றி Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கு!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

// மாவட்டம் மாவட்டமாக ஊர் பெயர்களை இப்படி தொகுத்து போடலாமே!//

ஊர் ஊரா 'சென்சஸ்' எடுக்குற மாதிரிங்கறீங்க. எடுத்துடுவோம் !! அப்படி நிறைய எழுதினாலும் நம்ம ஆளுங்க 'போர்' அடிக்கிதும் பாங்களே. ஹா.. ஹா..

நன்றி சித்ரா மேடம் உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Nickyjohn கூறியது...

// திடீர்னு ஊரு பேரெல்லாம் ஆராய்ச்சி பண்றீங்க. அய்யயோ பேரருசு படம் ஏதும் பார்த்தீங்களா சார் //

பேரரசு எங்கே ஊர் பேர ஆராய்ச்சி பண்ணார். நடிகைகளையும்,
'டாக்டரு தம்பியையும்' தானே பாஸ்! ஹி.. ஹி..(அவர் வச்ச படத்தின் பெயர்களில் அப்படி என்ன விசேஷம் இருக்கு அத்த சொல்லுங்க மொதல்ல!!)

நன்றி Nickyjohn உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

Nickyjohn சொன்னது…
//திடீர்னு ஊரு பேரெல்லாம் ஆராய்ச்சி பண்றீங்க. அய்யயோ பேரருசு படம் ஏதும் பார்த்தீங்களா சார்// ((// அப்படி எதுவும் விபரீதமா ஆயிடலையே நண்பா! //))

இல்லீங்னா.. நீங்களுமா!!?? ஹி.. ஹி..

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

//அஞ்சு கிராமம்" (‘ஒரு’ கிராமத்தையே நம்மால் சமாளிக்க முடியலே! இதுலே அஞ்சு கிராமமா?? ஸ்டீபன் என்னாதிது??)// ((இதுக்கு

ஏன் நீங்கள் 'ஸ்டீபனை' இழுக்கிறீங்க, நாட்டாமை.
'ஸ்டீபனுக்கும்' இதற்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.))

பாருங்கய்யா ஸ்டீபனுக்கு சப்போர்ட்ட. 'நமக்கு' யாராச்சும் அதுமாதிரி சப்போர்ட் பண்ண இருக்காங்களா!! வான்ஸ் நீங்க கேட்டதுக்கு ஸ்டீபனே வந்து சொல்லிட்டு போயிருக்கார் பாருங்க.

ச‌கோ.. இது என‌து மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஊராம்.. ந‌ம்ம‌ நாட்டாமை க‌ண்டுப்பிடிச்சி சொல்லுறாரு.. ஹி..ஹி...

நன்றி வானதி உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// very interesting.//

நன்றி asiya omar உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

// வித்தியாசமான பெயர்களைக் கொண்ட ஊர்கள்தான்.. நம்ம ஊர்பக்கமும் இந்த மாதிரி வித்தியாசமான பெயர்களைக் கொண்ட ஊர்கள், கிராமங்கள் நிறைய இருக்கு//

அவசியம் நீங்களும் ஒரு பதிவ போட்டுடனும் பாஸ்!!

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அரபுத்தமிழன் கூறியது...

// ஆஹா பக்கங்கள் அப்துல் காதருக்கு சூடா ஒரு மணியார்டர் அனுப்ப முடியுமா :-) //

மணியார்டர் என்ன ஆட்டோவா?? பாஸ்?? ஹி..ஹி..

நன்றி அரபுத்தமிழன் உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

த‌ல‌.. ஊர் பேர‌ சொன்னா அனுப‌விக்க‌னும் ஆராய‌க்கூடாது (எப்ப‌டியெல்லாம் ச‌மாளிக்கிற‌து).. :)))

அப்படி யாரு நமக்கு சொத்து சேத்து வச்சுட்டு போயிருக்காஹா..
'அனுபவிக்கிறதுக்கு'... க்கி க்கி

// உண்மையில் எல்லா ஊரின் பெய‌ருக்கும் ஒரு வ‌ர‌லாற்றுக் க‌தை இருக்கும் //

வரலாற்றைப் படிச்சா பூகோளம் என்ன சொல்லும் பாஸ்?? ஹி..ஹி..

நன்றி நாடோடி உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அஹமது இர்ஷாத் கூறியது...

சூப்பரான தொகுப்பு சார். நல்லா சிரிச்சேன்...இதே மாதிரி ஏதாவது ஒரு டாபிக் எடுத்து கலக்கிகிட்டே இருங்க...அருமை அருமை..

//ஆங்... நாகப்பட்டினம் மாவட்டத்தில 'சிக்கல்'ன்னு ஒரு ஊரு இருக்காமே அத விட்டுடீங்களே..//

பதிவு ரெடியாகிட்டு இருக்கு!!

நன்றி அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

// சாத்தான்குளத்தை விட்டுட்டீங்களே? (உங்க ஊரோ அது?) :-)) //

‘நாம’ பொறந்த ஊருன்னு சொல்லுங்க.. ஹி..ஹி..

நன்றி ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து கூறியது...

// ரொம்ப சுவாரசியமான பதிவுங்க..வாழ்த்துக்கள்..பாட்டு வேற நல்லாயிருக்குதுங்க..அதுக்கு ஒரு ஓட்டு...ஹ..ஹா....//

ஆஹா பாட்டுக்கு ஒட்டா, இது நல்ல இருக்கே!!

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ rk guru கூறியது...

// வித்யாசமான பெயர்கள்...
சுவாரஸ்யமான பதிவு //

மிக்க நன்றி நண்பா!!

நன்றி rk guru உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// காதர்... ஊர் பெயர்கள் குறித்து ஏதும் ஆராய்ச்சி நடந்துள்ளதா என்று தெரியவில்லை. புது தகவல்கள் பழைய ஊர்கள் பற்றி..//

மோகன்ஜி உங்கள தான் தேடிக்கிட்டிருந்தேன். ஹைதராபாத்தைப் பற்றி, அங்குள்ள ஊர்களைப் பற்றி எழுதுங்களேன் பாஸ்!!

நன்றி மோகன்ஜி உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்புடன் மலிக்கா கூறியது...

// சுவாரஸ்யம் சுவாரஸ்யம்.//

உங்களின் சுவாரஸ்யம் எங்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

நன்றி அன்புடன் மலிக்கா உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Riyas கூறியது...

//சுவாரசியமான பதிவு..//

வாங்க பாஸ்!!

நன்றி Riyas உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதி கூறியது...

// ரொம்பவும் விதியாசமான பெயர்களாக இருக்கே...//

கேரளாவில் பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் அப்படி தாங்க!!

நன்றி சிநேகிதி உங்கள் வருகைக்கு, மீண்டும் மீண்டும் வாங்க!!

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

எல்லாமே விதியாசமா இருக்கு ...