facebook

திங்கள், அக்டோபர் 11, 2010

ஊரெல்லாம் ஊர்கள்...!!!

                                                                 
//ஆங்... நாகப்பட்டினம் மாவட்டத்தில 'சிக்கல்' ன்னு ஒரு ஊரு இருக்காமே அத விட்டுடீங்களே..//

சென்ற பதிவில் நான் எழுதிய ஊர் பெயர்களில் உள்ள சுவாரஸ்யங்களை படித்து விட்டு, எங்களின் நட்புள்ளங்கள் நிறைய பேர் இதை கேட்கிறார்கள்.

அவர்கள் கிண்டலுக்கு கேட்டார்களா? விவரம் தெரிந்து கொள்ள கேட்டார்களா?   தெரியலிங்க! ஆனாலும்  நம்ம  ஆராய்ச்சி
'மைண்ட்' இருக்கே (ஹி..ஹி..நம்மை நாமே பாராட்டிகிட்டா தான்
உண்டு.)  எல்லோரும் தெரிந்து கொள்ளவும், நாமும்  தெரிந்து 
(கொள்ளவும் / கொண்டும்) இங்கே வரைகிறேன்.

இப்ப எல்லோரும் தெரிஞ்சுங்க!

‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருப்பது போல் ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருக்கு. (இதைப் பற்றி எழுதினால்
‘சிக்கல்’ வந்துடுமோன்னு தான் எழுதல ( ஹி..ஹி..!! )

இந்த ஊர்களை சுற்றி இருக்கும் ஊர் பெயர்களை கவனியுங்கள்.
"மஞ்சக்கொல்லை",  "கூத்தூர்",  "வேட்டைக்காரன் இருப்பு"
"தலைஞாயிறு"  பெயர்கள் எப்படி?? (அவைகள் எல்லாமே நாகை மாவட்டத்தில் வருகிறது) "வாழ்க்கை",  "வாழ வந்தான்"  இப்படி
பெயர் கொண்ட ஊர்களும் ..!! (இவைகள் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்றன)

அது போலவே -

'ஏர்வாடி' என்ற ஊர் பெயர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒன்னு இருக்கு, ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு. (அந்த 'ஏர்வாடி’யில் என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். இந்த ‘ஏர்வாடி’யில் என்ன விசேஷம் என்று எனக்கு தெரியலைங்க!)

‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒரு 'குற்றாலம்' போல், ‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'குத்தாலம்' இருக்கு. இந்த ‘குத்தாலத்தில்’ “அந்த” குற்றாலம் மாதிரி எந்த விசேஷமும் கிடையாது.

"பாளையம்கோட்டை" என்ற ஊர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் மட்டுமில்லை, ‘கடலூர்’ மாவட்டத்திலும் ஒன்னு இருக்கு.
(அதில் ஃபேமஸ் ஜெயில், இதில் என்னவென்று தெரியல!)

"தமிழ் நாட்டில்" ஒரு 'வேலூர்' இருப்பது போல், (கேரளா)
'கோட்டயத்திலும்' ஒரு 'வேலூர்' இருக்கு. (இங்கே ஜெயில்
ஃபேமஸ் போல, அங்கே என்னவென்று தெரியல!)

"மேலூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் ஒன்றும் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவள்ளூர்' மாவட்டத்திலும் ஒன்றும் இருக்கு .

"வடகரை" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவாரூர்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும், ‘திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா)
“பாலக்காட்டில்” ‘வடகரா’ என்ற பெயரிலும் இருக்கு!!

"சாத்தனூர்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) ‘கொல்லம்’ (Quilon) மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"திருபுவனம்" என்ற ஊர் பெயர் (பட்டுப் புடவைக்கு ஃபேமஸ்)
‘தஞ்சை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும் இருக்கு.

"திருமுல்லை வாசல்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் இருப்பது போல் ‘சென்னையில்’ "திருமுல்லை வாயில்" என்று ஒரு ஊர் இருக்கு !!

“திருப்பத்தூர்” என்ற ஊர் ‘சிவகங்கை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘வேலூர்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"முதுகுளத்தூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு.

"வளையப்பட்டி" என்ற ஊர் ‘நாமக்கல்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"ஆலங்குடி" என்ற ஊர் 'திருவாரூர்' மாவட்டத்தில்
ஒன்றும், ‘புதுக்கோட்டை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

‘அரியலூர்’ முன்பு ‘பெரம்பலூர்’ மாவட்டத்தில் இணைந்திருந்தது. தற்பொழுது ‘அரியலூர்’ தனி மாவட்டமானாலும், ‘அரியலூர்’ என்ற ஊர் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு!

"அத்தானி" என்ற ஊர் 'ஈரோடு' மாவட்டத்தில் ஒன்றும்,
'புதுக்கோட்டை' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'திருச்சூர்'
மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'எர்ணாகுளம் ' மாவட்டத்தில்
ஒன்றும், (கர்நாடகா) 'பெல்காம்' மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

'கொத்தமங்கலம்'  என்ற ஊர் 'புதுக்கோட்டை' மாவட்டத்தில் இருப்பது போல், (கேரளா) 'எர்ணாகுளம்' மாவட்டத்தில்  "கோதமங்கலம்" என்ற ஊர் இருக்கு! ஆங்கிலத்தில் இரண்டு ஊருக்குமே (KOTHAMANGALAM) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.

'புதுக்கோட்டை' மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள
ஊரின் பெயரை கேட்டால் சிரிப்பு வரும். "கொக்கு முட்டை"
அதேபோல அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் மற்றொரு
ஊரின் பெயர் "ஆளப்பிறந்தான்".

(கேரளா) 'எர்ணாகுளத்தில்' 'மட்டன்சேரி' என்ற ஒரு ஊர் இருக்கு. அது எந்த வகை 'மட்டன்' என்று நமக்கு தெரியாதுங்க!

‘கேரளாவில்’ "இடுக்கி" என்று ஒரு மாவட்டமிருக்கு. (இதில் யார் யாரை தூக்கி இடுப்பில் “இடுக்கி”க் கொள்வார்கள் என்று நமக்கு தெரியாதுங்க!!)

(கேரளா) ‘கொல்லத்தில்’ "புனலூர்" என்ற ஊர் இருக்கு. (இது நாம யூஸ் பண்ணும் 'புனல்' அல்ல!!)

(கேரளா) கோட்டயத்தில் "நாலு கோடி" என்று ஒரு ஊர் இருக்கு!!

'திருநெல்வேலி'  மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர்  'படுக்க பத்து!'

(கேரளா) "பத்தனம்திட்டா" மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் "தடியூர்" (இங்கே யாரும் மெல்லிசாக இருக்க மாட்டாங்களோ?)

"கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்", "எப்போதும் வென்றான்" இவைகள் எல்லாமே ஊர்கள் பேர் தாங்க!!

'சென்னையில்' "சாலி கிராமம்" இருப்பது போல், 'சிவகங்கை' மாவட்டத்தில் "சாலை கிராமம்" என்ற ஊர் இருக்கு!

இப்படி இரண்டு, மூன்று, நான்கு மாவட்டங்களில் ஒரே ஊர்களின்
பெயர்கள் இருப்பது போல்......

                                                                                     இன்னுமிருக்கு .....!!



                                                                 

45 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

:-))

Chitra சொன்னது…

மாவட்ட வாரியாக பிரிச்சு சொல்லிட்டீங்க.... அடேங்கப்பா..... ஊர் பெயர்களை கொண்டு நல்ல ஆராய்ச்சி!

பெயரில்லா சொன்னது…

எங்க இருந்து இவ்வளோ மேட்டர் கலெக்ட் பண்ணினீங்க நண்பா!
ஆச்சர்யமா இருக்கு!

Asiya Omar சொன்னது…

பரவாயில்லையே,ஓரளவு நான் கேள்விப்பட்ட ஊர் பெயர் நிறைய இருக்கே.

ஸாதிகா சொன்னது…

அறியாததை அறியத்தந்தமைக்கு நன்றி.நல்ல இடுகை.

ஹுஸைனம்மா சொன்னது…

அட, சும்மா விளையாட்டா ஆரம்பிச்சு, ஆராய்ச்சியெல்லாம் பண்ணி பதிவு எழுத ஆரம்பிச்சுட்டீங்களே!! குட்!! :-))

அப்புறம், தமிழ்நாட்டு சேலம், அமெரிக்காவிலயும் இருக்கு தெர்யுமா? (லோக்கலாவே யோசிச்சுகிட்டு இருக்காம, இண்டர்நேஷனல் லெவல்ல முன்னேறணும்!! ஹி..ஹி.. )

சசிகுமார் சொன்னது…

//தமிழ் நாட்டில்" ஒரு 'வேலூர்' இருப்பது போல், (கேரளா)
'கோட்டயத்திலும்' ஒரு 'வேலூர்' இருக்கு. (இங்கே ஜெயில்
ஃபேமஸ் போல, அங்கே என்னவென்று தெரியல!)//

திருவள்ளூர் மாவட்டத்திலும் ஒரு வேளூர் இருக்கு

சசிகுமார் சொன்னது…

//"மேலூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் ஒன்றும் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு//

திருவள்ளூர் மாவட்டத்திலும் ஒரு மேலூர் இருக்கு

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சசிகுமார் சொன்னது…

//"மேலூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் ஒன்றும் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு//

//திருவள்ளூர் மாவட்டத்திலும் ஒரு மேலூர் இருக்கு//

சேர்த்துட்டேன் நண்பா!!

நன்றி உங்கள் முதல் வருகைக்கும், உங்கள் ஆர்வத்துக்கும்..!

Jaleela Kamal சொன்னது…

பெரிய ஆராச்சி தான், தெரியாத ஊரை தெரிந்து கொண்டேன்.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர் கோதமங்கலம் அல்ல கொத்தமங்கலம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள ஊரின் பெயரை கேட்டால் சிரிப்பு வரும். அந்த ஊரின் பெயர் "கொக்கு முட்டை"
அதேபோல அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் மற்றொரு ஊரின் பெயர் ஆளப்பிறந்தான். சார் அப்படியே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அரசர்குளம் என்ற எனது ஊரின் பெயரில் மற்ற மாவட்டத்திலும் இருக்கா என்று கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன்...

Radhakrishnan சொன்னது…

ஒரு மாவட்டத்தில் பல ஊர்கள் ஒரே பெயரில் இருக்கும். அதற்கு இனிசியல் எல்லாம் போட்டு பிரித்து இருப்பார்கள். சுவாரஷ்யம்.

virutcham சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள் தான்.
எனக்குப் பிடித்த விஷயம் என்னன்னா, ஊர் பெயர்கள் எல்லாம் எதோ ஒரு பெயர் என்றில்லாமல் அந்த ஊரின் பெயருக்கு காரணமாக ஒரு புராணக் கதையே சொல்லப் படும். பல கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். பல பெயர்கள் அர்த்தத்தோடு இருக்கும். காலப் போக்கில் மறுவி இருக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது..

// :-))//

தல!! வாங்க, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க, சும்மா
"சிரிச்சிக்கிட்டே" நின்னா எப்படி?? நல்லா இருக்கீங்களா? 'லெமன்' ஜூஸ் சாப்டுறீங்களா?? ஹா..ஹா..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும், அந்த அன்பான "சிரிப்புக்கும்"

மோகன்ஜி சொன்னது…

காதர்! ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், இன்னும் ஊர்கள பற்றி ஆராய்ந்து,தகவல் சேகரித்து,இன்னும் நிறைய எழுதுங்கள்!
பாராட்டப் பட வேண்டிய முயற்சி சகோதரா!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// மாவட்ட வாரியாக பிரிச்சு சொல்லிட்டீங்க.... அடேங்கப்பா..... ஊர் பெயர்களை கொண்டு நல்ல ஆராய்ச்சி! //

உசுப்பி உட்டதே நீங்க தானே மேடம்!! ஹி..ஹி..

நன்றி Chitra உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// எங்க இருந்து இவ்வளோ மேட்டர் கலெக்ட் பண்ணினீங்க நண்பா!
ஆச்சர்யமா இருக்கு!//

இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா பாஸ், நீங்க "மதுரை திருமலை நாயக்கரை" எழுதியதை விடவா??

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// பரவாயில்லையே, ஓரளவு நான் கேள்விப்பட்ட ஊர் பெயர் நிறைய இருக்கே.//

டீச்சருக்கு தெரியாத ஊர்ன்னு ஒண்ணா இருக்கு மேடம்!! ஹா..ஹா..

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// அறியாததை அறியத் தந்தமைக்கு நன்றி. நல்ல இடுகை. //

இதெல்லாம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செய்திகள் தானே ஸாதிகாக்கா!!

நன்றி ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்..!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுசைனம்மா கூறியது...

// அப்புறம், தமிழ்நாட்டு சேலம், அமெரிக்காவிலயும் இருக்கு தெர்யுமா? (லோக்கலாவே யோசிச்சுகிட்டு இருக்காம, இண்டர்நேஷனல் லெவல்ல முன்னேறணும்!! ஹி..ஹி..)//

தெரியும்!! 'சேலம்' என்று ஒரு சிகரெட்டும் கம்பெனியும் இருக்கு. (நான் புகைக்கவில்லை என்றாலும்! ஒரு தகவலுக்காக!!) இது 'இண்டர்நேஷனல் லெவல்' தானே ஹுசைனம்மா?? ஹா..ஹா..

நன்றி ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// பெரிய ஆராச்சி தான், தெரியாத ஊரை தெரிந்து கொண்டேன்.//

தெரிந்த விஷயத்தையும் 'தெரியாது' என்று சொல்வது மிகச் சிறந்த பண்புகளில் ஒன்று தான்.

நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும், பாராட்டுரைக்கும்!!

மின்மினி RS சொன்னது…

சுவாரசியமான ஊர்களை பற்றி அறிந்து கொண்டோம்.. நன்றி பகிர்வுக்கு..

Asiya Omar சொன்னது…

சகோ.அப்துல் காதர் உங்கள் ப்ளாக்கிற்கு வந்தவுடன் தமிழ்பாடல்கள் பாடுகிறதே! எப்படி?

Sheikmohamed சொன்னது…

"வடகரை" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘திருவாரூர்’ மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) “பாலக்காட்டில்” ‘வடகரா’ என்ற பெயரிலும் இருக்கு!!

திருநெல்வேலில ஒரு வடகரை இருக்கு சார், பெரிய ஊரு!! அதுல பாதி பேரு சவுதியில இருக்காங்க .அதையும் சேர்த்துக்கங்க....
அதே மாதிரி படுக்க பத்துன்னு ஒரு ஊர் இருக்கு அதை பத்தியும் எழுதுங்க..

Anisha Yunus சொன்னது…

ராமனாதபுரம் மாவட்டத்துல இருக்கற 'சிக்கல்'லே குழல் முறுக்கும், நெய் சோறும் சாப்பிட்டிருக்கீங்களா? நாங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்த பொழுது தன் பேத்திக்கு செய்து எடுத்து வரும் பாட்டி மீண்டும் நினைவில். அருமையான ஊர். அதைவிட வெளியுலகம் தெரியாமல் இன்னும் அன்பை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழும் மனிதர்கள். அடிதடிக்கு பெயர் போன அந்த மாவட்டத்தில் சில்லென்று இனிமையான, அமைதியான ஊர்.
:)

vasan சொன்னது…

ஊர் சொல்ல‌ ஒரு பிள்ளை.

நாடோடி சொன்னது…

என்ன‌ த‌ல‌, ஆர‌ய்ச்சி ரெம்ப‌ ப‌ல‌மா இருக்கும் போல‌..

பவள சங்கரி சொன்னது…

அருமையான பகிர்வுங்க.....நிறைய உழைத்திருக்கிறீர்கள்.....வாழ்த்துக்கள்.

vanathy சொன்னது…

நாட்டாமை, நிறைய தகவல்கள். அப்படியே எனக்கு ஒரு டிக்கட் ( ப்ளேன் டிக்கெட்டை ) வாங்கிடுங்க. உங்க ஆராய்ச்சிக்கு நானும் உதவப் போறேன். நேரில் போய் பார்த்து, பேசி எழுதினால் சுவாரஸ்யம் கூடுமல்லவா????( சரி முறைக்க வேண்டாம் )

புல்லாங்குழல் சொன்னது…

சிக்கலில்லாமல் இத்தனை விளக்கங்களா?
ஊர் ஞாபகத்தை வேறு ஏற்படுத்தி விட்டீர்கள். நல்ல இடுகை.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

// சார் அப்படியே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அரசர்குளம் என்ற எனது ஊரின் பெயரில் மற்ற மாவட்டத்திலும் இருக்கா என்று கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன்...//

வாங்க ரஹீம் கஸாலி சார், நீங்கள் சொன்ன விஷயங்களையும் பதிவில் சேர்த்து விட்டேன். கேட்ட விஷயங்களை சோதித்து சொல்கிறேன்.

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பங்களிப்புக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

V.Radhakrishnan கூறியது...

// ஒரு மாவட்டத்தில் பல ஊர்கள் ஒரே பெயரில் இருக்கும். அதற்கு இனிசியல் எல்லாம் போட்டு பிரித்து இருப்பார்கள். சுவாரஷ்யம் //

வாங்க டாக்டர் சார். உண்மை தான். இது வெவ்வேறு மாவட்டத்தில் இருப்பதால் நம்மில் நிறய பேர் தெரிந்து கொள்ளலாமே!!

நன்றி V.Radhakrishnan உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ virutcham கூறியது...

// பல ஊரின் பெயர்கள் அர்த்தத்தோடு இருக்கும். காலப் போக்கில் மறுவி இருக்கும்.//

நிச்சயமா சார். நீங்கள் சொல்வதும் இருக்கலாம்!!

நன்றி விருட்சம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

மோகன்ஜி கூறியது...

// கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், இன்னும் ஊர்கள பற்றி ஆராய்ந்து, தகவல் சேகரித்து, இன்னும் நிறைய எழுதுங்கள்! //


இதுக்கே உன்னை பிடி என்னை பிடி என்று அவரவர்களின் பிஸி நேரத்தை நான் கூப்பிட்டு விளக்கம் கேட்டு.... செல்ல அலுப்பு அலுத்துக் கொள்கிறார்கள் ஜி!! என்ன செய்யா..!!?? இருந்தாலும் நம்மட 'விடாப் பிடியான' கொள்கையில் 'அவர்களை' விட்டு வைக்க முடியுமா?? நீங்க சொன்ன மாதிரி அடுத்தும் ஒரு வழி பண்ணிடுவோம். ஹி..ஹி..

நன்றி மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

சிவராம்குமார் சொன்னது…

உங்கள் இந்த பதிவிற்கான உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மின்மினி RS கூறியது...

// சுவாரசியமான ஊர்களை பற்றி அறிந்து கொண்டோம்.. நன்றி பகிர்வுக்கு..//

வாங்க மின்மினி, நலமா??

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// சகோ.அப்துல் காதர் உங்கள் ப்ளாக்கிற்கு வந்தவுடன் தமிழ் பாடல்கள் பாடுகிறதே! எப்படி? //

நீங்கள் கேட்டுக் கொண்டதற்காக அடுத்த ஒரு பதிவே போட்டாச்சு>>>>

நன்றி மேடம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Nickyjohn கூறியது...

// திருநெல்வேலில ஒரு வடகரை இருக்கு சார், பெரிய ஊரு!! அதுல பாதி பேரு சவுதியில இருக்காங்க. அதையும் சேர்த்துக்கங்க....அதே மாதிரி படுக்க பத்துன்னு ஒரு ஊர் இருக்கு அதை பத்தியும் எழுதுங்க..//

வாங்க பாஸ்! நீங்க சேர்க்க சொன்ன இடங்களை சேர்த்தாச்சு.சரியா!!

நன்றி Nickyjohn உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

// நாங்கள் ஹாஸ்டலில் தங்கி படித்த பொழுது தன் பேத்திக்கு செய்து எடுத்து வரும் பாட்டி மீண்டும் நினைவில். அருமையான ஊர். அதைவிட வெளியுலகம் தெரியாமல் இன்னும் அன்பை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழும் மனிதர்கள். :) //

அடடா பழைய நினைவுகளா?? ம்ம்ம் அந்த சஞ்சரிப்பு கூட ஒரு சுகமான சுகம் தான்.

நன்றி அன்னு உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vasan கூறியது...

// ஊர் சொல்ல‌ ஒரு பிள்ளை //

என் பேர் சொல்ல ஒரு நண்பன். ஹா ஹா

நன்றி vasan உங்கள் முதல் வருகைக்கும் ஆர்வத்துக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// என்ன‌ த‌ல‌, ஆர‌ய்ச்சி ரெம்ப‌ ப‌ல‌மா இருக்கும் போல‌..//

நீங்க ஒரு ஆராய்ச்சி நான் ஒரு ஆராய்ச்சி ஹி..ஹி

நன்றி ஸ்டீபன் உங்கள் வருகைக்கு.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து கூறியது...

// அருமையான பகிர்வுங்க ..... நிறைய உழைத்திருக்கிறீர்கள்//

நன்றி முத்து உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// அப்படியே எனக்கு ஒரு டிக்கட் (ப்ளேன் டிக்கெட்டை) வாங்கிடுங்க. உங்க ஆராய்ச்சிக்கு நானும் உதவப் போறேன். நேரில் போய் பார்த்து, பேசி எழுதினால் சுவாரஸ்யம் கூடுமல்லவா???? (சரி முறைக்க வேண்டாம்) //

மொரச்சா மட்டும், ஆள வச்சு அடிச்சிட மாட்டீங்களா ஹி..ஹி. ஆமா வான்ஸுக்கு எதுக்கு டிக்கட்? வான் வழியா பறந்து வரத்தானே
'வான்ஸ்' என்று பேர் க்கி..க்கி (இப்ப நீங்களும் முறைக்க வேண்டாம்)

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் ஆராய்ச்சி உதவளுக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஒ.நூருல் அமீன் கூறியது...

// சிக்கலில்லாமல் இத்தனை விளக்கங்களா? ஊர் ஞாபகத்தை
வேறு ஏற்படுத்தி விட்டீர்கள்//.

ஆஹா ஊருக்கா? எப்ப?? ஊரில் சந்திக்கலாமா சார்??

நன்றி ஒ.நூருல் அமீன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிவா கூறியது...

// உங்கள் இந்த பதிவிற்கான உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! //

நன்றி!! வாங்க சிவா.

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.