facebook

வியாழன், அக்டோபர் 28, 2010

கொஞ்சம் ரிலாக்ஸ்!!


சிந்திக்க கொஞ்சம்..!!



தடுத்த ஒன்றை

கொடுக்கச் சொல்லிக் கேட்கிறாய்;

கொடுக்க மறுத்தால்

மணக்க மறுக்கிறாய்!


நீ பட்டம் பெற்றதற்கு

விலையாய் கூலிக்

கேட்கிறாய் - நான்

கொடுக்காவிட்டால்

எனக்கு பட்டம் கொடுக்கிறாய்!


மணத்திற்கு முன்னே

மடிப்பிச்சைக்

கேட்கிறாய்;

கொடுத்ததற்குப்  பின்னே

அதிகாரம் தொடுக்கிறாய்!


பணம் கொடுத்து உன்னை

மணம் முடிப்பதற்குப்

பெயர் திருமணமா;

இல்லை

பணம் செலுத்திப்

பணிப் புரியும்

தனியார் நிறுவனமா!

                                           ***************


சிரிக்க கொஞ்சம்..!!


செந்தில்: அண்ணே...சாப்ட்வேரு, ஹார்டுவேருன்னா என்னண்ணே...

கவுண்டமணி: அட..ப்ளூடூத் மண்டையா... செடியப் புடுங்குனா
சாப்ட்வேரு,, மரத்தப் புடுங்குனா அது ஹார்டுவேரு...

                                               ***************

இயக்குநர்: சார் இந்தப் படத்துல நீங்க பன்னி மேய்க்கிறீங்க...

நடிகர்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..

இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...


                                                 *************
ரிப்போர்ட்டர்: ஒபாமாவப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

சூரியா: எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க..

ரிப்போர்ட்டர்: நாசமாப்போச்சு.... உங்க ஒப்பாமா இல்ல சார்... ஒபாமா..ஒபாமா அமெரிக்கா...

சூரியா: தெரியாது சார்

                                                ***************

நேர்முகத் தேர்வு-

தேர்வாளர்: ரயில் விபத்தைத் தடுக்க என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

சர்தார்: ரயில் தண்டவாளத்தில் ஸ்பீடு பிரேக்கர் போட்டால் ரயில் விபத்தைத் தடுக்கலாம்.

தேர்வாளர்: ஒரு மோட்டார் எப்படி இயங்குகிறது?

சர்தார்: டுர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்...

                                                 ***************

அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...

இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..

அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...

இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்.

                                                    ****************
அமெரிக்கன்: நாங்கதான் நிலவில் முதலில் கால் வைத்தோம்.

ரஷ்யன்: நாங்கதான் வீனஸில் முதலில் கை வைத்தோம்.

இந்தியன்: நாங்கதான் முதலில் சூரியனில் கால வச்சோம்....

அமெரிக்கன்: பொய் சொல்லாதீங்கடா...சூரியனுக்குப் போனா சாம்பலாயிடுவீங்க..

இந்தியன்: ங்கொய்யால...நாங்க போனது நைட்லடா...

                                                                           

நன்றி: மெயிலில்  அனுப்பியவர்களுக்கு !!

21 கருத்துகள்:

Unknown சொன்னது…

///நீ பட்டம் பெற்றதிற்கு
விலையாய் கூலிக்
கேட்கிறாய் - நான்
கொடுக்காவிட்டால்
எனக்கு பட்டம் கொடுக்கிறாய்!///

இது சூப்பர்..

ஜோக்குகளும் நல்லாயிருந்தது..

புதிய மனிதா. சொன்னது…

சூர்யா பாவம் விட்ருங்க ..

பெயரில்லா சொன்னது…

//நடிகர்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..
இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...//

ஹா ஹா.. செம...
அந்த நடிகர் யாருன்னு நம்ம பதிவர்கள் புரிஞ்சுப்பாங்க ;)

//செல்போன்//
:)))

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

vanathy சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.
hahaa... very funny jokes.
சூர்யா மேல் என்ன கோபம்.???

அரபுத்தமிழன் சொன்னது…

சிரிக்க கொஞ்சமல்ல, நிறையவே சிரிச்சேன்.

Asiya Omar சொன்னது…

அனைத்தும் ரசிக்கும்படி இருக்கு.

அந்நியன் சொன்னது…

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

அந்நியன் சொன்னது…

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

அந்நியன் சொன்னது…

தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்

அந்நியன் சொன்னது…

நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....

Radhakrishnan சொன்னது…

ஹா ஹா! இந்தியன் :)

கவிதையும் பிரமாதம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

பதிவுலகில் பாபு கூறியது...

///நீ பட்டம் பெற்றதிற்கு விலையாய் கூலிக் கேட்கிறாய் - நான் கொடுக்காவிட்டால் எனக்கு பட்டம் கொடுக்கிறாய்!/// இது சூப்பர்..
ஜோக்குகளும் நல்லாயிருந்தது//

வாங்க தல!!
ரசித்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ புதிய மனிதா. கூறியது...

// சூர்யா பாவம் விட்ருங்க ..//

சரி விட்டாச்சு!! உங்களுக்காகவும், நம்ம சகோ.ஜோதிகா காகவும்..!! ஹா..ஹா.. சரியா பாஸ்!

நன்றி புதிய மனிதா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

//நடிகர்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..
இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...//

ஹா ஹா.. செம...
அந்த நடிகர் யாருன்னு நம்ம பதிவர்கள் புரிஞ்சுப்பாங்க ;)

புரியாம எப்படி எழுதினாலும் புரிஞ்சுக்கிறாய்கைய்யா, செம ஷார்ப்!!

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// ஹா,ஹா,ஹா,ஹா,ஹா //


ரிபீட்டு.. ஹா ஹா ஹா!!

நன்றி Chitra உங்கள் வருகைக்கும் சப்தமிட்ட அந்த உங்கள் ஃபேவரிட் சிரிப்புக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// கவிதை நல்லா இருக்கு. hahaa... very funny jokes.
சூர்யா மேல் என்ன கோபம்.??? //

'சிங்கத்த' போய் யாராச்சும் கோச்சுப்பாங்களா வான்ஸ்?? (ஏன் பதிவு ஏதும் போடலியா??)

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !!

எம் அப்துல் காதர் சொன்னது…

அரபுத்தமிழன் கூறியது...

// சிரிக்க கொஞ்சமல்ல, நிறையவே சிரிச்சேன்.//

நிறைய சிரித்தால் வாலிபமாவே இருக்கலாம். (எந்த ஊர் பாஸ் உங்களுக்கு?)

நன்றி அரபுத்தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !!

எம் அப்துல் காதர் சொன்னது…

"அந்நியன்" நீங்கள் சொல்வதை நாங்களும் வழிமொழிகிறோம்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ V.Radhakrishnan கூறியது...

// ஹா ஹா! இந்தியன் :) கவிதையும் பிரமாதம். //

வாங்க சார்!!

நன்றி V.Radhakrishnan சார் உங்கள் வருகைக்கும் ரசனைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// அனைத்தும் ரசிக்கும்படி இருக்கு.//

வாங்க மேடம் !!

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் ரசனைக்கும்.